Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரமும் துரோகமும் எங்களுக்குத் தேவையற்ற ஒரு கட்டுக்தை

Featured Replies

2009 மே18 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக இலங்கை அரசால் அழித்தொழிக்கப்பட்டபின் அங்கு தோன்றியிருக்கும் அரசியல் மாற்றம் என்பது சிறிதளவேனும் நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறதா என்று நாம் கணக்கிடவேண்டும். நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தல் ஈழத்து மக்கள் தாம் எவராலும் கணக்கெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டு இந்தத் தேர்தலை முடிந்தளவு புறக்கணித்துள்ளார்கள்.

மக்களால் தேர்தல் புறக்கணிக்கப்பட்ட அளவுக்கு கூட மக்கள் மீது அக்கறை கொண்டதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்க்கட்சிகளால் புறக்கணிக்க முடியவில்லை. நடந்து முடிந்த பேரழிவைக் கணக்கிலெடுக்காது தேர்தலில் பங்குபற்றியதை விடவும் கீழ்தரமாக தமக்குள் மோதிக் கொண்டன. நீண்டகாலத்தின் பின் தோர்தல் வாக்குறுதிகளும் மற்றவர்களைத் துரோகிககள் என்ற மேடைப் பேச்சுக்களுமாக அத்தனை தமிழ்க்கட்சிகளும் இந்தத் தேர்தல் ஊடாக மக்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்ற முயற்சித்தன என்பதே உண்மை. கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக பாசிசச் சூழலுக்குள் மாறிமாறி பந்தாடப்பட்ட மக்கள் இன்று யுத்தம் தின்று துப்பிய சக்கைகளாய் முகாம்களுக்குள் இழந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 25வருடங்களாக துரோகிகளாகவும் எட்டப்பர்களாகவும் தமிழ்மக்களுக்கு விடுதலைப்புலிகளால் அடையாளம் காட்டப்பட்ட மாற்று இயக்கங்கள் எனப் பெயரெடுத்த அனைத்து ஈழவிடுதலை இயக்கங்களும் தற்போது “மிக முனைப்போடு” இயங்கத் தொடங்கியிருக்கின்றன. 1980களில் தமிழ் மக்களிடத்தில் மிகத்தீவிரமாக தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்தபோதும் விடுதலைப்புலிகளது ஏக இராணுவக் கொள்கை அவர்களைத் தமிழ் மக்களிடத்திலிருந்து அந்நியப்படுத்தியது. விடுதலைப்புலிகளது கட்டுப்பாடற்ற பகுதிகளில் தம்மைத் தக்கவைத்துக் கொண்ட போதும் இந்த மாற்று இயக்கங்கள் அவ்வளவு எளிதாக மக்களை அணுக முடியவில்லை.

1970களின் பிற்பகுதியில் தமிழ் மக்களது விடுதலையை முன்நிறுத்தித் தொடங்கப்பட்ட இயக்கங்கள் 1980களில் பல பிரிவுகளைக் கொண்டதாக மாறியது வரலாறு. இந்த வகைப் பிரிவுகள் ஒவ்வொன்றும் மிகச்சாதாரணமாக தமக்குள் மோதிக்கொள்ளும் வகையில் பிரச்சனைகளைக் கொண்டிருந்தன. தமது பெயர்களுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழீழம் என்று பெயரிட்ட அத்தனை இயக்கங்களும் ஒருவரை ஒருவர் அழித்துவிடும் எண்ணத்திலேயே தமது வேலைத்திட்டங்களை அப்போது வைத்திருந்தனர்.

1986ம் ஆண்டு பல ஆயிரம் ரெலோவின் போராளிகளுடன் தலைவர் சிறீ சபாரத்தினத்தை கோண்டாவில் அன்னுங்கை ஒழுங்கையிற்குள் வைத்து புலிகளால் சுட்டு வீழ்தப்பட்டதில் நிறுத்தப்பட்டது ரெலோவின் செயற்பாடு. அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஈழத்தில் விடுதலைப்புலிகளால் ஈ.பி.ஆர். எல்.எவ். இயக்கம் தடைசெய்யப்பட்டது. அந்தக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட கிழக்குமகாணத்தைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கப் போராளிகள் பலர் விடுதலைப்புலிகளால் கணக்கில்லாமல் அழிக்கப்பட்டார்கள். அதன்பின் தமிழ்நாட்டிலிருந்த பத்மநாபா உள்ளிட்ட தலைமை உறுப்பினர்கள் 13 பேர் புலிகளால் அழிக்கப்பட்டதுடன் அவர்களது செயற்பாடும் நிறுத்தப்பட்டது.

புளொட்டின் செயலதிபர் முகுந்தன் அவர்கள் தனது பதவியிலிருந்து விலத்த வேண்டும் என்று கோரிக்கைவைத்து சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் நடந்த (தள) மாநாட்டுடன் புளொட் தனது அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்திக் கொண்டது. 1988 வருடம் சங்கிலியனுடன் இருந்த நாற்பதுக்கும் அதிகமான புளொட் உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா முகாமை விடுதலைப்புலிகள் தாக்கி அழித்தார்கள். ஈரோஸ் பாலகுமார் அவர்கள் புலிகளால் உள்ளிளுக்கப்பட்டு உயிர்பிச்சை கொடுக்கப்பட்டதுடன் ஈரோசும் தனது தனித்த செயற்பாட்டை நிறுத்தியது.

இவ்வாறு விடுதலைப்புலிகளது ஆயுத அதிகாரம் என்பது தமிழ்மக்களுக்கான விடுதலை வேண்டிப் புறப்பட்ட அனைத்து விடுதலை இயக்கங்களையும் தமிழ் மக்களிடத்திலிருந்து அப்புறப்படுத்தியது. அதற்கு விடுதலைப்புலிகள் சொன்ன ஒரே காரணம் துரோகிகள். ஆனால் ரெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தினரும் விடுதலைப் புலிகளுக்கு இணையான இராணுவபலம் கொண்டவர்களாக இருந்தவர்கள். இலங்கை இராணுவத்தை விட இவர்கள் மீதான அச்சமே விடுதலைப்புலிகளுக்கு அதிகமாக இருந்தது.

வடகிழக்கிலிருந்து இவர்கள் முற்றாக துரத்தப்பட்ட பின் தமது பாதுகாப்புக்காகவேனும் இந்திய இராணுவத்துடனும் இலங்கை இராணுவத்துடனும் சேர்ந்து கூட்டாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. தமிழ்க்கட்சிகளாக பதிவுசெய்யப்பட்ட இந்த இயக்கங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களி

  • கருத்துக்கள உறவுகள்

எட்டப்பன் ராமராஜன் ஒரு பார்வை.

இவரது பிறப்பிடம் புசல்லாவை. சிறிய வயதிலேயே குடும்ப வறுமை காரணமாக தொழில் தேடிக் கொழும்பு நகருக்கு வந்துவிட்ட இவன் கொழும்பில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செட்டித்தெரு நகைவேலை செய்பவர்களிற்கு சாப்பாடு எடுத்துக் கொடுத்தல் மற்றும் தேனீர் வாங்கிக் குடுத்தல் போன்ற எடுபிடி வேலைகள் செய்து தனது காலத்தை ஓட்டி கொண்டிருந்த வேளை ஒரு நகைக்கடையில் நகை மற்றும் பணம் என்பனவற்றைக் களவாடிக் கொண்டு கொழும்பில் நகைவேலை செய்யும் மட்டக்களப்புக்காரர் ஒருவரின் பழக்கத்தால் அவரிடம் மட்டக்களப்பு நகருக்கு ஓடிவிட்டான். பின்னர் அங்கு களவெடுத்துக் கொண்டு ஓடிய பணத்தில் சிறு வியாபாரங்களென்று செய்து கொண்டிருந்தாலும் அவனது தொட்டில் பழக்கம் விட்டுபோகவில்லை. மட்டக்களப்பிலும் தனது கைவரிசையைக் காட்டிக் கொண்டேயிருந்தான் அப்போது ஒரு காலகட்டத்தில் இவனுக்கு காவல்துறை மற்றும் பொதுமக்களால் பிரச்சனை கூடவே தன்னைத் தற்காத்துக் கொள்ள புளொட் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டு தனது தொழிலைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான்.

பின்னர் காலபோக்கில் இவனது அட்டகாசம் கூடிக்கொண்டு போகவே புளொட் அமைப்பினரே இவனுடன் முரண்பட ஆரம்பிக்கவும் மற்றும் புளொட் அமைப்பில் ஏற்பட்ட உள்முரண்பாடுகளால் ஏற்பட்ட உட்படுகொலைகள் என்று புளொட் அமைப்பு ஒரு தள்ளாட்ட நிலைமையில் இருந்ததால் இவன் மீது அந்த அமைப்பாலும் உருப்படியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போகவே இவன் அந்த அமைப்பிலிருந்தும் விலகி இந்தியா போய் அங்கு தனது வியாபாரத்தையும் போதைப்பொருள் மற்றும் ஐரோப்பாவிற்கு ஆட்கள் அனுப்புதல் என்று விரிவாக்கிக் கொண்டு இருந்த போதுதான் இலங்கையில் இந்தியப் படையின் வருகை நடந்தது.

அப்போது இந்தியாவில் மற்றைய இயக்கங்களிலிருந்து இந்தியாவில் போய் அகதி முகாம்களில் இருந்தவர்கள் மற்றும் வெளியிடங்களில் இருந்தவர்கள் என்று எல்லாரையும் இந்திய உளவுப்படையினர் ஒன்று சேர்த்து ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டபோது முதலில் புளொட் ரெலோ மற்றும் ஈபிஆர் எல் எவ் அமைப்பிலிருந்தவர்கள் என்று மூன்று இயக்கத்தவரையும் இணைத்து திறீஸ்ரார் என்கிற பெயரில் கொண்டு வந்து இறக்கினார்கள்.

அந்த திறீஸ்ரார் அமைப்பில் மற்றைய இயக்கத்தினர் சிலர் இருந்தாலும் அதில் புளொட்இயக்கத்தினரின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. காரணம் புளொட்டிலிருந்த ராமராஜனை ஒரு குழுவினருடன் மட்டக்களப்பிற்கும் பரந்தன் ராஜன் குழுவினரைக் கிளி நொச்சிக்கும் மாதகல் பாபுஜு குழுவினரை யாழ்ப்பாணத்திற்கும் கொண்டு வந்து இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் முகாம்கள் அமைக்கபட்டது.

இதில் மட்டக்களப்பிற்கு அனுப்பபட்ட ராமராஜன் அங்கு ஏற்கனவே இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக் கொண்டிருந்த புளொட் மோகன் குழுவினருக்குத் தான் சற்றும் சளைத்தவன் அல்ல என்று தனது அடுத்த நாட்டு ஏவல்காரருக்குக் காட்ட அப்பாவி பொதுமக்களை சித்திரவதை செய்து கொலைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் என்று என்னென்ன வடிவங்களிலெல்லாம் தமிழரைத் துன்புறுத்த முடியுமோ அத்தனை முறைகளையும் கையாண்டான்.அதனால் அவனிற்கு அவனது முதலாளிகள் மனம் குளிர்ந்து முப்பதிற்கு மேற்பட்ட பாதுகாவலர்கள் நவீன சொகுசு வாகனம் வேண்டிய பண உதவி என்று எல்லாம் தாராளமாய் வழங்கினர். இந்த திறீஸ்ரார் என்கிற அமைப்பே பின்னர் பரந்தன் ராஜன் தலைமையில் ஈ என் டி எல் எவ் என்கிற கட்சியாக மாறியது.

பின்னர் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின்போது இவனும் மீண்டும் இந்தியாவிற்கே ஓடி பழையபடி மீண்டும் தனது தொழிகளை ஆரம்பித்தவன் ஐரோப்பாவில் வந்து பிரான்சிலும் சுவிசிலும் அகதி அந்தஸ்துக் கோரிக் கொண்டு இங்கும் தனது போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ள வங்கி மட்டை போடுதல் போன்றவற்றை மேற்கொண்ட போது பிரான்சில் பிரெஞ்சுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சரியான குற்றம் நிரூபிக்கப்படாததால் சிலகாலங்கள் சிறையிலடைத்துவிட்டு இலங்கைக்கு நாடு கடத்தபட்டான். பின்னர் மீண்டும் ஐரோப்பாவினுள் நுளைந்த இவன் இங்கிலாந்தில் போலிப் பெயரில் அகதிப் பதிவை மேற்கொண்டு அங்கிருந்து மீண்டும் தனது தொழிலைச் செய்து கொண்டும் ஒரு வானொலியையும் தொடக்கினான்.

இந்தக் காலகட்டத்தில சுவிசிற்குப் போன இவன் லுசேன் மானிலத்தில் தெரிந்த ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது அங்கிருந்த பெண்ணிடம் யாருமில்லாத சமயம் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட போது அந்தப் பெண் சுவிஸ் காவல்துறையை அழைத்ததால் அவனைக் கைது செய்த காவல்துறை அப்போது அவனிடம் இங்கிலாந்துக் கடவுச்சீட்டு இருந்த காரணத்தால் சரியாக அவனைப் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளாமல் அவனை இங்கிலாந்திற்கே நாடு கடத்திவிட்டனர்.

பின்னர் இவன் நடத்திய வானொலியிலும் பல உள்பிரச்னைகள். அதில்வேலை செய்த பெண் அறிவிப்பாளர்களிடம் இவன் தாகாத அணுகுமுறைகளை மேற்கொண்டதால் எந்தப் பெண்களும் இவனது வானொலியில் வேலை செய்ய முன்வராத நிலையில் ஒரு முஸ்லிம் அறிவிப்பாளரான இர்பான் என்பவரும்(இணையத்தில் தற்போது Nila Fm என்ற இணைய வானொலியை நடாத்தி வருகிறார் இர்பான்) இன்னும் சிலரும் இவனுக்குக் கை கொடுத்தார்கள்.

அதுவும் கனநாள் நீடிக்கவில்லை காரணம் அந்த முஸ்லிம் அறிவிப்பாளருக்கும் ராமராஜனின் மனைவிக்கும் ஏற்பட்ட தொடர்பால் அந்த அறிவிப்பாளரையும் வெளியேற்றிய நிலையில் இவனது வானொலி இழுத்துச் சாத்த வேண்டிய நிலையேற்பட்ட போது தான் இவனிற்குப் புலிகள் இயக்கத்தின் கருணாவின் கலகம் கைகொடுத்தது. உடனே தனது பழைய அன்னிய முதலாளிகளின் உறைவைப் முன்னைவிட வலுவாகப் புதுப்பித்துக் கொண்ட இவன் வானொலி முலம் ஈழத் தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் எதிராக மீண்டும் முழுவேகத்துடன் செயற்படத் தொடங்க அவன் எதிர்பார்த்தது போலவே ஈழதேசத்தின் எதிராளிகள் எல்லாரிடமிருந்தும் பணமும் கொட்டத் தொடங்கியது.

ஐரோப்பாவில் ஆங்காங்கு புற்றினுள் புதைந்திருந்த சில தமிழினத் துரோகிகளும் இவனுடன் சேர்ந்து கொள்ள இவனோ தானே மாற்றுக் கருத்தாளரின் மாபெரும் தலைவன் என்கிற மமதையில் தமிழே உச்சரிக்கத் தெரியாத இவன் தமிழையும் ஈழத் தமிழரையும் முடிந்த அளவிற்கு விற்று வங்கிக் கணக்கையும் வயிற்றையும் வளர்த்துக் கொண்டிருந்த போதுதான் தன்மானமுள்ள ஒவ்வொரு ஈழதமிழனின் ஆதங்கம் தான் இவனை சுவிஸ் காவல்துறையிடம் முடக்கிப் போட்டது. இவனது கைதின் பின்னர் இவனது துரோகக் கூட்டாளிகளும் பழையபடி மெல்லத் தங்கள் முகங்களைப் பழையபடி புற்றினுள் புதைக்கத் தொடங்கியுள்ளார்கள். இவர்கள் எப்படித் தங்களை மறைத்தாலும் ஈழத்தமிழினம் இவர்களை இவர்கள் துரோகங்களை மறக்கத் தயாரில்லை.

- சாத்திரி -

  • தொடங்கியவர்

தனிப்பட்ட குரோதத்தை மனதில் வைத்து எழுதப்பட்ட புனைகதை போல் உள்ளதால் இதில் உள்ள சில உண்மைகளும் பொய்யாக்கப்படும். உதாரணம் இர்பானுக்கும் ராமராஜின் மனைவிக்குமாக தொடர்பு இந்த இரு நபர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதிய வெறும் குற்றச்சாட்டு இதை இங்கு அனுமதிக்க கூடாது. சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியியுலும் இது மிகவும் தவறான விடயம். தயவு செய்து மேற்கண்ட வரிகளை நீக்கவும்!

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

வெகுஜன ஊடகங்கள் ஒரு சமூகப் பிரஞ்ஞையுடன் செயற்பட வேண்டும். மக்கள் சரியான திசை வழியே பயணிப்பதற்கு ஊடகங்களின் செயற்பாடு முக்கியமான பாத்திரத்தை வகிக்க முடியும். ஒரு சமூக மாற்றத்திற்கு, சமூக முன்னேற்றத்திற்கு, சமூக விழிப்பிற்கு ‘வித்திடலில் ஆரம்பித்து அது பூத்துக் குலுங்கி காய் கனியாகி’ முழுமை பெறுவதற்கு ஊடகங்கள் பெரும் பங்களிப்பை ஆற்ற முடியும். எனவே அவர்கள் மிகவும் பொறுப்பு வாயந்;தவர்களாக, உண்மையானவர்களாக செயற்பட முயல வேண்டும். ஊடகத்துறை சமூகத்தின் முதுகெலும்பாக செயற்பட வேண்டும். இவர்களின் பிழையான செயற்பாடுகள் தனிநபர்களை மட்டும் அல்ல ஒரு சமூகத்தையே ஏன் ஒரு நாட்டையே நடுத்தெருவில் கொண்டு வந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுத்திவிடும்;. இதுவே அண்மையில் நாம் இலங்கையில் கண்ட வரலாற்று உண்மை.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கும், இன்றைய மக்களின் சீரழிவு நிலமைகளுக்கும் இலங்கைத் தமிழரால் நடாத்தப்படும் ஊடகங்களின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. இவ் ஊடகங்களில் பெரும்பான்மையானவை புலிகளால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது அவர்களின் செ(h)ல்வாக்கிற்கு உட்பட்டவையாகவே இருந்தன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இவர்கள் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட் வேண்டியவர்கள். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ‘லக்காபுவத்’ செய்த கைங்கரியங்களை நாம் நிறையவே ஜேஆர், பிரேமதாச கால கட்டத்தில் இலங்கையில் கண்டோம். இவர்களும் அன்று வெளியிட்ட செய்திகள் இலங்கையில் அன்றைய காலகடட்டத்தில் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும், ‘இனச் சுத்திகரிப்பு’ இற்கும் பெரும் பங்காற்றின. இதற்கு எந்த வகையிலும் சளைக்காமலே புலிச் சார்பு ஊடகங்கள் கடந்த காலங்களில் இருந்து செயற்பட்டு வருகின்றன. அரசு சார்பு ஊடகங்களும், ஏன் ஏனைய இனவாத அரசியலை தமது வாழ்வாக கொள்ளும் கட்சிகளின் ஊடகங்கள்; இது போன்ற மக்கள் விரோத செயற்பாடடைக் கொண்டிருக்கின்றன.

இவற்றிற்கு நடுவே சரியான நிலைப்பாட்டை எடுத்து முடிந்தளவிற்கு உண்மையான செய்திகளை, விடயங்களை வெளிக் கொணர்ந்த ஊடகங்கள் இலங்கையிலும், தமிழர் புலம் பெயர்ந்து வாழுகின்ற நாடுகளிலும் இல்லாமல் இல்லை. இவை மிகச் சிறிய அளவிலேயே இருந்தன, இருக்கின்றன. புலிகளின் பணப்பலம், ஆயுத சண்டித்தனத்திற்கு மத்தியில் இவர்களால் பெரிய அளவில் செயற்பட்டு ஈழத்து உண்மை நிலமைகளை பரந்துபட்ட மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியவில்லை என்பதுவும் உண்மையே. கூடவே அதிகாரத்தில் இருக்கும் அரசுகள் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடும் இச் செயற்பாடுகளை மட்டுப்படுத்தியே வந்தது. இதன் விளைவாக இவர்களில் சிலர் புலிகள், அரசு மிரட்டல்களுக்கு ‘பயந்து’ தமது குடும்பம், குழந்தை, குட்டிகளை நினைந்து தமது ஊடகச் செயற்பாடுகளை மௌனித்துக் கொண்டனர்.

ஈழநாடு பத்திரிகை திரு. சபாரத்தினம் ஆசிரியராக இருந்த கால கட்டத்திலும், தினகரன் பத்திரிகை பெரும்பான்மையான (சிறப்பாக சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்திலிருந்து) கால கட்டங்களிலும் பத்திரிகைத் தர்மத்தை நிலைநாட்டி சரியான செய்திகளை வெளியிட்டு வந்தன. அதுவும் ஈழநாடு பத்திரிகையிற்கு பல நெருக்குவாரம் துப்பாக்கிகளினால் ஏற்பட்டபோதும் அவற்றை ‘தந்திரோபாய நடைமுறை’ ஊடாக முகம் கொடுத்து பத்திரிகையை வெளிக் கொணர்ந்தனர்; என்பது 1980 களில் அங்கிருந்தவர்கள் நன்கு தெரியும்.இலங்கையிலும், இந்தியாவிலும், புலம் பெயர் நாடுகளில் பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியிலும் மிகச் சில பத்திரிகைகளே சரியான நிலைப்பாட்டின் அடிப்படையில் உண்மைச் செய்திகளை வெளிக் கொணர்வதில் தங்கள் இயலுமைக்கு உட்பட்டு செயற்பட்டு வந்தனர். அவர்கள் யார் யார் என்பது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளன. என்றோ ஒருநாள் அவர்கள் மக்கள் மன்றங்களில்; கௌரவிக்கப்படுவார்கள், கௌரவிக்கப்பட வேண்டும். இவ் சமூக நலம் சார்ந்த ஊடகச் செயற்பாட்டின் மூலம் மரணத்தை தழுவிக் கொண்டவர்கள் பலர். அவர்களை நாம் இவ்விடத்தில் தலை வணங்கி நினைவு கூர்கின்றோம்.

மற்றையபடி புலம் பெயர் நாடுகளில் வெளிவந்த பெரும்பான்மையான பத்திரிகைகள் யாருக்கோ சாமரம் வீசுவது என்று சொல்லிக் கொண்டு முழு மக்களையும் பிழையான திசை வழிச் சிந்தனையில் சாய்த்துச் சென்ற ‘அருங்கரியத்தை’ செய்ததுதான் உண்மை நிலை. இதற்கு எந்த வகையிலும் நாம் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் செயற்பட்டவர்கள் தமிழ் வானொலி, தொலைக் காட்சியாளர்கள். இவ் ஊடகங்களின் செய்திகளையே பெரும்பான்மையான மக்கள் சென்றடையக் கூடிய நிலமைகள் இருந்து வருகின்றன. இவ் ஒரு பக்க திரிபுச் செய்திகளினால் தமிழ் மக்கள் ஒரு பக்கத்திற்கு சாய்த்;து செல்லப்பட்டது ஈழவிடுலைப் போராட்டம் சம்மந்தமான கள, தள உண்மை நிலமைகளை அவர்கள் அறிந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் மக்கள் பிழையான தலைமைகள் செய்த பிழையான செயற்பாடுகளை ஆதரிக்க முற்பட்டதற்கான முக்கிய காரணம் ஆகும்.

கொலை என்பதுவும், யுத்தம் என்பதுவும், மரணம் என்பதுவும், அழிவுகள் என்பதுவும் வேண்டப்பட்டவை. புலிகள் தோற்கப்பட முடியாத சகல பலமும் மிக்க அமைப்பு. இதன் ‘தலைவர்’ தனிமனிதனாக நின்று வெற்றியீட்டித்தரும் ஒரு ‘மாயாவி’, சகல வல்லமையும் பொருந்திய அசுரன். பணத்தை ஓடும் குதிரையில் கட்டுவதைப் போல் புலிகளிடம் கட்டிவிட்டால் எல்லாம் வென்று விடலாம் என்று கனவுலகத்தில் மக்களை திளைக்க விட்ட ‘அரும் பெரும்’ செயல்களை செய்தவர்கள் இந்த ஊடகவியலாளர். இதில் நகைப்புக்கிடமான விடயம்; இவ் ஊடகத்துறையில் ஈடுபட்ட பலரின் ‘தகமைகள்’ பற்றிய உண்மை நிலை. தகைமைகளுடன் யாரும் பிறந்து வருவதில்லை. ஆனால் அதனை அவர்கள் வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். இவர்கள் இதற்கு எப்போதும் தயாராக இருக்கவில்லை. விளம்பரங்களை பத்திரகையில் நிரப்பி தமது பாக்கெற்றுக்குள் பணத்தை திணிப்பதில் இவர்களின் குறி இருந்ததே தவிர தம்மை அறிவியல் ரீதியாக வளர்தெடுப்பதில் இவர்கள் எப்போதும் கவனம் செலுத்தியது கிடையாது.

தேசியம், சுயநிர்ணய கோட்பாடு, தாயகம் என்று கூறிக்கொண்டு போதைவஸ்து கடத்தல்காரர்களையும், கொலை செய்பவர்களையும், சண்டியர்களையும் சார்ந்து நிற்பது பண வருவாயைக் கூட்டும் என்ற சிந்தனையைத் தவிர இவர்களிடம் வேறு ஏதும் இருக்கவில்லை. எனவே துப்பாக்கிச் சண்டியர்களுக்கு காவடி எடுத்து தமது விசுவாசத்தை தெரிவித்து மக்களை பிழையான திசை வழியில் மேய்த்த மீட்போர்கள் இவர்கள். புலிகள் இருந்த போது தாம் பயத்தின் காரணமாக அவர்களை ஆதரித்து செயற்படுவதாக தமது நெருங்கிய ‘நண்பர்கள்’ இடம் சாக்கு போக்கு சொன்னாலும் இவர்கள் ஒருவகை ‘மன நோயாளிகளே’. மனித கொலைகளில், அழிவுகளில் சுய இன்பம் கண்ட மன நோயாளிகள்.

சந்தேகம் இருப்பின் புலிகள் மாற்று இயக்கங்களை துப்பாக்கியால் ஒடுக்கிபோதும், கருணா புலிகளின் தலைமையுடனான முரண்பாட்டின் காரணமா புலிகளை விட்டு விலத்தி சென்றபோதும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சிகள் வெளியிட்ட செய்திகளும், கலந்துரையாடல்களும், கலந்துரையாடலில் ஈடுபட்ட ‘பொதுமக்கள்’ தெரிவித்த ‘தலைவர் எப்படியும் முடிச்சுப் போடுவார்’ என்ற கொலை வெறிக்கருத்துக்களை ‘நெறிபடுத்திய’ விதங்களையும் மீண்டும் உங்கள் நினைவலைகளில் கொண்டு வந்து பாருங்கள் புரியும் உண்மை நிலை. ஏன் இப்பவும் கூட ‘சிங்களவனைக் கொல்ல சிங்களக் கிராமங்களில் குண்டு வைக்க வேண்டும்’ ‘இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டும்’ போன்ற ‘மக்கள்’ கருத்துக்களுக்கு எண்ணை ஊற்றி ஊக்கிவிப்பது வானொலிகளில் ‘வீச்சாக’ நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இன்று புலிகளின் ஆயுதச் செயற்பாடுகள் இல்லாது ஒழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற பாணியில் (மே 18 இல் இருந்து சிறிது காலம் காணமல் போய் மீண்டும் ஆரம்பித்திருக்கும் பத்திரிகைகள் உட்பட) திரிபுச் செய்திகளையும், பொய்களையும் மீண்டும் அள்ளி வீச ஆரம்பித்திருக்கின்றன. இன்னும் ஒரு தலை முறை தமிழ் மக்களையாவது தலையெடுக்க விடுவதில்லை என்ற கங்கணம் கட்டி செயற்பட புறப்பட்டு விட்டார்கள் என்பது போல் எண்ணத் தோன்றுகின்றது.

போதும் இவ்வளவு காலமும் நீங்கள் எங்கள் சமூகத்திற்கு செய்த ‘சேவைகள்’. இனிமேல் அவர்கள் தமது சுயசிந்தனையின் அடிப்படையிலாவது சரியானவற்றை தேட அனுமதியுங்கள். நீங்கள் வெளி நாடுகளில் காப்புறுதி உட்பட சகல வசதிகளுடனும் குடும்ப சமேதர்களாக இருந்து கொண்டு இவ் நயவஞ்சக செயற்பாட்டை செய்யாதீர்கள். முள்ளுக் கம்பியிற்கு பின்னால் நிற்கும் மக்களுக்கும் எம் ஊரில் தமது எதிர்காலத்தை கட்டியமைக்க முயன்ற கொண்டிருக்கும் மக்களையும் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்.

அது போல புலம் பெயர் நாடுகளில் பனியிலும், குளிரிலும்; இரவும், பகலும்; கட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும்; ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைக்கும் மக்களை விட்டு விடுங்கள் அவர்கள் பாவம் அப்பாவிகள் பிழையான தகவல்களை அவர்களுக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு நேரங்களில் திணித்து மூளைச்சலவை செய்யாதீர்கள். உங்கள் பிழைப்பிற்காக ஒரு இனத்தை, சமூகத்தை படு குழியில் தள்ளாதீர்கள். ஒரு தலைமுறையின் வாழ்வை அழித்த பாவத்திற்கே உங்களால் பரிகாரம் செய்ய முடியவில்லை, பதில் செல்ல முடியவில்லை. மீண்டும் இதே பாவச் செயல்களை செய்யாதீர்கள்.

1960 களில் அமெரிக்கா - வியட்நாம் போரில் அமெரிக்காவின் நேபாம் (Nயியடஅ) எரிகுண்டுத் தாக்குதலை சர்வ தேசத்திற்கு அம்பலப்படுத்தி சர்வ தேச மக்களை மட்டுமல்லாது அமெரிக்க மக்களையே தனது அரசிற்கு எதிராக போராட வைத்த பெருமை ஊடகங்களையே சாரும். இதன் தொடர்சியாக வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடைந்ததை நாம் யாவரும் அறிவோம். இதே போல் 1880 களில் எலிசபத் ஜேன் கோசரன் என்ற ‘நியூயார்க் வெர்ல்ட்’ பத்திரிகையின் பெண் நிருபர் மனநல காப்பகத்தில் நிகழும் கொடுமைகளை அம்பலப்படுத்த பைத்தியக்காரி வேடமிட்டு மனநலக் காப்பகத்திற்குள் 10 நாட்கள் அடைபட்டு சகல துன்பங்களையும் அனுபவித்து கிடந்தார். ஆம். உண்மைகளை கண்டறிய-அந்த பெண் நிருபர் தன்னையே பைத்தியக்காரியாக்கிக் கொண்டு காப்பகத்தில் அடைப்பட்டு உதைபட்டு ரத்தம் சிந்தி உண்மைகளை வெளிக்கொணர்ந்தாள். “பைத்தியக்கார வீட்டில் பத்துநாட்கள்” என்ற தலைப்பில் அந்த கொடூர அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டார்.

சோவியத் யூனியனின் புரட்சியின் போதும், சீனப் பரட்சியின் போதும், வயட்நாம், கியூபா புரட்சியின் போதும் ஊடகங்கள் ஆற்றிய மகத்தான, சரியான பங்களிப்பு அப் புரட்சிகள் வெற்றிடைய முக்கிய காரணமாக அமைந்தன. இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் ஏகாதிபத்தியங்களின் பிடியில் இருந்து விடுதலை வேண்டிப் போரிட்ட நாடுகளிலும் மக்களை ஐக்கியப்படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பலமிக்க போராட்டங்களை நடத்த ஊடகங்கள் பெரும் பங்காற்றின. இங்கெல்லாம் ஊடகங்கள் விடுதலைப் போராட்டதிற்கு பசளையாகவும் ஊட்டச்சத்தாகவும் அமைந்தன. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பாசிசத்தின் வளர்சிச்கும், போராடும் ஜனநாயக மறுப்பிற்கும் எண்ணை ஊற்றி வளர்த்தன. இதுவே போராட்டத்தில் பலவீன நிலமையை ஏற்படுத்தி இறுதியில் தானும் அழிந்து தன்னை நம்பிய மக்களையும் ‘தடை முகாங்களுக்கள்’ அடைத்து விட்டது. ஆனால் போரின் முடிவில் ஜனநாகத்தின் ஒரு வாயில் கதவைத் திறந்து விட்டது என்னவோ உண்மைதான்.

இது போன்ற பல நல்ல உதாரணங்களை நாம் உள்வாங்கி செயற்பட வேண்டும்;. மாறாக மரணித்தவரை கையில் பத்திரிகை கொடுத்து நவீன புகைப்பட தொழில் வித்தை மூலம் ஏமாற்று வித்தை செய்து பின்பு அப்பலப்பட்டுப் போன நிகழ்வுகள் ஊடகத்தின் மீதான நம்பிக்கைகளை தவிட்டுப் பொடி ஆக்கிவிடும். இது போன்ற பல செயற்பாடுகளையே ஈழப் போராட்டத்தில் தமிழீழ விடுலைப்புலிகள் ஆதரவு ஊடகங்கள் செய்தன, செய்து வருகின்றன. இதனாலேயே தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசபடைகளின் நடவடிக்கைகள் பற்றிய உண்மையான தகவல்களையும் சர்வ தேசம்; பல சந்தர்பங்களில் நம்பும் நிலையில் இருக்கவில்லை என்ற துர்ப்;பாக்கிய நிலமை ஏற்பட்டிருந்தது, இருக்கின்றது. இதுவே சனல் 4 இன் ஒளிப்பதிவு நாடாவின் உண்மைத் தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டதற்கும் காரணம். தேவை ஏற்படின் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் குற்றவாளிகளை குற்றவாளிக் கூட்டில் நிறுத்தி தமிழ் மக்களின் உரிமைகளை சர்வ தேசத்தின் ஆதரவுடன் வென்றெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க உண்மையான செய்திகள், விபரங்கள் எமக்கு தேவை இதனை ஊடகத்துறைகள் இனிமேலாவது செய்யுமா? பொறுப்புடன் சமூக பிரஞ்ஞையுடன் செயற்படுவார்களா?

(சாகரன்) (ஐப்பசி 01, 2009)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் இப்படி ஒரு ஆக்கம் இணைக்க எவ்வளவு கொடுப்பார்கள்? நானும் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறன். அதால....... ஐயா பாண்டு என்னையும் இந்த தொழிலில சேர்த்துவிடுவீங்களோ? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேக்க மறந்திட்டன். முன்னுபவம்.. பின்னனுபவம் எண்டு ஏதாச்சும் தேவையோ? அல்லது குறிப்பிட்ட தகுதிகள் ஏதாவது வேணுமோ?:lol:

ஒருக்கா கெதியாக் கேட்டுச் சொல்லுங்கோ! பணப்பிரச்சனை பெரிய பிரச்சனையாக் கிடக்குது. :lol:

Edited by காட்டாறு

தனிப்பட்ட குரோதத்தை மனதில் வைத்து எழுதப்பட்ட புனைகதை போல் உள்ளதால் இதில் உள்ள சில உண்மைகளும் பொய்யாக்கப்படும். உதாரணம் இர்பானுக்கும் ராமராஜின் மனைவிக்குமாக தொடர்பு இந்த இரு நபர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதிய வெறும் குற்றச்சாட்டு இதை இங்கு அனுமதிக்க கூடாது.

சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியியுலும் இது மிகவும் தவறான விடயம். தயவு செய்து மேற்கண்ட வரிகளை நீக்கவும்!

இதோடா இது உங்களுக்கே அதிகப்பிரசிங்கத்தனமாய் தோன்றவில்லையா?!!! :D

Rules and Regulations பற்றி நீங்கள் கதைப்பது ஆச்சரியமாய் இருக்கு! :lol::D:D

அண்ணோய்,

இங்கு தனிமனிததாக்குதலை தவிர்க்கும்படி சொல்லி இருக்காங்கோ

ஆனா நீங்கள் புலிகளை எதிர்க்கிறோம் எனும் பெயரில் என்ன பன்றீங்க? :lol:

செத்தும் சித்திரவதை என்பார்களே அதைத்தானே செய்கின்றீர்கள். :D

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம்… இனி ஒரு கருணா… இனி ஒரு டக்ளஸ்…!: ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகை

மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா… இனி ஒரு டக்ளஸ்… இனி ஒரு துரோகி… பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள்.இவ்வாறு இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தற்காலிகமாக ஓய்வுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உளவியல் போருக்கு தெரிந்தோ, தெரியாமலோ நம்மவர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட இன உணர்வுடன் கூடிய ஒற்றுமை உணர்வு திட்டமிட்ட வழிகளில் சிதைக்கப்பட்டு வருகின்றது. விடுதலைப் போர்க் களத்தில் தம்மைப் பலியாக்கிக்கொண்டு, தமிழீழக் கனவோடு துயிலுறங்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தெரிந்துகொண்டே எதிரிகளை அழிப்பதற்காகத் தம்மையே தகர்த்துக் கொண்ட கரும்புலிகள், துரோகிகளால் பலியாகி கொள்ளப்பட்ட போராளிகள், அறுதிவரை மக்களுக்காகப் போராடிக் களப்பலியான தளபதிகள், அத்தனை பேரையும் காத்து நின்று கடைசிச் சொட்டு நீருக்கும் தலை வணங்காமல் உயிர் துறந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் எனத் தமிழீழ விடுதலைக்காகத் தவம் இயற்றியவர்களின் புனிதங்கள் புலம்பெயர் தேசங்களில் விலை பேசப்படுகின்றன.

வன்னி அவலங்களின்போது கூட மடியை இறுக்கிப் பிடித்துக் கொண்ட பல கொடை வள்ளல்கள் கணக்குக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘கடைசியாகச் சேர்த்த காசு கணக்கில் வரவில்லையாம்’. இப்படியெல்லாம் புரட்சிக் கொடி பிடிக்கும் இவர்கள் யார்? என்று விசாரித்துப் பார்த்ததில் விடுதலைப் போராட்ட காலங்களில் அவர்கள் தாயகத்து மக்களுக்காகக் கிள்ளியும் கொடுக்காதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளிவருகின்றன.

விடுதலைப் புலிகளின் ஆட்சிப் பகுதி சுருங்கி, முல்லைத்தீவு நோக்கி மக்களும் புலிகளும் நகர்ந்தபோது புலம்பெயர் தேசம் பொங்கி எழுந்தது. போராட்டங்கள் வெடித்தது. சிங்களக் கொலைக்கரங்களில் சிக்கித் தவித்த தமிழீழ மக்களைக் காப்பாற்றக் கோரி வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தப்பட்டன.

தமிழீழ நிலத்தில் கால் பதித்தறியாக புலம் பெயர் தேசத்துக் குழந்தைகளும் புலிக் கொடியோடு போர்க் களம் புகுந்தனர். விதிகளை மீறிய போராட்டங்களால் பலர் சிறைக் களம் புகுந்தனர். சிலர் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், புலம்பெயர் தேசத்தில் புலிகளின் ஆட்சிப் பொறுப்பி லிருந்த பலர் காணாமல் போனார்கள். அல்லது, அடி வேலிகளில் மறைந்து நின்று ஆர்ப்பாட்டங்களின் ஆழம் பார்த்தனர். எல்லாம் முடிந்த பின்னர் இப்போது அவர்களும் தம் பங்கிற்குக் கடை வைக்க முயல்கிறார்கள்.

முள்ளி வாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இருண்டு போனது ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்று ஒப்பாரி முழங்கிய போதும், ‘தானைத் தலைவன் எம்மோடு இருக்கிறான்’ என்ற வீர முழக்கத்துடன் புலம்பெயர் தேசம் ஆர்ப்பரித்தது. சிங்கள தேசம் ஆடித்தான் போனது. ‘இதோ, புலிகளின் கதை முடிந்துவிட்டது’ என்று வெற்றி முழக்கமிட்ட ராஜபக்ஷக்கள் முகம் வெளிறி நின்றார்கள். ஆம், புலம் பெயர் தமிழர்களின் பலம் அவர்களை மீண்டும் ஒரு போர்க் களம் நோக்கிப் பயணிக்க வைத்தது.

புலம்பெயர் தேசங்களில் வாழும் புல்லுருவிகள் விசேட விமானத்தில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டார்கள். விருந்துபசாரங்களும் களியாட்டங்களும் தாராளமாகவே வழங்கப்பட்டது. உல்லாசப் பயணமாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களது குக்கிராமங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரிகளுடன் சமபோசனம் அளிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டு, மீண்டும் அவரவர் தேசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதோ, வந்துவிட்டார்கள். கேட்டுப் பாருங்கள் யாழ்ப்பாணத்து நிலமையை… கேட்டுப் பாருங்கள் யாழ். மக்களின் வாழ்க்கைத் தரத்தை… புலிகளின் பின்னரான வன்னி மக்களின் நிலைகூட ‘இந்து ராம்’ வெட்கப்படும் அளவிற்கு பெருமையுடன் விளித்துக் கூறுகிறார்கள்… என்ன அவர்களுக்குப் புலம்பெயர்ந்த நீங்களும் கொஞ்சம் கொடுத்துதவினால் தேவலோக வாழ்க்கைதான் … என்று ஒரு பட்டியலை நீட்டுவார்கள்… நீங்கள் ஏமாளிகளாக இருந்தால்… அவர்கள் காட்டில் பண மழைதான் போங்கள்.

இவர்கள் மட்டும்தான் என்று முடிவு கட்டிவிடாதீர்கள்… இன்னமும் பலர் புறப்பட்டிருக்கிறார்கள்… வதந்திகள் பரப்ப… துண்டுப் பிரசுரங்கள் அடித்து இருட்டோடு இருட்டாக ஒட்ட… சொந்தப் பிரச்சனைக்கும் ‘துரோகிகள்’ பட்டம் வழங்க… இப்படி… இப்படி… எத்தனையோ பேர்.

ராஜபக்ஷக்கள் கைகொட்டிச் சிரிக்கின்றனர். ‘நாம் சாதிக்க நினைத்ததை இவர்களே நமக்காகச் சாதிக்கின்றனர்’ என்று மகிழ்ச்சியோடு கை குலுக்கிக் கொள்கின்றனர். புதை குழிகளிலும் கடல் அலைகளிலும் துயில் கலைந்த மாவீரர்கள் விம்மி அழுகிறார்கள்… தமிழீழக் கனவோடு சாவினைத் தழுவிக்கொண்ட தளபதிகள் கலங்கி நிற்கின்றார்கள்.

நாம் இழந்தது கொஞ்சமா? எத்தனையாயிரம் வேங்கைகளைப் பலி கொடுத்தோம்… இலட்சத்திற்கும் அதிகமான உறவுகளைப் பலி கொடுத்தோம்… இத்தனை இழப்புக்களின் பின்னராவது நாம் மனிதர்களாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமா…?

முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்ட எம் மக்களை மீட்க வேண்டாமா…? போர்க்களத்தில் ஊனமாக்கப்பட்ட எம் உறவுகளுக்கு உறுதுணையாக நிற்க வேண்டாமா…? சிங்கள தேசத்தால் அநாதைகளாக்கப்பட்ட எம் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டாமா…? வாழ்விழந்து தவிக்கும் எம் மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டாமா…? சோற்றுக்காகக் கையேந்த வைக்கப்பட்ட எம் தேசத்து மூத்த குடிகளைத் தாங்கி நிற்க வெண்டாமா…?

அத்தனை கடமைகளும் எமக்காகக் காத்திருக்கும்போது வெட்டிப் பேச்சும், வீண் கதைகளும் எதைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றது? எதிரியிடம் மண்டியிட மறுத்து, இறுதிவரை களமாடிப் பலியான விடுதலைப் புலிகள் கற்றுத் தந்ததை மறக்கலாமா? உங்கள் கதிரைக் கனவுகளுக்காகவா களமாடி இத்தனை வீரர்கள் பலியானார்கள்? உங்கள் சொந்த விருப்பங்களுக்காகவா ஈழத்தில் இத்தனை தமிழர்கள் செத்து மடிந்தார்கள்?

போதும்… இதுவரை போதும்… இனியாவது புலியாகப் போர்க்களம் வாருங்கள்! இல்லையென்றால், மனிதர்களாக மாறி எம் மக்களை வாழ வையுங்கள்! வேண்டாம் இனி ஒரு கருணா… இனி ஒரு டக்ளஸ்… இனி ஒரு துரோகி… பாவம் எம் மக்கள் தாங்கும் சக்தியை இழந்துவிட்டார்கள். அவர்களைத் தாங்கிப் பிடித்து வாழ வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டு007 கற்சுறா என்றவர்எழுதின கக்கலை இங்கு கக்கிணிருக்கிறார்.சரி..போராட

  • தொடங்கியவர்
பாண்டு007 கற்சுறா என்றவர்எழுதின கக்கலை இங்கு கக்கிணிருக்கிறார்.சரி..போராட
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களும் இலங்கை இந்திய மனித உரிமைக்கு எதிராக பல குரல்களை தொடரந்து எழுதிய வண்ணம் உள்ளனர்.

:):lol::D

இது தான் இவையின்ர புது ரெக்னிக். அதாவது தங்களை ஸ்ரீலங்காவினதோ இந்தியாவினதோ சார்பற்ற ஆட்களாக காட்டி தங்களை உணமையான தர்மத்தின் குரலாக வேசம் போடுவது. இதற்காக 90% புலியெதிர்ப்பை எழுதிவிட்டு ஆங்காங்கு மீதம் 10% க்கு ஸ்ரீலங்கா, இந்தியா, இதர குழுக்களை விமர்சிப்பது. என்னதான் வேசம் போட்டாலும் உங்க ஆட்டம் இங்க எடுபடாதடியோய்!!

பொண்ட்ஸ்,

யாழ் இணையத்து உறுப்பினர்களை சிரிப்புக்கடலில் ஆழ்த்தவே யாழில் இணைந்தீங்களோ என்று தோன்றுகிறது :)

[நீங்கள் எழுதும் கருத்துக்களை பார்க்கும்போது]

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்றது போல் நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? முள்ளிவாய்காலில் சாம்பலானது புலிகளின் ஆயுத பலம் மட்டுமல்ல உங்கள் மூளையும் தான்! இந்தியாவும் இலங்கை அரசும் தூதுவரகங்கள் ஊடாக காசை அள்ளி கொட்டினால் நீங்கள் சில வேளை போய் வாங்கினாலும் ஆச்சரிய பட ஒன்று மில்லை.

தயவு செய்து மேற் சொன்ன பேர்வழிகளின் ஆக்கங்களை முழுசாக வாசித்து விட்டு கருத்தெழுதவும். விளங்காவிட்டால் ஒரு பத்து பதினைந்து தரம் வாசிக்கவும். காரணம் அவர்களும் இலங்கை இந்திய மனித உரிமைக்கு எதிராக பல குரல்களை தொடரந்து எழுதிய வண்ணம் உள்ளனர்.

இதுதான் 2009 தின் மிகப்பெரும் காமெடி! :lol::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.