Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசின் நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரம் அறிவிப்பு

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசின் நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரத்தினை நாடு கடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாடு வாரியான செயற்பாட்டுக் குழுக்கள் - Countrywise Working Groups

தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி, தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக - தமிழீழ மக்களின் சுதந்திரத்தினையும் இறைமையினையும் ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்கான நிறுவனமாக நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதனை நீங்கள் அறிவீர்கள்.

இந்த முயற்சி நாளாந்தம் முன்னேற்றம் கண்டு வருவதனை நமது மக்களுக்கு மகிழ்வுடன் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான நடைமுறையில் நாடு வாரியான செயற்பாட்டுக் குழுக்கள் (Countrywise Working Groups – CWGs) உருவாக்கப்பட்டு, இக் குழுக்களின் ஊடாக ஒவ்வாரு நாடுகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்பாடுகளை நாம் விரிவுபடுத்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்த அடிப்படையில், நாடுகளுக்கான செயற்பாட்டுக் குழுக்களை நமது மக்களுக்குத் தெரியப்படுத்தும் முயற்சியின் முதற்கட்டமாக கனடா, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, நோர்வே ஆகிய நாடுகளுக்கான செயற்பாட்டுக்குழு விபரங்களை அறியத் தருகிறோம்.

கனடா, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் பெயர்ப்பட்டியலும் தென் ஆபிரிக்கா, நோர்வே நாடுகளுக்கான செயற்பாட்டுக் குழு இணைப்பாளர் பெயர் விபரங்களும் இப்போது வெளியிடப்படுகின்றன.

ஏனைய நாடுகளின் செயற்பாட்டுக்குழு விபரங்களும் விரைவில் வெளியிடப்படும். தேவையேற்படும் பட்சத்தில் நாடுகளின் தேவைக்கு இணங்க செயற்பாட்டுக் குழுக்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

நாடு வாரியான இந்த செயற்பாட்டுக் குழுக்கள் சுயாதீனமான குழுக்களாகும். தத்தமது நாடுகளில் நாடு கடந்த அரசுக்கான தேர்தல்களை மக்கள் மத்தியில் நடாத்தி அரசு அமையும் வரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்துப் பணிகளையும் இக்குழுக்கள் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும். நாடு கடந்த அரசினை அமைக்கும் பணி நிறைவுறும்போது இக்குழுக்குள் தமது பணிகளை நிறைவுக்குக் கொண்டு வரும்.

நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் விபரங்கள்:

கனடா

அருணாச்சலம் அருந்தவராஜா

இராஜரட்ணம் குணநாதன்

மேலின் இமானுவேல்

சகாப்தன் யேசுதாசன்

தெய்வேந்திரன் கந்தையா

சுரேன் மகேந்திரன்

ஆரணி முருகானந்தம்

மோகன் நடராஜா

கல்பனா நாகேந்திரா

பிரியந்த் நல்லரட்ணம்

இரதி பரமசாமி

திவாகர் பரம்சோதி

மயூரன் பத்மநாதன்

அன்ரன் S. பிலிப்

சுப்பிரமணியம் இராஜரட்ணம்

இரவிகரன் இராஜரட்ணம்

றோய் ரட்ணவேல்

கிருஸ்ணா சரவணமுத்து

நீதன் சண்முகராஜா

சிவசோதி சிவஞானம்

Dr. ராம் சிவலிங்கம்

Tam சிவதாசன்

வைரமுத்து சொர்ணலிங்கம்

Dr. R. சிறிறஞ்சன்

வேலுப்பிள்ளை தங்கவேலு

ராஜ் தவராஜா

சாள்ஸ் தேவசகாயம்

இராகுலன் தியாகராஜா

வீரகத்திப்பிள்ளை விஜேந்திரா

பிரித்தானியா

சிவகுமாரன் ஆனந்தவேல்

விஜய் ஜெயந்தன்

தில்லையம்பலம் ஜெயதரன்

வாசுகி கருணாநிதி

குணாளன் மாணிக்கவாசகம்

தம்பிப்பிள்ளை மன்மதராஜா

விவேகானந்தா நாகலிங்கம்

Dr. இரட்ணகுமாரி புஸ்பராஜா

விஜயா ரட்ணம்

அபர்ணா சஞ்ஜீவ்

Dr. அகிலன் சரவணமுத்து

Dr. அர்ச்சுனா சிற்றம்பலம்

பேராசிரியர் ஆ. சொர்ணராஜா

சிவபூசம் சுகுமார்

Dr. லூயிஸ் வசந்தகுமார்

ஐக்கிய அமெரிக்கா

Dr. ஜெராட் R. பிரான்சிஸ்

சுபா பிரான்சிஸ்

ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம்

வேலுப்பிள்ளை கமலநாதன்

சிவா கருணாகரன்

ஜனார்த்தன் கிருபானந்தன்

Dr. யோகா நவயோகராஜா

டனி T படிகலிங்கம்

அசோக் பொன்னம்பலம்

Dr. தவேந்திரா ராஐா

அரவிந்த் சுகுணேஸ்

சுபா சுந்தரலிங்கம்

Dr. மாலதி வரதராஐா

தென்ஆபிரிக்கா இணைப்பாளர்: அபே நாயுடு

நோர்வே இணைப்பாளர்: கில்லறி லியோ

ஆகியோரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதினம்

இதில் பெருமளவு தமிழர்கள் வாழும் நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் ஆகியவை இல்லை. இந்நாட்டில் உள்ளவர்கள் நாடு கடந்த ஈழம் அமைப்பதற்கு ஆதரவு வழங்க மாட்டார்களா ?

நாடு கடந்த தமிழீழ அரசின் நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர்களின் பெயர் விபரத்தினை நாடு கடந்த தமிழீழ அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் ..உங்கள் கைகளில் உள்ள வரலாற்று கடமைகளை நீங்கள் நன்கு அறிவீர்கள்.. உங்கள் சொல்லை விட செயலை மிகவும் எதிர்பார்க்கிறோம் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பெருமளவு தமிழர்கள் வாழும் நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் ஆகியவை இல்லை. இந்நாட்டில் உள்ளவர்கள் நாடு கடந்த ஈழம் அமைப்பதற்கு ஆதரவு வழங்க மாட்டார்களா ?

Photo

ஜேர்மனியில் தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பும், மக்கள அவை தொடர்பான கருத்தரங்கும் நடைபெற்றுள்ளது

[ வெள்ளிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2009, 03:43.17 PM GMT +05:30 ]

ஜேர்மனியில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒன்றிணைந்து அமைக்கவுள்ள மக்களவை தொடர்பான விரிவான கருத்தரங்கு தமிழீழத் தனியரசுக்கான மறுவாக்குப் பதிவு தொடர்பான கருத்தரங்கு என்பன கடந்த 10-10-2009 அன்று ஜேர்மனியிலுள்ள கேர்ண் நகரில் நடைபெற்றது.

அந்த கருத்தரங்கில் நூற்றுக் கணக்கான பொது மக்கள் பங்குபற்றியிருந்தனர். கலந்துரையாடலினூடாக தமிழீழ தனியரசுக்கான மறுவாக்கெடுப்பு மற்றும் ஜேர்மனிய ஈழத் தமிழர் அவை தொடர்பான பூரணமான விளக்கங்களை மக்கள் பெற்றுள்ளனர்.

கடந்த 1976 ம் ஆண்டு இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர் ஒன்று கூடி மேற்கொண்ட வட்டுககோட்டைத் தீர்மானத்தின் பிரகாரம் தமிழ் மக்கள் சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொண்டனர்.

அந்த தீர்மானத்திற்கு 1977ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மூலமாக தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டது. அந்த மக்களாணையை நிறைவேற்றும் வகையிலான போராட்டம் கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இந்த வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் எதிர்காலத்த்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்பதாக மட்டுமே அமையமுடியும் என்பதனை மீள வலியுறுத்தும் வகையிலான வாக்கெடுப்பு ஒன்று ஜேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இடம் பெறவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இடம் பெற்ற மேற்படி கலந்துரையாடல் பொது மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.

அத்துடன் ஜேர்மனியில் அமையவுள்ள மக்களவையின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வானது சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனிரசு உருவாக்கப்படுவதற்காக பாடுபடுவது என்பதாகும்.

ஜேர்மனிய நாடு தழுவியரீதியில் வாழும் ஈழத் தமிழ் மக்களை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் இந்த மக்கள் கட்டமைப்பானது அடிமட்டத்தில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதுடன் அதன் கொள்கையானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்றும் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தவர்களால் ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டிருந்தது.

மக்களவை உருவாக்கத்திற்கான தமது பூரணமான ஆதரவினை வழங்க முடியும் என்றும் ஜேர்மனியின் அனைத்து நகரங்களிலும் மக்களவை தொடர்பான விளக்க கூட்டங்கள் நடாத்தப்படல் வேண்டும் என்றும் கலந்து கொண்ட பொது மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் போராட்டமானது புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழம் ஈழத் தமிழ் இளையோர்கள் தாமாக முன்வந்து தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

இதேபோன்று, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கருத்தரங்குகளும், தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடும்பும், மக்கள் அவைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளன.

நோர்வேயில் தமிழீழத் தனியரசுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளமையும் நினைவூட்டத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய உறுப்பினர் ஒருவரும் இதில் இடம் பெற்றிருக்கின்றார் போலுள்ளது....

தயவு செய்து நியமனங்களை நிறுத்திவிட்டு வெளியில் வாருங்கள். நாடுகடந்த தனிஅரசு, கவற்சிகரமான கோசத்தை முன்வைத்தீர் திரு உருத்திரகுமாரின் அறிக்கையில் நோக்கம் புரியாது இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.