Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் சமஸ்கிருதமும்

Featured Replies

தமிழும் சமஸ்கிருதமும்

*ஏன் இந்த திரி

நீண்ட நாட்களாக, முதலில் விவாதமேடைகளிலும் அதை தொடர்ந்து பத்திரிக்கைகளிலும் பின்னர் தற்போது இணையங்களிலும், இரண்டு மொழிகளிலும் பூரண ஆழ்ந்த அறிவற்ற சில(பல) அறிவுக்கொழுந்துகளால் நடாத்தப்படும் இந்த (மொழி) யுத்தம், எமது இன்னுயிர்த்தமிழின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்குமோ என்ற பேரச்சமே இந்த திரியை தொடங்குவதற்கான பிரதான காரணம்.

*தகுதி

சரி.இந்த மொழி யுத்தத்தின் இயல்புகளை, விளைவுகளை ஆழ்ந்து அலசுவதற்குரிய இருமொழி அறிவு எனக்கு இருக்கிறதா? இல்லை.எனினும் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு (இங்கே தமிழ்) பிறமொழிக்கலப்பு மிக மிக அவசியம் என்பதில் மிக உறுதியாக உள்ளவன்.

*மொழி என்றால் என்ன‌

மொழி என்பது தனது எண்ணத்தை இன்னொருவருக்கு எடுத்து இயம்ப பாவிக்கப்பயன்படும் ஒரு கருவி(அவ்வளவு தானா என்பது ஆராய்ச்சிக்குரியது).மனிதன் ஒரு சமூகவிலங்கு என்கிற ரீதியில் அவனுடைய கருத்துப்பரிமாற்றத்திற்கு (அதனூடாக அவனது சுகவாழ்வுக்கு, இருப்புக்கு)மிக மிக இன்றியமையாதது.மொழியில் பல பிரிவுகள் உண்டு.உதாரணமாக பேச்சு மொழி, எழுத்து மொழி, உடல்(அசைவு)மொழி, சங்கேத மொழி, சைகை மொழி .... எனப்பல வகைப்படும்.இந்த மொழிகள் தனக்கேயுரிய‌ இலக்கணத்தோடு இருப்பது சிறப்பு.எனினும் இலக்கணமற்ற (ஒரு கட்டுக்கோப்பற்ற)வகையில் அமைந்த ஒரு எண்ணப்பகிர்வு இன்னொரு மனிதனால் பூரணமாக(?) விளங்கக்கூடியதாக இருந்தால் அதுவும் ஒரு மொழியே(உ+ம்: குழந்தை மொழி, காதல் மொழி, சித்திர .மொழி).எனினும் மொழி அது உருவாக்கப்பட்டதற்கான(கருத்துக்களை தெளிவாக்குதல்) முழுவெற்றியை அடைந்ததா? என்றால் பதில் இல்லை என்பதே.

தொடரும்.....

  • தொடங்கியவர்

*சிறந்த பொறியியல் கண்டுபிடிப்பு

மனித இனப்பிறப்பில் இருந்து இன்றுவரை பல்வேறு கண்டுபிடிப்புக்கள் பல்வேறு காலகட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுவந்திருக்கின்றன.அவை மனிதசமுதாயத்தின் இன்றைய உன்னதநிலைக்கு படிக்கற்களாக எப்போதும் இருந்திருக்கிறது.எனினும், மனிதனால் கண்டுபிடிக்கப்ட்ட சிறந்த பொறியியல் கருவி மொழியே.எல்லா கருவிகளைப்போல் இந்த மொழியும் மறையலாம், மெருகேறலாம், மறைந்து மீண்டும் புதிதாக தோன்றலாம்(ஹிப்ரு).பிற பொறியியற்கருவிகளின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது தகவல் பரிமாற்ற‌மும் தகவல் சேமிப்பும் தான்.எமது சிந்தனையினை ஒருங்கமைப்பதிலும் அதை ஒரு ஒழுங்கான வகையில் பதிவு செய்து அதை சீர்தூக்கிபார்த்து தவறுகளை களைந்து ஒரு அருமையான புதிய கண்டுபிடிப்பை உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் வரையிலும் மொழியின் பங்கு அளப்பரியது.மனிதன் இந்த தகவல்களை பதிவு செய்யவேண்டியது மிக மிக அவசியம்(முக்கிய நோககம் அடுத்த தலைமுறைக்கு அறிவை கொடுத்தல்)அந்த பதிவுகள் சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம் அது பதிவு செய்யும் தலைமுறையின் தவறு அல்ல.ஆனால் பதிவு செய்ய வேண்டியது ஒரு இமாலய கடமை.அடுத்த தலைமுறையோ(அல்லது தற்போதைய தலைமுறையோ)அந்த பதிவுகளை விவாதப்பொருளாக்கி புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்துவது அவசியம்.அப்படி தொடரும் போதுதான் ஒரு சிறந்த அறிவியல் சமூகத்தை உருவாக்கிட முடியும்.

*எது சிறந்த மொழி

ஒவ்வொரு மொழியும் அந்த அந்த இனக்கூட்டத்தின் சூழ்நிலைக்கேற்ப(இடம், தேவை, ஒலித்தன்மை) உருவானதே.ஆகவே உலகத்தில் தோன்றிய மொழிகள் எல்லாமே சிறந்த மொழிகள் தான்.எந்த மொழியின் அழிவும் ஒரு சிறந்த பொறியியல் கருவியின் அழிவே.அந்த மொழி அழிவோடு அந்த இனக்கூட்டத்தின் தனித்தன்மை, பாரம்பரியங்கள்,அரிய கண்டுபிடிப்புகளின் பதிவுகளும் அழிக்கப்படுகின்றன.ஒவ்வொரு மொழியின் அழிவும் ஒரு இனப்படுகொலையே.

தொடரும்

  • தொடங்கியவர்

*மொழி வளர்ச்சி

ஒரு சாதாரண தொடர்பாடல் கருவியாக இருந்த மொழி, பல்வேறுதுறைகளில், அது சார்ந்த இனம் தமது கிளைகளை பரப்பும்போது அவற்றை கையாள்வதற்கு புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றது.உதாரணமாக மரங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக பார்த்த அவர்களுக்கு ஒவ்வொரு மரத்தையும் பிரித்து அறிவதற்கு புதிய புதிய சொற்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.இங்கே அந்த மொழியின் வளர்ச்சி தொடங்குகிறது.இது எல்லாத்துறைக்கும் பொருந்தும்.இப்படி மெதுவாக தொடங்கும் இந்த வளர்ச்சிக்கு அந்த மொழியால் ஈடுகொடுக்க முடியாத போது மொழிக்கலப்பு அவசியமாகின்றது.

*எப்படி மொழிக்கலப்பு உருவாகின்றது

இந்த மொழிக்கலப்பு இரண்டு வகைப்படும். ஒன்று, மற்றைய மொழிக்கூட்டத்தோடு பழக(வணிகம், போர், சுற்றுலா,.......)தொடங்குவதால் வருவது(இது இயல்பாக வருவது______இது சாதாரண மக்களில் இருந்து மொழிக்கு). இன்னொன்று, பிறமொழிகளில் இருந்து மொழிவல்லுனர்களால் புகுத்தப்படுவது(இது கொஞ்சம் வன்முறையானது___‍இது மேலிருந்து சாதரண மக்களுக்கு).ஆனால் ஒரு குறிப்பிட்ட மொழியின் வளர்ச்சிக்கு இரண்டுமே தேவை.

தொடரும்......

  • தொடங்கியவர்

*மொழிக்கலப்பு தவிர்க்கமுடியாததா?

தவிர்க்கமுடியாதது.மிகவும் அவசியமானது.ஒவ்வொரு சொல்லும் தன்னுள் ஒரு ஆழ்ந்த பொருளை, உச்சரிக்கும்போது ஒரு தனிப்பாணியை கொண்டிருக்கவேண்டும்.அந்த சொல்லை சொல்லும்போது இலகுவாகவும் கேட்பவருக்கு அச்சொல்லின் பொருளை "படக்"கென்று முன்னே கொண்டுவருவதாகவும் தனித்தன்மையாகவும்(இன்னொரு சொல்போல மயக்கத்தை கொண்டுவரக்கூடாது_______‍‍விளைவு பாரதூரமாக இருக்கக்கூடும்)இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.வலிந்த சொல் உருவாக்கங்கள்(உ+ம்: தமிழுக்குள் மட்டும் தேடுவது) சில வேளைகளில் மேல் குறிப்பிட்ட இயல்புகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும்.(இப்போது உருவாக்கப்பட்டுள்ள பல கலைச்சொற்கள் அவை எப்பொருளை சுட்டுகின்றன என்று புரிவதே இல்லை).இந்த இடத்தில் பிறமொழிகளில் இருந்து இரவல் வாங்குவதில் தப்பே இல்லை. ஆனால் அப்படி உருவாக்கப்படும் சொற்கள் தமிழ் இலக்கண மரபுகளுக்குள் கட்டுப்படவேண்டியது அவசியம்.(உ+ம்: கார் என்பது தமிழ் இலக்கண மரபுகளுக்கு உட்பட்டது.அதை அப்படியே பாவிக்கலாம்.taxi தமிழ் இலக்கண மரபுகளுக்கு உட்பட்டது அல்ல அதற்கு பிறமொழியில் அல்லது தமிழில் தேடலாம்)

தொடரும்......

  • தொடங்கியவர்

*யார் தமிழர்?

யார்தான் தமிழர்? இங்கே பலருக்கு ஒரு மயக்கம், ஒரு தயக்கம் இருக்கும்."கல் தோன்றி.........." என்று புராணம் பாட தொடங்கும் அன்பர்கள் மட்டும் தமிழரா? "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் அடியார்கள் தமிழரா? தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி பழைய சமய இலக்கியங்களை கடுமையாக விமர்சிக்கும் பெரியார் தமிழரா? தமிழன் என்று சொல்லி தமிழே பேசத்தெரியாது எம்மை உலகெங்கிலும் தலைகுனியவைத்த லக்ஸ்மன் கதிர்காமர் தமிழரா? "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என்று முழங்கி எம்மை இனப்படுகொலை செய்தவனுக்கு பொன்னாடை போர்த்திய கலைஞர் தமிழரா? ................................யார் தமிழர்? தமிழ் மொழியின் எழுச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் துணைநிற்போர், தமிழில் இலக்கியம் படைப்போர் , தமிழை இதயத்தில் வைத்து ஏத்துவோர், அதை தமிழிலேயே திட்டுவோர், "தமிழனுக்கு ஏதடா வரலாறு" என்று இகழ்வோர், காட்டிக்கொடுத்தோர், அதற்காக போராடியோர், உயிர் தந்தோர்.............................எல்லோரும் தமிழரே.(அவர் அவர் அந்த அந்த விவாதத்தை தமிழிலேயெ நடாத்தி இருந்தால் .......எல்லொரும் தமிழரே.ஆரோக்கியமான விவாதங்களை வைப்பவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவர்கள் என்பது தவறு)

*இரு மொழி அறிவு

எமது தாய்மொழியை விட இன்னொரு மொழியை அறிந்துவைத்தல் என்பது இன்று ஒரளவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதை தவறு என்று இப்பொது பலரும் சொல்வது இல்லை.ஆனால் வடமொழி என்று வரும்போது சிலர் கொலைவெறியோடு எதிர்க்கிறார்கள்.எப்போதுமே இருமொழி அறிவு என்பது அவனுடைய சிந்தனை ஆற்றலைப்பெருக்குவதோடு மட்டும் இல்லாது அவனுடைய தனிமனிதவிருத்திக்கு பெரிதும் பங்காற்றக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இப்போது அது ஆங்கிலமாக இருக்கின்றது.அப்போது அது சமஸ்கிருதம்.எந்த இருமொழியும் ஒரு புரிந்துணர்வோடு உரையாடலில் ஈடுபடும்போது இரண்டு மொழிகளுமே பயனடையக்கூடும்.அப்படியான ஒரு உரையாடலே இருமொழி வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றியது.அதுதான் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் நடந்தது.ந‌டக்கின்றது.நடக்கும்(நடக்க வேண்டும்).சமஸ்கிருதத்தில் பதிவு செய்யப்பட்ட சமய, விஞ்ஞான, வணிக, தத்துவ......நூற்கள் தமிழில் பெரும் செல்வாக்கு செலுத்தின.பல புதிய சொற்கள் இதன் மூலம் அறிமுகமாக தொடங்கின.அவை தற்சம, தற்பவ விதிகளின்படி உருவாக்கப்பட்டன.அதில் என்ன தவறு இருக்கக்கூடும்.அங்கிருந்து வந்த அந்த புதிய கருத்துக்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கக்கூடும்.ஆனால் அந்தக்கருத்துக்கள் தமிழில் புதிய புதிய விவாதங்களுக்கு வழிகோலி தமிழை இன்னுமொரு புதிய உயர்ந்த நிலைக்கு எடுத்துச்சென்றது.

தொடரும்....

Edited by kssson

  • தொடங்கியவர்

*சமஸ்கிருதத்தை ஏன் எதிர்க்கிறார்கள்

"கடவுளுக்கு தெரிந்த மொழி, கடவுளோடு பேசும் மொழி" என்று சமஸ்கிருதத்தை ஒரு சிறு கூட்டம் மாற்றிவிட்டதால் வந்த சிக்கல் இது.எல்லாம் வல்ல உங்கள் இறைவனுக்கு தமிழ் தெரியாதா? என்று எள்ளி நகையாடியபடி, நாம் சமஸ்கிருதத்தில் அல்லாமல் தமிழில் வணங்குவோம் என்று ஒரு கூட்டம்.சமஸ்கிருதம் சொல்லும் கோட்பாடுகள் சூத்திரர்க்கு ஆகாது என்று இன்னுமொரு கூட்டம்.சூத்திரர்க்கு இல்லாத கடவுள் எவனுக்கு வேண்டும் என்று (இந்து)கடவுள்களையும் சமஸ்கிருதத்தையும் சேர்ந்து எதிர்க்கும் ஒரு கூட்டம்.தமிழின் தனித்தன்மை என்னாவது என்று ஒரு கூட்டம்.அடடா.... அடடா... இரண்டு அருமையான தொன்மொழிகள் (தமிழ்,சமஸ்கிருதம்)இந்த குண்டர்களின் கையில் அகப்பட்டு சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது.இந்த போர், இந்த இருமொழி தொடர்பான கற்கைகள் மேலுள்ள நாட்டத்தை குறைத்துவிடும் என்று அச்சமாக இருக்கிறது.சரி" கடவுளுக்கு தெரிந்த மொழி" அட போனால் போகட்டும் கோவிலில் ஆவது இருக்கட்டுமே.அதை அழிப்பதில் என்ன கொலைவெறி.ஒவ்வொரு கோவில் பூசகரும் எமக்கு கலைச்சொல் உருவாக்கத்தின் போது உதவமுடியும். அவர்கள் என்ன அவ்வளவு கொடுமையானவர்களாகவா இருக்கிறார்கள்? எமக்கு பக்கத்தில் இருக்கும் இந்த பன்மொழிப்புலவர்களை இழந்துவிட்டு அவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் மட்டும் தேடப்போகிறோமா? அவர்கள் சொல்வது சரியா தவறா என்று தமிழில் ஒரு விவாதத்தை வைத்துக்கொண்டால் போயிற்று.

தொடரும்...

Edited by kssson

  • தொடங்கியவர்

*இணைய பதிவர்கள்

இன்றைய தகவல் யுகத்தில் எந்தவித சீர்தூக்கல்களும் இல்லாது எழுதப்படுகின்ற கட்டுரைகள், பதிவுகள், செய்திகள் தவறான கருத்துக்களை மக்களிடம் கொண்டுபோய்ச்சேர்க்கக்கூடும்.என்னைப்பொறுத்தவரையில் விவாதங்கள் இந்த வகைக்குள் அடங்காது.விவாதங்கள் ஆரோக்கியமானதாகவோ அல்லது ஆரோக்கியமற்றதாகவோ இருக்கலாம். அந்த வகையில் இணைய பதிவுகள் ஒரு விவாத நோக்கில் எழுதப்படவேண்டும்.இணையபதிவர் ஒருவர் தனது கருத்தை முன்வைக்கும்போது எதிர்க்கருத்துக்களுக்கு இடமளிக்க வேண்டும். பெரும்பாலான பதிவர்கள் தமக்கு சார்பான கருத்துக்களுக்கே இடமளிக்கிறார்கள். சமஸ்கிருதம் மீதான எதிர்ப்புகளுக்கு பிரதான காரணம் அதில் உள்ள இலக்கியங்கள் கூறும் சாதிய முறைமையே. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.அந்த இலக்கியங்கள் கூறும் கருத்துககள் அந்த மொழிக்கு சொந்தமானது இல்லை. (அதை அதை உருவாக்கியவனுக்கே சொந்தமானது......அது ஒரு பதிவு __அந்த மொழியில் __அவ்வளவே).அடிமை என்ற சொல்லை தமிழ் கொண்டிருப்பதால் அது தாழ்ந்த மொழி அல்ல.

தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழும் சமஸ்கிருதமும்

தனது தாய் மொழியையே ஒழுங்காக உச்சரிக்தெரியாத , மதிக்காத தமிழனுக்கு .....

இறந்த மொழியான சமஸ்கிருதத்தில் பெரிய அக்கறை.

சும்மா ..... போங்கப்பா ......

  • தொடங்கியவர்

*உலக மொழிகளில் தேடுவோம்

ஒரு புதிய சொல்லை தமிழில் உருவாக்கும்போது அதன் தேவை என்ன? இதற்கு சமமான சொல் தமிழில் ஏலவே உள்ளதா? அப்படி இல்லையாயின் தமிழின் இலக்கண வரம்புக்குள் மாற்றப்படக்கூடிய பிறமொழிச்சொல் ஏதாவது ஒரு உலகமொழியில் இருக்கிறதா?அது உச்சரிக்கும்போது ஒரு தனித்தன்மையோடு விளங்குகின்றதா? அது அதற்குரிய பொருளை ஐயமின்றி சுட்டுகின்றதா? என்று பார்த்து உருவாக்கவேண்டும். இதற்கு எமது மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் மட்டும் அல்லாது பல்வேறுஉலகமொழிகளில் பாண்டித்தியம் பெற்ற பல அறிஞர்கள் தேவைப்படுவார்கள்.இதை கட்டுப்படுத்தி ஒழுங்கமைக்க ஒரு உலக அமைப்பு நிச்சயம் தேவை.இது இப்பொதைய காலத்தின் கட்டாயம்.பல்வேறு நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்களின் உதவி இதற்கு தேவைப்படும். அவர்களில் இருந்துதான் இந்த இருமொழிஅறிவு(தமிழும் ,தான் வாழும் புலத்து மொழியும்)உள்ள அறிஞர்கள் உருவாகவேண்டும். பொதுவாக தமிழர்களின் பிரதான குறைபாடு தான் வாழும் புலத்து மொழியை இலகுவாக கற்றுக்கொண்டுவிடுவார்கள், தாய் மொழியை மறந்துவிடுவார்கள். இதனால் அவர்களில் இருந்து தமிழுக்கு பலன் கிடைப்பதில்லை.(புதிய சொற்கள்___அதனூடாக எம்மொழியின் வளர்ச்சி, புதிய புதிய விவாதங்கள்.) இதற்கு பெற்றோரும்(அநேகமான இடங்களில் இவர்கள்தான் பிள்ளையின் இருமொழி ஆற்றலை கொல்கிறார்கள்) யாழ் போன்ற களங்களும் பெரும் பங்களிக்க முடியும்.

தொடரும்.........

  • தொடங்கியவர்

*மொழி ஆராய்ச்சி

மொழி ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியமானது.அது எப்போதும் நிறுத்தப்படக்கூடியது(திருப்திப்பட்டுக்கொள்ளக்கூடிய) துறை அல்ல.தொடர்ந்து சளைக்காமல் மொழி தொடர்பான ஆராய்ச்சிகள் பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்படவேண்டும். அதை நாம் ஒரு உலகமட்டத்தில் நடாத்தவேண்டும்.மற்றைய மொழிகளின் வளர்ச்சிக்கான காரணங்கள் கண்டு அறியப்படவேண்டும். அவற்றை விவாததிற்கான பொருளாக தொடர்ந்து வைத்திருக்கவேண்டும்.அதை செய்ய தவறியதால் தான் இன்றைய நிலையில் உள்ளோம்.

தமிழ் மொழியில் இருந்து ஏன் பிரிந்து செல்கிறார்கள் , அவர்களை எப்படி திரும்ப கொண்டுவருவது என்பது குறித்த ஆராய்ச்சிகளுக்கு தற்போது முன்னிலை கொடுக்கப்படவேண்டியது மிக மிக அவசியம். இளையவர்களுக்கு எங்கே அதிக நாட்டம் அதை எப்படி தமிழில் தருவது(உ+ம்: இணைய விளையாட்டுக்கள்) என்பது குறித்தும் நான் மேலே குறிப்பிட்ட அந்த உலக அமைப்பு கவனம் செலுத்தவேண்டும்.

முற்றும்.

Edited by kssson

  • தொடங்கியவர்

என் இந்த கட்டுரை தொடர்பான உங்கள் விவாதங்களை எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து விவாதிப்போம்.

தமிழ்சிறி

ஏற்கனவே எமது மொழியின் வளர்ச்சிக்கு சமஸ்கிருதம் பெரும் பங்காற்றி இருக்கிறது.அது தொடர்ந்து உதவக்கூடும்.அதை ஏன் எதிர்க்கவேண்டும்?

ஏன் தமிழ் மொழியை பேச மறுக்கிறார்கள்? அது அழியுமா?

தொடர்ந்து கருத்துக்களை முன்வையுங்கள்.

Edited by kssson

  • கருத்துக்கள உறவுகள்

என் இந்த கட்டுரை தொடர்பான உங்கள் விவாதங்களை எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து விவாதிப்போம்.

தமிழ்சிறி

ஏற்கனவே எமது மொழியின் வளர்ச்சிக்கு சமஸ்கிருதம் பெரும் பங்காற்றி இருக்கிறது.அது தொடர்ந்து உதவக்கூடும்.அதை ஏன் எதிர்க்கவேண்டும்?

ஏன் தமிழ் மொழியை பேச மறுக்கிறார்கள்? அது அழியுமா?

தொடர்ந்து கருதுக்களை முன்வையுங்கள்.

இதனை தொடர்ந்து விவாதிக்க நான் விசுக்கோத்து இல்லை .ம‌ன்னிக்க‌வும்.

அது கிட‌க்க‌ட்ட‌டும் , உங்க‌டை பெய‌ரை எப்ப‌டி உச்ச‌ரிப்ப‌து ?

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

மொழியியல் பற்றி விசுக்கோத்திடம் இருந்து ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பார்த்தது தான் என் தப்போ?

முதலில் தமிழை ஒழுங்காக எழுதவும்.

தமிழிற்கு அல்ல ================அதில் "ம்" மிக முக்கியம். அந்த ம் இற்கு பல அர்த்தங்கள்.

my name is not that important.

Edited by kssson

  • கருத்துக்கள உறவுகள்

மொழியியல் பற்றி விசுக்கோத்திடம் இருந்து ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பார்த்தது தான் என் தப்போ?

முதலில் தமிழை ஒழுங்காக எழுதவும்.

தமிழிற்கு அல்ல ================அதில் "ம்" மிக முக்கியம். அந்த ம் இற்கு பல அர்த்தங்கள்.

my name is not that important.

ரேக் இற் ஈசி க்ஸ்ஸ்க்சான். ரொம்ப‌ ரென்ச‌னாவாதீங்க‌.

நீங்க‌ளும் நானும் தான் இந்த‌ தலைப்பிலை தொங்கிக்கொண்டிருக்கோறோம்.

நீங்க‌ள் வ‌றுத்த‌ விசுக்கோத்து , நான் வ‌றுக்காத‌ விசுக்கோத்து.

முத‌ல்ல .... மூஞ்சூறு தான் போகும் வ‌ழியை பார்க்க‌ வேணும் .

இதுக்குள்ளை விள‌க்குமாத்தையும் காவ‌க்கூடாது.

ம‌ற்றும் ப‌டி உங்க‌ள் " ம் " க‌ருத்தை வ‌ர‌வேற்கிறேன். ந‌ன்றி.

  • தொடங்கியவர்

நான் எனக்கு தோன்றிய கருத்தை பதிவு செய்தேன். அவ்வளவே.

நான் இந்த கட்டுரையில் கூறியபடி, எந்த கருத்தாயினும் அதை பதிவு செய்வது மிகமுக்கியம்.

அது பழைய புண்ணாக்கு என்றாலும் எனக்கு கவலை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

‘ தத்துவார்த்தப் போர்கள்’

இந்திரா பார்த்தசாரதி

தொன்று தொட்டு வரும் மரபுக்கும் ஸ்தாபனத்துக்கும் எதிரான கருத்துகள் வைக்கப்படுவது, மேல் நாட்டுச் சிந்தனையின் தாக்கம் என்ற தவறான எண்ணம் நம் நாட்டிலே பரவியிருக்கிறது. இத்தகைய எதிர்க்குரல்கள்தாம், நம் இந்திய சிந்தனைப் பண்பாட்டின் இன்றிமையாத அம்சம் என்பதை நாம் உணர வேண்டும்.

‘ஸ்தாபனம்' என்றால் என்ன?

காலந்தோறும் மனிதச் சிந்தனைப் பரிணாமத்துக்கேற்ப நம் வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகளும்(பழக்க வழக்கங்களும்) தொடர்ந்து மறு பரிசீலனைக்கு உட்பட்டாக வேண்டும். அவ்வாறு மாறாமல், எந்தச் சூழ்நிலையில், எந்த வரலாற்று நிர்ப்பந்தத்துக்கிசைய உருவாகியனவோ, அவ்வளவிலேயே அம் மதிப்பீடுகள் உறைந்து இறுகிவிடுகின்றன என்றால், அந்த மரபு எதேச்சதிகாரமே ‘ஸ்தாபனமா'கிவிடுகின்றது. இதை ஆங்கிலத்தில் ‘Establishment' என்பார்கள். இந்த ‘ஸ்தாபன'த்தை எதிர்த்து, இந்தியச் சிந்தனை வரலாற்றில் கொள்கைப் போர்கள் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கின்றன.

இந்திய ‘லோகாயதம்' (materialism) பிரஹஸ்பதி லௌக்கிய என்பவர் காலத்திலிருந்து தொடங்குகிறது. இவர் தத்துவ ரீதியாக வைதிக மதத்தை எதிர்த்தார். இவருடைய தொடக்கக்கால எதிர்ப்புக் கணைகளையே அடிக் கற்களாகக் கொண்டு, பிற்காலத்திய லோகாயவாதமும், சார்வாகக் கோட்பாடுகளும் பிறந்தன. பிராம்மண நெறிச் சடங்குகள், இறைவன் பற்றிய கருத்து, பிறவித் தொடர்ச்சி, சரீரத்தினின்றும் வேறுபட்டதாக ‘ஆத்மா' என்று ஒன்று இருப்பதாகக் கொள்ளும் நம்பிக்கை அனைத்தும் கேள்விக்குரியனவாகின. பிரஹஸ்பதிலௌக்கியக் கொள்கைகள் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. தைத்ரீய பிராஹ்மணம் இதற்குச் சான்று தருகிறது. ‘ஒரு சமயம் பிரஹஸ்பதி, காயத்ரியின் தலையில் ஓங்கி அடித்தார். தலையும் மூளையும் சுக்கு நூறாகச் சிதறின. ஆனால், காயத்ரி அமரத்துவம் வாய்ந்தவள். அவளுடைய மூளையின் ஒவ்வொரு சிறு பகுதியும் அழிவுறாமல் நித்தியமயிருந்தது'

இச்செய்தி எதைக் குறிக்கின்றது?

பிரஹஸ்பதி எதிர்ப்புணர்வின் உருவகம். காயத்ரி வைதிக மதம், அதாவது ஸ்தாபனம். ஸ்தாபனதை அழிக்க முடியாது. புதிய கோலம் பூண்டு அழிக்க முடியாதாகவே இருக்கும். புத்தரை திருமாலின் அவதாரமாக்கியது போல. மேல்கோட்டை சம்பத்

குமார் கோயிலில், இராமானுஜர் செய்வித்த ஹரிஜன ஆலயப் பிரவேசம், நாளா வட்டத்தில் ஒரு சமயச் சடங்காக மாறி, ஒடுக்கப்பட்ட மக்கள், ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டும், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டது போல.

மனுவுக்கும் பிரஹஸ்பதிக்கும் நீண்ட சம்வாதம் நிகழ்ந்ததாக மஹாபாரதம் கூறுகிறது. மனுவின் சநாதனக் கொள்கைகளை பிரஹஸ்பதி எதிர்த்துப் பேச, மனு அவரைத் தம் வழிக்குக் கொண்டு வந்ததாகக் கூறும் சம்பவம் இது. அதாவது, ஸ்தாபனத்தின் வெற்றி என்பது பொருள்.

விஷ்ணு புராணம், இவ்வெதிர்ப்பை வேறு வகையாகக் கூறுகிறது. அந்தக் காலத்தில் அசுரர்கள் வேத நெறியை ஏற்றுக் கொண்டு கடுமையாகத் தவம் செய்யத் தொடங்கி னார்கள். அதனால், இந்திரன் அச்சம் அடைந்தான். தன் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற பயம். ஆகவே அவன் வேண்டுகோளின்படி, மாயாமோஹன் சிருஷ்டிக்கப்பட்டு, அவன் அசுரர்களுக்கு பிரஹஸ்பதியின் போதனைகளைக் கற்பித்தான். இதன காரணமாக, அசுரர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியாமல் போய்விட்டது. அவர்கள் நெறி பிறழ்ந்தார்கள். இந்திரனுக்கு அவர்களை அழிப்பது என்பது எளிதாகிவிட்டது. பிரஹஸ்பதி சுக்கிராச்சாரியார் உருவத்தில் அசுர குருவானார் என்று மைத்ராயணி உபநிஷதம் கூறுகின்றது. ஸ்தாபன எதிரியான பிரஹஸ்பதி ஓர் ஏமாற்றுக்காரர் என்பது கருத்து.

பைபிளில் வரும் சாத்தான் கதைகளுக்கும் இதற்கும் பல ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. கடவுளின் இறையாண்மையை எதிர்த்து மனிதனுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு வழிகோலிய சாத்தான் தீய சக்தியாகச் சித்திரிக்கப்படுகின்றான்.

நெருப்பை (பகுத்தறிவு) உலகிற்குக் கொண்டு வந்த ப்ரொமிதீயஸ்(Prometheous) இறைவனால் தண்டிக்கப் படுகின்றான் என்று கிரேக்கப் புராணங்கள் கூறுகின்றன.

ஆங்கிலக் கவிஞனாகிய ஷெல்லி இதைப் பற்றி ஒரு அற்புதமான குறுங்காவியம் படைத்திருக்கிறான். ஆகவே, ஸ்தாபனத்துக்கும் அதை எதிர்ப்பவர்களுக்குமிடையே நிகழும் போராட்டங்கள் மிகத் தொன்மையானவை. ‘சார்வாகம்' என்றால், ‘இன்பத்தைத் தரும் பேச்சு' என்று அர்த்தம். தனிமனிதக் கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடு. இவர்களைப் பற்றி விஷ்ணுபுராணம் கூறுகிறது: ‘ இவர்கள் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள். இவர்களுக்கு நன்மை, தீமை என்று எதுவும் கிடையாது. நிகழ்வன அனைத்தும் எதேச்சை என்பது இவர்கள் கருத்து. இவர்கள் கடவுளை மறுப்பவர்கள். அவனவன் தனக்கு விதித்துக் கொள்வதே

தர்மம் என்பதே இவர்கள் கருத்து.'

சமூகம் தடம் புரளாமல் இருக்க வேண்டுமென்றால், தனி மனிதனின் கருத்துச் சுதந்திரத்துக்கு வரம்பு தேவையாகின்றது. ‘இன்பத்தைத் தரும் பேச்சு', கவர்ச்சிகரமான போதனைகளாக மாறி (நாத்திகப் பிரச்சாரமும், திரைப்படக் கவர்ச்சியும்,

அரசியலும் தமிழ் நாட்டில் இணைந்தாற்போல்) சிற்றின்பங்களை நுகர்வதில் சமூகத்தடை எதுவும் இருக்கக் கூடாது எனும்போதுதான் பிரச்சினைகள் எழுகின்றன. மனிதன் தன் ஆற்றலின் எல்லை வரம்புக்கு உட்பட்டது என்று உணர்வதுதான், இறை உணர்வு ஏற்படுவதற்கான அடிநாதம். கடவுளை ஏற்றுக் கொள்ளாத எந்தக் கோட்பாடும் இந்தியாவில் வெற்றி அடைந்ததில்லை. சார்வாக மதத்தின் வீழ்ச்சிக்கும் இதுவே காரணம்.

கடவுள் எதிர்ப்புக் கொள்கையை வற்புறுத்திய சார்வாகரையும், சார்வாக முனிவராகக் கொண்டதுதான், இந்தியத் தத்துவ மரபின் தனித் தன்மை. ஆகவே, சமஸ்கிருதம் என்றதுமே, அதை சநாதன மதத்தோடு மட்டும் இணைத்துப் பார்ப்பது கொச்சைத்தன

மான அணுகுமுறை. ஸ்தாபனமாக இறுகத் தொடங்கிய எந்தக் கருத்துத் தளத்தையுமம் எதிர்த்த கோட்பாடுகள் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருத மொழியில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததினால்தான் ஜாபாலி முனிவரிலிருந்து, அம்பேத்கார் வரை அனைத்து அறிஞர்களாலும் ஸ்தாபனத்தின் மீது அறிவு சார்ந்த போர் தொடுக்க முடிந்திருக்கிறது.

தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவின் ஆதிமொழிகள். சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் தாய் மொழியாகக் குறிப்பிடப்பட்டது, ஐரோப்பியப் பாதிரிகள் உருவாக்கிய கற்பிதம். அறிஞர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்துக்காகச் ‘செய்யப்பட்ட மொழி' சமஸ்கிருதம். (‘சமஸ்கிருதம்' என்றாலே ‘செய்யப்பட்டது' என்றுதான் அர்த்தம்). இந்தியத் தத்துவ வரலாற்றைப் பார்க்கும்போது, தத்துவப் போர்களை நிகழ்த்தியவர்களில் பெரும்பான்மையோர் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள்.

நுண்மையான(abstract) கருத்துகளைச் சொல்வதற்கான ஓர் இயல்பான வசதி சமஸ்கிருதத்தில் ஏற்பட்டுவிட்ட காரணத்தினால், தத்துவ ரீதியான விவாதங்கள், இம்மொழியில் அகில இந்திய ரீதியாக அக்காலத்தில் நிகழ்ந்து வந்திருக்கின்றன. அந்தத் தத்துவ ஞானிகளை இனவழியாகவோ, ஜாதி வழியாகவோ கண்டறிய முயல்வது அறிவீனம்.

இந்தியக் கலாசார மரபில் கருத்துகளுக்கும் படைப்புககளுக்குந்தான் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டதேயன்றி, அவற்றின் ஆசிரியர்களைப் பற்றி வரலாற்று ரீதியான அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. உபநிஷதங்களின் ஆசிரியர்கள் யாரென்று வரையறுத்துக் கூறமுடியுமா? ஆசிரியர் பெயர் தெரியாத நூல்களுக்கெல்லாம் வியாஸர், அகத்தியர் பெயர்களை வழங்கிவிட்டார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது! பதினெட்டு மஹாபுராணங்களில் பெரும்பான்மையானவை தென்னாட்டில்தான் உருவாகியிருக்க வேண்டுமென்பது அறிஞர் கருத்து.

சநாதனமதத்துப் புராணச் செய்திகள், பக்தி இயக்கத்தின் போது, தமிழ்த் திருமுறைகளிலும், திவ்யப் பிரபந்தத்திலும் வருவன போல், அக்கால கட்டத்தில் வடநாட்டில் வட்டாரமொழிகளில் வழங்கப் பெறவில்லை என்பது வரலாற்று உண்மை. தனிமனிதனைச் சமூகத்தோடு இணைத்தது பக்தி இயக்கம். ‘நான் அதுவாக இருக்கிறேன்'

(‘தத்துவமஸி') என்பதைக் காட்டிலும் 'அது' வை ‘மனிதனா'கக் (அவதாரம்) கண்டு, மனிதத்தைத் தெய்வீக நிலைக்கு உயர்த்தியது பக்தி இயக்கம். ‘மானுடம் வென்றதம்மா'

என்கிறான் கம்பன்.

இவ்வரலாற்று உண்மைகளைச் சரிவரப் புரிந்து கொண்டால், அவையே நம் பண்பாட்டு அடையாளங்களை

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=803

  • தொடங்கியவர்

‘ தத்துவார்த்தப் போர்கள்’

இந்திரா பார்த்தசாரதி

தொன்று தொட்டு வரும் மரபுக்கும் ஸ்தாபனத்துக்கும் எதிரான கருத்துகள் வைக்கப்படுவது, மேல் நாட்டுச் சிந்தனையின் தாக்கம் என்ற தவறான எண்ணம் நம் நாட்டிலே பரவியிருக்கிறது. இத்தகைய எதிர்க்குரல்கள்தாம், நம் இந்திய சிந்தனைப் பண்பாட்டின் இன்றிமையாத அம்சம் என்பதை நாம் உணர வேண்டும்.

நன்றி நுணாவிலான் உங்களுடைய இணைப்பு எனது கருத்துக்கு வலுவூட்டுவதில் மிக்க மகிழ்ச்சி.

இந்து சமயம் என்றால் என்ன என்று யாராலும் வரையறுத்து கூறமுடியாது. சமஸ்கிருதத்தை இந்து கடவுள்களின் மொழியாக வைத்துக்கொண்டு (ஒரு வசதிக்காக தான்) நாம் அதில் உள்ள நூல்களை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்த நூல்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன. அதை இந்திரா பார்த்தசாரதி அவர்கள் அருமையாக விளக்கி உள்ளார். பின்னர் ஏன் தான் இப்படி அடித்துக்கொள்கிறார்களோ தெரியவில்லை.

அண்மையில் ஒரு இந்திய தொலைக்காட்சி(NDTV) விவாதத்தில் ஒருவர் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் அழித்துவிட்டு ஆங்கிலத்தை மட்டும் ஆட்சி மொழியாக்குவோம் என்றார். இவர்களை எங்கே கொண்டுபோய் வைப்பது? இதுவும் ஒருவகை இனப்படுகொலை தான்.

Edited by kssson

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.