Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரவிருக்கும் நவம்பர்27... தரவிருக்கும் தகவல்...எதிர்பார்ப்புக்கள் என்னாகும்...??? - பருத்தியன்

Featured Replies

தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை.

கருத்துகள் என்றவகையில் இல்லாமல் காலம் பார்த்துக் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். எதனை எதிர்பார்த்து இந்தக் கட்டுரையும் கருத்துக்களும்.

உண்மைதான் இறைவன்... இந்தக் கட்டுரை கூட இருக்கின்றார், வருவார் அப்படி இப்ப வராட்டியும் இன்னொரு நாள் வருவார் என்ற ரீதியில்தான் அமைந்திருக்கின்றது. இங்கு தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற கேள்வி அநாவசியம். தலைவர் தோன்ற முதல் இருந்த அனைத்து பிரச்சனைகளும் இன்னும் கூர்மை கொண்டு மிக மோசமான வடிவில் ஈழத்தமிழர்களின் இருப்பை தகர்த்துக் கொண்டு இருக்கும் வேளையில் இன்னும் இத்தகைய கட்டுரைகள் வருவது வேதனையாக இருக்கின்றது.

இறந்ததாக நம்புவர்களுக்கும், இன்னும் இருப்பதாக நம்புகின்றவர்களும் செய்ய வேண்டிய முதல் பணி, வன்னி மக்களின் விடுதலையும் ஈழ மக்களுக்குரிய வாழ்வுரிமைக்கான ஆகக் குறைந்தளவிலானதாயினும் ஒரு இடைக்கால தீர்வும்தான். இவற்றுக்காக எந்த பேயுடனும் கூட கூட்டுச் சேர்ந்து இயங்குவதே இன்றைய தேவை

இறைவன்

தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை.

கருத்துகள் என்றவகையில் இல்லாமல் காலம் பார்த்துக் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். எதனை எதிர்பார்த்து இந்தக் கட்டுரையும் கருத்துக்களும்.

இவற்றுக்காக எந்த பேயுடனும் கூட கூட்டுச் சேர்ந்து இயங்குவதே இன்றைய தேவை

அப்படி என்றால் கருணாவுடனும் பிள்ளையானுடனும் ஏன் கோத்தபாய அன் கோவுடனும் சேரலாம் என்கின்றீர்களா ?? :D

முகாமிலிருப்பவர்கள் தொடர்பாக எல்லாத் தமிழ் உணர்வாளர்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை அதற்காக அதை மூச்சுக்கு மூச்சு சொல்லி பறை தட்டுவதால் தான் காட்ட வேண்டும் சிலர் எதிர் பார்க்கின்றார்கள்

அத்தோடு இவர்கள் கோசமும் ஓய்ந்து போகின்றது

முகாமிலுள்ளவர்களை எல்லோரும் ஒரு பகடையாக திரும்பத் திரும்ப பாவிப்பதே ஒரு பிழைப்பாக இருக்கின்றது இதன் மூலம் தம்மை ஒரு தமிழ் மக்களின் விசுவாசியாக காட்டுவதற்கு பாவிப்பதாகவே படுகின்றது

முகாமிலிருப்பவர்கள் தொடர்பாக வெளிப்படையாகச் சொல்லி இயங்க முடியாத சூழல் இருப்பது எல்லோரும் அறிந்த விடயம் மக்களை மீண்டும் பழைய எழுச்சிக்கு கொண்டு வர முடியாமல் அமைப்பாளர்கள் செய்வது அறியாது இருக்கின்றார்கள்

எமது மக்களின் உந்து சக்தியாக இருப்பது தேசியத் தலைவன் பிரபாகரன் என்ற நாமம் மட்டுமே

ஆகவே தலைவரின் இருப்பு வரவு என்ற ஆய்வாக இதை எடுக்காமல் ஒரு எழுச்சியின் வடிவமாக இதை எடுக்க வேண்டும்

இதன் மூலம் தான் ஒரு எழுச்சியை ஏற்படுத்த முடியும்

Edited by tamilsvoice

. இவற்றுக்காக எந்த பேயுடனும் கூட கூட்டுச் சேர்ந்து இயங்குவதே இன்றைய தேவை

நான் உங்கள் தோழன்

நான் உங்கள் சொந்தக்காரன்

நான் உங்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து தருவேன்

எனது அரசாங்கம் உங்களுக்கு எல்லாம் செய்து தரும்

என்று நேசக்கரம் நீட்டும் அடிஉத்தம மேன்மை தங்கிய மகிந்தா பேயுடன் உறவை வளர்த்து எம் உறவுகள் உயிர் தப்ப வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை.

கருத்துகள் என்றவகையில் இல்லாமல் காலம் பார்த்துக் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். எதனை எதிர்பார்த்து இந்தக் கட்டுரையும் கருத்துக்களும்.

மக்களைத் தெம்பாக வைத்திருக்கவேண்டும்தானே.

வரலாற்றுக்கடமை என்ற சொற்தொடர் அநேகமான எல்லாஆக்கங்களிலும் வந்தேதீரவேண்டியது ஒரு வரலாற்று(திரும்பவும்)நிகழ்வு.

என்னைப் பொறுத்தவரையிலும் இன்றைய வரலாற்றுக்கடமை என்னவென்றால் 'விடுதலையின் பெயரில் சேர்த்த நிதியை களவெடுத்தவர்களுடன் மிகமூர்க்கமாக தமிழ்சமூகம் முரண்படஆரம்பிக்க வேண்டும்.'

சிறியதாக்குதலோ பெரியதாக்குதலோ,சின்னக்களமோ,பெரியகளமோ எல்லாவற்றிலும் தங்களுடைய கடைசிமூச்சுவரை போராடிவீரமரணமடைந்தவர்களின்

பெயரால் சேர்கப்பட்டநிதிக்கும் சொத்துகளுக்கும் கணக்குகள் காட்டப்படவேண்டும். இவைகளை இந்த மாவீரர்தினத்திலிருந்து எமதுமக்கள் சோர்வில்லாமல் செய்தால் தமிழீழபோராட்டக் களம் சுத்தமாகும்.புனிதமாகும்.

அதைச் செய்யாமல் பெரும்திரளான மக்களிடம் இனிமேல் போராட்டநம்பிக்கையை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.

தலைவர் வருகிறாரோ இல்லையோ ஈழத்தமிழினம் இனிஒரு உறுதிஎடுக்க வேண்டும்.

தாயைக்கூட எதிரிக்கு தாரைவார்த்து அதற்கு 'அரிக்கன்லாம்பு' பிடிப்பதற்கு ஒப்பான இந்த திருடர்களை அடையாளம்காட்டவும் அப்புறப்படுத்தவும் எழவேண்டும்;

எங்களுக்கு வந்த உறுதித்தகவலின்படி இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரின் உறவினர்கள்கூட சென்னையிலும் துபாயிலும் பெரும்சொத்துகளை வாங்கிக்குவித்து வருபதாக தெரிகிறது. 'ஊருக்குத்தான் உபதேசம்....அவரின் உறவினர்களுக்கு இல்லைபோலும்'

தலைவர்வந்தாலும் இவர்கள் எல்லாரும் சேர்ந்து அவரை கொன்றுவிடுவார்கள்.

காசுக்காக 'எதையும்' செய்யக்கூடியவர்கள் இவர்கள்.!

என்னைப் பொறுத்தவரையிலும் இன்றைய வரலாற்றுக்கடமை என்னவென்றால் 'விடுதலையின் பெயரில் சேர்த்த நிதியை களவெடுத்தவர்களுடன் மிகமூர்க்கமாக தமிழ்சமூகம் முரண்படஆரம்பிக்க வேண்டும்.'

இது வரை கொள்ளையடித்த பணத்திற்கு கணக்குக் காட்டுவது ஒரு புறமிருக்க புதிதாக மாவீரர் தினம் கொண்டாட நிதி திரட்டுகிறார்கள். ஆனால் இம்முறை மிகவும் கவனமாக இளிச்ச வாயர்கள் வீடுகளில் மட்டும் கதவு தட்டப் படுகிறது.

விலைமதிப்பில்லாத உயிரையும் வாழ்வையும் விடுதலைக்காக அர்ப்பணித்த மாவீரர்கள் இந்தமுறை 'கடன்காரர்கள்' ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இப்ப எந்தப் பொறுப்பாளரைக் கேட்டாலும் எனக்கு 46000பவுண்ஸ் கடன்,76000யுரோ கடன்,85000டொலர் கடன் என்று கடன்பாட்டுபாடுவதை மாவீரர்நாள் கிட்டவர கிட்டவர கேட்கடீஎகிறது.

இந்த காசுசேர்த்தவர்கள்,பொறுப்பாளர்கள் எல்லாரும் கடனாளிகள் என்றால் அந்தப் பணம் எங்கே??

கடன்வாங்கி மாவீரருக்கா கொடுத்தார்கள்.

பொறுப்பாளர்கள்,பேப்பர்நடாத்துபவர்கள்,கடைநடாத்துபவர்கள்,கராஜ் வைத்திருப்பவர்கள் எல்வாரும் இந்தப் போராட்டத்தினால் கடனாளிகள் ஆகிவிட்டினமாம்.

தூ!......!! இதைவிட வேறுவியாபாரம் செய்து பிழைக்கலாம் நீங்கள்.

தனது சொந்த வீட்டை அடைமானம் வைத்து எடுக்கக் கூடிய அதி கூடிய பணத்தை இறுதிப் போருக்குத் தாரை வார்த்த பொறுப்பளர்கள் இல்லாமலில்லை. இதை விட வங்கியில் கடனெடுத்துக் கொடுத்த நேர்மையான உழைப்பாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் கொச்சைப் படுத்தும் விதத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மக்கள் பணத்தை அமுக்க முனைவதை நாம் நேர்மையான பொறுப்பாளர்களுடன் சேர்ந்து அம்பலப் படுத்த வேண்டும். 'தலைவர் ஜீவிக்கிறார்' என்று நம்பும் அப்பவிகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வரவில்லை, ஆனால் அப்படிச் சொல்லி தான் மக்களின் பணம் முழுவதும் இந்தக் கும்பலால் சுருட்டப் படுகிறது. கேட்டால், தலைவர் 'தோன்றி' வந்து சொல்லட்டும் திருப்பித் தருகிறோம் என்கிறார்கள்.

நீங்கள் சொல்வதுசரிதான்Alternative!.தங்களுடைய சொந்தவீட்டைக்கூட அடமானம்வைத்து இறுதிப்போராட்டத்துக்கு வழங்கியவர்கள் தமிழ்மக்கள் குறைந்தஅளவில் வாழும் நாடுகளைச் சேர்ந்தபொறுப்பாளர்கள்தான்.பெரியஅளவில் தமிழ்மக்கள் வாழும் நாடுகளான கனடா,இங்கிலாந்து நாடுகளில் எந்தப் பொறுப்பாளனும் தங்கள் வீடுகளையோ சொத்துக்களையோ விற்று நிதிவழங்கவில்லை.ஆகக்குறைந்தது கடன்வாங்கிக்கூட நிதிவழங்கவில்லை.

மற்றவர்களிடம் நிதிபெறுவதிலும் அதை பதுக்குவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள்.இன்னும் அதில்தான் அதிஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒருபோதும் வேலைவெட்டிக்குப் போகாத இவர்கள் ஓடும் கார்கள்,வாழும் வீடுகள்,இவர்களால் வாடைக்கு விடப்பட்டுள்ள வீடுகள்,சென்னை,திருச்சியில் உள்ள வீடுகள் காணிகள் எல்லாம் உங்களின் எங்களின் பணம்,மாலீரர்களின் பணம்,தமிழீழதேசத்தின் குழந்தைகளின் பணம்!!!

Edited by archunan

'தலைவர் ஜீவிக்கிறார்' என்று நம்பும் அப்பவிகளைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வரவில்லைஇ ஆனால் அப்படிச் சொல்லி தான் மக்களின் பணம் முழுவதும் இந்தக் கும்பலால் சுருட்டப் படுகிறது. கேட்டால்இ தலைவர் 'தோன்றி' வந்து சொல்லட்டும் திருப்பித் தருகிறோம் என்கிறார்கள்.

நான் அறிந்தவரை தலைவர் இல்லை என்று சொல்பவர்கள் பக்கம் பெரிய நாடுகளில் பல பொறுப்பாளர்கள் இருக்கின்றார்கள். இவர்களின் பிரச்சனை தலைவர் இருக்கின்றார் இல்லை என்பதல்ல. என்னைப்பொறுத்தவரை புலம்பெயர் தேசத்தில் இந்த அமைப்புகள் எந்த முற்றுகைக்குள்ளும் சிக்குப்பட்டு நிர்வாகம் சீர்குலைக்கப்படவில்லை. தலைவரால் விலக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு குழு, ஊடகங்களின் உதவியுடன் அதிகாரத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டதால் குழப்பம் தொடர்கதையாக இருக்கின்றது.

மக்கள் விழிப்படையாதவரை இந்தக் குழப்பங்கள் தொடர்கதையாகவே இருக்கப்போகின்றது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது, சர்வதேசத்தாலும், சிங்களத்தாலும் "பயங்கரவாதிகள்" என பொய்முத்திரை குத்தப்பட்ட விடுதலைப் புலிகள், நம் மாவீரர்கள் ஏதோ விண்வெளியிலிருந்து குதித்தவர்கள் அல்லர். நமது சொந்த உறவுகள். தம் இனத்தின் அவலத்தினைக் கண்ணுற்று தாங்கமுடியாமல் போராட புறப்பட்டவர்கள். நமக்காகவே தம்முயிரையும் துச்சமென நினைத்து தியாகம் பண்ணியவர்கள். அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை. நம் விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள். அவர்கள் சுமந்த விடுதலைக் கனவைத்தான் நாமும் சுமக்கின்றோம். தமிழீழத் தாயகம் என்பது புலிகளின் தாகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஈழத் தமிழரினதும் தாகமும் வேட்கையும் அதுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுவோம்.

தலைவரின் வருகை என்ற விடயத்தில் நாம் தற்போதைக்கு கவனத்தினைச் செலுத்தாதுஇ அவர் வழிகாட்டிய வழி தொடர்ந்து நம் வரலாற்றுக் கடமையை சரிவரத் தொடர்வோம். புலிகள் இல்லாத வெற்றிடத்தினை நாம் நன்கே உணர்கின்றோம். அவர்களின் மீள்வரவென்பதும் நமது கைகளில் உள்ள நிலையில் சர்வதேசத்தின் நிலைப்பாடுகளில் சாதகமான மாற்றத்தினைக் கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் இம்முறை மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கத் தயாராவோம்! மாவீரர்கள் சுமந்த இலட்சியக்கனவினை நிறைவேற்றும்வரை ஓயாமல் போராடுவோம் என உறுதியெடுப்போம்!

"மாவீரர்களை நாம் புதைக்கவில்லை... விதைத்திருக்கின்றோம்"

இதுதான் உண்மை

"மாவீரர்களை நாம் புதைக்கவில்லை... விதைத்திருக்கின்றோம்"

இதுதான் உண்மை

விதைத்த மாவீரர்கள் முளைத்து மீண்டும் மாவீரர் ஆவதற்கு நாம் துணைபோகப்போகிறமா?

Edited by Jil

  • தொடங்கியவர்

யாழ் உறவுகளே!

தயவு செய்து, இந்த ஆக்கம் எந்த நோக்கத்துக்காக எழுதப்பட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்! இதனைத் தொடரும் திரிகள் அதன் நோக்கத்தினை வேறு பாதைக்கு இட்டுச்செல்கின்றன என்பதை உணர்கின்றேன்.

இம்முறை மாவீரர் தினத்தில் நம் தலைவர் தோன்றாவிட்டாலும் நாம் சோர்வடையக்கூடாது. தொடர்ந்தும் எழுச்சியுடன் நமது போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டே இவ்வாக்கத்தினை எழுதியிருந்தேன். ஆனாலும் இங்கு கருத்தெழுதும் பலரது கருத்துக்கள் மனவேதனையளிக்கின்றது. தம் சொந்த இனத்தின் வலியின் வேதனைகள் கூட அவர்களுக்குப் புரியவில்லையா???

எவர் என்ன சொன்னாலும் நாம் நமது கடமையினைத் தவறாது செய்வோம்!

நமது மாவீரர்களின் இலட்சியக் கனவினை நனவாக்குவோம்!

  • தொடங்கியவர்

தலைவரின் வருகை என்ற விடயத்தில் நாம் தற்போதைக்கு கவனத்தினைச் செலுத்தாதுஇ அவர் வழிகாட்டிய வழி தொடர்ந்து நம் வரலாற்றுக் கடமையை சரிவரத் தொடர்வோம். புலிகள் இல்லாத வெற்றிடத்தினை நாம் நன்கே உணர்கின்றோம். அவர்களின் மீள்வரவென்பதும் நமது கைகளில் உள்ள நிலையில் சர்வதேசத்தின் நிலைப்பாடுகளில் சாதகமான மாற்றத்தினைக் கொண்டுவரவேண்டிய மாபெரும் பொறுப்பு நம்மிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் இம்முறை மாவீரர் தினத்தினை அனுஷ்டிக்கத் தயாராவோம்! மாவீரர்கள் சுமந்த இலட்சியக்கனவினை நிறைவேற்றும்வரை ஓயாமல் போராடுவோம் என உறுதியெடுப்போம்!

"மாவீரர்களை நாம் புதைக்கவில்லை... விதைத்திருக்கின்றோம்"

இதுதான் உண்மை

அதுவேதான் உண்மை. நன்றி விசுகு!

பருத்தியன்,நீங்கள் எழுதின நோக்கத்தையோ அல்லது அதன் தேவையையோ நான் மிகவும் மதிக்கிறேன். மாவீரரை எங்களின் காவல்தெங்வங்களாகவே நான் பார்க்கிறேன்.ஆனால் பிரச்சனை அதுஅல்ல பருத்தியன். அடுத்தமுறை டக்கிளஸ் தேவானங்தா மாவீரர்நாளை யாழ்ப்பாணத்தில் செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா??

இங்கு மாவீரரின்தியாகங்களை சொல்லிச் சொல்லி சேர்த்த பணத்தை திருடியவர்களால் நடாத்தப்படும் மாவீரர்நாளும் புனிதமற்றது என்பதுதான் உண்மை.

சும்மா ஒரு ஊர்வலத்தையோ உண்ணாவிரதத்தையோ நடாத்திவிட்டு 50000 ஈரோ,45000பவுண்ஸ் என்று செலவுகாட்டி கடைசிநேரத்தில்கூட களவெடுத்தவர்கள் நடாத்தும் புனிதர்களின் நினைவுதினம் எப்படி இருக்கும்??

நீங்கள் அந்த தினத்தை மட்டுமே பார்க்கிறீர்கள்.அது இம்முறை எந்தவித எதிர்வுகூறலும் இல்லாமல் நவம்பர்27 அன்று கடந்துபோகும்.

அதற்குப்பிறகு போராட்டம் இல்லையா?

நீங்களும் பரந்தமக்கள்மத்தியில் பழகுகிறவராக இருப்பீர்கள்??

எல்லாரும் இந்த இயக்கப்பணம் திருடப்பட்டதைப் பற்றியே கதைப்பதை நீங்கள் அறியவில்லையா??

இதில் விளக்கடீமா கணக்கோ காட்டப்படாமல் பெருமக்கள்பங்கேற்கும் அடுத்த கட்டம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதது என்பது உங்களுக்கு தெரியவில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா ஒரு ஊர்வலத்தையோ உண்ணாவிரதத்தையோ நடாத்திவிட்டு 50000 ஈரோ,45000பவுண்ஸ் என்று செலவுகாட்டி கடைசிநேரத்தில்கூட களவெடுத்தவர்கள் நடாத்தும் புனிதர்களின் நினைவுதினம் எப்படி இருக்கும்??

நீங்கள் அந்த தினத்தை மட்டுமே பார்க்கிறீர்கள்.அது இம்முறை எந்தவித எதிர்வுகூறலும் இல்லாமல் நவம்பர்27 அன்று கடந்துபோகும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை இலங்கையரசு பொறுப்பேற்க உள்ளதாக தமிழ் தொலைக்காட்சியொன்றில் பார்த்தேன். அப்படியானால் இவர்களின் "கடன்கள்" எல்லாம் இனி இலங்கையரசுக்குத்தான்!

புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை இலங்கையரசு பொறுப்பேற்க உள்ளதாக தமிழ் தொலைக்காட்சியொன்றில் பார்த்தேன். அப்படியானால் இவர்களின் "கடன்கள்" எல்லாம் இனி இலங்கையரசுக்குத்தான்!

எந்தத் தொலைக்காட்சியில் பார்த்தது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

எந்தத் தொலைக்காட்சியில் பார்த்தது.

இரண்டில் ஒன்று. செய்தித் துளிகள் ஒரே நேரத்தில் இருந்ததால் எதுவென்று நினைவில்லை! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.