Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோற்றுப் போனவர்களின் பாடல் - வ,ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனக்கிறது உங்கள் கவியினை படிக்கும் போது, தோற்கவில்லை, எமது அவலத்தை உலக அரங்கிற்கு கொண்டுவந்துள்ளோம். என்றோ ஒரு நாள் எம் முயற்ச்சிக்கு விடிவு கிடைக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் உடையாருக்கும் அன்பும் நன்றிகளும்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வருடங்களுக்கு முன்னம் எழுதியது. நிலமையில் எந்த மாற்றமும் இல்லை. நினைவுகள் இன்னும் எரிந்தபடி

உங்கள் படைப்பு நெஞ்சை நெகிழ வைக்கிறது கவிஞர் அவர்களே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மணிவாசகன். பூஞ்செடிகள்கூட எங்கள் பிள்ளைகளின் சமாதிக்கு மலர்களை தருகிறது. ஒரு ஏழைக்கவிஞன் செய்யக்கூடியது இதுதானே மணிவண்ணன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அற்புதமான வரிகள் அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி லியோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கவிதையை வாசித்த கருதெழுதிய 5000 யாழ்கள உறுப்பினர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்

என்னுடைய கவிதையை வாசித்த கருதெழுதிய 5000 யாழ்கள உறுப்பினர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்

என்னுடைய கவிதையை வாசித்த கருதெழுதிய 5000 யாழ்கள உறுப்பினர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா பேச்சுவார்த்தை தொடர்பாக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்துள்ள சூழலில் பல தமிழக தோழர் தோழியர்கள் தொலைபேசியில் அழைத்து  தோற்றுப் போன்வர்களின் பாடலை நினைவு கூர்தார்கள். அவர்களில் பலர் நினைவுகூர்ந்த வரிகள் 6 பகுதியில் உள்ளவை

தமிழகத்துக்கு நன்றி சொல்லி ஒரு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

 

ஆறாவது பகுதி

 

6

 

நீதியற்ற வெற்றியில் 
களி கொண்ட வீடுகளில்
நாளை ஒப்பாரி எழும்.
ஆனால் வெண்புறாக்களாய்க் 
கொல்லப் படுபவர்
புலம்பி அழுத தெருக்களில்
நாளை குதூகலம் நிறையும்.
தீப்பட்ட இரும்பென் 
கண்கள் சிவந்தேன்
சபித்துப் பாடவே வந்தேன்.
முகமூடிகளும் ஒப்பனையுமற்ற
உருத்த்ர தாண்டவப் பாடலிது.

என் தமிழின் மீதும் 
என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு
நான் அறம் பாடுகிறேன்.
நான் எனது சமரசங்களிலாத 
சத்தியதின் பெயரால் சபிக்கிறேன்
எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே 
உங்களுக்கு ஐயோ.
தர்மத்தின் சேனையே
என்னை களபலியாக எடுத்துக்கொள்.



தர்ம தேவதையே 
எப்பவுமே எதிரிக்கும் போராளிக்கும்
பணியாத தலை பணிந்து
உன்னை பாடித் தொழுதிரந்தேன்.
இனக் கொலைகளுக்குத் தண்டனை கொடு.
கொன்றவர்கள்,
கத்தி கொடுத்தவர்கள்
தடுக்காதவர்கள்
தடுத்தவரைத் தடுத்தவர்கள் மீதெல்லாம்
தர்ம சங்காரம் 
ஊழித் தீயாய் இறங்கட்டும்.



 

துணிவான கருத்துக்களுக்கு முதலில் நன்றி பொயட்.

துரோகி என்ற ஒற்றைச் சொல்லுக்கு பயந்து, உண்மை நிலையுணர்ந்தும் பலர் மவுனம் காத்தார்கள்.அது அவர்களை துரோகப் பட்டியலில் இருந்து தப்ப வைத்தது ஆனால் அதுவே முழுத்த தமிழனின் அழிவிற்கும் வழிவகுத்தது.இன்றுமே பலர் அதே மனநிலையில் தான் இருக்கின்றார்கள்.

நேற்று இலங்கையில் இருக்கும் மிகபிரபலமான ஒரு பத்திரிகையாளரை இங்குள்ள வானொலி ஒன்று பேட்டிகண்டது அப்போது அவர் பாலசிங்கத்தையும்,தன்னையும் கூட இந்த மவுனம் காத்த பட்டியலில் தான் இட்டார்.அதை அவர் சொல்லும் போது அவர் குரல் தளு தளுத்தது.பாலசிங்கம் கடைசிக் காலங்களில் ஒரு நாள், இன்று தமிழனுக்கு நடந்ததை அப்போதே இப்படித்தான் நடக்கப் போகின்றது என்று கண்ணீருடன் சொன்னாராம்

"எதிரி நிகழ்காலத்தை தோற்கடித்தான் நாம் எதிர்காலத்தை தோற்கடிக்க இப்போதுதான் குழி கிண்ட தொடங்குகின்றோம்"

 

வடக்கு  கிழக்கின் மீது காட்டும் இனத்துவேசத்துக்கு வடக்கு தோற்றது நியாயம் என்பது போல எழுதி, நெடுக்கரின் இனம்(தமிழர்கள்) நாசமாகி போக என்று எழுதி அதற்கு மன்னிப்பும் கேட்டு எழுதி, தருமி மாதிரி சண்பக பாண்டியனிடம் பணம் பெறக் கவிதை எழுதி, கதையை இருகரையும் மாற்றி மாற்றி எழுதி வைத்திருந்த்தால் இன்று திரும்பி வரத்தகத்தாக இருக்கிறது. அர்ச்சுன் இதை எழுதி தனது திரும்பி வரமுடியாத பாதையில்  "பாவங்கள் தப்பி பிழைச்சுப்போகட்டும்" என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார். 

 

மேய்பனின் மந்தையில் இருந்து பிரியும் ஆடுகள் மீண்டும் சந்த்தித்தால் அவை ஒன்றுடன் ஒன்று பேசுமா? அரிச்சுன் தான் பதில் சொல்லக்கூடியவர்.

:unsure:

Edited by மல்லையூரான்

கவிஞரே,
கவிதையில் துயரும் ஈழத்தமிழரின் குரலும் ஒலித்திருக்கிறது. ஆனாலும், அதனுள் வேறுமொன்றும் ஓழித்திருக்கிறதா? ஐயா, கீழே உள்ளதை முரணின்றி கொஞ்சம் புரியவைக்க முடியுமா?  
 
சிதறிக்காட்டினுள் ஓடிப் பதுங்காமல்
மாயக் குழலூதி பின்னே
ஆற்றுக்குச் சென்ற எலிகளின் கதையில்
குழந்தைகளை இழந்த
ஹம்லின் நகரின் ஒப்பாரி
என் தாய் மண் எங்கும் கேட்கிறதே

தோற்றவர்களோ இரத்தத்திலும் சேற்றிலும் குல தெய்வங்களைத் தேடுகிறார்கள்.
அவர்கள் முள்ளி வாய்க்காலில்
எரி நட்சதிரமான தீபனைப் போன்ற
கருப்பசாமியை காத்தவராயனை
மதுரைவீரனை கண்டெடுப்பார்கள்.

வடக்குக் கிழக்காய் வீழ்ந்து கிடக்கிற
உன்னைக் காக்க
கள பலியான நம் பெண்களின் மீது

சிங்கள எதிரியை மட்டுமல்ல
குறித்துக் கொள்
தப்பி ஓடிய நம் மக்களைத் தடுத்தவர்
எம் மக்களுக்கெதிராய் துப்பாக்கி நீட்டியவர்
நம் அண்ணன் தம்பி ஆயினும் சபிக்கின்றேன்

**********************************************************************

சிறைப்பட்ட என் தாயே
தப்பி ஓடலில்லையம்மா.
ஒடுக்கப்படுகிற ஒரு இனத்தின் புலப் பெயர்வு
பின் போடப் பட்ட விடுதலைப் போராட்டம்.

பெயர்ந்த புலம் ஆகாசம்.
களம் மட்டுமே நிலம்.
புத்திசாலியின் கோட்டை
எப்பவும் நிலத்தில் ஆரம்பித்து
ஆகாசத்துள் உயர்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழீழன்.

தமிழீழன் உங்களுக்கு எவ்வண்ணம் புரியுதோ அதுதான் அந்த வாசிப்பில் நீங்கள் அடைகிற அர்த்தம். திரும்பவும் மறு வாசிப்புச் செய்யுங்கள். இத்தகைய ஒரு அறம்பாடும் கவிதைகளுக்குள் ஈழ தமிழர் குரல் மட்டுமல்ல அவர்களது கோபங்களும் விமர்சன கவலைகளும் மீழும் விடுதலைக் கனவுகளும் இயல்பாகவே உள்ளமைந்திருக்கும்.

பல முக்கிய போராளிகளின் விதி பறி குழப்பமான கருத்துக்கள் நிலவுவதால் அஞ்சலிகூட எழுதமுடியாமல் நொந்துபோயிருக்கும் கவிஞர்களுள் நானும் ஒருவன். பால்மணம் மாறாத சிறுவன் பாலசந்திரனின் படுகொலை படங்கள் முன்னிலைப் படுத்திய தமிழ்ச் சிறார் இனகொலைகள் ஏற்படுத்திய துன்பத்தை பதிவு செய்யவேண்டும். முன்னர் இராணுவச் சிறையுள் தோழர் பாலகுமாரன் மகனுடன் அமர்ந்திருக்கும் படம் ஒன்று வெளி வந்திருந்தது. மேலதிக விபரம் தெரியவில்லை. அந்த படத்தைத் தொடர்ந்து நிகழ்ந்தவற்றைத் தேடுதல் அவசியம்.                                                                                                                                                                                                                           இப்பொழுது தமிழகத்துக்கு நன்றி கூறும் கவிதை ஒன்று எழுதியபடி

இறவாத கவிதைகளை எங்கள் தலைமுறைகள் எதிர்வரும் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு வாசிப்பார்கள் எங்கள் கனவுகளை போற்றுவார்கள்.  

இத்தகைய பதிவுகள் பாரிய வரலாற்றுப் பணியாகும்.  மக்கள் ஆதரவில்லாமல் ஏழைக் கலைஞர்க்களால் கவிஞர்களால் நெடுந்தூரம் செல்வது சாத்தியமில்லை/ 

Edited by poet

  • 2 weeks later...

ஐயா வணக்கம்,
நான் தொடுத்த பொருளுக்கு நீங்கள் முறை கொண்ட பொருள் தரவில்லை அதில் கறை உண்டு என்பதினாலா? அறம் பாடும் கவிதைதான் ஐயா இல்லையென்று சொல்லவில்லை புறம் பாடுகிறது என்றும் சொல்லுகிறேன். என் மண்ணை என் மக்களை ஆய்வுபூர்வமாக அணுகாமல் அவனும் இவனும் சொன்னதை சோதனையின்றி சோடணையிட்டுள்ளீர்கள் என்கின்றேன்.

சிதறிக்காட்டினுள் ஓடிப் பதுங்காமல் மாயக் குழலூதி பின்னே... எனத்தொடர்வது, புலிகள் மக்களை மயக்கி அல்லது மடக்கி கொண்டுசென்று விட்டார்கள், மக்கள் அவர்களை விட்டு ஓடிச்சென்றிருக்வேண்டும் அல்லது ஒதுங்கி சென்றிருக்க வேண்டும் என்பதாகவே நான் பார்க்கின்றேன் எங்கே ஐயா? சிங்கள இராணுவத்திடமா?  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வன்னி மக்கள் என்பது பொதுவில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மலையகம் வரைக்கும் இதே சிங்கள அரச இராணுவ கொடும் அடக்குமுறையில் இருந்து தப்பித்து வாழ்ந்த வந்த மக்களே என்பதை.

எழுந்தமானமாக அழைத்து சென்றார்கள் கூட்டிச்சென்றார்கள் மயக்கிச்சென்றார்கள் இயக்கிச்சென்றார்கள் என்கின்ற கூச்சல்கள் எல்லாம் ஏதோ காச்சல்கள் தாக்கிய மனிதர்களின் எச்சில்கள் என்கின்றேன் நான். தாங்கள் ஏன்? இறுதிவரை புலிகளின் சுவடுகளை நோக்கிச் செல்ல தள்ளப்பட்டோம் அல்லது உந்தப்பட்டோம் என்பது  காலம் காலமாக அந்த மண்ணிலேயே உண்டு உறங்கி, வாழ்ந்து வீழ்ந்த அந்த மக்களுக்கு மட்டுமே தெரியும். அந்த மண் வாசனையையும் அதன் வாழ்வையும் சுவாசித்த அந்த பாவிகளுக்கே அதன் உண்மையான பிடிமானம் புரியும். வேறு எவருக்குமே அது தெரியாது. அவர்கள் இன்று களத்தில் இருந்தாலும் சரிதான் புலத்தில் இருந்தாலும் சரிதான்.

இளவயதில் இரை தேட அகதியாய் புறப்பட்ட நாங்களும், ஆயுத ஆவியால் அன்னை மண்ணை அவித்து விட்டு தப்பிய நாங்களும், சந்து பொந்து எல்லாம் எங்கெங்கோ நின்று விட்டு இன்று கோதாரி வந்ததே என்று கோபப்படுகின்றோம். வெள்ளித் திசையில் என் நிலம் நிற்கையில் அதனை எரிக்க முகம் காட்டியும் முகமூடி மாட்டியும் கொள்ளி வைத்து விட்டு இன்று நொந்து கொள்வதாகவும் வெந்து சாவதாகவும் குடல் கிழிய கத்துகின்றார்கள் சிலர். விடுப்பு பார்த்த அவர்களுக்கே இவ்வளவு வீராப்பு இருக்குமானால் கடைசிவரை களத்திலே நின்று கடும்தவம் புரிந்த கண்ணியமானவர்களுக்கு எவ்வளவு கடுப்பு இருக்கும்.
 
மாயக்குழலூதி மக்களை மண்ணோடு மண்ணாக்கிய மாயன்கள் புலிகள் என்கிறீர்கள். பின்னர் அவர்களே மக்கள் தேடும் கருப்பசாமி காத்தவராய மதுரைவீரன் சாமி என்கிறீர்கள். களப்பலியான பெண் போராளிகள் கூட  மண் மீட்டு வீழ்ந்த சுடரொளிகள் என்கிறீர்கள். பின்னர், தப்பி ஓடிய மக்களைத் தடுத்தவர்களும் அவர்களே, மக்களுக்கெதிராய் துப்பாக்கி நீட்டியவர்களும் அவர்களே என்றும் மறைந்து நின்று மண்ணள்ளிப்போடுகின்றீர்கள் ஒரே குழப்பம். இவர்கள் அண்ணன் தம்பி ஆயினும் சபிக்கின்றேன் என்றும் கூறுகின்றீர்கள் ஒன்றும் புரியவில்லை ஐயா என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று . உண்மையில் சபிக்கிற சாபத்துக்கு சக்தியிருந்திருக்குமாயின் இப்போது சபிப்பவர்கள் எப்போதோ சபிக்கப்பட்டு சமாதியிலேயே இருந்திருப்பார்கள். அவ்வளவு சாபங்களும் கோபங்களும் அவர்கள் மேல் கொட்டிக் கிடக்கிறது தமிழ் மக்களிடத்தில். நான் பொதுவாகத்தான் சொல்லுகின்றேன்.
 

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்க்கள் வந்து போய்க்கொண்டிருக்கிறது. உலக அணிகள் சிலவற்றின் எதிர்ப்பையும் மீறி கொடுங்கோலன் ராஜபக்ச்ச தன்னை நியாயப் படுத்தியபடி தொடர்கிறான். ஒரு கவிஞன் என்ற வகையில் என் கோபங்களையெல்லாம் தோற்றுப் போனவர்களின் பாடலில் பதிவு செய்திருக்கிறேன். 

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரில் அழிந்த என் செல்வங்களுக்காக நொந்த மனசுடன் எழுதிய கவிதை. என்றும் நிலைத்திருந்து எங்கள் காலங்களின் கதையை சொல்லும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலில் இனக்கொலைக்கு முகம்கொடுத்த எங்கள் சகல உறவுகளையும் எங்கள் மாவீரர்களையும் பணிவோம்.

 

ஆயிரம் ஆயிரம் வருடங்கள் எங்கள் தலைமுறைகள் அவர்களை நினைவுகூரும்.

 

கார்த்திகைத் தீபம்போல எல்லா இல்லங்கலிலும் அஞ்சலித் தீபம் ஏற்றப்படுக..  

 

தலைமுறைகல் தோறும் எங்கள் காலத்தின் கண்ணிரையும் கனவுகளையும் கடத்துமாறு நம் கலைஞர்கள்  சூடுகிற அஞ்சலி வாடாமலர்கலுள் என் இந்த சிறு சரமும் ஒன்று.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தோற்றுப்போனவர்களின் பாடல் சிங்களத்தில்;
மொழிபெயர்ப்பு: அஜித் ஹேரத்
பிரசுரம்: ஜேடிஎஸ் சிங்களம் பாசனா அபேவர்த்தன

 

http://www.jdslanka.org/s/index.php/2014-12-20-03-13-45/2014-12-30-05-01-43/401-2015-05-27-13-16-53

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.