Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழியம் - வன்னிஎலி (குறும்படம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிஎலி - குறும்படம்

கதைச்சுருக்கம்:

வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு.

கதை

தயாரிப்பு

நெறியாள்கை

தமிழியம் சுபாஸ்

post-1541-12606171750132_thumb.jpg

Edited by "TAMILIAM"Subas

எலியோட வந்து இருக்கீறீர். வணக்கம் வாரும், நல்வரவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதிய கதையே ஒரு கவிதை போல அழகாக உள்ளது. உங்கள் படம் விரைவில் வெளிவந்து வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி rajeevan மற்றும் மச்சான் :rolleyes:

நோர்வேயிலிருந்து தமிழ்நாட்டில் பரிசுபெற்ற ஈழத்தமிழர் குறும்படம்.

வன்னி வதை முகாமில் வாடும் பொதுமக்களை மையமாகவைத்து நோர்வேயில் தமிழியம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ”வன்னிஎலி” குறும்படம் சென்னையில் 25.12.2009 அன்று பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டியில் சிறப்புப்படத்திற்கான விருதை பெற்றது.

இந்த குறும்படத் திருவிழாவில் 53 குறும்படங்கள் போட்டிக்காக திரையிடப்பட்டன. நடுவர்கள் அஜயன்பாலா, இயக்குனர் கே.எஸ்.வசந்த், எழுத்தாளர் கே. சித்ரா, பேராசிரியர் அருள் செல்வன், இனமான நடிகர் மு.அ.கிரிதரன், மாநில பகுத்தறிவாளர் கழகத்தலைவர் வா. நேரு, திராவிடர் கழக சொற்பொழிவாளர் டெய்சி மணியம்மை ஆகியோர் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்தனர்.

27.12.2009 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட 10 படங்களுக்கான பரிசு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது.

கதைச்சுருக்கம்: வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு.

கதை

தயாரிப்பு

நெறியாள்கை

தமிழியம் சுபாஸ்

Trailer:

குறிப்பு: ”வன்னிஎலி” மற்றும் ”எனக்கொரு கனவு இருக்கலாமா?” ஆகிய குறும்படங்கள் 16.01.2010 அன்று மாலை 6 மணிமுதல் 8 மணிவரை ஒஸ்லோவில் உள்ள திரையரங்கில் (Filmens hus) கண்பிக்கப்பட உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:

www.tamiliam.com

info@tamiliam.com

Facebook: http://www.facebook.com/pages/Tamiliam/50797691864?ref=s

Twitter: http://twitter.com/tamiliam

Youtube: http://www.youtube.com/TamiliamSubas

post-1541-12624702222915_thumb.jpg

post-1541-12624702388305_thumb.jpg

Edited by "TAMILIAM"Subas

திரைமுன்னோட்டத்தில் பார்த்தபோது படம் வித்தியாசமாய் நன்றாக இருக்கிது. பாராட்டுக்கள்!

உங்கள் படம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குறுந்திரை முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி, கலைஞன், adsharan மற்றும் nochchi.

______________________________________________________________

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை திரையிடல்

08.01.2010 | வெள்ளி | இரவு 7 மணி

அன்னை மணியம்மையார் அரங்கம்

பெரியார் திடல், சென்னை-7

திரையிடல் மற்றும் விமர்சன அரங்கம்:

ஒரே ஒரு கிராமத்திலே..

(குறும்படம்- 22 நிமிடங்கள்)

இயக்கம்: ச.முத்தமிழ் எம்.ஏ., பி.எட்

வன்னி எலி

(பெரியார் திரை 2009 சிறப்புப் பரிசு பெற்ற குறும்படம்)

(9:44 நிமிடங்கள்)

இயக்கம்: தமிழியம் சுபாஷ்

அறிமுகத் திரையிடல்:

நஞ்சு

(குறும்படம்- 8:30 நிமிடங்கள்)

இயக்கம்: லெனின்

அனைவரும் வருக!

post-1541-12628116551645_thumb.jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ViBGYOR_logo.pngவன்னிஎலி குறும்படம் Vibgyor International Film Festival 2010 ல் "இவ்வருடப்பார்வை: தெற்கு ஆசியா" எனும் பிரிவுப்படங்களுக்குள் தெரிவாகிஉள்ளது. தெரிவான 10 படங்களுள் நோர்வேயிய இயக்குனர் பெயாரே ஆனஸ்ரா (BEATE ARNESTAD) இயக்கி பல சர்வதேச விருதுகளைப்பெற்ற "என் மகள் பயங்கரவாதி" (My Daughter The Terrorist) எனும் ஆவணப்படமும் தெரிவாகிஉள்ளது. இவ் இரு படங்களும் ஈழத்தமிழரின் இனப்பிரச்சனையை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சர்வதேச திரைப்பட விழாவில் 10 பிரிவுகளாக 80ற்கு மேற்பட்ட படங்கள் போட்டியிடுகின்றன, போட்டிக்கு தெரிவாகிய அனைத்து படங்களும் 17– 21 February, 2010 காலப்பகுதியில் Kerala Sangeeta Nataka Academy premises, Thrissur, Kerala. வில் திரையிடப்பட உள்ளன.

மேலதிக தகவல்களுக்கு:

http://spreadsheets.google.com/pub?key=tf8B7zIXo49PN-LeQpUmNEg&single=true&gid=0&output=html

http://www.vibgyorfilm.org

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வன்னி எலிகள், 1999

வியக்கும் தமிழ் இயக்குனர்கள்!

நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பார்வையாளர்களின் பாராட்டுகளையும், பரிசுகளையும் அள்ளிக் கொண்டு வந்திருக்கும் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின், சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். முதலில் இந்த விழாவை நடத்திய வசீகரனுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள் அத்தனை பேரும்.

படப்பிடிப்பு இருந்ததால் எனக்கு நார்வே போகிற ஐடியாவே இல்லை. ஆனால் அங்கிருந்து என்னை தொடர்பு கொண்ட வசீகரன், "அண்ணா. நீங்க அவசியம் வரணும்" என்று வற்புறுத்தினார். அவர் கேட்ட முதல் கேள்விதான் என்னை அங்கு போக வைத்தது. "உங்களுக்கு நான் வெஜ்ஜா? வெஜ்ஜா" என்று கேட்டார். விருந்தோம்பலில் தமிழன் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறான் என்பதற்கு அவர் ஒரு உதாரணம். எனக்கு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. பிளைட்டில் இறங்கிய நிமிடம் முதல், இங்கு புறப்பட்டு வருகிற வரை என்னை சுற்றி தமிழர்கள்தான் இருந்தார்கள். "அண்ணே, யாருக்கு விருது கிடைக்கும்னு தெரியாது. உங்களுக்கு கிடைக்காம போனாலும் நீங்க பொறுத்துக்கணும்" என்றார் வசீகரன்.

நான் அவரிடம், "இங்கு யார் விருது பெற்றாலும் எனக்கு சந்தோஷம். எல்லாருமே என்னோட சகோதரர்கள்தான். எனக்கு வருத்தமெல்லாம் வராது" என்று சொன்னேன் என்று வெளிப்படையாகவே தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் சசிக்குமார்.

மிஷ்கினின் அனுபவம் வேறு மாதிரியானது. மற்ற இயக்குனர்கள் சென்னைக்கு திரும்பிய போதும், இவர் மட்டும் மேலும் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்துவிட்டுதான் திரும்பினார். "வசீகரனின் அப்பா என்னை அழைத்துக் கொண்டு நார்வேயில் இருக்கும் புகழ்பெற்ற மியூசியம், நு£லகத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றார். நீயும் என்னோட மகன்தான் என்று அவர் சொன்னது என்னை சந்தோஷப்பட வைத்தது" என்றார். இவருடைய 'நந்தலாலா' படத்திற்கு சிறந்த மக்கள் தேர்வு பட விருது கிடைத்திருக்கிறது.

எஸ்.பி.ஜனநாதன் கூட முதலில் இந்த விழாவுக்கு போக தயங்கினாராம். அதற்கான காரணத்தை அவரே சொன்னார். எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் என்னுடன் வருகிறவர்கள் நண்பர்களாகவும், ஆங்கிலம் தெரிந்தவர்களாகவும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். நான் இதற்கு முன்பு இவர்களுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால் என் தம்பிகளுடன் போயிருந்த உணர்வு என்றார். இந்த திரைப்பட விழாவில் ஜனநாதனை அதிகம் கவர்ந்த படம் 1999 என்ற திரைப்படம். முழுக்க முழுக்க நார்வேயில் எடுக்கப்பட்ட படம்தான் இது. புலம் பெயர்ந்த தமிழர்களின் கஷ்டத்தை சொல்கிற படமாம் இது.

இந்த படத்தை பற்றிதான் அதிகம் பேசினார் சமுத்திரக்கனி. ரொம்ப ஸ்டன்னிங்கான படம் அது. பிரமாண்டமாக எடுத்திருக்காங்க. அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த தமிழர்களில் பல அற்புதமான இயக்குனர்கள் அங்கு இருக்காங்க. வன்னி எலிகள் என்றொரு படம் பார்த்தேன். இரண்டே இரண்டு எலிகளை வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான கதையை சொல்லியிருக்கிறார் அந்த இயக்குனர். மனிதர்களை நடிக்க வைப்பதே கஷ்டம். இதில் எலியை நடிக்க வைத்திருக்கிற அந்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று வியந்தார் சமுத்திரக்கனி.

இந்த நால்வரும் வியந்த 1999 படத்தை விரைவில் தமிழகத்திலும் ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறார் வசீகரன். இப்பவே ஒரு வெல்கம் போர்டு வைப்போம்...

- தமிழ்சினிமா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.