Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்த்திரேலியாவை உலுக்கிய இரு தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியாவை உலுக்கிய இரு தமிழர்களின் வங்கிக் காசட்டை மோசடி

இலங்கையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்து மற்றும் கணடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டு சர்வதேச அளவில் வங்கிக் கடனட்டை மோசடிகள் பலவற்றில் ஈடுபட்டு வந்த இரு தமிழர்களை அவுஸ்த்திரேலியப் போலிசார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேஷமூர்த்தி மற்றும் கணடாவைச் சேர்ந்த 31 வயதுடைய ருக்ஷாந் செல்வராஜா ஆகிய இருவருமே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேற்கு அவுஸ்த்திரேலிய மாநிலமான பேர்த்திலுள்ள சுமார் 20 இற்கும் மேற்பட்ட மக்டொனால்ட் உணவு விடுதிகளில் "டிரைவ் இன்" பகுதியால் உள்நுழைந்து பணியாளர் வேறு வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் தறுணத்தைப் பார்த்திருந்து தமது மோசடி "எfட்பொஸ்" இயந்திரத்தை அங்கிருக்கும் இயந்திரத்திற்காகப் பிரதியீடு செய்த இவர்கள், பின்னர் "புளூ டூத்" பொறிமுறை மூலம் தமது மோசடி இயந்திரத்தில் உரசப்படும் காசட்டைகளின் விவரங்களை தமது பிரத்தியேகக் கணணிக்கு தரவிறக்கம் செய்துவிடுகிறார்கள்.

இவ்வாறு தரவிறக்கம் செய்யப்படும் அப்பாவிகளின் காசட்டை இலக்கம் மற்றும் இரகசிய குறியீட்டு எண் என்பவற்றைப் பாவித்து போலியான வங்கிக் காசட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் இக் காசட்டைகளைக் கொண்டு உலகெங்குமுள்ள "ஏ.டி.எம்" இலத்திரணியல் காசு இயந்திரங்களினூடாகப் பெருமளவு பணம் எடுக்கப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட பணத்தின் அளவு சுமார் 5 மில்லியன் அவுஸ்த்திரேலிய டாலர்களைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தனியொரு வன்கிக் காசட்டை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட அதிகூடிய பனத்தினளவு சுமார் 7000 அவுஸ்த்திரேலிய டாலர்கள் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதே வகையிலான மோசடி ஒன்று பிரபல வங்கி ஒன்றின் "ஏ.டி.எம்" ஊடாகவும் நிகழ்ந்திருக்கிறது. அந்த இலத்திரணியல் காசு இயந்திரம் இயக்கப்படும் ஒவ்வொரு தறுவாயும் அதில் பதியப்படும் இலக்கங்கள் மற்றும் கடனட்டை இலக்கங்கள் ரகசியமாகத் தரவிறக்கப்பட்டு பின்னர் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் பெறப்பட்டுள்ளத்து. வங்கி இயந்திர தட்டச்ச்ய் பட்டையை ஒத்ததாக இருக்கும் இந்த மோசடிக் கும்பலின் தட்டச்சு மட்டையும் இலகுவாக பணியாளர்கள் மற்றும் கஸ்ட்டமர்களைன் கண்களில் மண்ணைத் தூவி விடுகின்றன. இதனால் அண்மைக்காலத்தில் இந்த குறிப்பிட்ட வங்கி "ஏ.டி.எம்" கலைப் பாவித்த ந்வாடிக்கையாளர்களைத் தமது வங்கி நிதி அறிக்கையை சரிபார்க்கும்படி போலிசாரால் கேட்க்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்கள் தொடரும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:) எனக்குக் கிடைத்த செய்தி பி.டி.எf முறையில் பதியப்பட்டிருந்தது. அதன் "லின்க்" கிடைக்கவில்லை. ஆனால் அண்மைக்காலமாக அவுஸ்த்திரேலிய தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு மோசடி இது. ஆதாரமற்றது என்று நீக்கினாலும் பரவாயில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தகவல் முற்றிலும் உண்மையானது

இந்த தொடர்பை அலுத்தவும்

அடுத்த இணைப்பில் பல உள்ளூர் பத்திரிகை செய்தி தொடர்பை இணைப்பேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊரவன்,

உங்கள் கருத்தில் அந்த இணைப்பு இல்லையே?? மீண்டும் முயற்சித்துப் பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள் ஊரவன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்குஇரண்டு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

http://www.watoday.com.au/wa-news/alleged-eftpos-skimmer-faces-perth-court-20091223-ld2n.html

post-6050-1262241060895_thumb.jpg

post-6050-12622410798404_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட செய்திகள்தான் எப்பவும் கொடிகட்டிப் பறக்கும். எங்களைப் பொறுத்தவரையில் இது இன்னும் அதிகப்படி. எத்தனையோ தமிழர்கள் பல நல்ல விடயங்களைச் செய்திருப்பார்கள். ஆனால் அவை ஊடகங்களில் வெளிவருவதில்லை. கெட்ட செய்திகளுக்கு மட்டும் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை, வெளிவருவதற்கு.

கனடாவில் ஊடகங்களின் பங்கு இதைவிட மேல். சிலவருடங்களுக்கு முன்னர், ஒரு ஈழத்தமிழரின் மகன் உறைபனி உடைந்து நீருக்குள் விழுந்துவிட்ட இன்னொரு வெள்ளையினச் சிறுவனைக் காப்பாற்ற முயன்று இருவருமே இறந்துபோனார்கள். ஒரு நாளுக்கு மட்டும் அந்தத் தமிழ்ச்சிறுவனைப் போற்றிப் புகழ்ந்திருப்பார்கள்..! அடுத்த சில நாட்களிலேயே அவனது தந்தை ஐரோப்பிய நாடு ஒன்றில் புலி முகவராக முன்னாளில் இருந்ததாகக் கூறி மறைந்த சிறுவனை மறக்கடித்துவிட்டார்கள்..! இதுதான் எமது நிலைமை.

பி.கு.: ஊரவன் தவறாக விளங்கிக் கொள்ளவேண்டாம். எமது நிலையை எண்ணியே இப்படி ஒரு கருத்து வைக்கத் தோன்றியது.

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒரு விடயததைதெளிவாக புரிந்து கொள்ளுங்கள் , ஈழத்தமிழினம் 30 வருடஙகள் உரிமைக்காக போராடி இன்று ஒரு இக்கட்டான நிலையில் , உலகமெங்கும் வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பு , நாடு கடந்த தமிழீழ்ம் என்று பரப்புரைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் , அதே ஈழத்த்மிழர்கள் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் வங்கி அட்டை மோசடியில் சம்பத்தப்பட்டிருபதன் தாக்கம் (இலங்கைப் பணத்தில் 50 கோடி).....அத்துடன் இது ஏற்கனவே புலிகளின் ஆட்கள் செய்யும் மோசடி என்று ( எனது லின்ங்கை அழுத்தவும்) இணைத்து எதிரட்கள் பேசும் நிலமையில் , மற்றவனின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து , தன் இனத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் இப்படியானவர்களை குறைந்த பட்சம் எமது இனத்திற்காகவாவது அடையாளம் காட்டி வைப்பதற்காகவே இந்த செய்திக்கு நான் பின்னுட்டல் செய்தேன் , குறைந்த பட்சம் இவர்களை அடையாளம் காட்டி சமூகத்தில் இருந்து ஒதுக்குவதன் மூலம் இவர்களுக்கும் , இவர்களைப்போல மொசடி செய்து பிளைப்பு நடக்தும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக்கி இனிமேலாவது இவ்வாறு நடைபெறுவதை ஓரளவேனும் குறைக்கலாம்

எம்மினத்தவர்கள் சிறிது சிறிதாக மற்ற இனத்தவர்கள் மத்தியில் எமது இனத்தின் பிரச்சனையை எடுத்துக்கூறி அவர்களுக்கும் ஓரளவு விளங்கியிருக்கும் நிலையில் இப்படியான சம்பவங்கள் ஒரே நாளில் அத்தனையையும் போட்டு உடத்து விடும்.....புது வருடத்தில் வேலைக்கு செல்லும் பொளுது எம்மர்க்கு இந்த அவமானம் காத்திருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒரு விடயததைதெளிவாக புரிந்து கொள்ளுங்கள் , ஈழத்தமிழினம் 30 வருடஙகள் உரிமைக்காக போராடி இன்று ஒரு இக்கட்டான நிலையில் , உலகமெங்கும் வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பு , நாடு கடந்த தமிழீழ்ம் என்று பரப்புரைகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் , அதே ஈழத்த்மிழர்கள் அவுஸ்திரேலியாவின் மிகப்பெரும் வங்கி அட்டை மோசடியில் சம்பத்தப்பட்டிருபதன் தாக்கம் (இலங்கைப் பணத்தில் 50 கோடி).....அத்துடன் இது ஏற்கனவே புலிகளின் ஆட்கள் செய்யும் மோசடி என்று ( எனது லின்ங்கை அழுத்தவும்) இணைத்து எதிரட்கள் பேசும் நிலமையில் , மற்றவனின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து , தன் இனத்திற்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் இப்படியானவர்களை குறைந்த பட்சம் எமது இனத்திற்காகவாவது அடையாளம் காட்டி வைப்பதற்காகவே இந்த செய்திக்கு நான் பின்னுட்டல் செய்தேன் , குறைந்த பட்சம் இவர்களை அடையாளம் காட்டி சமூகத்தில் இருந்து ஒதுக்குவதன் மூலம் இவர்களுக்கும் , இவர்களைப்போல மொசடி செய்து பிளைப்பு நடக்தும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக்கி இனிமேலாவது இவ்வாறு நடைபெறுவதை ஓரளவேனும் குறைக்கலாம்

எம்மினத்தவர்கள் சிறிது சிறிதாக மற்ற இனத்தவர்கள் மத்தியில் எமது இனத்தின் பிரச்சனையை எடுத்துக்கூறி அவர்களுக்கும் ஓரளவு விளங்கியிருக்கும் நிலையில் இப்படியான சம்பவங்கள் ஒரே நாளில் அத்தனையையும் போட்டு உடத்து விடும்.....புது வருடத்தில் வேலைக்கு செல்லும் பொளுது எம்மர்க்கு இந்த அவமானம் காத்திருக்கிறது

ஊரவன்,

உங்கள் சில கருத்துக்கள் ஒத்துக்கொள்ளப்பட வேண்டியவை. வங்கி அட்டைத் திருட்டை செய்தவர்கள் தமிழர்கள்; அது ஒரு கேவலம் கெட்ட செயல். அதை யார் கேட்டாலும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதற்கு மேல் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்களது திருட்டையும் வட்டுக்கோட்டை தீர்மானம் முதலான அரசியல் விடயங்களையும் இணைப்பது எந்த வகையில் என்பது புரியவில்லை. எல்லா சமூகங்களிலும்தான் மோசடிப் பேர்வழிகள் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் இனத்துக்கு இவர்களைப் போன்றவர்கள். அதற்கு மேல் வேறென்ன?

புதுவருடத்தில் வேலைக்குச் செல்லும்போது அவமானம் காத்திருக்கிறது என்கிறீர்கள். இது ஒரு தூய்மை மனப்பான்மையின் வெளிப்பாடுதானே? எமது சமூகம் அப்படியென்ன இழுக்குப் பட்டுவிட்டது?

ஐரோப்பாவில் ஒன்றரை மில்லியன் உயிர்களைக் குடித்த ஜேர்மானியர்கள் தங்கள் இனம் கேவலப்பட்டதாக எண்ணுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு புதுவருடத்திலும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டுதான் வேலைக்குச் செல்கிறார்கள். ஜப்பானில் லட்சக்கணக்கில் உயிர்களைக் கொன்ற அமெரிக்கனும் தலைநிமிர்ந்துதான் நடக்கிறான்.

இதே அவுஸ்திரேலியாவில் பழங்குடி மக்களைக் கொன்றொழித்த வெள்ளையனும் தலைநிமிர்ந்து நடக்கவே செய்கிறான். அதற்குமேல் அவன்தான் நாளை உங்களைக் கேள்வியும் கேட்கப் போகிறான். கொத்துக்கொத்தாக உயிர்களைக் கொன்றொழிக்காத நீங்கள், சில்லறைத் திருட்டால் கூனிக் குறுகி கொலைகாரர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று குழம்பி நிற்கிறீர்கள்.

தைரியமாகச் அவர்களுக்குச் சொல்லுங்கள். பிரித்தானியா எமது நாட்டைக் கொள்ளையிட்டதால் அகதியான ஒரு சில தமிழர்கள் இந்தச் சில்லறைத் திருட்டில் ஈடுபட்டுவிட்டார்கள் என..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.