Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!

Featured Replies

கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்!

மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை ‘முள் கிரீடம்’ தாங்கி, முத்து விழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.

‘நீ இன்றி நான் இல்லை’ படத்துக்குக் கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகிவிட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. ”கருணாநிதி என் புத்தகத் தலைப்பை திருடிவிட்டார்” என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்…”போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்! கறுத்த கழுதையே, அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையை, கிலி பிடித்த மனிதர்களைக் கீறி எறியுங்கள்!” என்று கோவில்பட்டியிலும்…”உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய்.

ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களைப் போக்கினால் போக்கட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் இயக்கப் பேச்சாளர் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக்கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினைத் துண்டித்து நிர்க்கதியாக விட்டாலும் எமது தன்மானம், இன முழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்” என்று கோவையிலும் ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதைப் படித்ததும்தான் பதறிப் போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுதத் தூண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான். ஈழத் தமிழர் தொடர்பான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசியதை திரும்பத் திரும்பப் படித்தேன். ”எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள்.

அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்… அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல்அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்” என்று பேசி இருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு! 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80 ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள்.

புலிப் படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்குத் தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும்வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள்தான் ‘தமிழனுக்கு ஒரு நாடு, தனித் தமிழீழ நாடு’ என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படிந்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டுத் தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து… பிறந்த நாளுக்குக் கிடைத்த பணத்தைப் போராளிகளுக்குத் தூக்கிக் கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனிதச் சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி தூக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து…

என பாழாய்ப் போன ஈழத் தமிழனுக்காகக் காலத்தை வீணாக்கிவிட்டீர்களே, தலைவரே! பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று! முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, ‘சிங்களர்களைக் கோபப்படுத்த வேண்டாம்’ என்று இலங்கைத் தூதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? வெள்ளை பாஸ்பரஸ் தூவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டு இருக்கும்போது, ‘உங்கள் அதிகாரத்தை வைத்துத் தடுக்கக் கூடாதா?” என்றால், ‘என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்” என்று தட்டிக்கழித்தீர்கள்.

”போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது” என்றபோதும் மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக்கொண்டபோது காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது ‘மத்திய அரசு என்ன செய்ய முடியும், சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்’ என்று பந்தை கடல் தாண்டித் தட்டிவிட்டீர்கள். நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றத்தை உலக நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக்கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா?

இப்போதைய உங்கள் சித்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கிவிடுங்கள்! ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க. மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் ‘நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்’ என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப் பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே?

  • கருத்துக்கள உறவுகள்

உடன் பிறப்பே..

நேற்று நீ அடித்த டாஸ்மார்க்கு போதை தெளிந்திருக்காது என்று எனக்கு தெரியும்..இருந்தாலும் உன்னை நல்வழிபடுத்த வேண்டிய பொறுப்பு கழகத்திற்கு இருப்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.. இக்கடிதம் எழுதாமலே நீ ஊரை அடித்து உலையில் போட்ட காசை கொண்டு..ஏழை எளியவர்தம் உணவு மற்றும் பயணகளைப்பு அயர்ச்சியை குவாட்டரும் கோழி பிரியாணியையும் கொடுத்து ஊரை வளைத்து நம் கனிமொழி மாநாடுக்கு நிறைத்துவிடுவாய் என எனக்கு தெரியும்..

இருந்தாலும் கடமை என்று உள்ளதல்லவா? எதிர்கட்சி அறிவீலிகளும் தமிழ் உணர்வு பதர்களும் இன்று எம்மை பார்த்து எகத்தாளம் இடுவதை கண்டாயோ.கழக கொள்கை என்னவேன்று கேட்கிறார்கள்.. கழகம் ஒரு குடும்பம் என்றார் அண்ணா.. இன்று அதே தான் நாமும் சொல்கிறோம் குடும்பம்தான் கழகம்..டெல்லிக்கு அஞ்சா நெஞ்சன் அழகிரியாம்..தமிழ்நாட்டு ளித்தவாயவர்களுக்கு ஸ்டாலினாம்..ஈழ உறவுகளுக்கு கனி மொழியாம்..கலைத்துறைக்கு உதயநிதியாம்..மக்களை எந்நேரமும் மயக்கி சினிமா மோகத்தில் வைத்திருக்க தயாநிதியாம்..ஊரை கொள்ளை அடிக்க எனது அமைச்சர்களாம்..இத்தாலிகாரிக்கு புடவை துவைக்க நானாம்..மக்களை எருமை மாடுகளாக வைத்திருக்க நீயாம்..காவிரி கைவிட்டு போனால் என்ன?முல்லை பெரியாறு அணையை பெயர்த்தால் என்ன?

பாலாறு பணால் ஆனால் என்ன?

ஈழ தமிழன் செத்தால் என்ன?

தமிழ் மீனவன் செத்தால் என்ன?

எவன் செத்தால் நமக்கென்ன? நமக்கென்ன?

தமிழ் தமிழ் என்பதே ஊரை அடித்து உலையில் போடும் நமது தாரக மந்திரம்..

பார்பானை திட்டுவது நமது கொள்ளை அடிப்பதை பொறுக்காமல் இருப்பவர்கள் மீது எரியும் எறிகணைகள்..

நடிகைகளின் குத்தாட்டம் நம் கண்ணை குளிர்ச்சி செய்யும் அருமருந்து..

கடிதமும் தந்தியும் ஊரை ஏமாற்றுவதற்கு கிடைத்த ஆயுதங்கள்(நம்து அமைச்சர் ராசாவுக்கு வருமானமும் கூட)..

இன்னும் பல சொல்லிகொண்டே போகலாம் ..இது போகட்டும்..கழக ஆட்சியில் டாஸ்மார்க்கு உன் பகுதியில் திறந்திருக்கிறதா? நீ விரும்பிய உற்சாக பானம் தங்கு தடையின்றி கிடைத்ததா?கழக ஆட்சி அளித்த 2 ஏக்கர் நிலத்தில் காய்கறிகளை பயிர் செய்து ..நாய் கூட சாப்பிட மறுக்கும் 1 ரூபாய்க்கு கொடுத்த புழுத்த அரிசியை பொங்கி.. தின்று ..இலவச வண்ண தொல்லைகாட்சி பெட்டியில் மானாட அடுத்தவன் பொண்டாட்டி மார்பாட நிகழ்ச்சியில் லயித்திருக்கின்றாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன் கடமை ஒன்று உண்டல்லவா? கோவை கிடுகிடுக்க .. உலகம் நடுநடுங்க..கனிமொழியாம் செம்மொழி மாநாட்டுக்கு ஊரை அழைத்துவா.. உன் வீட்டை அழைத்துவா.. உன் உறவை அழைத்துவா..

புரட்சிகர தமிழ்தேசியன் திருவண்ணாமலை

தமிழ்மகன்,

இணைக்கப்படும் செய்திகள், ஆக்கங்களுக்கான மூலம் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும். உங்களின் சொந்த முயற்சி எனில் அதன் கீழ் 'ஆக்கம்:' என்று போட்டு அதில் உங்கள் பெயரை இடவும்.

மூலம் குறிப்பிடாத அனைத்து செய்திகளும் முன்னறிவித்தல் இன்றி அகற்றபடும் என்பது கள விதிமுறை

  • தொடங்கியவர்

http://www.tamilspy.com/?p=6086

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.