Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தரின் வெற்றிக்காக ஏங்கும் பாதாள உலகத் தமிழ் தேசியவாதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரின் வெற்றிக்காக ஏங்கும் பாதாள உலகத் தமிழ் தேசியவாதிகள்

10/01/2010

--------------------------------------------------------------------------------

வெள்ளை`வான்' கடத்தல்கள் முடிவிற்கு வருவதுபோல் தெரியவில்லை. யாழ்குடாவிலும், கொழும்பிலும் கடத்தப்பட்டு காணாமல் போகடிப்பது தொடர்கின்றது. பாதாளஉலகத் தமிழ்த்தேசியவாதிகளின் கைவண்ணம் இதுவென்பதை மக்கள் நன்கு உணர்வார்கள்.

நிபந்தனையின்றி மகிந்தருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள இக் குழுக்கள், நிரந்தர அரசியல் தீர்வுகுறித்து பேச விரும்பவில்லை. கருணா' என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி, முரளிதரன், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக இருப்பதால், கட்சியின் முடிவிற்கே தீர்வுத்திட்ட விவகாரத்தை ஒப்படைத்துள்ளார். தீர்வுகுறித்துப் பேசி, மகிந்தரின் பேரினவாதக் கோபத்தை கிளறினால், மறுபடியும் இவரைக் காப்பாற்ற இன்னொரு `அலிசார்' வரமாட்டார். மட்டக்களப்பில் அடிக்கடி மோதும், பிரதேச ஆதிக்கப் போட்டியாளர் பிள்ளையானும், மகிந்தரைத் தாங்கிப் பிடிப்பதற்கு, கருணாவுடன் சமரசம் செய்கிறார்.

மகிந்தர் ஆட்சியை இழந்தால், கருணா-பிள்ளையானின் அரசியல் வாழ்வு சூனியமாகிவிடும். வடக்கின் தலைவரின் நிலையும் அதுதான். இனிப் புலி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்த, ஆயுதம் தாங்கிய தமிழ்க் குழுக்கள், அரக்கு தேவையில்லை. பேரினவாத சிங்கள அரசியலில், இவர்கள் பெரும் சுமையாகவே கருதப்படுவார்கள். கூட்டமைப்பு போன்று சக ஆசனங்களோ, அல்லது குறைந்தது 4 ஆசனங்களோ இருந்தால், நாடாளுமன்ற பெரும் பான்மைக்காக, இவர்களின் ஆதரவு ஆளும் தரப்பிற்கு தேவைப்படலாம். எந்தவிதத்திலும், பிரயோசனமற்றவர்களை வைத்துக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஆட்சியாளர்களுக்குக் கிடையாது. மகிந்தர் வெற்றி பெற்றால், இத்துணை இராணுவக் குழுக்களின் இருப்பும் தக்க வைக்கப்படும்.

கூட்டமைப்பிற்கு எதிராக, அதை உடைப்பதற்கு பயன்படுத்தப்படுவார்கள். அதேவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவிக்கான வெற்றிடம் அதிகரிக்கப்பட்டு, ஏனைய தமிழ்க்குழுத் தலைவர்கள் அதனுள் உள்வாங்கப்படுவார்கள். ஏற்கனவே யாழ் மாநகரசபைத் தேர்தலில், தேவானந்தாவின் இதயவீணை, புழுதியில் வீசப்பட்டுவிட்டது.ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம், மகிந்தருக்கு விதித்த 10 நிபந்தனைகள் தனியரசு அமைக்க வழிகோலுவதாக, ஜே.வி.பியின் ரில்வின் சில்வா அச்சமுறுகிறார். நிபந்தனைகள் விதிப்பது போன்று சித்தரிப்பது, தமிழ்மக்களை ஏமாற்றி, மகிந்தருக்கு வாக்களிக்க வைக்கும் இராஜதந்திரமென்பதை ரில்வின் சில்வா புரிந்துகொள்வார்.

மகிந்த - தேவோ. விவகாரத்தை சிங்கள மக்கள் முன் போட்டுடைத்து, சரத்தின் வாக்கு வங்கியை அதிகரிக்கலாமென்பதே ஜே.வி.பியின் ஓட்டுப் பொறுக்கும் சோசலிச அரசியலாகும். வாழ்வா, சாவா என்கிற போராட்டத்தில் குதித்துள்ள, மகிந்தரின் தமிழ் இராணுவக் குழுக்கள், தாயக மக்களின் வாக்குகளை எவ்வாறாயினும், மகிந்தருக்கு விழச்செய்ய வேண்டுமென தலையால் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.ஆனாலும் விரக்தியின் விளிம்பு நிலையிலுள்ள தமிழ்பேசும் மக்கள், இன அழிப்புப் பிதாமகர்கள் இருவரையும் ஏறெடுத்துப் பார்க்கும் மனநிலையில் இல்லை. சர்வதேசத்திற்குச் செய்தி சொல்லப் புறப்பட்டிருக்கும், சுயேட்சை வேட்பாளர் சிவாஜிலிங்கம் குறித்து மக்கள் அக்கறை கொள்ளவில்லை.

இறுதிப்போரில் நிகழ்ந்த, மாபெரும் மனிதப் பேரவலத்தைக் கண்டும் காணாதது போல் முகத்தைத் திருப்பிக்கொண்ட வல்லரசாளர்கள், சிவாஜிலிங்கத்திற்கு விழும் வாக்குகளை வைத்து, தமது போக்கினை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். சனாதிபதி தேர்தல், எமக்கான அரசியல் களமல்ல. எமது விடுதலைப் போராட்டத்தை நிராகரித்த அல்லது அழிவிற்கு உதவி புரிந்த, மேற்குலக-பிராந்திய வல்லரசுச் சக்திகள் மோதும் களமிது. இம்மோதலில் இரண்டு முகாம்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மகிந்த சகோதரர்கள், தமிழ் இராணுவக் குழுக்கள், இந்தியா - சீனா என்பன ஒரு முகாமிலும், சரத்பொன்சேக்கா-இரணில் மற்றும் மேற்குலகம் என்பன எதிர்முகாமிலும் போட்டியிடுகின்றன. பிராந்திய ஆதிக்கம் என்கிற வகையில், மகிந்தர் - துணைக்குழுக்கள் - இந்தியா என்ற கூட்டு மிகப் பலம் வாய்ந்தது.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அழிப்பதில், முன்னின்று செயற்பட்டதுதான் இந்தக் கூட்டு. மகிந்தர் வெற்றி உறுதிப்படுத்த, இந்திய பரப்புரை புத்தி ஜீவிக்குழுவொன்று கொழும்பில் இறங்கியுள்ளது. தேசியத் தலைவரின் மகள் என்று கூறப்படும் ஒரு பெண்ணின் படத்தை இணையத்தளங்களில் கசியவிட்டு, தமிழ் மக்களின் உளவுரணைச் சிதைக்கும் சதிகளில் இவர்கள் ஈடுபடுவதாகச் சந்தேகிக்கப்படுகின்றது. அதேவேளை தேசியத் தலைவர், விடுதலைப்புலிகள் அமைப்பு, மாவீரர்களின் அர்ப்பணிப்பு என்பவற்றை, தமிழினத்தின் போராட்ட வரலாற்றுப் பதிவுகளிலிருந்து அழிப்பதற்கு, பாதாள உலக தமிழ் தேசியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்திய உளவு அமைப்பு செயற்படுவதுபோல் தெரிகிறது. புலம்பெயர் நாடுகளில் தினமொரு செய்தியாக, இச்சேறடிப்பு செயற்பாடுகள் உலாவருகின்றன.

அர்த்தமில்லை... அர்த்தமில்லையென்பதே... உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானத்தில் அர்த்தமில்லையென்பது போன்று பரப்புரைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கேணல், ஹரிஹரனிற்கு, அர்த்தமுள்ள ஆபத்தாகத் தெரியும் தனியரசுத் தீர்மான வாக்கெடுப்பு, எம்மில் சிலருக்கு அவமானமாகத் தெரிகிறது. ஆனாலும் புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் குழப்பங்களிற்கு, ஜனவரி 26அதிபர் தேர்தலின் முடிவுகள், புதிய பரிமாணங்களையும் திசைகளையும் காட்டப்போகிறது.

பலமான கூட்டு எதிரிகளை அழிப்பதற்கு, சரத்பொன்சேக்காவிற்கு, பல்லைக்கடித்துக்கொண்டு வாக்களிப்பதே இராஜதந்திரமென்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனூடாக தமிழ் இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி இடலாமெனவும், இந்திய வல்லாதிக்கத்தின் வகிபாகத்தை சிக்கலடைய வைக்கலாமெனவும் கூறப்படுகிறது. தமிழ் மக்களுக்கு, இவ்வகையான இராஜதந்திர நகர்வுகள் நன்றாகவே புரியும். ஆனாலும் இத்தனை அழிவிற்கு காரண கர்த்தாக்களாக இருந்த சாடிக்கும் மூடிக்கும் எவ்வாறு புள்ளடி போடுவது என்பதே சற்று நெருடலான விடயமாக இருக்கிறது.

-இதயச்சந்திரன்

நன்றி்:ஈழமுரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவோ சரத்தோ பதவிக்கு வரும்வரைக்கும்தான் எல்லாம், அதுக்குப்பிறகு பழைய குருடி கதவைத்திறவடிதான்.... :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுவுமே மாறப்போவதில்லை.

சரத்தை வரவளைக்க எண்டு பாடு படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட உந்த பாதாள கோஸ்ரியில் இணையும் வாய்ப்புதான் உள்ளது...

டக்கிளஸ் தேவானந்தாவும், கருணாவும் மகிந்த ஏன் ஆட்ச்சிக்கு வர வேண்டும் என்பதுக்கும் அவரை ஏன் ஆதரிக்கிறோம் எண்று சொன்னதுக்கும் கூட்டமைப்பு சரத்தை ஆதரிக்க சொல்லும் வியாக்கியானங்களுக்கும் கூட நிறைய வித்தியாசம் கிடையாது... சொல்லும் விதம் மட்டுமே வித்தியாசம்...

உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின்எண்ணிக்கை 602 ஆக அதிகரிப்பு-21 பேர் கவலைக்கிடம் எனத் தெரிவிப்பு

விடுதலைகோரி நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாகியுள்ளதை அடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நாடெங்கிலுமுள்ள சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையில் 602ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை, வெலிக்கடை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 602 பேரே இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது பிணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம், எமக்கு விடுதலை அல்லது பிணை அனுமதி வேண்டி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்தும் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அவை எவற்றையும் உரிய அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. உடலை, உயிரை வருத்தி விடுதலைக்காக நாங்கள் மேற்கொள்கின்ற இந்நடவடிக்கையின் நிமித்தமாக நிச்சயம் எங்கள் எல்லோருக்கும் விரைவில் விடுதலை கிடைக்கப்பெற அரசுடன் தமிழ் அமைச்சர்களாக உள்ள வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான்,விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் போன்றவர்களும், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுபினர்களும் எங்களுக்கு துணைநின்று ஜனாதிபதியிடம் எமது விடுதலையை வலியுறுத்தி பேசி, எமக்கான விடுதலையை பெற்றுத்தரும்படி அனைவரையும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=19832

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரின் வெற்றிக்காக பாதாளஉலகத் தமிழ் தேசிய வாதிகள் ஏங்கலாம்..ஆனால் அதற்காக புலம்பெயர் பாதாள உலகத் தமிழ் தேசிய வாதிகளின் பத்திரிகையில் நண்பர் இதயச்சந்திரன் இந்தக் கட்டுரையை எழுதியிருப்பதுதான் கவலையாக இருக்கிறன்றது....இலங்கையிலிருக்கும் பாதாளஉலகத் தமpமிழ் தேசிய வாதிகளிற்கும் ..புலம் பெயர் பாதளஉலகத் தமிழ் தேசிய வாதிகளிற்கும் பெரியளவு வித்தியாசம் ஏதும் இல்லை.. இவர்கள் இருவரது நோக்கங்களும் சுருட்டுவதே சுகம்..

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.