Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிபர் தேர்தல்-புறக்கணிக்கும் திரிகோணமலை தமிழர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரிகோணமலை: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் அதிபர் தேர்தலில் வாக்களிக்க சுத்தமாக ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

பொன்சேகாவாக இருந்தாலும் சரி, ராஜபக்சேவாக இருந்தாலும் சரி, யாராலும் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. பின்னர் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்று இவர்கள் குமுறுகிறார்கள்.

இதுகுறித்து திரிகோணமலையைச் சேர்ந்த ரமேஷ் என்ற தமிழர் கூறுகையில், எங்களது பிரச்சினைகளைத் தீர்க்கவும், அபிலாஷைகளை நிறைவேற்றவும் ராஜபக்சேவாலும் முடியாது, பொன்சேகாவாலும் முடியாது. அவர்கள் எதுவும் செய்யவும் மாட்டார்கள். தேர்தலுக்காக இப்போது எதை வேண்டுமானாலும் அவர்கள் பேசுவார்கள்.

எனவே இவர்களுக்கு வாக்களிப்பதால் எங்களுக்கு வசந்தம் வந்து விடாது. இவர்களுக்கு வாக்களிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. துரைரத்தின சிங்கம் கூறுகையில், கிழக்கில் சிங்களமயமாக்கம் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. போர் முடிந்த பின்னர் இது அதிகரித்து விட்டது.

பொருளாதார, சமூக ரீதியில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகளிலும் சரி, ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளிலும் சரி தமிழ் தொழிலாளர்கள் எண்ணிக்கை அடியோடு குறைந்து போய் விட்டது. முற்றிலும் சிங்களத் தொழிலாளர்கள்தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இவர்கள் யாருமே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அனைவருமே சிங்களப் பகுதிகளிலிருந்து இங்கு கொண்டு வந்து குடியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்றார்.

இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுப்படி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் அனைவரும் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சிங்கம் கூறுகையில், ராஜபக்சேவைப் போல அல்லாமல், எங்களது குறைகளைக் கவனிப்பதாகவும், நிவர்த்தி செய்வதாகவும் பொன்சேகா உறுதியளித்துள்ளார். ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் பொன்சேகா பரவாயில்லை. எனவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்திருந்தாலும் தமிழ் மக்களிடையே இந்தத் தேர்தல் எந்தவித ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேர்தலைப் புறக்கணிக்கும் மன நிலைதான் அதிகரித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://thatstamil.oneindia.in

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது...! கட்டாயம் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்து தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும்...

தமிழ்த் தேசியம் சிங்களவருக்கு வாக்களிப்பதால் அழிந்துவிடாது. அதுபாதுகாக்கப்படுவதற்கு ஆட்சியதிகாரத்தைத் தீர்மானிக்கும் பலம் கொண்டவர்களாக தமிழினம் மாற்றப்பட வேண்டும். எதிர்ப்பதற்கு முடியாதநிலையிலிருக்கும் நாம் சிங்களமயமாக்கலைக் கண்டு துவண்டுவிடாமல் தமிழர்களிடமிருக்கும் பலத்தை ஒன்றுபடுத்திப் பிரயோகிப்பதன் மூலம்மட்டுமே தமிழத்தேசியம் பாதுகாக்கப்படும்.

யாருக்கு எதிராக யாரோடு சேர்ந்து இதை ஒண்று படுத்துகிறீர்கள்....?? மகிந்தவை விடுத்து சரத் பொன்சேகாவோடு சேர்ந்து என்பது சரியானதா...???

அப்படியானால் மகிந்தவுக்கும் சரத்துக்கும் உள்ள வித்தியாசம் தான் என்ன...??? மகிந்த போய் சரத் வந்தால் எது மாறிவிடும்...?? எதை நம்புகிறீர்கள்....???

எதுவும்மாறாது. சரத்தும் மகிந்தவும் இரண்டு விசர்நாய்கள்தான். ஆனால் தமிழர் என்ன செய்கிறோம் என்ன முடிவை வெளிப்படுத்துகிறேம் என்பது ஒரு தற்காலிக முடிவாக இருக்க வேண்டும். இந்த முடிவுகள் தமிழரின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. நாம் ஒரு சிறுபான்மையினர் என்பது பலம் பொருந்தியவர்கள் என்ற மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். மகிந்தவைவிடவும் சரத் பரவாயில்லை என்பது எதைச் சொல்வது என்று தெரியாமல் துரைரெட்ணத்தாரால் சொல்லப்பட்ட விடை.

இங்கை கருத்தில் எடுக்க பட வேண்டிய இன்னும் ஒரு முக்கிய விடயம் இருக்கிறது... போராளிகள் எண்று ஒரு 14 000 பேரும்... இன்னும் லட்ச்சக்கனக்கில் மக்கள் எண்று இன்னும் சூழ் நிலை கைதிகளாக இப்பவும் இலங்கையில் தான் இருக்கிறார்கள்...

இதில் ஒரு தவறான முடிவு எல்லாரது வாழ்வாதரத்தையும் இன்னும் பலமாக ஆட்டி விடும்... 80 லட்ச்சம் சிங்கள வாக்காளர்கள் இருக்கும் நாட்டில் அவர்கள் சரி பாதியாக கட்டாயம் பிரியும் எண்று எப்படி சொல்கிறார்கள் எண்று தான் புரியவில்லை.... இதில் தமிழ் மக்களின் வாக்குக்கள் அனைத்து போடப்படும் போட அனுமதிப்பார்கள் எண்று எப்படி சொல்கிறார்கள் எண்றும் புரியவில்லை...

இதில் எந்த தவறு ஏற்பட்டு சரத்தின் வெற்றியில் பாதிப்பு ஏற்படும் பட்ச்சத்தில் கூட்டமைப்பினர் கடவுச்சீட்டுக்களை எடுத்து கொண்டு வெளி நாட்டுக்கு தப்பி விடுவார்கள்... ஆனால் மக்கள்...??

சிங்கள வாக்குகள் சரிபாதியக பிரிக்கப்படும் என்று கணிப்பிட முடியாதுதான். ஆனால் இன்றைய சூழ்நிலையில் மகிந்தரின் பொன்சேகாவின் செயற்பாடுகள் பேரினவாதம் என்ற வரையறைக்குள் முடக்குப்படாமல் முழு இலங்கை என்ற தேவைக்குள் வந்திருக்கிறது. அவ்வப்போது சில வேளைகளில் இது சிங்களவருக்கே உரிய நாடு என்று சொல்லப்பட்டாலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதவர்களாயுள்ளனர். அதைவிடவும் தமிழர்களi பயங்கரவாதிகளாகவும் காட்ட முடியாத சூழ்நிலைதான்.

தமிழர் பிரதேசத்தை நோக்கி இன்று அவர்கள் வாக்கு வேட்டைக்காக ஓடுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. "கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டுதல்" என்று சொல்வோமே அந்த தாக்கத்தை தமிழர்களிடமிருந்து அவர்கள் உணரவேண்டும்.

போர்காலங்களில் நாட்டைவிட்டோடாத கூட்டமைப்பு உறுப்பினர்களும் உண்டு. இது போர்க்காலமல்ல.

நீங்கள் சொல்வது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல... அப்படி சிங்களவர்களால் தமிழர்கள் மீது குறை கூற முடிய வில்லை எண்றால் இரு வேட்பாளர்களாலும் எதனால் தமிழர்களுக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை....???

அங்கே மறைந்து இருக்கும் கருத்து என்பது சிங்கள மக்களின் இனவாதத்தை எதிர்த்து இரு வேட்ப்பாளர்களும் வாக்குக்களை வாங்முடியாது என்பதுதான்... சிங்களவர்கள் இனவாதிகளாக இருப்பதினால் மட்டுமே சரத் பொன்சேகாவும் மகிந்தவும் போர் வெற்றியை காட்டி சிங்கள மக்களிடை வாக்குக்களை வாங்குகிறார்கள்...

உயிர் அச்சமும் அச்சுறுத்தலும் இல்லாதவர்கள் ஓடவில்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை கருத்தில் எடுக்க பட வேண்டிய இன்னும் ஒரு முக்கிய விடயம் இருக்கிறது... போராளிகள் எண்று ஒரு 14 000 பேரும்... இன்னும் லட்ச்சக்கனக்கில் மக்கள் எண்று இன்னும் சூழ் நிலை கைதிகளாக இப்பவும் இலங்கையில் தான் இருக்கிறார்கள்...

தயா,

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முன்னாள் போராளிகளையெல்லாம் விடுவிப்பதாக உறுதிமொழி கொடுத்ததாக நீங்கள் வேறு எங்கோ எழுதிய ஞாபகம். என்னுடைய இந்த நினைவு சரியென்றால், எந்த அடிப்படையில் மகிந்த மீண்டும் வந்தால் வாக்குறுதியைக் காப்பாற்றுவான் என நம்புகிறீர்கள்? :(

வடக்கு/கிழக்கு தமிழர்களின் வாக்குகள் சனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தி என்ற நிலை தமிழர்கள் நாம் புலம்பெயர்ந்த பின்பு முற்றிலும் மாறிவிட்டது என்பது கசப்பான உண்மை. ஆகக்குறைந்தது இம்முறை தமிழர்களில் 10 இலட்சம் பேர் குறிப்பிட்ட வாக்காளர் ஒருவருக்கு வாக்களித்தாலும், சில சிங்கள மாவட்டங்களில் (தொகுதிகள் அல்ல) ஏற்படும் இரு கட்சிகளுக்கான வாக்குகளின் இடை வித்தியாசம் இந்த 10 இலட்சத்தையும் தாண்டி நிற்கும் (முக்கியமாக கண்டி, குருநாகல், மாத்தறை,காலி, பதுளை போன்ற மாவட்டங்களில் இரு கட்சிகளுக்கும் கிடைக்கும் வாக்குகளின் இடை வித்தியாசம்). மலையகத் தமி்ழர்களும் வடக்கு கிழக்கு மக்களுடன் சேர்ந்து ஒரே வேட்பாளருக்கு போட்டால் கூட இந்த நிலைமையில் பெரிய மாற்றம் வருமா என்பது சந்தேகமே.

பார்ப்போம்... இந்த முறை தேர்தல் முடிவுகள் சில கணிப்புகளை வெளியே காட்டுகின்றதா என

அவர்களை விடுவிப்பார்கள் எண்று நான் நம்புவது என்பது அல்ல நான் எழுதியது... அந்த உறுதியின் அடிப்படையில் மகிந்த காயம் அடைந்து செயற்பட முடியாது இருந்த போராளிகளில் பலரை வெளியில் விடுவதாக அறிவித்து சிலரை மட்டும் குடும்பங்களுடன் சேர்த்து ஒருவிதமான நம்பிக்கையை அவர்களிடம் கொடுத்து இருக்கிறான்... அது 14 000 குடும்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து... அவர்கள் மகிந்தவுக்கு ஆதரவளிக்காது விட்டாலும் சரத்தையும் ஆதரிக்காமல் நடுவில் நிற்கவே விருபுகிறார்கள்... அதில் எனது உறவினர்கள் பலரும் அடக்கம்...

இங்கை நீங்கள் நான் மகிந்தவை ஆதரிக்க சொல்வதாக நீங்கள் நினைத்தால் நான் அதுக்கு பொறுப்பு இல்லை...

வடக்கு/கிழக்கு தமிழர்களின் வாக்குகள் சனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தி என்ற நிலை தமிழர்கள் நாம் புலம்பெயர்ந்த பின்பு முற்றிலும் மாறிவிட்டது என்பது கசப்பான உண்மை. ஆகக்குறைந்தது இம்முறை தமிழர்களில் 10 இலட்சம் பேர் குறிப்பிட்ட வாக்காளர் ஒருவருக்கு வாக்களித்தாலும், சில சிங்கள மாவட்டங்களில் (தொகுதிகள் அல்ல) ஏற்படும் இரு கட்சிகளுக்கான வாக்குகளின் இடை வித்தியாசம் இந்த 10 இலட்சத்தையும் தாண்டி நிற்கும் (முக்கியமாக கண்டி, குருநாகல், மாத்தறை,காலி, பதுளை போன்ற மாவட்டங்களில் இரு கட்சிகளுக்கும் கிடைக்கும் வாக்குகளின் இடை வித்தியாசம்). மலையகத் தமி்ழர்களும் வடக்கு கிழக்கு மக்களுடன் சேர்ந்து ஒரே வேட்பாளருக்கு போட்டால் கூட இந்த நிலைமையில் பெரிய மாற்றம் வருமா என்பது சந்தேகமே.

பார்ப்போம்... இந்த முறை தேர்தல் முடிவுகள் சில கணிப்புகளை வெளியே காட்டுகின்றதா என

2005 தேர்தலில் கூட்டமைப்பு வாங்கிய வாக்குகள் 6.7 லட்ச்சம் வாக்குகள் நிழலி... இதில் யாழில் 305 000 வாக்குக்களில் 296 000 வாக்குகளை கூட்டமைப்பு வாங்கியது.... ஆனால் கடந்த மாகானசபை தேர்தலில் இஸ்லாமியர்கள் அடக்கமாக ஒரு லட்ச்சம் வாக்காளர்களாக கணித்து இருக்கிறார்கள்...

தகவலுக்கு நன்றிகள் தயா. வெறும் 4 இலட்சத்துக்கும் குறைவான வாக்காளர்களை வைத்து கொண்டா எம்மை தீர்மானிக்கும் சக்தியாக குறிப்பிடுகின்றனர் (கொழும்பில் எத்தனை தமிழ் வாக்காளர்கள் இருக்கினம் என்று தெரியுமா?) இந்த பில்டப் கடைசியில் backfire ஆகாமல் இருந்தால் சந்தோசம்

நீங்கள் சொல்வது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல... அப்படி சிங்களவர்களால் தமிழர்கள் மீது குறை கூற முடிய வில்லை எண்றால் இரு வேட்பாளர்களாலும் எதனால் தமிழர்களுக்கு என்ன கொடுக்க முடியும் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை....???

அங்கே மறைந்து இருக்கும் கருத்து என்பது சிங்கள மக்களின் இனவாதத்தை எதிர்த்து இரு வேட்ப்பாளர்களும் வாக்குக்களை வாங்முடியாது என்பதுதான்... சிங்களவர்கள் இனவாதிகளாக இருப்பதினால் மட்டுமே சரத் பொன்சேகாவும் மகிந்தவும் போர் வெற்றியை காட்டி சிங்கள மக்களிடை வாக்குக்களை வாங்குகிறார்கள்...

உயிர் அச்சமும் அச்சுறுத்தலும் இல்லாதவர்கள் ஓடவில்லை...

தகவலுக்கு நன்றிகள் தயா. வெறும் 4 இலட்சத்துக்கும் குறைவான வாக்காளர்களை வைத்து கொண்டா எம்மை தீர்மானிக்கும் சக்தியாக குறிப்பிடுகின்றனர் (கொழும்பில் எத்தனை தமிழ் வாக்காளர்கள் இருக்கினம் என்று தெரியுமா?) இந்த பில்டப் கடைசியில் backfire ஆகாமல் இருந்தால் சந்தோசம்

வெறும் 4 இலட்சம் என்று கணக்குப்போடக் கூடாது. தமிழரின் வாக்குகளை நாடிவரும் சிங்கள வேட்பாளர்கள் வென்றபின் எதையும் தரமாட்டார்கள் என்பது உண்மைதான். சென்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப்புலிகள் வாக்களிப்பைப் புறக்கணித்ததால் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெற முடிந்ததென்றால், அதே வாக்குகளைப்பன்படுத்தி அந்த அதிகாரபீடத்தை மாற்ற முடியாது.

இங்கு வாக்களிப்பதாலும் அதைப் புறக்கணிப்பதாலும் ஈழத்தமிழர் வாழ்வில் விடிவு வரப்போவதில்லை. தமிழர் வாக்குகள் பகிஷ்கரித்தாலும் தேர்தலை ஏற்றுக் கொண்டு வாக்களித்தாலும் ஓரணியில் நிற்க வேண்டும் என்பதுதான் என் வாதம்.

மனிதஉரிமைகள் பற்றிப் பேசமுடியாத இச் சந்தர்ப்பத்தில், ஜனநாயகம் என்பதையே என்னவென்று கேட்கும் ஒரு அதிகார நாட்டில், ஊடக சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் அடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் எதைச் சாதித்துக் காட்ட முடியும். தம்முடைய வாக்குப் பலத்தினால் மட்டுமே தற்பேதைக்கு ஒரு நிழலைக் கூடத் தேடிக் கொள்ள முடியும்.

அல்லது வாக்களிப்பைத் தவிர்த்து அதன் மூலமும் ஒன்றுபட்ட கருத்தை வெளியிடலாம். ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தாலென்ன? பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதான். ஆனால் தமிழர் ஒற்றுமை இவைகளிலிருந்து வேறுபட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.