Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமுதம் தேர்தல் கட்டுரை - வ.ஐ.ச.ஜெயபாலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் சொல்லப் படாதா கதைகள்

வ,ஐ,.ச,ஜெயபாலன்

(குமுதம் வெளியிட்ட பிரதியில் சில சொற்க்கள் edit பண்ணப்பட்டுள்ளது}

தமிழ் மக்களை அச்சுறுத்திய தேர்தல் வெளிப்படையான மாறுதல்கள் எதனையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்துவிட்டது. எனினும் புலம் பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழக உணர்வாளர்களுக்கும் நடந்து முடிந்த தேர்தல் கள யதார்த்தையும் எதிர்கால அரசியலின் இயங்கு திசைகளையும் சாத்தியமான தெரிவுகளையும் தெளிவாகக் கோடிகாட்டிச் சென்றுள்ளது. சிங்களபிரதேசம் என்று அடையாளப் படுத்தப்படும் தென்பகுதி மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக மகிந்த வெற்றி பெற்றுள்ளார். எனினும் சிங்கள மத்திய மாகாணத்தில் மலையக தமிழர் செறிந்துவாழும் நுவரெலியா மாவடமாவட்டத்தில் மட்டும் மகிந்த தோற்க்கடிக்கப் பட்டுள்ளார். கடந்த 60 வருடங்களாக விடுதலைப்போராட்டம் இடம்பெற்று வந்த வடகிழக்கு மாகாணங்களில் ராஜபக்ச தோற்க்கடிக்கப் பட்டுள்ளார். தேர்தல் அன்று அதிகாலையே மகிந்த அரசு யாழ்ப்பாணத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தும் இராணுவ முகாமில் இருந்து செல்களை வீசியும் பேருந்து சேவைகளை ரத்துச் செய்தும்.ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்கச் செல்ல விருந்த தமிழ்/முஸ்லிம் மக்களை அச்சுறுத்தினார்கள். தமிழர் பிரதேசகளில் பெருமளவில் குவிக்கப் பட்டிருந்த சிங்கள இராணுவ கடற்படை சிப்பாய்கள் மகிந்தவுக்குச் சார்பாக வாக்களித்தபோதும் மகிந்தவால் தமிழ் பகுதிகளை வெற்றிபெற முடியவில்லை, இதை ஒத்துக் கொண்டு கருத்துத் தெரிவித்த சிங்களவரான ஊடகத்துறை அமைச்சர் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன பின்வருமாறு கூறினார்.” டக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் அரசாங்கத்தின் வாக்குகள் குறைந்தமைக்கு பிரதான காரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சரத் பொன்சேகாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை வைத்துக் கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்தமையே ” என்று குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் போராட்டம் தோற்க்கடிக்கப் பட்டபோதும் மக்கள் சிங்கள இனவாத அரசுகளிடம் சரணடைய விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 1970பதுகளின் முன்னே அகிம்சைவழி அரசியல் போராட்டம் தோற்றுப் போனதன்பின்னர் ஓரணியாக நின்று ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த மக்கள் பெரும் தோல்வியின் பின்னரும் துவண்டுவிடாமல் அரசியல் போராட்டத்துக்கு மீண்டிருக்கிறார்கள். இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தலைவர் சம்பந்தரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவ் ஹக்கீமும் இணைந்து இனவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்ததாலேயே சரணாகதி மனப்பாண்மையில் இருந்து விடுபட முடிந்தது. அன்று கதிர்காமர் போன்ற முகமூடிகளுடன் யுத்தத்தை ஆதரித்த ஐந்து நட்சத்திர விடுதி இளவரசர்கள் பலர் இன்று செயலிழந்துபோன தமிழ் மக்களுக்காக அரசியல் வெளியை (space) உருவாக்கிறேன் பேர்வழி என்றபடி என்.ஜி.ஓ பணத்தில் வித்தைகள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் தோற்றுப்போன எங்கள் மக்கள் தேர்தலில் இரண்டு எதிரிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைக் கையாண்டு தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மீழ ஆரம்பிக்கிறதற்க்கான வெளியை திரு.சம்பந்தர் ஜனாப்.றவ்ஹக்கீம் மனோ கணேசன் போன்றவர்களின் கூட்டுத் தலைமையின் ஊடாக உருவாக்கியிருக்கிறார்கள்.

.

நசிக்கப் பட்டு நாதியற்றுக் கிடக்கும் ஒரு இனம் இரண்டு எதிரிகளின் முரண்பாடுகளைப் பயன்படுத்தித்தான் தனது அரசியலுக்கான வெளியை உருவாக்க முடியும்.

போரில் அடிபட்டு நொந்து நூலாகிப்போன ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் எழுகிற முயற்ச்சிக்கிறார்கள். உங்கள் விமர்சனங்களுடனும் விவாதங்களுடனும் அவர்களை ஆதரியுங்கள் என்று உருத்திரகுமாரன்போன்ற புலம்பெயர் தமிழர் தலைவர்களையும் கலைஞர் ஜெயலலிதா அம்மையார் பழ நெடுமாறன் த.பாண்டியன் மருத்துவர் திருமாவளவன் டாக்டர் கிருஸ்ணசாமி வைகோ குளத்தூர் மணி போன்ற அனைத்து தமிழக தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மக்கள் சூனியத்தில் இருந்து எழ முனைகிறபோது வமர்சனங்கலோடு கைகொடுங்கள். வெளியில் பாதுகாப்பாக இருந்தபடி அதிதீவிரவாதம் பேசி ஆதரிக்க மறுக்கிறவர்களுக்கும் இளைய கதிர்காமர் போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இந்த தேர்தலின் மூலம் இணைந்து போராடும் ஆற்றலை இழக்கவில்லை என்பதை வட கிழக்குத் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இனியேனும் வெளியில் உள்ளவர்கள் போராட்டத்தை ஏற்றுமதி செய்யும் முயற்ச்சிகளைக் கைவிட்டுவிட்டு ஆக்கபூர்வமான விமர்சனங்களுடன் அவர்களை ஆதரிக்க முன்வரவேண்டும்.

இலங்கைத் தமிழர்களை நிலத்திலும் இந்திய தமிழர்களை கடலிலும் கொன்றுவந்த சிங்கள பேரினவாதிகள் மீண்டும் பலப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் காலத்தில் கடலில் மீன்பிடிக்கும் இந்திய தமிழர்களைக் கொல்லும் விழையாட்டை தொடர சிங்கள கடற்படை அஞ்சியது. இந்திய மீனவர்களைக் கொன்று அட்டகாசம் செய்த இலங்கைக் கடற்படைக் கப்பல்களை துணிச்சலுடன் இந்தியக் கடற்படை சிறைப் பிடித்து இராமேஸ்வரம் கரைக்கு இழுத்து வந்த சம்பவமும் எம்ஜீஆர் காலத்தில் இடம் பெற்றது. இப்பொழுது அசுர பலத்துடன் மீண்டும் ஆட்ச்சி அமைத்துள்ள இராஜப்கச அரசின் கடற்படை மீண்டும் தமிழ் நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்லும் விழையாட்டை ஆரம்பிக்கு முன்னமே தமிழ் நாட்டின் முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். செம்மொழி மாநாட்டுக்கு முன்னம் கேட்பாரின்றி கடலில் சிங்கள கடற்படையால் வேட்டையாடப் படுகிற செந்தமிழர் பிரச்சினையை கலைஞர் தீர்ட்த்து வைக்க வேணும்.

தமிழர்கள் ஏன் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள் என்று கேட்க்கப் படுகிறது.

போரில் அடிபட்டு நொந்து நூலாகிக் கிடக்கிற இலங்கைத் தமிழர்களுக்கு இரண்டு உடனடிப் பிரச்சினை இருந்தது. ஒன்று நாம் இன்னும் அழிந்துவிடவில்லை என உணர்த்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கான வெளியை உருவாக்குவது.. இரண்டு தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் சீன இராணுவம் மற்றும் தொழிலாளர் வருகையை தடுப்பது. எங்கள் மண்ணில் சீனாவா இந்தியாவா என்றால் இந்தியா என்பதுதான் எனது பதில். ஆனால் இந்தியா தனது இலங்கை கொள்கையை மீழ் பரிசீலிப்பதன்மூலம் முழு இலங்கைத் தமிழர்களதும் மனதை வெல்ல வேண்டும். இந்தியாவின் ஆதரவில்லாமல் நாமும் எங்கள் கடல்களை சீனாவிடம் பறிகொடுத்துவிட்டு இந்தியாவும் நிலைக்க முடியாது.

இராஜபக்சவை வாழ்த்தியதுபோல இந்திய மீனவர்களைச் சுடாதே, சீனர்கள் வருகையை கட்டுப்படுத்து என்றும் இராஜபசவிடன் இந்திய பிரதமர் உறுதியுடன் கூற வேண்டிய தருணமிது. வடகிழக்கின் புனர் நிர்மானத்துக்கு இந்தியா இருக்கிறது என்று சொல்லுங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம்

அன்புள்ள கவிஞர், *** உங்கள் "ஆழ்ந்த" அரசியல் ஞானத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு இரண்டு கேள்விகளுக்குப் பதில் தாருங்கள்:

1. இந்தியா தனித்தமிழ் ஈழத்தை அல்லது அதிக பட்ச சுயாட்சியை ஆதரிக்காது என்று நேராகவும் செயல் பாட்டிலும் சொல்லி விட்ட பிறகு இந்திய நலன் பற்றி ஈழத்தமிழர் ஏன் அக்கறைப் பட வேண்டும்?

2.இந்திய எதிரியான சீனா, இந்தியாவுக்கு தலையிடி கொடுக்கும் முகமாக தனித் தமிழ் ஈழத்தை மறைமுகமாகவேனும் ஆதரிக்க முனைந்தால் ஈழத்தமிழர் சீனாவின் ஆதரவைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது இந்திய நலன்களுக்காக தொடர்ந்து சிங்களவனிடம் அடிமையாகவே இருக்க வேண்டுமா?

*** மேலும் உங்களுக்கு உதவக் கூடுமெனில் 2009 மே மாத செய்திப் பின்னணிகள் ஆவணங்களை மீள விஜயம் செய்து இந்தியாவும் கருணானிதியும் ஈழத்தமிழர்களின் இரத்தத்தை எப்படி தங்கள் மேல் பூசிக் கொண்டார்கள் என்று அறிந்து கொண்டு வந்து பதில் தாருங்கள். காத்திருக்கிறேன்!

நன்றி!

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் சொல்லப் படாதா கதைகள்

வ,ஐ,.ச,ஜெயபாலன்

(குமுதம் வெளியிட்ட பிரதியில் சில சொற்க்கள் edit பண்ணப்பட்டுள்ளது}

தமிழ் மக்களை அச்சுறுத்திய தேர்தல் வெளிப்படையான மாறுதல்கள் எதனையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்துவிட்டது. எனினும் புலம் பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழக உணர்வாளர்களுக்கும் நடந்து முடிந்த தேர்தல் கள யதார்த்தையும் எதிர்கால அரசியலின் இயங்கு திசைகளையும் சாத்தியமான தெரிவுகளையும் தெளிவாகக் கோடிகாட்டிச் சென்றுள்ளது. சிங்களபிரதேசம் என்று அடையாளப் படுத்தப்படும் தென்பகுதி மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக மகிந்த வெற்றி பெற்றுள்ளார். எனினும் சிங்கள மத்திய மாகாணத்தில் மலையக தமிழர் செறிந்துவாழும் நுவரெலியா மாவடமாவட்டத்தில் மட்டும் மகிந்த தோற்க்கடிக்கப் பட்டுள்ளார். கடந்த 60 வருடங்களாக விடுதலைப்போராட்டம் இடம்பெற்று வந்த வடகிழக்கு மாகாணங்களில் ராஜபக்ச தோற்க்கடிக்கப் பட்டுள்ளார். தேர்தல் அன்று அதிகாலையே மகிந்த அரசு யாழ்ப்பாணத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தும் இராணுவ முகாமில் இருந்து செல்களை வீசியும் பேருந்து சேவைகளை ரத்துச் செய்தும்.ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்கச் செல்ல விருந்த தமிழ்/முஸ்லிம் மக்களை அச்சுறுத்தினார்கள். தமிழர் பிரதேசகளில் பெருமளவில் குவிக்கப் பட்டிருந்த சிங்கள இராணுவ கடற்படை சிப்பாய்கள் மகிந்தவுக்குச் சார்பாக வாக்களித்தபோதும் மகிந்தவால் தமிழ் பகுதிகளை வெற்றிபெற முடியவில்லை, இதை ஒத்துக் கொண்டு கருத்துத் தெரிவித்த சிங்களவரான ஊடகத்துறை அமைச்சர் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன பின்வருமாறு கூறினார்.” டக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் அரசாங்கத்தின் வாக்குகள் குறைந்தமைக்கு பிரதான காரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சரத் பொன்சேகாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை வைத்துக் கொண்டு மக்களிடம் பிரசாரம் செய்தமையே ” என்று குறிப்பிட்டுள்ளார். ஆயுதப் போராட்டம் தோற்க்கடிக்கப் பட்டபோதும் மக்கள் சிங்கள இனவாத அரசுகளிடம் சரணடைய விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 1970பதுகளின் முன்னே அகிம்சைவழி அரசியல் போராட்டம் தோற்றுப் போனதன்பின்னர் ஓரணியாக நின்று ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த மக்கள் பெரும் தோல்வியின் பின்னரும் துவண்டுவிடாமல் அரசியல் போராட்டத்துக்கு மீண்டிருக்கிறார்கள். இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தலைவர் சம்பந்தரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவ் ஹக்கீமும் இணைந்து இனவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்ததாலேயே சரணாகதி மனப்பாண்மையில் இருந்து விடுபட முடிந்தது. அன்று கதிர்காமர் போன்ற முகமூடிகளுடன் யுத்தத்தை ஆதரித்த ஐந்து நட்சத்திர விடுதி இளவரசர்கள் பலர் இன்று செயலிழந்துபோன தமிழ் மக்களுக்காக அரசியல் வெளியை (space) உருவாக்கிறேன் பேர்வழி என்றபடி என்.ஜி.ஓ பணத்தில் வித்தைகள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் தோற்றுப்போன எங்கள் மக்கள் தேர்தலில் இரண்டு எதிரிகளுக்கு இடையிலான முரண்பாடுகளைக் கையாண்டு தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மீழ ஆரம்பிக்கிறதற்க்கான வெளியை திரு.சம்பந்தர் ஜனாப்.றவ்ஹக்கீம் மனோ கணேசன் போன்றவர்களின் கூட்டுத் தலைமையின் ஊடாக உருவாக்கியிருக்கிறார்கள்.

.

நசிக்கப் பட்டு நாதியற்றுக் கிடக்கும் ஒரு இனம் இரண்டு எதிரிகளின் முரண்பாடுகளைப் பயன்படுத்தித்தான் தனது அரசியலுக்கான வெளியை உருவாக்க முடியும்.

போரில் அடிபட்டு நொந்து நூலாகிப்போன ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் எழுகிற முயற்ச்சிக்கிறார்கள். உங்கள் விமர்சனங்களுடனும் விவாதங்களுடனும் அவர்களை ஆதரியுங்கள் என்று உருத்திரகுமாரன்போன்ற புலம்பெயர் தமிழர் தலைவர்களையும் கலைஞர் ஜெயலலிதா அம்மையார் பழ நெடுமாறன் த.பாண்டியன் மருத்துவர் திருமாவளவன் டாக்டர் கிருஸ்ணசாமி வைகோ குளத்தூர் மணி போன்ற அனைத்து தமிழக தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் மக்கள் சூனியத்தில் இருந்து எழ முனைகிறபோது வமர்சனங்கலோடு கைகொடுங்கள். வெளியில் பாதுகாப்பாக இருந்தபடி அதிதீவிரவாதம் பேசி ஆதரிக்க மறுக்கிறவர்களுக்கும் இளைய கதிர்காமர் போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

இந்த தேர்தலின் மூலம் இணைந்து போராடும் ஆற்றலை இழக்கவில்லை என்பதை வட கிழக்குத் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இனியேனும் வெளியில் உள்ளவர்கள் போராட்டத்தை ஏற்றுமதி செய்யும் முயற்ச்சிகளைக் கைவிட்டுவிட்டு ஆக்கபூர்வமான விமர்சனங்களுடன் அவர்களை ஆதரிக்க முன்வரவேண்டும்.

இலங்கைத் தமிழர்களை நிலத்திலும் இந்திய தமிழர்களை கடலிலும் கொன்றுவந்த சிங்கள பேரினவாதிகள் மீண்டும் பலப்பட்டுள்ளனர். எம்ஜிஆர் காலத்தில் கடலில் மீன்பிடிக்கும் இந்திய தமிழர்களைக் கொல்லும் விழையாட்டை தொடர சிங்கள கடற்படை அஞ்சியது. இந்திய மீனவர்களைக் கொன்று அட்டகாசம் செய்த இலங்கைக் கடற்படைக் கப்பல்களை துணிச்சலுடன் இந்தியக் கடற்படை சிறைப் பிடித்து இராமேஸ்வரம் கரைக்கு இழுத்து வந்த சம்பவமும் எம்ஜீஆர் காலத்தில் இடம் பெற்றது. இப்பொழுது அசுர பலத்துடன் மீண்டும் ஆட்ச்சி அமைத்துள்ள இராஜப்கச அரசின் கடற்படை மீண்டும் தமிழ் நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்லும் விழையாட்டை ஆரம்பிக்கு முன்னமே தமிழ் நாட்டின் முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். செம்மொழி மாநாட்டுக்கு முன்னம் கேட்பாரின்றி கடலில் சிங்கள கடற்படையால் வேட்டையாடப் படுகிற செந்தமிழர் பிரச்சினையை கலைஞர் தீர்ட்த்து வைக்க வேணும்.

தமிழர்கள் ஏன் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள் என்று கேட்க்கப் படுகிறது.

போரில் அடிபட்டு நொந்து நூலாகிக் கிடக்கிற இலங்கைத் தமிழர்களுக்கு இரண்டு உடனடிப் பிரச்சினை இருந்தது. ஒன்று நாம் இன்னும் அழிந்துவிடவில்லை என உணர்த்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கான வெளியை உருவாக்குவது.. இரண்டு தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் சீன இராணுவம் மற்றும் தொழிலாளர் வருகையை தடுப்பது. எங்கள் மண்ணில் சீனாவா இந்தியாவா என்றால் இந்தியா என்பதுதான் எனது பதில். ஆனால் இந்தியா தனது இலங்கை கொள்கையை மீழ் பரிசீலிப்பதன்மூலம் முழு இலங்கைத் தமிழர்களதும் மனதை வெல்ல வேண்டும். இந்தியாவின் ஆதரவில்லாமல் நாமும் எங்கள் கடல்களை சீனாவிடம் பறிகொடுத்துவிட்டு இந்தியாவும் நிலைக்க முடியாது.

இராஜபக்சவை வாழ்த்தியதுபோல இந்திய மீனவர்களைச் சுடாதே, சீனர்கள் வருகையை கட்டுப்படுத்து என்றும் இராஜபசவிடன் இந்திய பிரதமர் உறுதியுடன் கூற வேண்டிய தருணமிது. வடகிழக்கின் புனர் நிர்மானத்துக்கு இந்தியா இருக்கிறது என்று சொல்லுங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம்

உங்கள் ஒருவரின் விருப்பத்துக்காக நாங்கள் இந்தியாவிடம் அடிமையாக இருக்க முடியாது, இந்தியாவா சீனாவா என்றால் எனது பதில் சீனாதான், சீனா கச்சதீவில் கடற்படை தளம் அமைக்க வேண்டும், யாழ்பானத்தில் சீன துணைதூதரகத்தை திறக்க வேண்டும், ரஸ்சியா உடைந்தது போல, இந்தியாவை உடைத்து பல நாடுகள் சமைக்க வேண்டும், தமிழனுக்கு இரு நாடுகள் பிறக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய ஜஸ்ரின், சித்தன்,

இங்கு எங்கள் சொந்த தேவை விருப்பு வெறுப்புகளில் நாங்கள் விவாதிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைபும் நாடு கடந்த அரசு/ ஏனைய புலம் பெயர் அமைப்புகள் தமக்குள் தொடர்பு கொள்ளாமலும் விவாதிக்காமலும் இருக்கிற சூனியமான சூழலில் கவலை தருகிறது. இன்றுவரை தோல்வியின்பின்னர் சகல தரப்புகளையும் கூட்டி ஒரு மாநாட்டு அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்பது இரு சாராருக்கும் தோன்றாமல் போயிற்று. நான் 1996ல் விடுதலைப்புலிகள் புலனாய்வுத் துறைக்கூடாக கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க இந்தியா ஈழம் இரு தரப்பிடமும் வெளிப்படையாகவே நடுவு நிற்பேன் இருதரப்புக்கும் யுத்தம் வந்தால் சொல்லிவிட்டு ஈழத் தமிழர் பக்கம் சாய்வேன் என தெரிவித்துவிட்டு அஞ்சல் காரனாக செயல் பட்டேன். பதில்களைப் பெறுவதில் இருந்த சிரமங்களால் நிரந்தரமாக செயல்பட மலையக தலைவர் சந்திர சேகரத்தை பரிந்துரைத்தேன். மேற்க்கு நாடுகளிலும் மட்டுப்பட்ட அளவில் பணிபுரிந்தேன். ஆனால் இராஜதந்திர பணிகளுக்கான வெளி உருவாக்குவதே சிக்கலாய் இருந்தது. இந்த அனுபவங்கள் தொடர்பாகவும் இது தொடர்பாகஎனக்கும் 1996 - 2006 காலக்கட்டத்தில் திரு யாழ்வேந்தனுக்கும் எனக்கும் மற்றும் திரு சூசைக்கும் எனக்கும், திரு நிருபம் சென்னுக்கும் எனக்கும் இடையில் இடம்பெற நீண்ட உரையாடல் பற்றியும் நிருபாமாராவுடனான சந்திப்புப்பற்றியும் புத்தகம் எழுத இருக்கிறேன். இந்தியா தெரிவு என்ற கருத்தை திரு.நடேசன் உட்பட எல்ல தலைவர்களும் அவ்வப்போது சொல்லியிருக்கிறார்கள்.முக்கிய தலைவர் ஒருவர் இந்தியாவின் இஸ்ரேலாக இருக்க விரும்பம் தெரிவித்ததாக அருட்தந்தை கஸ்பர் எழுதியிருக்கிறார். ***

சித்தன் கோபப்படுவதில் பிர்யோசனமில்லை. இன்று ஈழத்தில் குறிப்பாக வட ஈழத்தில் குறிப்பாக வட ஈழத்தில் தொழில் ஆற்றல் கருவளம் உள்ல பருவத்து மக்கள் அருகியுள்ளனர். சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளே கட்டுமானங்களுக்காக ஆயிரக் கணக்கில் சிங்கள தொழிலாளர்களைக் கொண்டுவந்தார்கள் அல்லவா? மலையகத்தில் uder employment சூழல் பரவலாக இருந்தாலும் வடக்கில் வந்து தொழில்செய்யுமளவுக்கு வேலை இன்மையின் அழுத்தம் குறைவு. இந்த நிலையில் தமிழக தொண்டர்களதும் தொழிலாளர்களதும் உழைப்பு திரட்டப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைபாடு. இவற்றைஎல்லாம் கருத்தில் கொண்டே சீனாவா இந்தியாவா என்றால் என் தெரிவு இந்தியா என்று சொன்னேன். இந்தியாவுடன் உறவின் மூலம் மட்டுமே இன்றைய நிலையில் களத்தில் உள்ளவர்கள் தமிழ் நாட்டு ஆதரவின் கனிகளைப் பறிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். தற்கொலைப் படை இருக்கும் வரைக்கும் நீயும் தலிபாந்தான் என மேற்க்கு நாடுகளும் அமரர் இராஜீவ் காந்தி வளக்குத் தொடர்பாக தலைவர்கள் சரணடைய முன்வந்தால் மன்னிப்பழித்து உறவுகளைச் சகசமாக்கலாம் என்றும் இந்தியாவும் உறுதியாக தெரிவிது விட்டது. அமரிக்க மைப்புகளின் அழுத்தம் காரணமாக போராளிகள் சமரசம் செய்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் திருமதி கில்லாரி கிளிண்டன் பயங்கரவாதம் பற்றறிய 9/11 கோட்பாடை reinterpret செய்தார். போரின் இறுதியில் 3ம் தரபிடம் சரணடையுமாறு அமரிக்கா கேட்டபோது ஆச்சரியமும் நம்பிக்கையும் ஏற்ப்பட்டது. எனினும் வாய்ப்புகள் நழுவிப்போனது. அமரர் பலசிங்கத்துக்குப் பிறகு அமரிக்க அமைப்பினர் மட்டுமே சரியான இராஜதந்திர அணுகு முறையை கொண்டிருந்தார்கள். போராட்டம் அரசியல் நிலைபாடு தொடர்பாக களத்தின் நிலைபாடுகளில் இருந்து மட்டுமே ஆரம்பிக்க விரும்புகிறேன். திரு சித்தன் இது எனது நிலைபாடு. உங்கள் நிலைபாடு வேறுபடுவது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுத்தால் மகிழ்வேன். சித்தன் நீங்கள் என்னை இழிவுபடுத்தும் வார்த்தைகளை தேடித் தொகுக்கவில்லை என்பதற்க்காக நன்றி கூறுகிறேன்

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்ட கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

சிங்களவனை பழிவாங்கதான் போராட்டம் நடாத்தினோமே ஒழிய தமிழனுக்கான ஒரு விடிவுதேடி நாம் போராடவில்லை.முடிந்தவன் எல்லாம் நாட்டை விட்டு ஓடியதும், பின் எஞ்சியவனை அடிபடச்சொல்லி காசு அனுப்பினதும்தான் செய்தோமே ஒழிய எமது நிலம்,எமது மக்கள்,என்ன நடக்குது,எங்கே போய் முடியப்போகின்றது என்று இந்த சுயநலம் பிடித்த தமிழினம் சிந்திக்கவில்லை.இன்றும் அதே சுயநலம் பிடித்த கூட்டம் அங்கிருக்கும் மக்களையும் மண்ணையும் மறந்து உலகத்தை பழிவாங்கத்துடிக்கின்றார்கள் தமது போராட்டத்தை அழித்தார்கள் என்று.

இன்றும் பலருக்கு புலத்தில் இருக்கும் மக்களை பற்றி எதுவித அக்கறையும் இல்லை.இந்தியா நூறாக உடையவேணும்,கருணாநிதி காலிழுத்து சாகவேணும்,காப்பிலி புத்தியை காட்டிவிட்டது என்று ஒபாமாவை திட்டுவது என இருக்கின்றார்களே ஒழிய அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது எதோ செய்யப்போகின்றோம் என்பவர்கள் அதை சரியாக செய்கின்றார்களா என்பதை ஆராய்வதைவிட்டு இப்படியே பழிவாங்கும் எண்ணதுடன் இருந்தால் ஒன்றுமில்லாமல் உலகம் முழுக்க அகதியாக அலையவேண்டித்தான் வரும்.

இப்படி ஒருநிலை எமக்கு வந்துவிடக்கூடாதென்றுதான் அப்போதும் முடிந்த அளவிற்கு எமது விமர்சனங்களை வைத்தோம். இன்றும் காதில் பூ சுற்ற நினைக்கும் கூட்டங்களுகெதிராக அதையே தான் முடிந்த அளவு செய்கிறோம்(பலரிடம் பேச்சு வாங்கினாலும்).

தமிழனுக்கு விடிவு தான் முக்கியமே தவிர யாரால் என்பது முக்கியமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழனுக்கு விடிவு தான் முக்கியமே தவிர யாரால் என்பது முக்கியமல்ல."

வாஸ்தவம்தான் ஆனால் இந்தியாவை நம்பு என யாராவது கூறினால் கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகில் சொறிந்துவிடு எனக்கூறுவதுபோல் இருக்குது. செங்கல்பட்டு முகாமில் இருநாட்களுக்கு முன்பு நடந்ததை இந்தியாவின் அன்பர்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கு. தமிழர்க்கு கண்ணியமான தீர்வினை இந்தியா ஏற்படுத்தித் தரவிருப்பமிருந்திருந்தால் முப்பது வருடங்களை அவர்கள் வீணடித்திருக்க வேண்டியதில்லை. முன்னை நாள் அமெரிக்க தூதரக அதிகாரியொருவர் கேட்டிருந்தார் எந்தவொரு இனக்குழுமமும் கூறிப்பெருமைப்படாத ஒரு விடையமாக, நீங்கள் ஏன் "இலங்கைத்தமிழர் என பெருமைபேசுகிறீர்கள" என. இதே கேள்வியினை இந்தியா கேட்காது காரணம் அக்கேள்வியே தம்மைச் சிறுமைப்படுத்திவிடும் என்பதால் வன்மத்துடன் எமை அழிக்க நினைக்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டார்கள். ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழர் விடுதலை எவ்வளவு முக்கியமோ, அதேயளவு முக்கியம் தனது வழித்தோன்றல்கட்கு "இந்தியா தமிழர் விரோததேசம்" எனக்கூறி வளர்ப்பது.

உரத்துக் கூறிடு "இந்தியா தமிழர் விரோததேசம்"

இதுதான் எனது நிலைப்பாடும், இந்தியாவை நம்புவதை விட சீனாவை நம்பலாம், அவன் எமக்கு உதவி செய்யாவிட்டாலும் இந்தியாவுக்கு உபத்திரம் கொடுப்பான்,

பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது இந்தியா 50000 மக்களை கொன்று பாவம் செய்து இருக்கிறது, இந்தியா நிச்சயம் மரணம் அடைய வேண்டும். இந்தியாவின் மரணத்தின் மூலம் புதிய நாடுகள் பிறக்கும். இது எனது ஆசையாக இருந்தாலும் வேத இப்படி கூறுகிறது.

ஆபிரகாமின் முறையான மனைவிக்கு பிள்ளை பிறந்தவுடன், ஆபிரகாமுக்கும் அடிமை பெண்ணுக்கும் பிள்ளையாக பிறந்த ஈசாத்தையும் அவரது தாயையும் அவரது உறவினர்களையும், அபிரகாமும் அவரது இனத்தவரும் பாலவனத்துக்கு துரத்தி விடுகி்றார்கள், அப்போது அங்கே கூறப்படுகிறது இப்பொது துரத்தபடும் இவர்கள் எப்போதும் உங்களுக்கு எதிரான குடிசைகளையே அமைப்பார்கள் என்று,

அவர்கதான் முஸ்லீம்கள் இப்பொது நடப்பது என்ன?

அதே போண்று இந்தியா எமது மக்கள் 50000 பேரை கொண்ற பாவ செயலுக்காக ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இந்தியாவிற்கு எதிரான குடிசைகள் உருவாகி விட்டன.

Edited by சித்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பிரதேச அரசியல் சிக்கல்களும் வாய்ப்புகளும் பற்றி விரிவாகவும் வெளிப்படையாகவும் நாகரீகமாகவும் விவாதிப்பது அவசியமானது. அவதூறு பிதற்றுவதைவிட கடல் வற்றி தமிழர்கள் கருவாடு தின்னலாம் என்கிற விவாதங்கள் மேலானவை. விவாதத்தில் கலந்து கொள்கிறவகள் இந்திய உறவு பற்றி அமரர் பாலசிங்கம் நடேசன் உட்பட போராளிகள் தெருவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் கருத்துரைப்பது பயனுள்ளது. ஈழம் இந்தியாவின் இஸ்ரவேலாக இருக்கும் என்று கூட சொல்லப் பட்டுள்ளதே. இவற்றையும் விவாதத்தில் சேர்த்துக் கொள்வது பயனுள்ளது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய ஜஸ்ரின், சித்தன்,

இங்கு எங்கள் சொந்த தேவை விருப்பு வெறுப்புகளில் நாங்கள் விவாதிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைபும் நாடு கடந்த அரசு/ ஏனைய புலம் பெயர் அமைப்புகள் தமக்குள் தொடர்பு கொள்ளாமலும் விவாதிக்காமலும் இருக்கிற சூனியமான சூழலில் கவலை தருகிறது. இன்றுவரை தோல்வியின்பின்னர் சகல தரப்புகளையும் கூட்டி ஒரு மாநாட்டு அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்பது இரு சாராருக்கும் தோன்றாமல் போயிற்று. நான் 1996ல் விடுதலைப்புலிகள் புலனாய்வுத் துறைக்கூடாக கேட்டுக்கொண்டதற்க்கு இணங்க இந்தியா ஈழம் இரு தரப்பிடமும் வெளிப்படையாகவே நடுவு நிற்பேன் இருதரப்புக்கும் யுத்தம் வந்தால் சொல்லிவிட்டு ஈழத் தமிழர் பக்கம் சாய்வேன் என தெரிவித்துவிட்டு அஞ்சல் காரனாக செயல் பட்டேன். பதில்களைப் பெறுவதில் இருந்த சிரமங்களால் நிரந்தரமாக செயல்பட மலையக தலைவர் சந்திர சேகரத்தை பரிந்துரைத்தேன். மேற்க்கு நாடுகளிலும் மட்டுப்பட்ட அளவில் பணிபுரிந்தேன். ஆனால் இராஜதந்திர பணிகளுக்கான வெளி உருவாக்குவதே சிக்கலாய் இருந்தது. இந்த அனுபவங்கள் தொடர்பாகவும் இது தொடர்பாகஎனக்கும் 1996 - 2006 காலக்கட்டத்தில் திரு யாழ்வேந்தனுக்கும் எனக்கும் மற்றும் திரு சூசைக்கும் எனக்கும், திரு நிருபம் சென்னுக்கும் எனக்கும் இடையில் இடம்பெற நீண்ட உரையாடல் பற்றியும் நிருபாமாராவுடனான சந்திப்புப்பற்றியும் புத்தகம் எழுத இருக்கிறேன். இந்தியா தெரிவு என்ற கருத்தை திரு.நடேசன் உட்பட எல்ல தலைவர்களும் அவ்வப்போது சொல்லியிருக்கிறார்கள்.முக்கிய தலைவர் ஒருவர் இந்தியாவின் இஸ்ரேலாக இருக்க விரும்பம் தெரிவித்ததாக அருட்தந்தை கஸ்பர் எழுதியிருக்கிறார். ***

சித்தன் கோபப்படுவதில் பிர்யோசனமில்லை. இன்று ஈழத்தில் குறிப்பாக வட ஈழத்தில் குறிப்பாக வட ஈழத்தில் தொழில் ஆற்றல் கருவளம் உள்ல பருவத்து மக்கள் அருகியுள்ளனர். சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளே கட்டுமானங்களுக்காக ஆயிரக் கணக்கில் சிங்கள தொழிலாளர்களைக் கொண்டுவந்தார்கள் அல்லவா? மலையகத்தில் uder employment சூழல் பரவலாக இருந்தாலும் வடக்கில் வந்து தொழில்செய்யுமளவுக்கு வேலை இன்மையின் அழுத்தம் குறைவு. இந்த நிலையில் தமிழக தொண்டர்களதும் தொழிலாளர்களதும் உழைப்பு திரட்டப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைபாடு. இவற்றைஎல்லாம் கருத்தில் கொண்டே சீனாவா இந்தியாவா என்றால் என் தெரிவு இந்தியா என்று சொன்னேன். இந்தியாவுடன் உறவின் மூலம் மட்டுமே இன்றைய நிலையில் களத்தில் உள்ளவர்கள் தமிழ் நாட்டு ஆதரவின் கனிகளைப் பறிக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். தற்கொலைப் படை இருக்கும் வரைக்கும் நீயும் தலிபாந்தான் என மேற்க்கு நாடுகளும் அமரர் இராஜீவ் காந்தி வளக்குத் தொடர்பாக தலைவர்கள் சரணடைய முன்வந்தால் மன்னிப்பழித்து உறவுகளைச் சகசமாக்கலாம் என்றும் இந்தியாவும் உறுதியாக தெரிவிது விட்டது. அமரிக்க மைப்புகளின் அழுத்தம் காரணமாக போராளிகள் சமரசம் செய்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் திருமதி கில்லாரி கிளிண்டன் பயங்கரவாதம் பற்றறிய 9/11 கோட்பாடை reinterpret செய்தார். போரின் இறுதியில் 3ம் தரபிடம் சரணடையுமாறு அமரிக்கா கேட்டபோது ஆச்சரியமும் நம்பிக்கையும் ஏற்ப்பட்டது. எனினும் வாய்ப்புகள் நழுவிப்போனது. அமரர் பலசிங்கத்துக்குப் பிறகு அமரிக்க அமைப்பினர் மட்டுமே சரியான இராஜதந்திர அணுகு முறையை கொண்டிருந்தார்கள். போராட்டம் அரசியல் நிலைபாடு தொடர்பாக களத்தின் நிலைபாடுகளில் இருந்து மட்டுமே ஆரம்பிக்க விரும்புகிறேன். திரு சித்தன் இது எனது நிலைபாடு. உங்கள் நிலைபாடு வேறுபடுவது ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுத்தால் மகிழ்வேன். சித்தன் நீங்கள் என்னை இழிவுபடுத்தும் வார்த்தைகளை தேடித் தொகுக்கவில்லை என்பதற்க்காக நன்றி கூறுகிறேன்

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் உங்கள் பதிவில் இல்லை. நீங்கள் மட்டுமல்ல, இந்தியாவின் காலில் விழு என்று சொல்லும் யாரிடமும் நாம் இந்தக் கேள்விகளைக் கேட்டால் பதில் கிடைப்பதில்லை. காரணம் தொப்பூள் கொடி உறவு என்னும் சென்டிமென்டல் விளக்கம் மட்டுமே இப்போதைக்கு எஞ்சியிருக்கிறது. இந்தியன் கொடுத்த ஷெல்லில் அடிபட்டுச் செத்துப் போனவனின் மனைவி பிள்ளைகளிடம் போய் இந்த சென்டிமென்ட் எல்லாம் பேச முடியாது. தலையச் சீவி விடுவார்கள். ஆனால் உங்கள் பதில் இல்லாத மழுப்பல் பதிவிலும் சில விஷயங்கள் கவனத்திலெடுக்கப் பட வேண்டியிருக்கு..

1. புலம் பெயர் அமைப்பினரும் சிறி லங்காவிலிருக்கும் நடவடிக்கையாளர்களும் கலந்து பேச வேண்டுமென்பது உண்மையான கருத்து.

2.இந்தியாவின் இஸ்ரேலாக இருக்க விருப்பம் என்று சொன்னவர் இஸ்ரேல்-அமெரிக்க உறவின் பரிமாணத்தை ஆழமாக விளங்கிக் கொண்ட பிறகு அப்படிச் சொல்லியிருக்கிறார். இஸ்ரேல் அமெரிக்காவின் அடிமையல்ல, அது போல அமெரிக்காவுக்கும் இஸ்ரேலின் தேவை இன்றியமையாதது..எப்பவாவது இந்த உறவு தலை கீழாக மாறியதுண்டா? 70 களில் சவூதி எண்ணையை வேண்டி அமெரிக்கா இஸ்ரேலை பகைக்க முயற்சித்த கதையும் இஸ்ரேல் எப்படி அமெரிக்காவை மீள வழிக்குக் கொண்டு வந்தது என்ற கதையும் அரசியல் விற்பன்னரான உங்களுக்கு தெரிந்திருக்கும்.அதே அணுகு முறை தான் இப்போது இந்தியா நோக்கிய தமிழர் அணுகு முறையாக இருக்க வேணும்.

3. லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடத்திற்கே போய் வாழ இயலாமல் இருக்க, நீங்கள் தமிழகத்திலிருந்து தொழிலாளர் இறக்குமதி செய்து இந்தியப் பொருளாதாரத்திற்கு முண்டு கொடுப்பது பற்றிப் பேசுகிறீர்கள்..எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்?? தமிழக தேர்தல் முடிவுகளின் படி, 70 வீதமான தமிழக தமிழர்களுக்கு ஈழத்தமிழர்கள் இப்படி அள்ளு கொள்ளையாக இறக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கவில்லை..அல்லது தெரிந்திருந்தும் அது முக்கியமாகப் படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் தமிழகத் தமிழர்களின் பிரச்சினைகள் வேறு பட்டவை, எங்கள் வாழ்வுக்காக அவர்கள் தங்கள் நிம்மதியான வாழ்வை இழக்க விரும்பவில்லை, இனியும் விரும்புவார்கள் என எதிர்ப் பார்ப்பது மிகை. இது குற்றச் சாட்டல்ல, ஒரு நிரூபிக்கப் பட்ட தரவு. மேலும், 62 மில்லியன் தமிழக தமிழர்கள் ஏன் பல நூறு தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையால் கொல்லப் பட்ட பிறகும், மத்திய அரசினூடாக சிறிலங்காவைத் தண்டிக்க வழியற்று இருக்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். அதற்கான பதில் தான் ஏன் அவர்களால் ஈழவர்களுக்கு எதுவும் செய்ய இயலாது போனது என்ற கேள்விக்கான பதிலும்!

4. ராஜீவைக் கொன்றதால் ஈழத் தமிழர் எதிரியானார்கள், தனி ஈழ ஆதரவு குறைந்து போயிற்றென்று மீண்டும் மீண்டும் சொல்லும் உங்களுக்கு இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய தெளிவு இருக்கிறதா என்று சந்தேகம் தான் வருகிறது. உடைந்து விடுமோ என்று ஊசலாடும் நெல்லிக் காய் மூட்டை போல இருக்கிறது இந்திய "ஒருமைப்பாடு". ஒரு மானிலத்தை இரண்டாய்ப் பிரிக்கவே நடுங்கும் கையாலாகாத மத்திய அரசும், இராணுவம் விட்டு விட்டு வந்தால் தனி நாட்டுப் பிரகடனம் செய்யக் காத்திருக்கும் கிழக்கு மானிலங்களும் தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிநாதங்கள். இப்படியிருக்க, ராஜிவ் செத்திருக்கா விட்டால் இந்தியா தமிழர் பக்கம் என்று நீங்கள் நம்புகிறீர்கள்??

5. நீங்கள் குறிப்பிடும் சித்தனின் கோபம் என்பது வெறுமனே கோபம் அல்ல. இது ஒரு சமூகம் இன்னொரு தேசத்தைப் பற்றி விளங்கிக் கொண்ட உண்மை. இந்த உண்மை செயலாக மாற வேண்டியது அவசியம். ராஜதந்திரம், அரசியல், சாணக்கியம் இவையெல்லாம் ஒரு எல்லையோடு தான், என் தாயை, மனைவியை வன்புணர்ந்தவனோடு நான் பேசும் சமாதானம் ராஜதந்திரமோ சாணக்கியமோ அல்ல..அதற்கு தமிழில் வேறு பெயர்கள் உண்டு, இணையவன் வெட்டி விடுவார் நான் எழுதப் போவதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரினின் கூற்று நூற்றுக்கு நூறு சரியானதே. இன்னுமொருவிடையம் இது சித்தனின் கோவம் மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழனினதும் கோவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் ஜஸ்ரின், “மீண்டும் மீண்டும் சொல்லும் உங்களுக்கு இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய தெளிவு இருக்கிறதா என்று சந்தேகம் தான் வருகிறது. -ஜஸ்ரின்”

வாதத்துக்கு வலுவானதென்று நீங்கள் நினைப்பதையெல்லாம் நான் சொலுவதாகவும் நம்புவதாகவும் எழுதியிருக்கிறீர்கள். அது நியாயமில்லை. இந்தியா வெளியுறவுக் கொள்கைகள் உட்பட உலகமும் அதன் சமூக அரசிலும் பொருளாதரமும் தொடர்ந்து மாறியும் மாற்றப் பட்டும் வருகிறது. கட்டுபடியான விலை கொடுத்தே அரசியல் உறவுகள்மட்டுமன்றி குடும்ப உறவுகளும் கொள்முதல் செய்யப் படுகின்றன. உரிய விலையும் பொருத்தமான சூழல்களும் அமைக்கப் படும்போது புதிய உறவுகள் வாய்க்கிற சூழல் அமையும் என்றே நான் எப்போதும் கருதுகின்றேன். எந்த முகாமில் இருந்தேனும் உறவுகளைக் கொள்முதல் செய்யாமல் பிழைக்க வாய்ப்பில்லை. அதுவும் ஒரு சிறு நகரின் குடித் தொகை கூட இல்லாத ஒரூ இனத்தால் நிச்சியமாக வெற்றீ பெற முடியாது. இனங்கள் துப்பாக்கிகளால் மட்டும் தப்பிப் பிழைக்கவில்லை. அரசியல் பொருளாதார உறவுகள் நாட்டின் அடிப்படையாகும். சோவியத் யூனியனை அணுக்குண்டுகள்கூட காப்பாற்ற முடியவில்லை.

நீங்கள் சொல்லுவதுசரிதான். உண்மையை ஒத்துக்கொள்கிறேன். எனக்கு இந்திய வெளியுறவுக் கொள்கைபற்றிய தெளிவு இல்லை என்று நீங்கள் சொல்லுவது சரிதான். நீங்கள் இந்தியாவின் இஸ்ரேலாக ஈழம் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிகிறது. இஸ்ரவேலுக்கு அமரிக்கா தவிர வேறு தெரிவில்லை. மேலும் அமரிக்காவிலும் மேற்கிலும் யூதர்களுக்கிருக்கிற பொருளாதார ரீதியான காட்டுப்பாடினாலும் இறைவனால் வாக்களிக்கப் பட்ட பூமி என்கிற மதகலாச்சார ரீதியான நம்பிக்கைகளாலும் 1944 பேரளிவின் அனுதாபம் ரீதியாகவும் இஸ்ரவேல் அமரிக்காவிம் மீதும் மேற்குலகின்மீதும் செல்வாக்குச் செலுத்த முடிகிறது. இஸ்ரவேலுக்கு அமரிக்கா தவிர தெரிவும் இல்லை. அமரிக்கா கைவிட்டால் இஸ்ரவேலிலும் நீண்ட கால அடிப்படையில் ஒரு முள்ளிவாய்க்கால் தான் ஏற்படும். அமரிக்கா கைவிட்டால் அவர்கள் ஆயுதங்களால் அவர்களை காப்பாற்றவும் முடியாது. மேலும் ஈழத் தமிழர் மேற்குலகிலும் இந்தியாவிலும் புலக்குடிகளையும் சிறு முதலீடுகளையும் கொண்டிருப்பதால் ஒருபோதும் இஸ்ரவேலுக்கு சமாந்திரமானதல்ல. எமக்கு இந்தியாவில் தமிழ் நாடு தவிர கலாச்சார அம்சங்கள் ஒருசில சிறு முதலீடுகள் தவிர யுஎஸ் இஸ்ரவேல் உறவுக்குச் சமாந்திரமான வேறு பெரிய பிடிகள் இல்லை என்றுதான் நினைக்கிறேன். (இருந்தால் எழுதுங்கள்) தவறாயின் திருத்துங்கள்.

ஈழத் தமிழரும் யூதரும் சமன் என்கிற அபத்த வாதம் எங்க்கள் அரசியல்ல் யுத்த தந்திரங்களை கடந்த காலத்தில் பாதித்திருக்கிறது. இப்பவும் சிலர் அப்படிச் சொல்ல ஆரம்பிதிருக்கிறார்கள். இதனால் என் தாய் நாடு இஸ்ரேலாக இருக்கிறது சாத்தியமும் இல்லை. அதில் எனக்குச் சம்மதமுமில்லை. நான் சமத்துவமான உறவு பற்றியே பேசி வருகிறேன், ஒருவேளை இவற்றுக்கு எனது தெளிவின்மை காரணமாக அமையலாம்.

ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரு விடயத்தில் திறமை இருக்கும்பல்லவ? எல்லா விடயத்திலும் ஒருவன் புதிசாலியாகவோ அல்லது முட்டாளாகவோ இருக்கிறதில்லை அல்லவா. அந்த வகையில் எனக்கும்கூட தெரிந்த ஒரு விடயம் இருக்கு என்பதை அவை அடக்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன். 2006 வரை ஒவ்வொரு வருடமும் 6 மாதங்களுக்குக் குறையாமல் ஈழப் பகுதிகளில்தான் வாழ்ந்திருக்கிறேன். அது களத்தின் சமூக பொருளாதார கலாச்சார நிலவரம் பற்றியதாகும். களம் பற்றிய என்னுடைய முழு ஆய்வுகளையும் அனுபவத்தையும் வைத்து அடித்துச் சொல்கிறேன் ஈழத்தில் மிக மோசமான உழைப்பாளர் பற்றாக் குறை இருக்கு. இதை வைத்துத்தான் சிங்கள குடியேற்றங்களுக்கு உத்தியாக கொள்ளப் போகிறார்கள். கிழக்கு மாகாணத்திலும் வன்னியிலும் பெரும் நீர்பாசன திட்டங்கள் அமைக்கப் பட்டபோது மேற்படி பகுதிகளில் உழைப்பாளர் பற்றாக் குறை இருந்தது. யாழ்ப்பானத்துக்கு வெளியே under employment வாழ்வுதான் பரவலாக இருந்தது. கட்டுமான பணிகலுக்கு ஆழணிப் பற்றாக்குறை புலப் பெயர்வுக்கு முன்னமே இருந்தது. இப்ப நிலமை மோசம்.அங்கு கொண்டுவரப் பட்ட சிங்கள தொழிலாளர்களைக் கொண்டுதான் முதல் சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப் பட்டது. 1958 கலவரம் ஆரம்பித்தபோது கிழி நொச்சியில் கணிசமான பகுதி சிங்களவரின் கையில் இருந்தது. ரேடியோ மணியம் (பிறந்தது நெடுந்தீவு திருமணம் உடையாகட்டு) தலைமையிலான குழுவினர்தான் 1988ல் கிழிநொச்சியில் இருந்து சிங்களவர்கள் அகலக் காரனமாய் இருந்தார்கள். இது புலப் பெயர்வுக்கு முன்னய நிலை. யாழில் அனுமதிக்கப் படாத என்னுடைய வேறு ஒரு கட்டுரையில் இருந்து ஒருபகுதியை இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.

”மொத்த ஈழப் பிரதேசமும் குறிப்பாக வடபகுதி வேலையாட்கள் பற்றாக் குறை உள்ள பகுதிகளாக உள்ளது. வடபபகுதியில் இருந்து உழைக்கும் வல்லமையும் கருவளமும் உள்ள இளைய தலைமுறை பெருமளவில் வெளியேறிவிட்டது. இந்த ஆபத்தை சமாதான கால அபிவிருத்திப் பணிகளின்போதுதான் முதன்முதலாக உணரக் கூடியதாக இருந்தது. போராளிகளின் விடுதலைப் பிரதேசத்துக்குள் வீதி அமைப்பதில் இருந்து பல்வேறு கட்டுமான தொழில் நுட்ப்ப அபிவிருத்திப் பணிகளுக்காக பல்லாயிரம் சிங்கள தொழிலாளர்கள் அனுமதிக்கப் பட்டனர். போராளிகள் தங்கள் முகாம் வேலைகளுக்குக்கூட சிங்கள பணியாளர்களை ஈடுபடுத்தியமை அதிற்ச்சி தந்தது. ஒரு இரவில் செல்வினை சந்திக்க வட்டக்கச்சிக்கு அருகில் இருந்த பொருண்மிய முகாமுக்கு போய் இருளில் வழிதவறி வெளிச்சம் தெரிந்த ஒரு கொட்டகைக்குப் போனபோது உண்மையிலேயே துணுக்குற்றுப்போனேன். அந்தக் கொட்டகையில் தனிய சிங்கள தொழிலாளர்கள் மட்டும் தச்சு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதன் பின்னர் ஊக்குவிப்பு (incentive) அடிப்படையில் மலையகத்திலும் கிழக்கிலும் உள்ல உபரி தொழிலாளர்களை வடக்குக்கு கொண்டுவரும்படி போராளிகளிடம் கோரினேன். தமிழகத்தில் இருந்தும்கூட தொழில் நுட்ப்பப் பணியாளர்கள் அழைத்துவரப்படலாம். என்பதை வற்புறுத்தினேன். மேலுக் சில வீதிகள் இராணுவ படையெடுப்புக்கு அவசியமானவை என்பதால் அதனை மீழக் தாமதிக்கலாம் அல்லது கைவிடலாம் என்றும் கோரினேன். ஆனால் அவர்களது திட்டமிடல் நிர்மாணப் பணிகளின் வருமானத்தின்மூலம் போருக்கு வேண்டிய பணத்தை திரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை.

ஆனால் போராளிகளின் காலத்தில் அன்று சிங்கள தொழிலாளர்கள் வடக்கிற்க்கு வருபோது இராணுவ ஒற்றர்களும் பின்னர் ஆழ ஊடுருவித்தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப் படக்கூடியவர்களும் வருவது தொடர்பான ஆபத்திருந்தபோதும் தொழிலாளர்கள் குடியேறிவிடக்கூடிய ஆபத்து இருக்கவில்லை. இன்று அந்த ஆபத்து உள்ளது.

போராளிகளின் நாட்க்களில் திருப்பி அனுப்பலாம் என்கிற உத்தரவாதம் இருந்தது. இன்று இல்லை. சில வருடங்கள் வாழ்ந்துவிட்ட தொழிலாளர்களை சரவதேச சமூகமே ஒத்துக்கொள்ளாது.

இன்று சிங்களதொழிலாளர்களும் சீனத் தொழிளாலர்களும் பெருமளவில் உள்நுளையும் போது அவர்களை வெளியேற்ற எங்களுக்கு எந்த வல்லமையும் இல்லை. வடகிழக்கில் எங்கள் ஒட்டு மொத்த குடித்தொகை நம்பவியலாத அளவுக்குச் சுருங்கிப்போனது. வெளி நாடுகளில் வாழும் பலருக்கு யாழ்ப்பாணம் கொழும்புக்கு வெளியில் உள்ள நிலமைகள் பற்றி அதிகம் அறிவும் அனுபவமும் இல்லை. அதிகம் வயோதிபர்களையும் உடல் பாதிக்கப் பட்டவர்களையும் சிறுவர்களையும் கொண்ட உழைக்கும் கருவளம் கொண்ட பராயத்தினர் அருகிய சமூகமாக சிதைந்துபோனது. இந்தியா- தமிழகத்தின் உதவி கிடைத்தாலன்றி புனர் நிர்மாணப் பணிகளோடு தொழில்வாரி சிங்கள குடியேற்றங்கள் தவிர்க்க முடியாது போய்விடும்”

எனவே “லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடத்திற்கே போய் வாழ இயலாமல் இருக்க, நீங்கள் தமிழகத்திலிருந்து தொழிலாளர் இறக்குமதி செய்து இந்தியப் பொருளாதாரத்திற்கு முண்டு கொடுப்பது பற்றிப் பேசுகிறீர்கள்..எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்??” என்று நீங்கள் சொல்வது ஆச்சரியமாய் இருக்குது. உங்களுக்கு என்னைவிட அதிகம் கள அனுபவம் இருந்து தரவுகளும் இருந்தால் விவாதத்தை தொடருங்கள்.

இது எமது மக்களின் தலைவிதி பற்றிய விவாதம் என்பதால் வீம்புக்கு தொடரமாட்டீர்கள் என நம்புகிறேன். முன்னைப்போல் இனி அடிக்கடி யாழ்க்களத்துக்கு வருவது சாத்தியமில்லை. பயனுள்ளதாக விவாதம் தொடர்ந்தால் மட்டுமே வருவேன்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள கவிஞர், என் முன்னைய பதிவில் குறிப்பிட்ட உதாரணங்கள் கருத்துகள் யாவும் என் இரண்டு கேள்விகளின் தொடர்ச்சியே. நீங்களோ, இஸ்ரேல் அமெரிக்க உறவு ஏன் இந்தியா தமிழர் உறவு போல இல்லை என்றும், தொழிலாளர் பற்றாக்குறை தான் சிங்களவர்கள் வரக் காரணம் என்றும் எழுதியிருக்கிறீர்கள்.

1. ஒரு உதாரணம் நூறு வீதம் சொல்லப் படும் கருத்துக்குப் பொருந்த வேண்டும் என எதிர் பார்ப்பது உங்களைப் போன்ற ஒரு அரசியல் விமர்சகருக்கு பொருந்தாத பண்பு. அமெரிக்காவின் இஸ்ரேல் போல இருக்க ஆசை என்று புலிகளின் பிரமுகர் சொன்ன போது அவர் முற்று முழுதாக தமிழர் நலனை இந்தியாவிடம் அடகு வைக்கும் உறவு நிலையை விரும்பவில்லை என்பதையே காட்டி நின்றார்-இதற்காகவே 70 களில் நடந்த இஸ்ரேல் அமெரிக்க உரசலை நான் எடுத்து வந்தேன்.அப்போது பிரிந்து போன அமெரிக்கர்களை தம் பக்கம் ஈர்க்க இஸ்ரேலியர்கள் ரஷ்யர்களை தங்கள் நாட்டில் அதிகம் உலவ அனுமதித்தார்கள். நான் சொல்வது எங்கள் தேவைகளுக்காக சீனர்களை நாங்கள் அனுமதிக்க வேண்டும், இதனால் இந்தியாவைப் பணிய வைக்கலாம் அல்லது இந்தியாவை இல்லாதொழிக்கலாம். மற்றபடி, நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டது போல இந்தியாவின் இஸ்ரேலாக இருக்க (ஏன், எதுவாகவும் இருக்க) எனக்கு உடன்பாடில்லை.

2. நீங்கள் குறிப்பிடுவது போல புலத்தில் வாழும் மக்களுக்கு கொழும்புக்கு வெளியே என்ன நிலை என்று தெரியாது என்ற கருத்து மிகைப் படுத்தப் பட்ட ஒன்று. எல்லோருக்கும் நீங்கள் குறிப்பிடும் பிரதேசங்களில் உறவுகளும் உடமைகளும் இருக்கும் போது அவர்கள் அங்கு சென்று வந்த உங்களை விடவும் குறைவாகத் தெரிந்திருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் மிகை. மேலும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சிங்களவர்களைக் கொண்டு வந்தோம் என்று புலிகள் உங்களிடம் சொன்னார்களா? கவிஞரே, ஒரு புள்ளி விபரமும் இல்லாமல் இப்படிப் பட்ட கருத்துக்களை அடித்துச் சொல்ல முடியாது. நான் அறிந்த வரை தனித் தனியாக தொழிலாளர்களை அமர்த்தும் செலவை விட தென்பகுதிக் கம்பனிகளிடம் ஒப்பந்தம் மூலம் பெற்றுக் கொள்ளும் சேவை மலிவாகவும் வரி அறவிடக் கூடிய வகையிலும் இருந்ததால் நிர்வாகம் சிங்களவர்களை வேலைக்கமர்த்த வேண்டி ஏற்பட்டது. பல சமயங்களில் இந்த கட்டுமான வேலைகள் அரச திணைக்களங்களால் மேற்கொள்ளப் பட்டன. வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபை (ஆர்.டி,ஏ) தான் கிளிநொச்சி வீதி செப்பனிட்டார்கள். ஒரு மதவாச்சி அரசியல் வாதியின் தலையீட்டால் வவுனியா ஆர்.டி.ஏ யின் சமயா சமய தொழிலாளர்கள் எல்லோரும் மதவாச்சி அனுராதபுர சிங்களவர்கள்-இவர்களே கிளிநொச்சி வீதியில் வேலை செய்தவர்கள். இது வவுனியாவில் கிளிநொச்சியில் தமிழ் தொழிலாளர்கள் இல்லை என்பதன் குறிகாட்டி அல்ல. அவர்கள் வேலைக்கமர்த்தப்படவில்லை என்பதே எளிமையான உண்மை!

3. வெளியுறவுகள் மாறுபவை என்கிறீர்கள். ஆம், சத்தியமான உண்மை. ஆனால் இந்த மாற்றங்கள் வெளியுறவுக் கொள்கையின் தோற்றுவாய்க் காரணங்களை ஒட்டியே மாறுபவை. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தமிழர் கோபத்தால் ஆபத்தில் சிக்கும் என பட்டவர்த்தனமாக செயலில் நாம் காட்டினால் இந்தியக் கொள்கை மாறலாம். நீங்கள் பிரேரிப்பது போல நாம் எதையும் எமக்கெனக் கேட்காது, இந்தியாவுக்கு நாம் காலாகாலமாக எந்தக் காரணமும் இன்றி விசுவாசமாக இருப்போம் என்று இருந்தால் இந்தியா மாற வேண்டிய தேவை என்ன?(தமிழக தமிழர்கள் இந்த தேசிய பாதுகாப்புச் சமன்பாட்டிலேயே இப்போது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!)

4.இறுதியாக விதண்டாவாதம் என்பது தரவுகள், உறுதியான படிப்பினைகள் இன்றித் தொடரும் சொல்லாடல் என நினைக்கிறேன். என் ஆரம்பக் கேள்விகளும் மேற்கருத்துகளும் உங்களுக்கு விதண்டாவாதமாகத் தெரிந்தால் நீங்கள் , நீங்களே ஊக்குவிக்கும் விமர்சனப் போக்கை நடைமுறையில் கடைப்பிடிப்பவரல்ல என்பதாகவே படுகிறது.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.