Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு:

தமிழரின் பலத்தை சிதைத்த மேற்குலகின் கையாலாகத்தனம்

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ் மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை. என தாய் நாடு இணைய ஏடு தனது அரசியல் களம் பகுதியில் தெரிவித்துள்ளது

help_for_us_2009.jpg

மேற்குலகின் பின்புல ஆதரவுடன் இலங்கையின் ஜனாதிபதியாக முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா- இப்போது காற்றோட்டமில்லாத அறையொன்றுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளார்.

un_india.jpg

அவரைப் பதவியில் அமர்த்துவதற்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை அள்ளி வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ குற்றம் சாட்டியிருந்தார்.

இதை இந்த நாடுகள் மறுத்துள்ள போதும்- அதை இலங்கை அரசாங்கம் பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. மேற்குலகின் செல்லப்பிள்ளையாக வளரவிருந்த மற்றொரு ஜியா- உல்- ஹக் தான், சரத் பொன்சேகா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அவரையே தூக்கி உள்ளே போட்டிருக்கிறது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம். ஆனால் அதற்கு எதிராக வாய் திறந்து கண்டனம் தெரிவிக்க முடியாதபடி இருக்கிறது மேற்குலகம். சரத் பொன்சேகா அமெரிக்க வதிவிட உரிமை பெற்ற ஒருவர். ஆனாலும் அவரை விடுதலை செய் என்று கோர முடியாமல் தவிக்கிறது அமெரிக்கா.

ஐ.நாவும் சரி- வேறெந்த நாடும் சரி அவரை விடுவிக்குமாறு கோரவில்லை. அப்படிக் கோர முடியாத வகையில்- அவரைக் கைது செய்திருக்கிறது அரசாங்கம். இராணுவத் தளபதியாக இருந்த போது அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சதி செய்தார்- ஊழல்களில் ஈடுபட்டார் என்று அவர் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீண்டு செல்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டியதில்லை. இராணுவத்தில் இருந்தபோது செய்த தவறுகள் என்பதால்- அவர்களே விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. இதனால் வெளிநாடுகள் வாயைத் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

1.JPG

இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைத்து- குட்டையக் குழப்பி வந்த சர்வதேசத்தின் முகத்தில் கரியைப் பூசுகின்ற வகையிலான இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதோ- சரத் பொன்சேகா தோல்வியுற்றதோ பெரிய விடயமல்ல. ஆனால் தமிழ்மக்களில் பெரும்பான்மையினர் தமக்கும் இந்தத் தேர்தலுக்கும் தொடர்பே இல்லை என்ற செய்தியைக் கூறியது தான் முக்கியமானது.

இது சர்வதேசத்துக்குக் கொடுக்கப்பட்ட அடி. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலகம் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை விரும்பியது. மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றால் தமது கைக்குள் நிற்கமாட்டார் தமது சொற்படி ஆடமாட்டார் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதற்கு பெரும் முயற்சிளை எடுத்தது மேற்குலகம்.

ஆனால் விடுதலைப் புலிகள் அதை விரும்பவில்லை.

ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் சமாதானம்... சமாதானம்...என்று பேசிப்பேசிக் காலத்தைக் கடத்தியே போராட்டத்தை அழித்து விடுவார் என்பது அவர்களின் கணிப்பு. எனவே சண்டைக்காரனான மகிந்தவை ஆட்சியில் ஏற்றி தமது படைபலத்தின் மூலம் மேலாதிக்கத்தை அடைந்து விடலாம் என்று கணக்குப் போட்டது விடுதலைப் புலிகள் இயக்கம்.

விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக் வேண்டும் என்று வலியுறுத்தியதை மேற்குலகத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடைசியில் ரணில் விக்கிரமசிங்க குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போது மேற்குலம், தமிழ்மக்களின் வாக்குகளைக் கணக்குப் போட்டுப் பார்ததது. இவர்கள் அத்தனை பேரும் வாக்களித்திருந்தால் நிச்சயம் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார் என்று கருதியது.

அந்த வாய்ப்பை இழக்க செய்து-தேர்தல் முடிவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட புலிகள் இயக்கத்தை தண்டிக்க முடிவு செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவிதித்தது. இந்தத் தடையின் விளைவாகப் புலிகள் இயக்கம் சமாதான முயற்சிகளில் இருந்து புறம் தள்ளப்பட்டு- அதில் நம்பிக்கையிழந்து போகும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு வகையில் நான்காவது கட்ட ஈழப்போருக்கு புலிகளை உந்தித் தள்ளியதற்கு காரணமாக இருந்தது மேற்குலகம் தான்.

புலிகள் போரின் மீது விருப்புக் கொண்டிருந்தார்களா என்பதை விட சாதானத்தின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழப்பதற்கு காரணமாக இருந்தது மேற்குலகமே.

இன்று அதே மேற்குலகம் விரும்பிய சரத் பொன்சேகாவை மகிந்த ராஜபக்ஸ தோற்கடித்திருக்கிறார்.

அதுவும் முன்னரைப் போன்று இல்லாமல் 18 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தோல்வி. இதிலிருந்து மேற்குலகுக்கு இரண்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன.

முதலாவது- தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்ற எந்த வேட்பாளரையும் சிங்கள மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பது.

அடுத்தது- கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல என்பது.

2005 ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருந்தால் கூட ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால் இந்தமுறை தமிழ்மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்குப் புலிகள் இருக்கவில்லை. ஆனாலும் பெருமளவிலான தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பைப் புறக்கணித்தார்கள். ஏனென்றால் இது சிங்களதேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவு செய்தற்கான தேர்தலே என்ற கருத்தில் இருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை.

இந்தக் கருத்து இப்போதைய விட, 2005 இல் மிகவும் வலுவானதாக இருந்ததை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. எனவே தமிழ் மக்களிடம் புலிகள் வாக்களிப்பைப் புறக்கணக்குமாறு கோரா-திருந்தாலும் கூட- ரணிலுக்கு அவர்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

இது மேற்குலகுக்கு இப்போது ஓரளவுக்கேனும் புரிந்திருக்கும். அதாவது 2005 ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ்மக்கள் புறக்கணித்த விவகாரத்துக்கு புலிகள் மட்டும் பொறுப்பாளிகள் அல்ல.

அடுத்து இந்தமுறை சரத் பொன்சேகாவின் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற- அவர்களுடன் கூட்டு வைக்கத் தயாராக இருக்கின்ற-எவரையும் ஆட்சியில் அமர்த்துவதற்கு சிங்கள மக்கள் தயாராக இல்லை.

இது இப்போது தெளிவாகப் புரிந்திருக்கிறது. இதுபோலவே கடந்த முறை ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கப் போவதாக சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருந்தால் நிச்சயம் சிங்களப் பேரினவாதம் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கும்.

அது ரணிலுக்குத் தென்னிலங்கையில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து விட்;டிருக்கும். வடக்கு,கிழக்கில் ரணிலுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப் போவதாக உணர்ந்திருந்தால் சிங்கள மக்கள் மகிந்தவின் பக்கம் முற்றாகச் சாய்ந்திருப்பர்.

இந்தக் கட்டத்தில் ரணிலின் வெற்றி ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது. தாம் விரும்பியது போன்று ரணில் ஜனாதிபதியாகவில்லையே என்ற ஆத்திரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அப்போது எடுத்த தான் தோன்றித்தனமான முடிவு தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டிருப்பதை இப்போதாவது உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம்.

அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ்மக்களையே பெரிதும் பாதித்தது.

இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை.

தாய்நாடு பெப்ரவரி 26, 2010

http://www.infotamil.ch/ta/view.php?2b44OS84a4aTd4O34b3EEQM2e22U0AKecd2YcoCce0de0MqEce0dcYJv2cd0MgmA20

Edited by sam.s

இந்த கூத்துக்களின் பின்னணியில் கீழ்தர இந்திய ராஜதந்திரம் உள்ளது என்பதை மேற்குலகம் அறிந்து வைத்துள்ளது. அதன் விளைவுகளை இந்தியா அனுபவிக்கும் நேரம் வரும் போது, இந்தியா மீளமுடியாத பாதாளத்தில் விழுந்து போயிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கூத்துக்களின் பின்னணியில் கீழ்தர இந்திய ராஜதந்திரம் உள்ளது என்பதை மேற்குலகம் அறிந்து வைத்துள்ளது. அதன் விளைவுகளை இந்தியா அனுபவிக்கும் நேரம் வரும் போது, இந்தியா மீளமுடியாத பாதாளத்தில் விழுந்து போயிருக்கும்.

இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு, சீனாவுக்கு எதிராக இந்தியாவின் ஆதரவு மேற்க்கு நாடுகளுக்கு தேவை, ஆகவே இந்தியாவை பகைக்க மாட்டார்கள். நாம் இந்தியாவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் மேல் நாடுகளுக்கு அழுத்தம், கொடுப்பதினால் இந்தியாவினூடாக எமக்கு வேண்டியதை சாதிக்கலாம். இந்தியாவுக்கு, எமது இடது கையை கொடுக்கவும் தயங்க கூடாது. :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு, சீனாவுக்கு எதிராக இந்தியாவின் ஆதரவு மேற்க்கு நாடுகளுக்கு தேவை, ஆகவே இந்தியாவை பகைக்க மாட்டார்கள். நாம் இந்தியாவை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் மேல் நாடுகளுக்கு அழுத்தம், கொடுப்பதினால் இந்தியாவினூடாக எமக்கு வேண்டியதை சாதிக்கலாம். இந்தியாவுக்கு, எமது இடது கையை கொடுக்கவும் தயங்க கூடாது. :huh:

ராஜீவ் காந்திக்கும் பாராட்டு விழா நடத்தினால் நாம் நமக்கு வேண்டியதை சாதிக்கலாம் :huh::D:lol:

Edited by raja.m

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜீவ் காந்திக்கும் பாராட்டு விழா நடத்தினால் நாம் நமக்கு வேண்டியதை சாதிக்கலாம் :D:D:D

அப்ப ராஜீவ் காந்திக்கு ஒரு திவசம் ஒன்று செய்வமோ? :huh::huh::D

இந்தியாவை நம்ப வச்சு கழுத்து அறுக்க வேண்டும் அதைதான் இப்ப கூட்டமைப்பு செய்கிறது. :lol::)

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சிங்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னது (உத்தியோகபூர்வமாகச் சொல்லவில்லை என நினைக்கிறேன்) அவர்கள் மீதான தடை வருவதற்கு ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அது மட்டுமே காரணம் அன்று. அமெரிக்க 1998 இலேயே தடையைக் கொண்டுவந்து விட்டதே..!

தடை எல்லாவற்றுக்கும் காரணம் சிங்களவன் எப்படி காய் நகர்த்தினான் என்பதுதான். காரியம் ஆகும்வரையில் இந்தியாவின் துணையுடன் மேற்குலகுக்கு நல்ல அல்வா குடுத்த சிங்களவன் இப்ப ஒரேயடியாக சீனா, ஈரான் எண்டு போய்ட்டான். ஆனால் இதே சிங்களவன் திரும்பவும் மேற்குலகத்தை வளைக்க முடியாது எண்டில்லை. இப்போது மீளமுடியாத பாதாளத்துக்குள் சிங்களவனைத் தள்ளவில்லை எண்டால் திரும்ப அவன் நினைத்தால் அணி மாறலாம். ஒரு ஆட்சி மாற்றமே போதும். :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு இருக்கிற வல்லமை, அதாவது எல்லா நாடுகளையும் பந்தம் பிடிக்கும் வல்லமை, நண்பன் மாதிரி நடிக்கும் குணம், நம்ப வைத்து கழுத்தறுக்கும் குணம், இது ராஜதந்திரம், இவைகளை நாமும் செய்யவேண்டும். நாடுகடந்த அரசு, உலகதமிழ் பேரவை என்று எமக்கென்று உருவாகிற அமைப்புகளை பலபடுத்தி தமிழர் ஒன்றாக இணைந்து வேலை செய்ய வேண்டும். ஒவொரு தமிழரும் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கு பற்றி ஒவொரு நாளும் ஒரு சிறிய பங்களிபாவது செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி குவீன், அதெப்படி பிச்சைக்கார கையாலாகாத இந்தியா வல்லரசாக போகிறது? 60 மில்லியன் பிரெஞ்சுக்காரர் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தில் இருக்கிறார்கள், 160 மில்லியன் ரசியன் இருக்கிறார்கள், சீனா இருக்கிறது ஆனால் இந்த குப்பை கூட்டம் மட்டும் இல்லை! ஸ்ரீ பார்சி காந்தி குடும்பத்தின் கைப்பொம்மை மனமோக சிங்க மேற்குலக நாட்டுத்தலைவர்களின் பின் பிச்சை கேட்டு அலைந்து திரிகிறார்!

ஒரு நாடு வரப்போகிறதென்றால் அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ரசிய, சீனா அமெரிக்க அடங்கிய கவுன்சிலின் அனுசரணை வேண்டும். ஸ்ரீ லங்கா காரன் 70000 தமிழரை சில மாதங்களில் கொன்றுவிட்டு வெளிநாட்டு தமிழரின் பிரஷர் தாங்காமல் சீனா, ரசியாவை ஆயுத கொள்வனவெனும் வழியால் லஞ்சம் கொடுத்து மடக்கி வைத்திருக்கிறான்.

ஆனால் மற்றைய மூன்று நாடுகளிலும் இருக்கும் வெளிநாட்டு தமிழரின் சொத்தே பிச்சைகார ஸ்ரீ லங்காவின் சொத்திலும் கூட!!!! கொஞ்சம் பொறுங்கோ சகோதரி.... தமிழ் ஈழத்திற்கு மே 16 பின் தான் உலக அரசியலில் சாதகமாக நிலைமாறியது. இரண்டு இலட்சங்களின் உயிர் ஆசை தமிழ் ஈழம். அது ஒரு இடமும் ஓடிப்போய்விடவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன மேற்குலகின் கையாலாகத்தனம்? இவையள் எதோ பெரிசா ஸ்ரீ லங்காவிலும், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், இந்தோனேசியாவிலும், சீனாவிலும் தமிழரை படிக்க உரிமை கொடுத்து, வாழ உரிமை கொடுத்து, வாக்கு போட உரிமை கொடுத்து, டாலரில் சம்பளம் குடுத்து, கார் குடுத்து வைச்சிருந்தவை மாதிரி!!

அது சரி, எங்களுக்கு ஓட ஜக்குவாரும், அடிக்க சிங்கள் மோல்டும், பாக்க சீடியும் தந்து வைச்சிருக்கிரவங்கள் கையாலாகதவர்கள்!!! சரி........

தமிழின தலைவராம் கொலைஞர் வாழும் தமிழ் மூத்தகுடிகளின் குடிலாம் தமிழகத்தில் இருபது வருடங்களாக ஒரு இலட்சம் ஈழத்தமிழர் அகதி முகாமில் மலவறை கூட இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மோட்டார் வண்டி ஓட்ட லைசென்ஸ் கூட எடுக்கமுடியாது. மற்றும் வெளியில் இருக்கும் ஈழத்தமிழரும் சி.பி.ஐ. , ரா, தமிழ் நாடு போலீஸ் என்று லஞ்சம் கொடுத்தே நொந்து வாழ்கிறார்கள்.

இந்த தமிழக, வந்தாரை போனோரை வாழவைக்கும் ஆனால் சொந்தகளை அகதி முகாமில் அடைத்துவைத்திருக்கும், தமிழர்களை என்னவென்று அழைக்கலாம்?

கையாலாகாத என்ற வார்த்தையை ஏற்கனவே பாவித்தாகிவிட்டது என்பதை குறிப்பிடவிரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி குவீன், அதெப்படி பிச்சைக்கார கையாலாகாத இந்தியா வல்லரசாக போகிறது? 60 மில்லியன் பிரெஞ்சுக்காரர் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தில் இருக்கிறார்கள், 160 மில்லியன் ரசியன் இருக்கிறார்கள், சீனா இருக்கிறது ஆனால் இந்த குப்பை கூட்டம் மட்டும் இல்லை! ஸ்ரீ பார்சி காந்தி குடும்பத்தின் கைப்பொம்மை மனமோக சிங்க மேற்குலக நாட்டுத்தலைவர்களின் பின் பிச்சை கேட்டு அலைந்து திரிகிறார்!

ஒரு நாடு வரப்போகிறதென்றால் அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், ரசிய, சீனா அமெரிக்க அடங்கிய கவுன்சிலின் அனுசரணை வேண்டும். ஸ்ரீ லங்கா காரன் 70000 தமிழரை சில மாதங்களில் கொன்றுவிட்டு வெளிநாட்டு தமிழரின் பிரஷர் தாங்காமல் சீனா, ரசியாவை ஆயுத கொள்வனவெனும் வழியால் லஞ்சம் கொடுத்து மடக்கி வைத்திருக்கிறான்.

ஆனால் மற்றைய மூன்று நாடுகளிலும் இருக்கும் வெளிநாட்டு தமிழரின் சொத்தே பிச்சைகார ஸ்ரீ லங்காவின் சொத்திலும் கூட!!!! கொஞ்சம் பொறுங்கோ சகோதரி.... தமிழ் ஈழத்திற்கு மே 16 பின் தான் உலக அரசியலில் சாதகமாக நிலைமாறியது. இரண்டு இலட்சங்களின் உயிர் ஆசை தமிழ் ஈழம். அது ஒரு இடமும் ஓடிப்போய்விடவில்லை.

நன்றி குளவி தங்கள் நேரத்திற்கு..

இதுதான் எனது கருத்தும்

இதில் தமிழ்நாட்டையும் நான் எம்முடன் சேர்த்துப்பார்க்கின்றேன்

எல்லாம் ஒன்று சேரும்போது இந்தி... என்பது இல்லாது போகும்

வினை விதைத்தவனுக்கு தன்னையே காப்பாற்றமுடியாதநிலைவரும்

புலிகள் சிங்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னது (உத்தியோகபூர்வமாகச் சொல்லவில்லை என நினைக்கிறேன்) அவர்கள் மீதான தடை வருவதற்கு ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அது மட்டுமே காரணம் அன்று. அமெரிக்க 1998 இலேயே தடையைக் கொண்டுவந்து விட்டதே..!

தடை எல்லாவற்றுக்கும் காரணம் சிங்களவன் எப்படி காய் நகர்த்தினான் என்பதுதான். காரியம் ஆகும்வரையில் இந்தியாவின் துணையுடன் மேற்குலகுக்கு நல்ல அல்வா குடுத்த சிங்களவன் இப்ப ஒரேயடியாக சீனா, ஈரான் எண்டு போய்ட்டான். ஆனால் இதே சிங்களவன் திரும்பவும் மேற்குலகத்தை வளைக்க முடியாது எண்டில்லை. இப்போது மீளமுடியாத பாதாளத்துக்குள் சிங்களவனைத் தள்ளவில்லை எண்டால் திரும்ப அவன் நினைத்தால் அணி மாறலாம். ஒரு ஆட்சி மாற்றமே போதும். :D

இதுக்கான மட்டுமே நான் மகிந்த மீண்டும் ஆட்ச்சிக்கு வர வேண்டும் எண்று எண்ணினேன்... நாளை தன்னை தோற்கடிக்க கூடிய எதிரிகள் எண்று யாரையும் மகிந்த விட்டு வைக்க மாட்டான் என்பது எனது நம்பிக்கை...

மகிந்தவின் முன் இருக்கும் இண்றைய சவால் அதிக ஆசனங்களுடன் பாராளுமண்றுக்கு போவது , பின்னர் கட்ச்சிகளை உடைத்து தனது பக்கம் கொண்டு வருவது... பின்னர் ஜனாதிபதியாக எத்தினை முறை வேண்டுமானாலும் இருக்கலாம் எண்று சட்டத்தை மாற்றுவது...

இது நடக்குமாக இருந்தால் இலங்கை பாதாளத்துக்கை போவதை கூட்டமைப்பாலும், ஏன் இந்தியாவாலுமே காப்பாத்த முடியாது... நேரடியாக அந்த வேளைகளில் சீனாவின் கை இலங்கையில் இருக்கும்...

அப்ப ராஜீவ் காந்திக்கு ஒரு திவசம் ஒன்று செய்வமோ? :D:lol::lol:

இந்தியாவை நம்ப வச்சு கழுத்து அறுக்க வேண்டும் அதைதான் இப்ப கூட்டமைப்பு செய்கிறது. :D:D

உங்கட ஆசைக்கு அளவே இல்லையா...??? :lol:

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ தெரியாது... உந்த கூட்டமைப்பின் முக்கிய கட்ச்சிகளான EPRLF , TELO இரண்டும் இண்றுவரைக்கும் இந்திய துணைப்படை குழுவில் இருக்கிறது... இந்திய தமிழ் தொலைக்காட்ச்சி ஒளிபரப்பு உரிமை தொடங்கி எல்லாம் எங்கட ஆக்களின் கைகளில் தான்... உறுப்பினர்களின் இழப்புக்கு இந்தியா நட்ட ஈடு கொடுத்து கொண்டு இருக்கு...

இதுக்கை இந்தியாவுக்கு நோகிற மாதிரி அடிச்சு கிடிச்சு போடப்போகினம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு தமிழரின் பலத்தை சிதைத்த மேற்குலகின் கையாலாகத்தனம்

புலம்பெயர் தமிழ் மக்களை புரிந்து கொள்ளும் மேற்குலகு

இத்தனைக்கும் பிறகும் இந்தியாவை நம்பலாமா?

யெர்மனியில் புலிகளின் அனைத்துலகசெயலப் பிரிவினர் கைது.

தலைப்புக்களிடையே எத்தனை ஒற்றுமை. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட ஆசைக்கு அளவே இல்லையா...??? :)

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ தெரியாது... உந்த கூட்டமைப்பின் முக்கிய கட்ச்சிகளான EPRLF , TELO இரண்டும் இண்றுவரைக்கும் இந்திய துணைப்படை குழுவில் இருக்கிறது... இந்திய தமிழ் தொலைக்காட்ச்சி ஒளிபரப்பு உரிமை தொடங்கி எல்லாம் எங்கட ஆக்களின் கைகளில் தான்... உறுப்பினர்களின் இழப்புக்கு இந்தியா நட்ட ஈடு கொடுத்து கொண்டு இருக்கு...

இதுக்கை இந்தியாவுக்கு நோகிற மாதிரி அடிச்சு கிடிச்சு போடப்போகினம்...

அண்ண சொல்லுறதும் சரிதான் , ஆனால் எவ்வளவு கேட்டாலும் சிறீலங்கன்காறன் தர மாட்டன் என்டுறான், நாங்கள் போராடி அவன் எப்ப தாறானே தெரியாது, சில வேளையில் தராமலும் விடுறானோ தெரியாது, அது வரையும் சும்மா கடலை போட்டு கொண்டுதானே இருக்க போறம், இப்ப இருக்கிறதை விட ஒரு படி மேலே செல்ல கூடியதை இந்தியாகாறன் மூலம் வாங்கலாம் எண்டு இவயள் "றை" பண்ணுகினம் சரி சும்மா இருகிற நேரத்தில் அதையும் ஒருக்கால் "றை" பண்ணிப்பாப்மன், சும்மா இருக்கிறதை விட ஏதாவது செய்து கொண்டுதானே இருக்க வேணும், அவயள் பிழையா போனால் அடுத்த எலக்சனில கவுத்து போட மாட்டியளோ என்ன? :D:huh::)

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.