Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவை வெற்றி கொள்ள சில வழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://globaltamilforum.org/gtf/content

எதிரியை வெற்றி கொள்ள முதலில் நாம் எதிரியின் பலம், பலவீனம், எமது பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டு;ம்.

சிறிலங்காவின் பலம்:

1. இராணுவ ஆட்பலம்

2. ஆயுதபலம்

3. அரசியலில் சிங்கள மக்களின் பலமான ஆதரவு.

4. சிங்கள மக்களின் தமிழருக்கு எதிரான ஒற்றுமை.

5. இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் இசுலாமிய நாடுகளின் ஆதரவு.

6. அரசாங்கம் என்ற அளவிலான அங்கிகாரத்தால் கிடைக்கும் வசதிகள்.

7. அரசகட்டுப்பாட்டில் உள்ள தகவல்கள், வசதிகள், ஆவணங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதிகள்.

8. பலவீனமான எதிர்க்கட்சிகள்

9. பலவீனமான செய்தி ஊடகங்கள்

சிறிலங்காவின் பலவீனம்:

1. பலவீனமான பொருளாதார முகாமைத்துவம்

2. ஊழல்

3. அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளுடனான பலவீனமான உறவு.

4. சிறிலங்காவில் குறைந்து போயிருக்கும் டொலர், இயு+ரோ பணம்.

5. சுயநலம் நோக்கிய அரசியல்வாதிகளின் கூட்டினால் உருவான அரசாங்கம்.

6. கடற்போக்குவரத்தில் தங்கியிருக்கும் பொருளாதாரம்.

எமது பலம்:

1. பல்வேறு நாடுகளில், அந்த நாட்டு மொழிகளில் செயற்படும் ஆற்றல்.

2. பல்துறை அறிவு.

3. உயர்தொழில்நுட்ப தொடர்புசாதனங்களை சிறப்பாக கையாளும் வசதிகள்.

4. சிறிலங்காவில் நடக்ககூடிய கரந்தடி தாக்குதல்களின் தாக்கங்கள் சாதகமாக பயன்படும் சாத்தியம்.

எமது பலவீனம்:

1. சிறிலங்காவில் உள்ள உறவுகளின் பாதுகாப்பு பற்றிய பயம்.

2. சிறிலங்காவில் ஆட்பலமற்ற நிலை.

3. சிறிலங்காவில் ஆயதபலத்தை இழந்துவிட்ட நிலை.

4. விட்டுக்கொடுத்து, ஒன்றுபட்டு, ஒற்றுமையாக செயற்பட தெரியாத நிலை.

5. சர்வதேச மட்டத்தில் சிறப்பான ஒரு நிருவாகத்தை எமக்கென்று இன்னமும் கட்டியெழுப்பாத நிலை.

பலத்தில் நின்று வெற்றி பெறுவொம்

எமது பலத்தை மூலதனமாக கொண்டு, எதிரியின் பலவீனத்தை எமக்கு சாதகமாக கொண்டு செயற்படும் போது நாம் வெற்றி பெறும் சாத்தியம் அதிகமாகும்.

எதிரிக்கு ஆயுதபலம், ஆட்பலம், பின்புல ஆதரவு ஆகியவை எம்மிலும் பார்க்க பெருமளவு அதிகமாக இருந்ததே ஆயுதப்போராட்டம் வெற்றிபெறாததற்கு முக்கிய காரணமாகும். நாம் பலமிக்க எதிரியுடன், பலவீனமான நிலையில் இருந்து இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறோம்.

சிறிலங்காவின் முக்கிய பலவீனம் பொருளாதாரம். ஆனால் எமது போராட்டம் சிறிலங்காவின் பொருளாதாரத்தை முதன்மையாக இலக்கு வைக்காத காரணத்தால் சிறிலங்கா இன்றளவும் ஒரு நாடாக இயங்கும் வலுவுடன் இருந்து வருகிறது.

சோமாலியாவும் எதியோப்பியாவும்

சோமாலியாவில் இருந்து சோமாலிலாந்து, புன்ராலாந்து ஆகிய நாடுகள் வெற்றிகராமாக விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணம், சோமாலியாவின் பொருளாதாரம் நொறுக்கப்பட்டு அந்த நாட்டு அரசாங்கம் இயங்க முடியாமல் போனதாகும். எரித்திரியா எதியோப்பியாவிடம் இருந்து விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று எதியோப்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி. கம்யு+னிச நாடுகளுக்கு ஆதரவாக எதியோப்பியா மாறிய காரணத்தால் மேற்கு நாடுகள் எதியோப்பியாவை கைவிட்ட நிலையில், எதியோப்பியா தனது இராணுவத்துக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறியது. பெரும்தொகை இராணுவத்தினர் ஓடிப்போக எதியோப்பியா ஒரு அரசாங்கமாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு முற்றாக செயலிளக்கபட்ட நிலையில் இருந்த எரித்திரிய போராளிகள், மீண்டும் தாக்குதல் நடத்தி, எதியோப்பிய அரசை பணிய வைத்தார்கள்.

சிறிலங்கா

சிறிலங்காவில் பெருமளவிலான மக்கள் அரச சம்பளம் பெறுபவர்கள். பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அரசாங்கம் சம்பளம் கொடுக்க வழியிருக்காது. இராணுவத்துக்கும் சம்பளம் கொடுக்க வழியற்று போகும். அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதற்கும் போதுமான பணம் இருக்காது. இந்த நிலையை நாம் உருவாக்க வேண்டும். நம்மால் இந்த நிலையை உருவாக்க முடியும். இவ்வாறாக சிறிலங்கா அழியும் விழிம்புக்கு கொண்டுவரப்பட்டவுடன், அதற்கு காரணமான நம்முடன் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய கட்டாயம் சிறிலங்காவுக்கு ஏற்படும்.

இந்த நிலை முன்னர் ஒருமுறை சிறிலங்காவுக்கு ஏற்பட்டது. 2001ம் ஆண்டு சிறிலங்கா பணமற்று, பணமுடை (வங்குரொத்து) அடைந்த நாடாக மாறியது. அதனால் போரை தொடர முடியவில்லை. இதன் காரணமாகவே சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்துக்கும், பேச்சுவார்த்தைக்கும் இணங்கியது. இந்த நிலை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். அதை செய்வதற்கான திட்டமே இந்த ஆவணத்தில் இடம்பெறுகிறது.

சிறிலங்காவின் பொருளாதாரம்

சிறிலங்காவின் அதிகூடிய வருமானம் வெளிநாட்டவர் அனுப்பும் பணமாகும். இது சிறிலங்காவின் வருமானத்தில் 58 வீதம். இதில் பெரும்பாகம் மத்தியகிழக்கில் வேலை செய்பவர்களின் சம்பள பணமாகும். ஆகவே இந்த மத்தியகிழக்கு வேலைவாய்ப்பை கணிசமான அளவு குறைப்பது எமது முதல் செயற்திட்டமாக அமைவது சிறப்பானது. மத்தியகிழக்குக்கு அடுத்ததாக ஐரொப்பாவில் இருந்து அனுப்பப்படும் பணம் இருக்கிறது. நிறைந்த அளவில் சிங்களவர்களுக்கு சிறிலங்கா இத்தாலி போன்ற நாடுகளில் வேலை எடுத்து கொடுத்து இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பையும் குறைப்பது முக்கியமானது.

அடுத்து சிறிலங்காவிற்கு உல்லாச பயணிகள் போவதை தடுத்தல், சிறிலங்காவின் ஆடைகள் ஏற்றுமதியை குறைத்தல், தேயிலை ஏற்றுமதியை குறைத்தல் போன்றவற்றில் நாம் கவனத்தை செலுத்தலாம்.

மத்தியகிழக்கு வருமானம்

மத்தியகிழக்கு நாடுகளில் பெரும்பாலான சிங்களவர் வீட்டுபணிப்பெண்களாகவும், கூலிவேலையாட்களாகவும் பணிபுரிகிறார்கள். இவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மத்தியில், சிறிலங்காவில் இருந்து வரும் வேலையாட்கள் பற்றி பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த வருமானத்தை குறைக்க முடியும்.

தம்மிலேயே அக்கறை

உலகின் பெரும்பாலான மனிதர்களுக்கு தமது நலன்களின் மீது அக்கறை இருப்பது போல மற்றவர்களின் நலன்களின் மீது அக்கறை இல்லை. ஆகவே நாம் எமது பிரச்சினைகளை பிரச்சாரம் செய்து அவர்களின் ஆதரவை பெறுவது கடினமானது. மாறாக, அவர்களுக்கு வரப்போகும் பிரச்சினைகளை பற்றி பிரச்சாரம் செய்யும்போது அவர்கள் அக்கறையாக கேட்டு நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் நிறையவே உள்ளது.

இதனை சிறப்பாக பயன்படுத்தி, சிறிலங்கா தமிழர்களை பயங்கரவாதிகளாக காட்டி, உலகநாடுகளை எமக்கெதிராக திருப்பி வெற்றி பெற்றிருக்கிறது. நாமும் இதே தத்துவத்தை பயன்படுத்தி சிறிலங்காவின் பொருளாதாரத்தை ஆட்டம்காண வைக்க முடியும்.

ஆயிரம் தரம் ஒரு பொய்யை சொன்னால் அது உண்மையாகும் என்று சொல்வார்கள். இதை சிறிலங்கா வெற்றிகரமாக செய்து எமது மக்களை அழித்திருக்கிறது. நாம் உண்மைகளை சொல்லப் போகின்றோம். ஆனால் அவற்றை ஆயிரம் தடவையாவது சொன்னால்தான் பலன் கிடைக்கும்.

சிங்களவர்கள் மத்தியகிழக்கில் கொலை செய்திருக்கிறார்கள். பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள். குழந்தைகளை கொன்றிருக்கிறார்கள். வங்கியை கொள்ளையடித்திருக்கிறார்கள். இது போன்ற செய்திகளை நாம் மீண்டும், மீண்டும் மத்தியகிழக்கு நாடுகளில் உள்ளவர்கள் பார்க்கும்படியும், படிக்கும்படியும் இடம்பெற செய்ய வேண்டும். சிறிலங்கா எப்படி தமிழரை பிரச்சாரத்தின் மூலம் பயங்கரவாதிகளாக்கியதோ, அப்படியே சிறிலங்காவின் கூலியாட்களை நாம் மத்தியகிழக்கின் மக்களுக்கு பயங்கரமான கொலைகாரராக காட்டவேண்டும்.

இந்த பிரச்சாரத்துக்கு முக்கியமாக தேவை அரபு மொழி. எமக்கு அரபு மொழி தெரியாத காரணத்தால் நாம் அரபு மொழி தெரிந்தவர்களை சம்பளத்துக்கு அமர்த்தி இந்த வேலையை செய்ய வேண்டியிருக்கிறது. அதே வேளை மத்தியகிழக்கில் ஆங்கிலம் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது. பிரெஞ்சு மொழியும் ஜோர்டான், லெபனான் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே எமது பிரச்சாரம் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் இடம்பெற வேண்டு;ம்.

மத்தியகிழக்கு நாடுகள் செல்வந்த நாடுகளாதலால் அவர்கள் இணையத்தள தொழில்நுட்பத்தை நிறையவே பயன்படுத்துகிறார்கள். ஆகவே ஆயிரக்கணக்கான இணையத்தளங்களை உருவாக்கி சிறிலங்கா பணிப்பெண்களும், வேலையாட்களும் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை அரபு மொழியில் நாம் மத்தியகிழக்கு மக்களுக்கு புரியவைக்க வேண்டும். இதனை நாம் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

செயற்திட்டம்

இந்த செயற்தி;ட்டத்துக்கு மூன்று குழுக்கள் தேவை:

1. இணையத்தளங்களை உருவாக்கும் குழு

லுயாழழ ளுஅயடட டீரளiநௌள ; இணையத்தளம் ஒன்றை உருவாக்கி கட்டுப்பாடில்லாத அளவு படங்கள், செய்திகள் எல்லாம் வைத்திருக்க மாதம் ஒன்றுக்கு 8.50 அமெரிக்க டொலர்கள் தான் செலவாகிறது. ஆகவே ஆயிரக்கணக்கான இணையத்தளங்களை இந்த குழு பொறுப்பெடுத்து உருவாக்க முடியும். இவை அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் அமைய வேண்டும். படிப்பவர்கள் பதில் எழுதக்கூடிய இணையத்தளங்களில் இந்த பிரச்சாரத்தை செய்வது பயன்தராது. சிறிலங்கா அதற்கென்றே பலரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது. அவர்கள் எமது பிரச்சாரத்தை முறியடிக்க கூடும்.

2. செய்திகளையும் தகவல்களையும் திரட்டும் குழு

இந்த இணையத்தளங்களை நிரப்புவதற்கு பொருத்தமான, தேவையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செய்திகளும், தகவல்களும் தேவை. இவை தொடர்ச்சியாக புதிப்பிக்கப்படவும் வேண்டும். அது இந்த குழவின் செயற்பாடாக அமையும். இந்த குழு தகவல்களை ஒரு மென்பொருள் களஞ்சியத்தில் (னுயவயடியளந) ;சியாக நிரப்பிவருவர்.

3. மொழிபெயர்க்கும் குழு

இந்த குழு அரபுமொழி மொழிபெயர்ப்பாளர்களை வேலைக்கு அமர்த்தி, மொழிபெயர்ப்பு செய்து, மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை சரிபார்த்து, மென்பொருள் களஞ்சியத்தில் (னுயவயடியளந) ;சியாக நிரப்பிவருவர். மென்பொருள் களஞ்சியத்தில் இருந்து மொழிபெயா;க்கப்பட்ட தகவல்களை இணையத்தளங்கள் தன்னியங்கியாக பெற்று மேலேற்றி கொள்ள வேண்டும்.

இந்தவிதமான போராட்டத்தில் நாம் பலமான நிலையில் இருந்து போராட முடியும். எமக்கு இருக்கும் தொழில்நுட்ப பலமும், நிருவாக வசதிகளும் எமது பலமாகும். நாம் சதிராடும் களம் எமக்கு உளவியல்ரீதியாக சாதகமானதாக இருக்கிறது. பணிப்பெண்களையும், கூலியாட்களையும் வேலைக்கு வைப்பவர்களுக்கு, சிங்களவரை வேலைக்கு அமர்த்தி ஆபத்தை தேடுவதிலும் பார்க்க, ஒரு இந்தியரையோ, பிலிப்பீனோவையோ வேலைக்கு அமர்த்துவது இலகுவானதும் விரும்பத்தக்கதும் ஆகும். சிங்களவரால் மத்தியகிழக்கு குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் ஆபத்து இல்லை என்று சிறிலங்கா நம்பவைப்பது மிகவும் கடினமானது. ஆகவே சிறிலங்காவின் எதிர்போராட்டம் மிகவும் பலவீனமாகவே இருக்கும்.

உல்லாச பயணிகள் வருமானம்

சிறிலங்காவுக்கு முன்னர் ஜேர்மனி, இத்தாலி, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து உல்லாச பயணிகள் சென்று வந்தனர். இவர்கள் போர் காரணமாக கடந்த வருடங்களில் சிறிலங்காவுக்கு போகவில்லை. போர் முடிந்துவிட்டது என்று இவர்களை சிறிலங்கா அரசு மீண்டும் அழைக்கிறது.

சிறிலங்காவில் ஏற்படும் ஆபத்துகள் பற்றி இணையத்தளங்கள் மூலமும், சிறிலங்கா முகவர் நிலையங்களுக்கு அண்மையில் விளம்பரங்கள் மூலமும் உல்லாச பயணிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

தற்போது பெருமளவில் கிழக்கு ஐரொப்பாவில் இருந்தே உல்லாச பயணிகள் சிறிலங்காவுக்கு போகிறார்கள். குறிப்பாக போலந்து நாட்டில் இருந்தும் உக்கிரேன் நாட்டில் இருந்தும் போகிறார்கள். இவர்களை நோக்கியதாக போலிஷ் மொழியிலும், இரஷ்ய மொழியிலும் பரப்புரைகளை செய்வது பயனுள்ளது. கிழக்கு ஐரொப்பிய நாடுகளில் உள்ளவர்களுக்கு இரஷ்ய மொழி தெரியும். இரஷ்ய மொழியில் பல்கலைக்கழகத்தில் படித்த எமது இளையோர் இந்த முயற்சிக்கு உதவ முன்வரவேண்டும்.

சிறிலங்காவில் உல்லாச பயணிகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்:

1. உல்லாச பயணிகளிடம் கொள்ளையடிப்பது, கொள்ளைக்காக கொலை செய்வது என்பன இடம் பெற்றிருக்கின்றன.

2. உல்லாச பயணிகளை பாலியல் வல்லுறவு செய்வது இடம் பெற்றிருக்கிறது.

3. உல்லாச பயணிகளுக்கான உணவு சுகாதாரமான முறைகளில் தயாரிக்கப்படுவது குறைவு. இதனால் சுகவீனமுற்றால், சிறிலங்காவில் மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மரணம் சம்பவிக்கலாம்.

4. பணமில்லாத காரணத்தால் சிறிலங்கா மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை. ஆகவே உல்லாச பயணிகள் சுகவீனமடைந்தால் மருத்துவ வசதிகள் இல்லாமல் ஆபத்து ஏற்படலாம்.

5. சிறிலங்கா பொலிஸும், இராணுவமும் பெரும்பாலும் சட்டவிரோதிகளை கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் சந்திக்கு சந்தி நின்று சோதனை என்ற பெயரில் உல்லாச பயணிகளிடம் கொள்ளையடிப்பது, தகாத நடத்தையில் ஈடுபடுவது அங்கு சாதாரணம்.

ஏற்றுமதி வருமானம்

சிறிலங்காவின் ஆகக்கூடுதலான ஏற்றுமதி வருமானம் தேயிலை ஏற்றுமதியில் கிடைக்கிறது. இரண்டாவதாக ஆடை உற்பத்தி வருமானத்தை பெற்று கொடுக்கிறது. அதை அடுத்து இரத்தின கற்கள், றப்பரில் செய்யப்பட்ட பொருட்கள் இடம்பெறுகின்றன.

தேயிலை

சிறிலங்காவின் தேயிலையை அதிகமாக வாங்குபவர்கள் ரஷ்யர்கள். இவர்களை அடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்களே அதிகம் சிறிலங்கா தேயிலையை வாங்குகிறார்கள். இவர்களை அடுத்து ஈரானியர்கள்.

சிறிலங்கா தேயிலையை தயாரிக்கும் முறைகள் தரம் குறைந்திருப்பதனால், இந்த தேனீரை அருந்துவதால் ஏற்படக்கூடிய உடல்நல குறைபாடுகள் பற்றி நாம் இரஷ்யர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இரஷ்ய மொழி தெரிந்தவர்கள் இதற்கு மொழிபெயர்த்து உதவலாம். தேயிலை பற்றிய விஞ்ஞான அறிவுள்ளவர்கள் சிறிலங்கா தேயிலையால் ஏற்படு;ம் உடல்நல குறைவு பற்றி ஆக்கங்களை செய்து உதவ வேண்டும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் சிறிலங்கா தேயிலையை வாங்குவதை குறைக்க ஆங்கிலம், அரபு மொழிகளிலும் தேயிலைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆடைகள்

சிறிலங்வின் ஆடைகளை அமெரிக்காவும், பிரித்தானியாவுமே பெருமளவில் வாங்குகின்றன. இந்த ஆடைகளை தயாரிப்பதில் பயன்படும் இரசாயனங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி ஆங்கிலத்தில் பரவலான பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டாலே இந்த வருமானத்தை தடுக்க முடியும். இந்த நாடுகள் மட்டுமல்லாமல், Nஐர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா, பெல்ஐpயம், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் சிறிலங்காவின் ஆடைகளை வாங்குகின்றன. ஆகவே இந்த நாட்டு மொழிகளிலும இந்த ஆடைகளால் உண்டாக கூடிய நோய்கள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.