Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரும் கட்டுநாயக்காவும்

Featured Replies

கண்ணீரும் கட்டுநாயக்காவும்

திகதி: 14.03.2010 // தமிழீழம்

இந்து மாகடலின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால் சர்வதேச அரங்கில் சிறிலங்காத் தீர்வுக்கு அதன் பருமனுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் உண்டு இதனால் அதன் துறைமுகங்களுக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கும் பெரும் செல்வாக்கு இருப்பதை பார்க்கலாம்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் சிறிலங்காவின் ஒற்றை வான்வழிப் போக்குவரத்துப் பாதையாக இடம்பெறுகிறது கொழும்பில் குழப்பமும் அமைதியின்மையும் தோன்றுவதற்கு முன்பு பெருமளவு மேற்கு கிழக்கு உல்லாசப் பயணிகள் கட்டுநாயக்கா ஊடாக வந்து போயினர். இதனால் சிறிலங்கா பெரும் வருகையை ஈட்டியது உல்லாசப் பயணிகள் வருகை குறைந்ததோடு இன்று வருவாயும் குன்றி விட்டது.

அவர்கள் மாலைதீவுகள் போன்ற அமைதிப் பூங்காக்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டன. சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான எயர் லங்கா என்றும் சிறிலங்கன் என்றும் பெயரிடப்பட்ட பயணிகள் விமான சேவையும் நோய் வாய்ப்பட்டு நிறுத்தப்படும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உல்லாசப் பயணிகள் வருகைக் குறைவால் மாத்திரமல்லாமல் எயர் லங்கா விமானத்தில் பறப்பதில்லை என்ற உலகத் தமிழர்களின் தீர்மானமும் அதன் வீழ்ச்சிக் குறிய காரணமாக அமைகின்றது.

கட்டுநாயக்காவின் பயணிகள் ஏற்ற இறக்கப் புள்ளி விபரங்களின் படி இந்த நிலையத்தை மிகக் கூடுதலாகப் பயன் படுத்துபவர்களில் ஈழத் தமிழர்கள் முன்னணியில் இடம் வகிக்கின்றன பல சிரமங்களுக்கு மத்தியில் இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிற நாட்டு விமானங்களில் ஏறித் தமது பயணங்களை மேற்கொள்கின்றனர். இவர்கள் தமது விமான சேவையைப் பயன் படுத்துவதில்லை என்பதை சிறிலங்கா அரசு நன்கு அறியும். இதனால் தமிழ்ப் பயணிகள் மீதான வெறுப்பு அதிகாரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

அரசின் விமான சேவையைப் பயன் படுத்துவதைத் தவிர்த்தாலும் தமிழர்களால் விமான நிலையப் பயன் பாட்டைத் தவிர்க்க முடியவில்லை தீவை விட்டு வெளியேறுவதற்கு அவர்களுக்கு கிடைத்த ஒரேயொரு பாதை இது தான். விமான நிலையங்களைக் கதையின் களமாக அமைக்கும் பாரம்பரியம் அண்மைக் காலப் படைப்பாளிகள் மத்தியில் காணப்படுகிறது. மிக சுவாரஸ்யமான இலக்கியங்கள் பல மொழிகளில் படைக்கப்பட்டுள்ளன.

திரைப்படங்களும் விமான நிலையங்களை மையமாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளன. மனித வரலாற்றின் பெரும் பகுதி விமான நிலையங்களில் காட்சிப்படுத்தப் படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். தனி மனிதர்கள் தமது வாழ் விடங்களில் தமக்கே உரிய அடையாளங்களைப் பதிப்பது போல் விமான நிலையங்களை நடத்தும் நாடுகளும் தமது பிரத்தியேக அடையாளங்களையும் குணாம்சங்களையும் பதிப்பதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.

அனேக விமான நிலையங்களில் சுதந்திர நடமாட்டம் தங்கு தடையற்ற போக்கு வரவு காணப்படுகிறது. ஒரு சிலவற்றில் அச்சமும் பீதியும் அடுத்தது என்ன நடக்கும் என்ற நடுக்கமும் இருக்கின்றன. இப்படியான விமான நிலையங்களில் ஒன்று தான் கட்டுநாயக்கா. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிறிதோர் தரமான விமான நிலையத்தில் காணப்படாத தனித்துவமான அம்சம் இருப்பதை நாம் அறிவோம்.

சர்வதேச பயணிகள் பறப்பை மேற்கொள்ளும் கட்டு நாயக்கா விமான நிலையத்தின் ஒரு புறத்தே கீபீர், மிக் போன்ற போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை தமிழர் பகுதிகள் மீது குண்டு வீச்சை மேற்கொள்வதாகப் புறப்படும் போது பயணிகள் விமானங்கள் பயன்படுத்தும் ஓடு பாதையைப் பயன்படுத்துகின்றன. இது வழமைக்கு மாறான செயற்பாடு. போர் விமான ஓட்டிகளும் பாரமரிப்பாளர்களும் கட்டுநாயக்கா நிலையத்தில் வாழ்கின்றனர்.

இதனால் கட்டுநாயக்கா விமான நிலையம் ஒரு இராணுவ வலயமாகவும் இடம் பெறுகிறது. தமிழீழ விடுலைப்புலிகள் கட்டுநாயக்கா விமானப் படை நிலைகளைத் தாக்கிய போது பயணிகள் விமான நிலையம் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டனர். பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அவர்கள் மிகவும் அவதானமாக இருந்தனர். இதைப் போன்ற கவனிப்பு சிறிலங்கா விமானப் படையிடம் இருந்ததில்லை. அவர்கள் மனம் போல் தமிழர் குடியிருப்புக்கள் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் மருத்துவமனைகள் பள்ளிக் கூடங்கள் என்பன மீது குண்டு வீச்சு நடத்தினர்.

எனவே கட்டுநாயக்கா ஈழத்தமிழனின் கண்ணீரும் குருதியும் நிறைந்த இடம் என்று கூறுவதில் தவறில்லை. அரச பயங்கரவாதம் நடைமுறையில் இருக்கும் விமான நிலையமாக கட்டுநாயக்கா இருக்கிறது. தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இங்கு அரங்கேறுகினறன. காணமாற் போதல்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களிடம் பணம் பறித்தல்கள் சித்திரவதைகள் கடத்தல்கள் எனக் குற்றவியல் பட்டியல் நீண்டு செல்கிறது.

பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா ராஐபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வகைக் கொடுமைகளுக்கு மூலகாரணமாக அமைகிறது. இந்த அமைப்பில் தமிழ் இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மோப்ப நாய்கள் போல் செயற்பட்டு பணம் பறிப்பதற்குப் பொருத்தமான தமிழர்களைத் தேடிப் பிடிக்கின்றனர். இந்த வகை இளைஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கருணா குழு, புலனாய்வு இரட்டை முகவர்கள்.

சிங்களவனின் அடிவருடிகளாகவும் தமிழனைக் காட்டிக் கொடுப்பவர்களாகவும் செயற்படுகிறார்கள். பட்ட துன்பங்கள் போதும் இனியாவது வெளியில் போய் சுகமாய் இருப்போம், சொந்த பந்தங்களைச் சந்தோசப்படுத்துவம், கணவரிடம் போய்ச்சேருவம் என்றெல்லாம் பல கற்பனைகளோடு கட்டுநாயக்கா வந்தால் சோதனைகளை முடித்துக்கொண்டு சுமைகளை லிப்டில் போட்டுவிட்டு எமிக்கிரேசன் பதிவு செய்ததும் விமானத்தில் ஏறுவதுதான் பாக்கி என நினைத்துக் கொண்டு வலம் புறம் திரும்பினால் பாசக்கயிற்றோடு இயமதூதுவர்கள்.

இவர்களிடமிருந்து தப்பி வெளியேறினால் அவர்கள் மறுபிறப்புத்தான் என்று சொல்லும் அளவுக்கு கட்டுநாயக்கா கதை நீண்டு செல்கின்றது. பயங்கரவாதத்தையே அடியோடு அழித்து விட்டதாக உலகிற்கு அம்பலப்படுத்திய சிங்கள அரசு உயிரோடு தப்பிய சில புலிகள் வெளிநாடு ஓடுவதாக கூறிக்கொண்டு ஒட்டு மொத்தத் தமிழர்களையும் கைது செய்தல், கசக்கிப்பிழிதல் என கைவரிசையைக் காட்டுகிறது.

இதில் வெளிச்சத்திற்கு வருவது ஓரிரு சம்பவந்தான் மீதெல்லாம் மூடி மறைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கானவர்கள் கட்டுநாயக்கா கண்ணாடி அறைக்குள் தள்ளப்படுகின்றார்கள். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் புதியதொரு பணம் பறிக்கும் நடைமுறை வழமைக்கு வந்துள்ளது. பல தமிழர்கள் பாதிப்படைய தொடங்கியுள்ளார்கள்.

இமிக்கிரேசன் முடித்துக் கொண்டு விமாத்தில் ஏறப்போகும் இடைவழியில் நடக்கும் சம்பவம். பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் போல் தங்களை காட்டிக்கொள்ளும் பாதுகாப்பு குழு வழியால் போகும் தமிழர்களை குறிவைத்து செயற்படுகின்றனர். தமிழர்களிடம் கடவுச்சீட்டை வேண்டி திருப்பி திருப்பி பார்த்த கையோடு அவரை சந்தேக நபராக்கி விடுவார்கள்.

தலை அல்லது கை காட்டும் திசையை பார்த்தால் கறுப்பு கண்ணாடி அறை தெரியும் அங்கு சென்றால் அவலக்குரல்கள், கடும்மையான விசாரணை, பல இடங்களுக்கு தொடர்பு எடுத்து தகவல் கேட்பது போல் பாசங்கு, அனைத்து பொருட்களும் பரிசோணை என்ற போர்வையில் களையப்படும். களையப்பட்ட பின்னர் அவர்கள் வேறு அறைக்கு மாற்றப்படு சிலர் தடுத்து வைப்பு, சிலர் நிலை தெரியவராது, சிலர் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே விடுவிக்கப்படுவர்.

அவர்கள் பயபீதியில் அவசர அவசரமாக பொருட்களை எடுத்து கொண்டு விமானம் நோக்கி ஒடும் அப்பாவிகள், பாதுகாப்பு குழுவினரின் பணப்பையையும் நிரம்பி விட்டுதான் ஒடுகின்றோம் என்ற விடயம் பின்னர் தான் தெரியவருகின்றது. பல டொலர் தாள்கள் இருக்காது. பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களின் சோக உண்மை சம்பவங்கள்.

விமான நிலையத்திலும் பணம் பறிப்பு, தனி மனித சுகந்திரம், சுகந்திர நடமாட்டம் பறிக்கப்படுகின்றது. சிறிலங்காவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதோடு நின்று விடாது மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்க்குமாறு மனித உரிமை அமைப்புகள் ஐ.நாவை வலியுறுத்த வேண்டும்.

- அரசியல் ஆய்வாரள் க.வீமன்

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=4036&cntnt01origid=52&cntnt01returnid=51

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தான் எழுதினாலும் நான் இலங்கைக்கு இந்த வருடம் போறது போறது தான் அதுவும் சிறிலங்கன் எயாலைன்ஸ்சில் தான் போவேன் :wub:

உங்கள் கருத்துடன் நான் ஒத்துவரமாட்டேன். ஏனெனில் நான் வருடம் தோறும் இரண்டு தடவைகள் இலங்கைக்கு சென்று வருகின்றேன். எனக்கு இப்படி அனுபவங்கள் ஏதும் ஏற்பட்டதில்லையே? சரி போர்க்காலங்களில் இப்படி கடத்தல்கள் நடந்ததாக சொல்கின்றனர். ஆனால் போர் அதியுச்சமாக நடைபெறும் போது 2007,2008,2009 நான் கட்டுநாயக்காவினூடாக அதுவும் வவுனியா வரை சென்று தானே திரும்பி வந்திருந்தேன். இது தனிப்பட்ட்ட காட்டிக்கொடுப்புகளால் தான் அப்படி நடைபெற்றால் நடைபெற்றிருக்கும். பொதுவாக எல்லா தமிழர்களையும் நீங்கள் சொல்வது போல் அங்கு கடத்தபடுவதில்லையே?

Edited by vidivelli

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுகளில் இருந்து சென்ற பலர் தமது கசப்பான அனுபவங்களை வெட்கத்தினால் வந்து சொல்லவதில்லை. அனோமதேய பெயரில் பல கட்டுரைகளை தமிழ் பத்திரிகைளில் எழுதி இருக்கிறார்கள்.எனக்கு தெரிந்த பலருக்கு இது நடந்துள்ளது. கட்டுநாயக்காவில் போயிரங்கும்போது நீங்கள் தாங்கும் இடவிலாசம் எழுதி கொடுக்க வேண்டும். பிறகு நீங்கள் நிற்கும் இடத்திற்கு ஆமி, போலீஸ், புலனாய்வு என்ற பெயரில் வந்து உங்களிடம், பணம் பறிக்க எல்லாவிதமான வழிகளையும் கையாளுவார்கள். இது தமிழரிடம் இருந்து பணம் பறிக்கும் அரசாங்க முகவர்களின் வழி.

Edited by Queen

கட்டுநாயக்காவில் போயிரங்கும்போது நீங்கள் தங்கும் இட விலாசம் எழுதி கொடுக்க வேண்டும். பிறகு நீங்கள் நிற்கும் இடத்திற்கு ஆமி, போலீஸ், புலனாய்வு என்ற பெயரில் வந்து உங்களிடம், பணம் பறிக்க எல்லாவிதமான வழிகளையும் கையாளுவார்கள். இது தமிழரிடம் இருந்து பணம் பறிக்கும் அரசாங்க முகவர்களின் வழி.

என்னங்க சொல்கின்றீர்கள்? 2007 இன் பின் நான் 8 தடவைகள் இலங்கைக்கு சென்று வந்திருக்கின்றேன். அப்போ ஏன் எனக்கு இவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை? இன்னும் எனக்கு தெரிந்த நிறைய பேர் சென்று வந்தனர், வருகின்றனர். அவர்களுக்கும் ஏதும் நடைபெறவில்லையே. கட்டுநாயக்கவில் போய் இறங்கும் போது அனைத்துப்பயணிகளும் நிரப்பி கொடுக்கவேண்டிய பத்திரம் அது. ஏன் புனை பெயரில் கட்டுரை எழுத வேண்டும்? இதை நடக்கவில்லை என்று நான் சொல்லவரவில்லை.... ஆனால் நிரூபிக்க கூடிய வகையில் எவரும் வந்து தன் அனுபவங்களை பகிர்கின்றார்கள் இல்லையே?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு கிழமைகள் இலங்கையில் இருந்துவிட்டு நேற்றுத்தான் திரும்பினேன்.

ஒரு இடத்தில் (முகமாலை) கையில் இருந்த பொதியை சோதித்தார்கள் பா.போட்டை பார்த்தார்கள்.

கெடுபிடிகள் ஒன்றும் இருக்கவில்லை.

யாழில் "பிச்சை வேண்டாம் நாயை பிடி " என்பதுதான் பலரதும் கருத்து.

இறுதியாக வன்னியில் இருந்து வந்தவர்கள், படையினர் தம்மை காப்பாற்றியதாக கூறுகிறார்கள். (யாரிடம் இருந்து என்பதை எழுத விரும்பவில்லை.)

களவு மற்றும் குற்ற செயல்கள் வளர்வதுபோல உள்;ளது.

வாழ்வு மிகவும் குறுகியது. எனவே வேற்றுமைகளை வளர்க்காமல் அங்குள்ள மக்களின் தேவைகளுக்கு உதவி செய்வது நல்லது. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாமல் எஞ்சியுள்ள வாழ் நாட்களை மற்றவர்களை மதித்து உதவி செய்து வாழ்வதுதான் தற்போதைய தேவை. இது எனது சொந்த கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக வன்னியில் இருந்து வந்தவர்கள், படையினர் தம்மை காப்பாற்றியதாக கூறுகிறார்கள். (யாரிடம் இருந்து என்பதை எழுத விரும்பவில்லை.)

இல்லை... இராணுவம் எம்மைக் காப்பாற்றவில்லை, எம் மக்களைக் கொன்றொழித்தது என்று சொல்ல முடியும் என்று எதிர் பார்க்கின்றீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை... இராணுவம் எம்மைக் காப்பாற்றவில்லை, எம் மக்களைக் கொன்றொழித்தது என்று சொல்ல முடியும் என்று எதிர் பார்க்கின்றீர்களா??

தூயவன் என்ன கன நாட்களுக்குபின்.கன்டதில் மிக்க மகிழ்ச்சி.நலமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.