Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களது எதிர்காலம் இருட்டாகவே உள்ளது: பிரித்தானிய ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களது எதிர்காலம் இருட்டாகவே உள்ளது: பிரித்தானிய ஊடகம்

[ செவ்வாய்க்கிழமை, 06 ஏப்ரல் 2010, 08:42 GMT ] [ தி.வண்ணமதி ]

அதிகாலை முதல், மதியம் கடந்து மாலையில் திடீரெனப் பொழிந்த மழையையும் பொருட்படுத்தாமல், ஒலிபெருக்கி வழியாகப் பெயர்கள் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

தோற்கடிக்கப்பட்டுவிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் முனைப்புடன் செயலாற்றிய முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு முகாமாக மாற்றப்பட்ட வவுனியா தொழில் நுட்பக் கல்லூரிக்குள்ளேயே இவ்வாறு பெயர்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

பெயர்கள் வாசிக்கப்பட்டவர்கள், வியர்வை வழிந்தோடக் காத்திருந்தார்கள். அதேபோல, இந்த முகாமிற்கு வெளியே, தடுப்பிலுள்ளவர்களது தாய்மார், சகோதர சகோதரிகள் மற்றும் பிள்ளைகள் தங்களது அன்புக்குரியவர்கள் விடுவிக்கப்படும் கணத்திற்காகக் காத்திருந்தார்கள்.

இவ்வாறு Guardian என்னும் புகழ்பெற்ற பிரித்தானிய ஊடகத்தில் அதன் செய்தியாளர் Jason Burke வவுனியாவில் இருந்து எழுதியுள்ளார். அதனை புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் தி.வண்ணமதி.

அவர் தொடர்ந்து எழுதியுள்ளதாவது:

இவ்வாறாக ஒவ்வொருவருடைய பெயரும் வாசிக்கப்பட அவர் எழுந்துவந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து விடுவிப்புத் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் கூடாரத்திற்குள் நுழைகிறார்கள். ஈற்றில், வாசலில் காத்திருக்கும் தங்களது குடும்பத்தவர்களுடன் இணைந்துகொள்கிறார்கள்.

இறுதிப் போரின் போது இடம்பெயர்ந்து முகம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 280,000 பொதுமக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கடந்த 10 மாதத்திற்குள் மீள்குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழர்களுக்குத் தனியான தாயகம் அமைப்பதற்காக 26 வருடங்களாக இடம்பெற்றுவந்த பிரிவினைவாதப் போரில் நேரடியாகப் பங்குபற்றியவர்கள் இன்றுவரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

இன்று வவுனியா தொழில் நுட்பக் கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிந்த 700 முன்னாள் போராளிகளும் பிறிதொரு தடுப்புமுகாமிலிருந்த 400 முன்னாள் போராளிகளும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விடுவிக்கப்பட்ட அனைவரும் ஏதோவொரு வகையில் உடல் உறுப்புகளை இழந்திருந்தார்கள். அச்சுறுத்தலாக அமைய மாட்டார்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கடுமையான புலன் விசாரணைகளின் பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

செம்பாட்டுப் புழுதியின் ஊடாக செயற்கைக் கால்களுடனும் ஊன்றுகோல்களுடனும் இவர்களில் பலர் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்குப் 'புனர்வாழ்வு' வழங்குவதற்காக சிறிலங்கா இராணுவத்தினரும் அரசாங்கத்தினரும் இணைந்து பரந்துபட்டதோர் திட்டத்தினை உருவாக்கியிருந்தார்கள்.

ஆங்கிலமொழி, தச்சுத்தொழில், இயந்திரத்திருத்தம், நீர்க் குழாய் பொருத்துதல் மற்றும் அடிப்படைக் கணினி அறிவு ஆகியன இங்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. தங்களது வாழ்க்கையினைத் தாமாகவே கொண்டு நடாத்துவதற்கு அவர்கள் ஏதாவது திறனைப் பெற்றிருக்கவேண்டும்.

'இவ்வாறகத் தனது குடும்பத்தினைக் கொண்டு நடாத்துவதன் மூலம் நாட்டினது அபிவிருத்தியில் பங்கெடுக்கவேண்டும்' என இந்தத் தடுப்பு முகாம்களுக்குப் பொறுப்பான கேணல் மனுஜா குணசிங்க தெரிவித்தார்.

'பணமின்றி, பொருத்தமான தொழிலின்றி முன்னாள் போராளிகள் சமூகத்தில் இருப்பது குற்றவியல் செயற்பாடுகளில் அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபடுவதற்கே வழிசெய்யும்' என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற இந்த விடுவிப்புடன் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை 9,000ஆகக் குறைவடையும்.

இதுதவிர, விடுதலைப் புலிகள் அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையிலும் 75,000 வரையிலான பொதுமக்கள் வவுனியா பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 'திறந்த' முகாம்களில் இன்னமும் வசித்து வருகிறார்கள்.

தற்காலிகப் பயண அனுமதியுடன் இந்த முகாமில் இருப்பவர்கள் வெளியில் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.

நீண்ட பல ஆண்டுகளாகத் தொடர்ந்த போரினால் பிளவுற்றுக் காணப்படும் இந்தக் சமூகத்தினை மீளவும் ஒன்றுபடுத்துவதற்கு அரசாங்கம் அபிவிருத்தி என்ற ஆயுதத்தினைக் கையில் எடுத்திருக்கிறது.

கடந்த வாரம் வவுனியா நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாட்டினது குடியரசு அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது அரசு இப்பகுதியில் முன்னெடுக்க எண்ணியுள்ள பெரும் உட்கட்டுமான அவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.

எது எவ்வாறிருப்பினும் இன்று விடுவிக்கப்பட்ட பலரது எதிர்காலம் நிச்சியமில்லாத ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருக்கிறது. இவ்வாறாக விடுவிக்கப்பட்ட அனைவருமே தமக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி நிலை தொடர்பாகப் பேசுகிறார்கள்.

காயமடைந்த தனது தாயாரை அரச மருத்துவமனையில் சேர்த்தபின்னர் படையினரிடம் தான் சரணடைந்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பினால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்ட சுபாஸ்கரன் சூரியகுமார் கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் பின்வாங்கி ஓடிக்கொண்டிருக்க மக்களின் மத்தியில் ஓர் எறிகணை வீழ்ந்து வெடித்தமையினாலேயே இந்தத் தாய் காயமடைந்திருக்கிறார்.

இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தபோது தாம் அவ்விடத்தினை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது இடம்பெற்ற சம்பவத்தில் தனது தந்தையும் இரண்டு சகோதரிகளும் கொல்லப்பட்டதாக சூரியகுமார் காடியனிடம் தெரிவித்தார்.

மோதல்களின் போது தங்களது வீடு முற்றாக அழிந்துவிட்டது என்றுத் தற்போது கண்ணிவெடிகளும் வெடிக்காத எறிகணைகளுமே வீட்டினைச் சுற்றி இருப்பதாகவும் இவர்கள் கூறினார்.

வவுனியாவிலுள்ள இன்னொரு முகாமில் வசித்துவரும் குடும்பத்தின் எஞ்சிய நால்வருடனும் இணைந்துகொள்வதற்காக 10 மாதத் தடுப்பின் பின்னர் 28 வயதான சுரேஸ்குமார் தற்போது செல்கிறார்.

மாணிக்கம் பண்ணை என அறியப்பட்ட இந்த முகாமில் நிலைமைகள் மிகவும் மோசமடைநது காணப்படுகிறது. சொந்தக் கிராமம் பாதுகாப்பானது என அரசாங்கத்தினால் அறிவிக்கப்படும் வரைக்கும் இவனது குடும்பத்தினால் சொந்த ஊருக்குத் திரும்பமுடியாது. நாங்கள் எப்போது ஊருக்குப் போவோம் என்பது எவருக்கும் தெரியாது என்றார் சூரியகுமார்.

அனைத்து அகதிகளையும் கூடியவிரைவில் மீளக் குடியேற்றுவதற்கு அரசாங்கம் விருப்புடன் இருப்பதாகவும் நீண்ட காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் வெடிக்காத எறிகணைகள் சிதறிக்கிடப்பதாகவும் வவுனியாவிலுள்ள மூத்த தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுக்கான தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பலர் நேரடியாக மாணிக்கம் பண்ணை முகாமிற்கே சென்றார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுத தளபாடங்களைக் காவிச்சென்றபோது காலொன்றை இழந்த தன்னுடைய மருமகன் விடுவிக்கப்படும் கணத்திற்காக 44 வயதுடைய மகேந்திரன் நாகேஸ்வரி என்ற பெண் அதிகாலை முதல் முகாமிற்கு வெளியே காத்திருந்தார். மாலை நான்கு மணிக்கு இவரது மருமகன் விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.

மாணிக்கம் பண்ணை முகாமின் சிறிய கூடாரத்திற்குள் 10 பேர் வசிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாலும், தனது மருமகன் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், 'அனைவரும் சந்தோசமாக ஒன்றாக இருப்போம்' என நாகேஸ்வரி கூறினார். 'குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து நெடுநாட்களாகிவிட்டன' என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்ட 24 வயதுடைய கணேஸ் தனுசன் என்பவர் போர் முடிவடைவதற்கு ஓரிரு மாதங்களின் முன்னர் தனது கையில் பலத்த காயமடைந்தார்.

உறவினர்களைக் கண்டுபிடிப்பது தனது முதலாவது பணி என்றும் விடுதலைப் புலிகள் கட்டாயமாகத் தன்னை இணைத்துக்கொண்டமையினால் இடைநின்று போன கல்வியினைத் தொடர்வது இரண்டாவது பணியென்றும் இவர் கூறுகிறார்.

தனுசனுடைய குடும்பத்தாரும் உறவினர்களும் மாணிக்கம் பண்ணை முகாமில் வசித்து வரலாம், அல்லது உறவினர் நண்பர்கள் வீடுகளில் இருக்கலாம் அல்லது மீளக் கூடியேற்றப்பட்ட பகுதியில் குடியேறியிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மீளவும் குடியேறி வருகிறார்கள். தங்களது விடுதலைப் பத்திரத்தினைக் கவனமாகப் பற்றிப் பிடித்தவாறு பிளாஸ்ரிக்கால் ஆன அடிப்படைச் சமையல் பாத்திரங்களுடனும் நிவாரணமாக வழங்கப்பட்ட அரசி மற்றும் மாவுடனும் இவர்கள் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு வருகிறார்கள்.

'எனது உறவுகள் எங்கு இருக்கின்றன என எனக்குத் தெரியாது. இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினமான பணியாக இருந்தாலும் நான் ஒருமுறை முயன்று பார்ப்பேன்' எனத் தனுசன் கூறுகிறான்.

'தடுப்பு முகாமில் 10 மாதங்களாக இருந்ததைத் தாங்கிக்கொள்ளமுடிந்தது. ஆனால், குடும்பத்திலிருந்து பிரிந்திருக்க நேர்ந்ததுதான் கடுமையானது' என அவர் தொடர்ந்தார்.

மாலையாகியதும் வவுனியா தொழினுட்பக் கல்லூரி வாயிலில் வரிசையாக நின்ற மக்கள், தங்களது உறவினர்கள் இன்னமும் விடுவிக்கப்படாததுகண்டு முணுமுணுத்தார்கள்.

விடுவிக்கப்படவிருக்கும் அனைவரும் இரவானாலும் விடுவிக்கப்படுவார்கள் என கேணல் குணசிங்க தெரிவித்தார். 'இவர்கள் அனைவரும் எங்களது சகோதர சகோதரிகளே. நாங்கள் இலங்கையர்கள். நாங்கள் ஒரே நாட்டின் கீழ் வாழுவோம்' என அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

ஏழு பிள்ளைகளின் தாயான குமரகுரு செனிஸ்ரா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட தனது கணவர் விடுவிக்கப்படும் கணத்திற்காகக் காத்திருக்கிறார். கடந்த 10 மாதங்களாக இவரது கணவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். தனது இளைய பிள்ளையினை அவர் கையில் வைத்திருந்தார்.

'இருள் கவிழ்வதற்கு முன்னர் அவரை விடுதலை செய்தார்களெனில் நல்லது. எனது கணவர் தன் பிள்ளையினை வெளிச்சத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும். இதுவரை அவர் தன்னுடைய இந்தப் பிள்ளையினைக் காணவில்லை' என்றார் செனிஸ்ரா.

* இந்த கட்டுரையை எங்கும் மீள் பிரசுரம் செய்பவர்கள் - இது புதினப்பலகை இணையத் தளத்திற்காகத் தி. வண்ணமதி-யினால் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுப் பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.