Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈகத்தால் அடையப்பெற்ற தேசியத்தை பதவிக்காய்; பலிகொடுக்கும் தமிழ்க்கட்சிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈகத்தால் அடையப்பெற்ற தேசியத்தை பதவிக்காய் பலிகொடுக்கும் தமிழ்க்கட்சிகள்!

மீண்டும் மீண்டும் தந்தை செல்வா அவர்கள் கூறிய „ தமிழினத்தை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்“ என்ற வரிகளே இன்றைய நிதர்சனமாகிக் காதில் ஒலிக்கிறது. 62 ஆண்டுகாலத் தமிழரின் அடிமை வாழ்வில் 30 ஆண்டுகாலம் அமைதிவழி மிதவாதம் நாடாளுமன்றம் இலங்கைத்தீவு என்ற சுற்றிலும் அதனையடுத்து வந்த 32 ஆண்டுகாலம் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு தற்காத்துக் கொள்ளும் நோக்கில் மென்முறைவழியிலான சனநாயமுறைமைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் வன்முறைவழியிலான போராட்டம், இலங்கைத்தீவையும் பிராந்தியத்தையும் கடந்து அனைத்துலக பரிணாமம் என்ற சுற்றிலும் தமிழரது உரிமைப் போராட்டமானது காத்திரமானதொரு கட்டத்துள் பிரவேசித்திருந்திருந்தது என்பது யாமறிந்த விடயமாகும். ஏறக்குறைய உலகினால் அங்கீகரிக்கப்படாத ஆனால் உலகின் தொடர்பாடலுக்குட்பட்ட தமிழரது நடைமுறை அரசாகவும் உலகத்தமிழினத்துக்கு ஓர் நம்பிக்கை தரும் வகையிலும் தமிழரின் தொன்மையை மீளநிறுவி ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள்; தனித்துவமான ஆட்சியைத் தமது தாயகப் பகுதியில் தமிழர்கள் நிறுவியிருந்தனர். விடுதலைக்காகப் போராடும் காலத்திலேயே ஒரு நாட்டிற்கு இருக்க வேண்டிய முப்படைகள் உட்பட அத்தனை கட்டமைப்புகளையும் உலகத் தமிழினத்தின் உதவியோடு நிறுவித் தன்னாட்சி நோக்கி உறுதியாக நகர்ந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு விடுதலை அமைப்புகள் தோற்றம் கொண்டு தமிழிளையோரிடையே புயலாகி வீசிய தன்மான உணர்வின் வெளிப்பாடாய்த் தலைநிமிர்ந்து வாழத் தாயகம் தேவையென்பதைப் பறைசாற்றி நின்றதோடு, அதனைப் பெரும் கடமையாய்க் கொண்டு களமாடிய ஆயிரமாயிரம் வீரர் தம்மைத் தாய் மண்ணுக்காக ஆகுதியாகியதோடு, இன்றும் பல்லாயிரக் கணக்கான இளையோர் தமது அவயவங்களையும் இழந்து சிறைகளில் வதைகளுடன் காலத்தைக் கழித்தவாறும் உள்ளமை நாம் காணும் விடயமாகும். விடுதலைக்காகப் புறப்பட்ட அமைப்புகள் விலைபோனதும், முரண்பட்டதும், மோதிக்கொண்டதும் அழிவைச் சந்தித்ததும் என்று மாபெரும் இன்னலை தமிழினம் எதிர்கொண்டவாறு விடுதலைக்காகத் தம்மை ஒற்றைத் தேசியம் என்ற ஒரே குறியீட்டின் கீழ் அனைத்தையும் கடந்து தமிழீழ விடுதலை என்று உயரிய இலட்சித்திற்காக எந்தச் சமரசமும் இன்றிக் களத்திலே போராடிய தமிழீழ விடுதபை; புலிகளின் பின்னே அணிதிரண்டிருந்தனர் என்றால் மிகையன்று. அந்த ஒற்றைத் தேசியத்தைச் சிதைக்கும் விதமாகத் தமிழமைப்புகளுள் இருந்தவர்களும் பதவிகளுக்காக விலைபோன அசிங்கங்களும் நிகழாமலும் இல்லை. எந்த மக்களுக்காகப் போராடப் புறப்பட்டார்களோ அந்த மக்களையே கொன்றும் கடத்தியும் தமது கைவரிசையைக் காட்டத் தமக்கான படையணிகளை சிறிலங்கா சிங்கள இனவாத அரசினது ஆசீர்வாதத்தோடு ஒரு பகுதியினராகச் சிறிலங்காவின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் சில குழுக்கள் இந்தியாவின் செல்லப் பிள்ளைகளாக இந்தியாவிலும் எனத் தமது கைவரிசையைக் காட்டியவாறு இருந்தன இன்றும் இருக்கின்றன.

இந்தக் கடந்துவந்த நெருப்பாறுகளினூடே இன்றைய யதார்த்தபூர்வமான நிலையை மறுவாசிக்குட்படுத்தி உறுதியானதொரு முடிவைத் தற்போதைய தளத்தில் உள்ள சாதக பாதக நிலமைகளை ஆய்வுசெய்து எதிர்கொள்ள வேண்டிய கடப்பாடு இன்று களத்திலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகள் குழுக்கள் அனைத்துக்கும் ஒரு வரலாற்றுக் கடமையாக உள்ளமையைப் புறந்தள்ளி நிற்பதானது ஏற்புடையதாக அமையுமா என்பதைப் பழுத்த அரசியல்வாதிகள் என்போரும் சுறுசுறுப்பான அரசியலே இன்றைய தேவையென்போரும் உணராது சிதறுண்டு நிற்பதானது பொருத்தமானதா என்பதை மனங்கொள்ள மறுப்பதானது வரலாற்றை மறுதலிப்பதாகவே கொள்ள முடியும். எனவே இன்றைய சூழலில் தமிழரின் தலைவிதியைக் கருத்திற் கொண்டு காத்திரமான ஒரு முடிவுக்கு அரசியல்வாதிகளென்போர் வரவேண்டியது அவசியமாகும். கடந்து செல்லவிருக்கும் தேர்தலானது உங்களின் பலத்தைப் பரிசோதனை செய்யும் களமன்று. மாறாக இது தமிழர் தமது இருப்பு வாழ்வு விடுதலை தொடர்பாக உலகுக்குக் காத்திரமான செய்தியைச் சொல்லும் களமேயன்றி வேறில்லை. தமிழினத்தைப் பொறுத்தவரை சிறிலங்காவின் நாடாளுமன்றமானது தமிழினத்தைக் கருவறுக்கும் சட்டங்களையியற்றும் உயரங்கமாக இருந்து வருகின்றதென்பது தமிழினம் அறியாத விடயமல்ல. சிறிலங்கா நாடாளுமன்றமானது தமிழினத்தினது வாழ்வுக்காக கடந்த அறுபத்திரெண்டு கால அமர்வில் ஏதாவது செய்துள்ளதா? என்ற வினாவைத் தொடுப்பதனூடாகச் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாரம்பரியக் கொள்கைகளைப் புரிந்து கொள்ள முடியும். இதற்கெனப் புதிதாக எதையும் தேடவேண்டிய தேவையுமில்லை. ஆனால் இந்த நெருக்கடியான சூழலில் இந்தத் தேர்தலை ஒரு களமாக மாற்றி எமது தேவை என்ன என்பதை உலகுக்குச் சொல்லப் பயன்படுத்தவதில் ஒன்றிணைய முடியாதவர்கள் மறைமுகமாகச் சிங்கள மற்றும் பிராந்தியப் பயங்கரவாத அரச இயந்திரங்களுக்கு வாய்ப்பினை வழங்கும் கைங்கரியத்தை செய்வதாகவே கொள்ள முடியும்.

கடந்து செல்லும் பொழுதுகளில் ஒற்றுமைக்காகப் தாயகத்திலும் புலத்திலுமாகப் பாரபட்சமின்றி குரல்கொடுத்த தமிழமைப்புகளையோ, அவர்களது வேண்டுகோளையோ நிராகரித்துவிட்டுப் பல்வேறு திகைளாகப் பிரிந்து நின்று எதைச் சாதிக்கப் போகிறீர்கள் என்பதே தமிழினத்தினது கேள்வியாக நிற்கிறது. சிறிலங்கா நீதிமன்றினூடாக வட-கிழக்கைத் துண்டாடிய சிங்களப் பயங்கரவாத அரசானது தேர்தலினூடாகத் தமிழ்க் கட்சிகளைத் துண்டாடியதோடு பல சுயேச்சைகளைக் களத்திலே நிறுத்தி 'சிறிலங்கா’ நாடாளுமன்றிலே தமிழினத்தினது பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதூடாக, சிங்களக் கட்சிகளைத் தமிழினம் ஏற்றுக்கொண்டுள்ளது, அவர்கள் ஒரு தனித் தேசியமாக இல்லை என்பதை இந்தத் தேர்தலூடாக நிறுவி தமிழரைக் கபளீகரம் செய்யத் திட்டமிட்டுச் செயற்படும் வேளையில் தேர்தல் களத்திலே நிற்கின்ற பிரதானமான கட்சிகளாகப் பார்க்கப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தமிழ்த் தேசியத்தின் நலனுக்காகவேணும் இறுதி நேரத்திலாவது ஏதாவது விட்டுக் கொடுப்புகளைச் செய்ய முன் வருவார்களாயின் தமிழினத்தின் இருள் சூழ்ந்த வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாக அமையும். அரசுத்தலைவர் தேர்தலில் சரத்தோடும் மகிந்தவோடும் நின்றது இராசதந்திரமென்றால் இன்று ஏன் அதே இராசதந்திரத்தை பின்பற்ற முடியவில்லை. தமிழினத்துக்காக எந்த நன்மையையும் பெறமுடியாத சிறிலங்கா நாடாளுமன்றுக்கு ஒற்றுமையாக ஒரே அணியாகத் தமிழர்கள் செல்ல வேண்டுமென்பதே தமிழினத்தினது வேணவாவாகும். ஏனெனில் எதிர்கட்சியாகக் கூடத் தமிழ்க் கட்சிகள் வந்துவிடக் கூடாது என்பதில் தமக்கிடையே உறுப்பினர்களை பரிமாறி, எதிர்க்கட்சியாயிருந்த அமரர் அ.அமிர்தலிங்கத்தை எதிர்கட்சிப் பதவியில் இருந்து தூக்கியெறிந்த பாரம்பரியம் மிக்க சிறிலங்கா நாடளுமன்றுக்காய் கட்சிகளாய் சிதறுண்டு வெற்று காட்சிகளாய் நிற்பது நன்மையா? சரி தேர்தலில் உங்களது ஷநான்’ என்ற தன்முனைப்புத் தோல்வியுற்றால் என்ன நன்மை என்றாவது சிந்தை கொள்வீர்களாயின் ஏதாவது ஆக்கபூர்வமான மாறுதல்கள் நிகழலாம். ஏனெனில் தமிழரது இன்றை பரிணாமத்திற்காய், உலகில் உள்ள ஒரு சில அரசுகளாவது தமிழருக்கான தீர்வை முன் வையுங்கள் என்று கேட்கிறார்கள் என்றால் அது ஒன்றும் இந்த நாடாளுமன்றினாலோ அல்லது சனநாயகத்தைக் காக்கவோ அல்ல. மாறாகக் காலி முகத் திடலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை அர்ப்பணிப்போடு கூடிய பெரும் விலையாகத் தமிழினம சிந்திய குருதியும் விதைக்கப்பட்ட உயிர்களின் க் கொடுத்ததன் விளைவே. அதனை இந்த அனைத்துலக சமூகத்தால் எழுந்தமானதாகப் புற்ந்தள்ளி விடமுடியதென்ற நிலையிருக்கும் இவ்வேளையில் நீங்கள் சர்வசாதாரணமாகத் தூக்கியெறிவதானது சரியானதா?

முன்னைய காலங்களில் தனிச்சிங்களச் சட்டமென்றும் குடியேற்றமென்றும் கூவி வாக்குக் கேட்ட காலம் மாறி இன்று இலக்கைத்தீவில் ஒரேயொரு இனம்தான் இருக்கிறது. நாமே தமிழரை அழித்து எஞ்சியோரை அடிமைகளாக்கினோம் என்று கூவி வாக்குக் கேட்கும் சிங்களத் திமிர்த்தனமான வேட்பாளர்களைக் கொண்ட நாடாளுமன்றில் போய் தமிழருக்கு நியாயம் கேட்க முடியுமென்று மனப்பால் குடிப்பவர்கள் சிறிலங்காவின் அரசியலின் அரிச்சுவடிகளையே அறியாதவர்களாகவே பார்க்க முடியும்.

வடகிழக்கில் இதுவரை காலமுமில்லாத அளவில் வேட்பாளரின் தொகை, நடைபெறும் நிகழ்வுகள் யாவும் தமிழினத்தைச் சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலினுள் தமிழ் அரசியல்வாதிகள் கொண்டுவந்து விட்டுள்ளமையையே காட்டுகின்றது. ஒரு நாடாளுமன்ற இருக்கைக்காக ஐம்பத்தியைந்து வேட்பானரெனில் நிலமையின் மிகமோசமான சூழலைக் காட்டிநிற்கிறது. எனவே தமிழினத்தினது இருளகற்றச் சிந்திக்கமாட்டீர்களா?

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.