Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் வெற்றி...

Featured Replies

கூட்டமைப்பின் வெற்றி...

2004 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களை வென்றிருந்த நிலையில், இம்முறை தேர்தலில் அந்தக் கூட்டமைப்பு 12 இடங்களையே வென்றுள்ளது.

அந்தக் கூட்டமைப்பு மேலும் சில ஆசனங்களை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தெரிவான சிலர் அதிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிட்டனர்.

அப்படியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரும் வெற்றி இம்முறை வெற்றி பெறவில்லை.

2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருந்த சில பழைய முகங்கள் மீண்டும் இம்முறை தெரிவாகியுள்ளனர்.

மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டுத் தேர்தலின் போது விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர் எனபதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கு காரணம்

அரசுக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்கும் தமிழ் கட்சிகள் ஒரு புறத்திலும், தேசியம், சுயநிர்ணயம் போன்ற கொள்கைகளை தொடர்ந்து கூறி வரும் கட்சிகள் இன்னொரு புறமும் இருக்க, இந்த இரண்டுக்கும் இடையே ‘மிதவாத போக்குடன்’ போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே இம்முறை வெற்றி கிடைத்துள்ளது என்று கூறுகிறார் பத்திரிகையாளர் டி பி எஸ் ஜெயராஜ்.

அப்படியான ஒரு போக்குக்காகத்தான் தமிழ் மக்கள் பெருமளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்றும் அவர் கூறுகிறார்.

அதே நேரம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இன்றைய சூழலில் தமிழருக்காக ஒற்றுமையான, பலமான ஒரு குரல் ஒலிக்க வேண்டும் என்கிற உணர்வும் பரவலாகக் காணப்பட்டது என்றும் அதுவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு வழி வகுத்தது என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

மோதல் அரசியல் பலன் தராது

மகிந்தவுடன் சம்பந்தர்

இலங்கையில் அரசியல் தீர்வு குறித்த விவாதங்களும் சர்ச்சைகளும் தொடருகின்ற நிலையில், அரசுடனான மோதல் போக்கு தீர்வுக்கு வழி செய்யாது என்றும் டி.பி.எஸ் ஜெயராஜ் கூறுகிறார்.

தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையாகவே இந்த வெற்றியை கருதுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அதிகாரப் பரவலாகக்கல் மூலமான தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறித்தி வருகின்ற நிலையில், ஒற்றையாட்சிக்கு வெளியிலான தீர்வுக்கு சாத்தியமில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறிவருகின்றார்.

வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ் கட்சிகளுக்கு இடையேயான ஒரு பலப்பரீட்சையாக இந்த தேர்தல் அமைந்துள்ளதாகவும் ஜெயராஜ் கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் கொடுத்துள்ள வெற்றி அல்லது ஆணை என்பது கடும்போக்கு அரசியல் செய்வதற்கான ஆணை அல்ல- டி.பி.எஸ் ஜெயராஜ்

அந்தத் தேர்தல் முடிவடையும் வரை எல்லாக் கட்சிகளுமே தங்களுடைய தற்போதைய நிலைப்பாடுகளை கைவிடப் போவதில்லை என்றும் கூறும் அவர், அதற்கு பிறகே அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும் என தான் கருதுவதாகவும் கூறுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் சூடு இன்னமும் ஆறாத நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் சரி தங்களது நிலைப்பாடிலிருந்து இறங்கி வருவது உடனடியாக சாத்தியமாகாது என்பதும் டி பி எஸ் ஜெயராஜின் வாதமாக இருக்கிறது.

ஒற்றையாட்சியும் சமஷ்டியும் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில், இந்த இரண்டுக்கும் இடையில் அரசியலுக்கான இடம் நிச்சயமாக இருப்பதாக கூறும் அவர், அந்த இடத்தை அடைய வேண்டியதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்ய வேண்டிய வேலை என்றும் கருத்து வெளியிடுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100410_dbsjeyarajonpolls.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது டக்ளஸின் நிலப்பாடு.

ஒற்றையாட்சிக்கும் சமஸ்டிக்கும் இடையில் ஒரு தீர்வு.

மாகாண சபை முறையிலான தீர்வாக்கும்.

மகிந்தவிற்கு 3/2 பெரும்பான்மை கிடைத்தால் அது கூட இல்லாமல் போகலாம்.

பின்னர் முன்பு இருந்த மாதிரி மாவட்ட சபை.

அல்லது யாழ்ப்பாணத்தில் மகிந்த கூறியது போல் மக்கள் சபை.

அது கூட இல்லாவிட்டால் இந்திய அறிவுரைப்படி பஞ்சாயத்து முறை.

வாத்தியார்

................

Edited by vathiyar

  • தொடங்கியவர்

அதாவது டக்ளஸ் போல கூட்டமைப்பும் அரசியல் செய்ய வேண்டும்

என்கின்றார் கட்டுரையாளர்.

ஒற்றைய்ய்ட்சிக்கும் சம

அதைத்தான் கூட்டமைப்பு செய்ய போகுது எண்டு எதிர்வு கூறுகிறார்... நீங்கள் டக்கிளசோடை கூட்டமைப்பை ஒப்பிடுவது பல மானஸ்தர்களுக்கு கடுப்பை கிளப்பும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.