Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வி.உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்தமடல் - சேரமான்

Featured Replies

சேரமான் என்ற பெயரில் பத்திரிகை ஆசிரியரின் திருவிளையாடலே .... யாரிந்த பத்திரிகை ஆசிரியர் யாரும் தெரிந்தால் சொல்ல முடியுமோ? இவரை நாடுகடந்த அரசில் இணைக்கவில்லை என்ற ஆதங்கமோ? இவரை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினாலே எல்லா பிரைச்சனைக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

இவரை அறிவது ஒன்றும் கஷ்டமில்லை

எனக்குத் தெரிந்த ஒரு சிங்கள நண்பர் முன்னாளில் சிறிலங்கா போலீசில் வேலைசெய்தவர்

விரக்தியின் காரணமாக வேலையை விட்டு சுயதொழில் செய்பவர் (என்ன தொழில் என்று கடைசியா சொல்லுறன்)

ஒருமுறை சந்திக்கும்போது சொன்னார் வெளிநாட்டில இருக்கிற தமிழாக்களை குழப்பவெண்டே சிங்கள புலனாய்வுத் துறையினர் நூற்றுக்கனக்கில எங்கட தமிளாக்களுக்கே காசை வாரி வழங்குகிறார்களாம்.

அவங்களுக்கு தன்னை விட சம்பளம் கூடவாம்.

உதெல்லாம் பார்த்து சகிக்கேலாமேலோ அல்லது வேறேன்னத்துக்கோ வேலையை விட்டுட்டு

பிசினேச்சு பண்ணுறார் என்ன பிசிநேசு தெரியுமோ வெளிநாட்டில இருக்கிற தமிழா சாதிகளுக்கு மிளகாய்த்தூள் செய்து அனுப்பும் ஒரு நிறுவனத்தில கொளுத்த சம்பளத்தில இருக்கிறார்.

(எங்களுக்கு மிளகாய்த்தூள் அனுப்பிறவர் என்ண்டால் நல்லவராத்தானே இருக்குமெண்டுதான் அவரோட பழகிறன்.)

கிட்டத்தட்ட ஒரு அம்பதுக்கு மேல கொழும்பில இருந்தே முழுநேர வேலையா இதை செய்யினமாம்.

அவர்களுள் பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுதல் இணையங்களுக்கு கருத்தேளுதுதல் என்று கனக்க

வேலைகளாம்.

யாழ்க்கள உறவுகளுக்கே தெரியும் இஞ்ச்செயும் சில பினாமிகள் உலாவுவது. மிச்சமெல்லாம் வெளில இருக்கிறாங்களாம்.

இதை அந்த மனுசனும் உறுதிபடக் கூறவில்லை ஒரு கேள்விப்பாட்டுடந்தான் சொன்னார். இதை வேடிஎண்டு தட்டிக்கழிக்கவும் முடியாது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசை எதிப்பதால் எந்த இலாபமும் வந்து விடப் போவதில்லை.அதை ஆதரிப்பதால் இலாபம் வராவிட்டாலும் யாருக்கும் நட்டம் எதுவும் வரப் போவதில்லை ஆகவே ஆதரிப்போம். எம்முடைய இனத்தின் விடிவுக்காக எல்லாவகையான பரிசோதனை முயற்சிகளையும் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசை நம்பிக்கையுடன் வரவேற்போம்

மக்களே சுயமாக சிந்தித்து 2 ம் திகதி வாக்களிப்புக்கு அணி திரள்வோம்.

நாடு கடந்த தமிழீழ அரசை அமைத்து எமது இலக்கை நோக்கி நகர்வோம்.

வாத்தியார்

...............

இந்தியா நாடாளுமன்றத்தேர்தல் வரும் போது, ஜெயலலிதாவை வாழ்த்தி புலம் பெயர்ந்த தமிழர்கள் கடிதம் எழுதினார்கள். சிறிலங்கா நாடாளுமன்றத்தேர்தலின் போது , சம்பந்தருக்கு ஒரு கண்டனக் கடிதம் என்றும், கஜேந்திரனுக்கு ஆதரவுக் கடிதம் என்றும் எழுதினார்கள். இப்பொழுது நாடுகடந்த தமிழிழம் தேர்தல் என்றதும் உருத்திரகுமாரனுக்கு கடிதம் எழுதுகிறார்கள். சங்கரி, கலைஞரை விட அதிக கடிதம் எழுதி சாதனை படைக்கிறார்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேரமானுக்கு இன்னமும் ஒருவரும் தகுந்த பதில் கொடுக்க முடியவில்லை.இவர்களில் பலர் சேரமானுக்கு பதில் கொடுப்பதற்கு பதில் உலுத்திரகுமாரனுக்கு மேலாக தங்களுடைய விசுவாசத்தiயே எழுதுகிறார்கள்.!!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு வருட காலப்பகுதியில் என்னென்ன சாதனைகளை சேரமான் தொடக்கம், உருத்திரகுமாரனுக்குப் பதில் எழுதுகின்ற மேதாவிகள் சாதித்தார்கள் எனப் பட்டியல் போட்டுத் தந்தால், அதன் பிற்பாடு, அவர்களின் கருத்தில் உள்ள நியாயத் தன்மை தொடர்பாக ஆராயலாம். நாடுகடந்த அரசின் செயற்பாடு சரி தவறு தெரியாது. ஆனால் அதைத் விஞ்சி யாருமே இது வரை காலத்தில் தாயகக் கோட்பாடு தொடர்பாக வலியுறுத்தியதில்லை.

புலிகளின் பெயரைப் பாவிக்கவில்லை. புலிக்கொடி பாவிக்கவில்லை என்று வஞ்சக் கருத்து எழுதுபவர்களிடம் ஒரு வேண்டுகோள்..

இத்தனை காலமாகப் புலிகள் மீது தடை உள்ளபோது, அந்தத் தடையை நீக்க நீங்கள் எவருமே வீதியிலோ, நீதிமன்றிலோ இறங்கிப் போராடத் தயாரக இல்லை. புலிகள் மீது தடை விழுந்தபோது ஓடி ஒளிந்தீர்களே அன்றி, அந்த நேரம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருந்தால், இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது. அந்தத் தடையும் எமுது விடுதலைப் போராட்டத்திற்கு விழுந்த சுருக்குக் கயிறாக மாறியிருந்தது என்பதை மறைப்பதற்கில்லை.

நாடுகடந்த அரசு நடைமுறைப்படுத்தும்போது அது பல சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வைப்பதற்காகத் தான், புலிகளின் அடையாளத்தைக் காட்டும்படி பல இனந்தெரியாத நபர்களின் கட்டுரைகள் இருக்கின்றன என்பது தெளிவானது. ஒரு விடயத்தைக் கொண்டு வந்து அதன் நியாயத்தன்மையை வலியுறுத்திய பின்னர் அடையாளம் செய்வது என்பது காலத்தின் தேவை கொண்டு சாத்தியமாகலாம். ஆனால் வர முன்பே அது தொடர்பாக பிழையான கண்ணோட்டங்களையும், கருத்துக்களையும் உருவாக்குவது என்பது அதில் நிறைய நஞ்சுக் கருத்துக்களையும், வாதங்களையும் மட்டுமே கொண்டதன்றி வேறு ஒன்றுமில்லை.

நீங்கள் யாராவது ஏதாவது செய்திருந்தால் உருத்திரகுமார் போன்றவர்களுக்கு வேலை இல்லாதமல் Nhயிருக்கும். ஆலையில்ல ஊருக்கு இலுப்பம்பூச் சக்கரை என்று (உங்களின் பார்வையில்) ஏற்படுத்தியது நீங்கள் தான். ஏன் என்றால் ஒரு முடியைக் கூட நீங்கள் இந்த ஒரு வருட காலத்தில் புடுங்கியிருக்கவில்லை....

அவர் .......பண்பாட்டு கதிரையை விட்டு தனது முகமூடியை கழட்டிவிட்டு வந்தால் நிறையப் பேர் பதில் கொடுக்க காத்திருக்கிறார்கள்

மன்னர் மன்னா சேரமான் பெருமாளே!

உங்கள் கலை பண்பாட்டுச் சேவை தொடரட்டும்

புலத்து முன்னாள், இன்னாள் அதிகார மையங்கள் ஒரு வருடம் மௌனித்து இருந்திருந்தால். புலத்தில், ஒரு குழப்பமும் ஏற்பட்டிருக்காது, புலத்து அதிகார மையங்கள் ஒரு வாரம் கூட மௌனித்திருக்காது, புலத்து அமைப்புகளை தமது அதிகாரத்திற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதலை ஆரம்பித்து, தாக்குதலும், தற்காப்பு யுத்தமும் தான் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றது. இந்த அதிகார மையங்களுக்கிடையில் புலத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இடம்பெற்று வரும் தாக்குதலும், தற்காப்பு யுத்தமும், புலத்தில் இயங்கு நிலையில் இருந்த அனைத்து கட்டுமானங்களையும் செயல் இழக்கவைத்துள்ளது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதனூடாக, மாவீரர்களின் ஈகத்தின் பெயரால், தலைவனின் பெயரால், தமிழ்த்தேசியத்தின் பெயரால் தொடர்ந்தும் மக்களை மந்தைகளாக மேய்கலாம் என்ற கனவுலகில் வாழும் தலைமைகளின் கனவு இனிப் பலிக்குமா? கடந்த கால அனுபவம் நிகழ்காலத்திற்குப் பொருந்துமா?

எப்படி இந்த இரண்டு அதிகார மையங்களும் உருவாகியது.?

புலம் பெயர் தேசத்தில் இரண்டு அதிகார மையங்களின் கடந்த கால செயற்பாட்டின் தாக்கம் எத்தகையது? என்ன காரணத்தால் அணி பிரிந்து நிற்கின்றார்கள் என்பதை அறியாது, இந்தக் குழு நிலைவாதிகளுக்காக கோசம் போடுவதை நிறுத்தி. தமிழ்த்தேசிய எழுச்சிக்கு என்ன செய்வது என்பதை சிந்தித்துச் செயற்படுவது. தமிழ்த்தேசிய உணர்வாளர்களின் கடமை.

Edited by kalaivani

சேரமானுக்கு இன்னமும் ஒருவரும் தகுந்த பதில் கொடுக்க முடியவில்லை.இவர்களில் பலர் சேரமானுக்கு பதில் கொடுப்பதற்கு பதில் உலுத்திரகுமாரனுக்கு மேலாக தங்களுடைய விசுவாசத்தiயே எழுதுகிறார்கள்.!!

மாட்டைப் பற்றிக் கேட்டால் மாட்டை மரத்தில் கட்டிவிட்டு மரத்தைப்பற்றி எழுதுபவர்கள் அதிகம் யாழில்

உருத்திரகுமாருக்கு தெரியும் அது யார் என்று அதனால் தான் அவர் உடனே மறுப்பறிக்கை விடுகின்றார் ?

உருத்திரகுமார் சேரமானுக்கும் அதைத் தாங்கிய ஈழமுரசுக்கும், சங்கதிக்கும் பயம் போலும் அல்லது மற்றவர்களை உதாசீனம் செய்கின்றார் ?

அது ஏன் ?

உண்ணா நோன்பிருந்த பரமேஸ்வரன் அறிக்கைவிட்டால் அதற்கு ராஜநாதன் பெயரில் ஒரு ஆதரவு அறிக்கை வருகின்றது

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக உமது கேள்விகளை இங்கே பதியவும்

Quote

View Postதராக்கி, on 25 March 2010 - 04:21 AM, said:

நிச்சயமாக ஞாயிற்றுக்கிழமைக்குள் பதிலகள் வரும்..

நா.க.அரசின் இணையத்தின் கேள்வி பதிலுக்கு நான் யாழில் எல்லோராலும் எழுதப்பட்ட கேள்விகளை அனுப்பியிருந்தேன்

ஆகக் குறைந்தது கிடைத்தது என்று கூட ஒரு பதில் இல்லை

உருத்திரகுமார் எல்லோருக்கும் பதிலளிக்க நேரம் இல்லை என்றால் வேறு உறுப்பினர் மூலம் பதிலளித்திருக்கலாம் அது கூடச் செய்யவில்லை

ஆனால்

நீங்கள் தொடர்ந்து பின்னோக்கிப் பார்த்தால் உருத்திரகுமார் சங்கதிக்கு மட்டுமே மறுப்பறிக்கை விடுகின்றார் ?

அது தவிர கேபி யை அவர் விட்டுக்கொடுக்கவும் விரும்பவில்லை என்றும் தெரிகின்றது

வட்டுக்கோட்டை, நா.க.அரசு என்று பிழவு பட்டதற்கு கேபியும் உருத்திரகுமாரும் தான் காரணம் என்று பலரும் சொல்லுகின்றார்கள்

புலிகளால் நிதி மோசடிகளால் விலத்தி வைக்கப்பட்ட கேபியின் முன்னால் விசுவாசிகளை எல்லாம் கேபி பதவிக்கு வந்தவுடன் தன்னுடன் சேர்த்து கொண்டதால் தான் இறுதிவரை இருந்த அமைப்பாளர்கள் கேபியுடன் சேரவிரும்பவில்லை அவ்வாறு விலத்தப்பட்டவர்களில் நா.க.அரசின் செயற்பாட்டாளர்களும் , வேட்பாளர்களும் அதில் அடக்கம்

இதன் காரணமாகத்தான் புலிகளால் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தை தொடர்ந்து ஏனைய நாடுகளிலும் அந்த செயற்பாட்டாளர்களால் தொடரப்பட்டது

ஆனால் அவர்கள் நா.க. அரசை எதிர்த்து பழித்து அறிக்கை எதுவும் விடவில்லை மாறாக இரண்டும் இரு அச்சாணிகள் என்று தான் ஆரம்பம் முதல் சொல்லி வருகின்றார்கள்

ஆனால் நா.க.அரசின் சில செய்ற்பாட்டாளர்கள் வட்டுக்கோட்டை கொட்டைப்பாக்குக்கும் செல்லாது என்று முட்டுக்கட்டை போட்டார்கள்

இல்லாவிட்டால் அது கனடாவில் பெரு வெற்றி அடைந்திருக்கும்

அதில் உருத்திரகுமாருக்கு தொடர்பிருக்கின்றதா இல்லையா என்று தெரியாவிட்டாலும் அவர் அதற்கு மறுப்பறிக்கை விடவில்லை அதன் பின்னர் தான் நா.க.அரசை எதிர்த்து அறிக்கை வர ஆரம்பித்தது இதன் பின்னணியில் தான்

மாறாக வட்டுக்கோட்டைப்பிரகடனம் தொடர்ந்து வெற்றி வந்த நிலையில் பிரித்தானியாவில் நடைபெற்றபோது ஆதரிப்பாதாக அமைப்பாளருக்கு சிலரின் மூலம் சொல்லியிருந்தார் ஆனால் அறிக்கை எதுவும் விடவில்லை

மக்களவைத் தேர்தலையும் நா.க.அரசையும் ஒன்றாக நடாத்துவோம் என்று உருத்திரகுமார் ஒரு வேண்டுகொள் விடுத்திருந்தார் அது கனடிய அமைப்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தல் பிற்போடப்பட்டது

ஆனால் சுவிஸின் மக்களவைத் தேர்தலின் போது உருத்திரகுமார் இரண்டும் சம்பந்தமில்லை என்று அறிக்கை விட்டார் அதன் பின்னர் மீண்டும் எதிர் புதிர் அறிக்கைகள் வலம் வரத் தொடங்கிய பின்னணியில் மீண்டும் மோதலா ???

எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று புலிகளால் விலத்தப்பட்டவர்களையும் அரவணைத்துச் செல்வது தான் இப்போதுள்ள பலரின் பயம்

Edited by tamilsvoice

புலிகளால் நிதி மோசடிகளால் விலத்தி வைக்கப்பட்ட கேபியின் முன்னால் விசுவாசிகளை எல்லாம் கேபி பதவிக்கு வந்தவுடன் தன்னுடன் சேர்த்து கொண்டதால் தான் இறுதிவரை இருந்த அமைப்பாளர்கள் கேபியுடன் சேரவிரும்பவில்லை அவ்வாறு விலத்தப்பட்டவர்களில் நா.க.அரசின் செயற்பாட்டாளர்களும் இ வேட்பாளர்களும் அதில் அடக்கம்

மேலும் உள் செல்லுங்கள், தேடுங்கள், தேடுங்கள் தேடிக்கொண்டே இருங்கள்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

நா.க.த.அரசின் அறிக்கையில் உறுப்பினர்களை மீழ அழைக்கும் வழிமுறைகள் என்று ஒரு பகுதியில் இருக்கின்றது.தெரிவு செய்யப்படுபவர்கள் விலை போனால் மக்களால் திருப்பி அழைக்கப்படலாம் என்று கூறுகின்றார்கள்.

இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்

வாத்தியார்

...............

நா.க.த.அரசின் அறிக்கையில் உறுப்பினர்களை மீழ அழைக்கும் வழிமுறைகள் என்று ஒரு பகுதியில் இருக்கின்றது.தெரிவு செய்யப்படுபவர்கள் விலை போனால் மக்களால் திருப்பி அழைக்கப்படலாம் என்று கூறுகின்றார்கள்.

இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்

வாத்தியார்

...............

நல்ல விடயம் தான்

இது பலராலும் கேட்கப்பட்ட கேள்வி

மக்கள் முறைப்பாடு மட்டுமே செய்யலாம் நீருபித்தால் அது குறித்து அதற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் வாக்களித்து நீக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது

அந்தப் பகுதி எண் என்ன என்று சொன்னால் பார்க்கலாம்

அது சரி உங்களோடு இருக்கும் அதாவது ஈழ முரசே கதி என்றிருக்கும் ஒரு சுவாமிகளைப் பற்றி பல கதைகள் வெளிவருகின்றனவே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்குரல்,

அதாவது உறுப்பினர்களை மீழ அழைக்கும் வழிமுறை ஒன்று தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் யாப்பில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று மதியுரைக்குழு பரிந்துரை செய்திருக்கின்றது.

இலக்கம் 6.7.1 என்று நினைக்கின்றேன்.

வாத்தியார்

.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.