Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தம் முடிந்த பின்பும், அதன் அலையால் இழக்கப்படும் தமிழ் உயிர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் முடிந்த பின்பும், அதன் அலையால் இழக்கப்படும் தமிழ் உயிர்கள்

அரசு எம்மக்கள் மீது சுமத்திய போர் முடிந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் எம்மிடம் இருந்து அகலவில்லை. அவை மக்களை படிப்படியாக நசுக்குவதாகவே உள்ளன. இங்கு எமது சமூகத்திடமே எமது மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு விடப்பட்டிருக்கிறது!

கடந்ட 2006 ஆண்டின் அரைப்பகுதியிலிருந்து ஆரம்பித்த யுத்தம் தெடர்சியாக மூன்று ஆண்டுகள் நடைபெற்று கடந்தவருடம் மே மாதம் முடிவடைந்தது.

மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்கால் வரை தொடர்ந்த இந்த யுத்தம், தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒரு இருண்ட பக்கத்தை தேற்றுவித்துள்ளது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும்மிடையில் தொடர்சியாக இருந்த இன முரன்பாடு, இந்த இருள் நிலையை தமிழ் மக்களிற்கு அளிக்கக் காரணமாக இருந்தது.

யுத்த காலத்தில் நடந்த கொடூரங்கள், மக்கள் அனுபவித்த துன்பங்கள் உலகெங்கும் அறிந்த செய்திகளாக இருந்த போதும், அவை வாசித்து அறியப்பட்டவையாக மட்டும் இருந்தமை கவலைக்குரியதே.

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முந்திக்கொண்டு நின்ற நோர்வே, ஐப்பான், ஐ.நா மற்றும் ஐரோப்பியா ஒன்றிய நாடுகளோ இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவோ. தட்டிக்கேட்கவோ முடியாமற்போனதும் தமிழ் மக்களது வரலாற்றில் தூரதிஸ்டமே.

இந்த சம்பவங்கள் எல்லாம் அரசியல் சூழ்சியோடு நடந்தேற அதற்குள் அகப்பட்டுக் கொண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இன்று நிற்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்களது வாழ்வியல், பொருளாதார, சமூக, கலாசார, கட்டமைப்புகள் சீர்குலைக்கப்பட்டு ஒரு சூனியமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது

இந்த அடிப்படைகளை வைத்து பார்கும்போது தமிழ் மக்களின் வாழ்வியலானது கடுமையான போரிற்கு (2006) முன்னதான காலப்பகுதி, யுத்தகாலத்தின் போதான அவல வாழ்வு, யுத்தம் முடிவடைந்த பின்னருமான சீரழிவுகள் என கால ரீதியாக தமிழ் சமூகம் சீரழிக்கப்பட்டு வருவதையே உனர்த்துகின்றது.

இற்தக்கட்டுரையின் நோக்கமானது யுத்தம் முடிவுற்ற பின்னர் தமிழ் மக்கள் படும் இன்னல்கள், எதிர்நோக்கும் சவால்கள் குறித்தே அமைகின்றது.

யுத்த காலத்தின்போது தமிழ்மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், அதாவது உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், இடப்பெயர்வுகள் என எல்லாவற்றையும் ஏதோ ஒருவகையில் எல்லா சமூகத்தவரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. அந்தளவிற்கு யுத்தகாலத்தின் நிலை இருந்தது மட்டுமல்லாது மனிதநேய அமைப்புக்கள் ஊடகங்கள் அவற்றை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூச்சலிட்ட மகிந்தஅரசு அதனை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தபோது, அரசிற்கு பல்வேறு உதவிகளையும் புரிந்து ஊக்குவித்த அயல் நாடுகள் தமிழ்மக்களிள் மீது தொடரப்பட்ட யுத்தம் சரியானது என்ற பார்வையையே கொண்டு செயல்பட்டிருக்கின்றன. பல்வேறு நாடுகளின் உதவிகளுடன் நடைபெற்று முடிந்த யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கானவர்கள்;; அங்கவீனராக்கப்பட்டனர். இன்றும் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு லட்சம் வரையான மக்கள் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டன. பொதுவாக வடக்கு கிழக்கின் பொருளாதாரம் பூச்சியம் ஆக்கப்பட்டது.

இந்த அவலங்கள் எல்லாம் ஏற்கனவே பேசப்பட்டு அனைவரின் காதுகளுக்கும் புளிப்பேறிப்போய்விட்டவை. ஆனாலும் மக்கள் மத்தியில் இன்னமும் யுத்தத்தின் பயம், அனுபவித்த துன்ப-துயரம், என எவையும் அகன்று விடவில்லை. இவை எல்லாம் தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு தொடர் கதையாக தொடரப்போகின்றது என்பது தெளிவாகின்றது. போரின்போது உடல், உளரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் அந்த சுமையில் இருந்து மீள முடியாது தவிக்கின்றனர். இதனால் தற்கொலை செய்தல், தற்கொலைக்கு முயற்சித்தல், மற்றவர்களில் இருந்து விலகியிருத்தல், என்று மக்களின் செயற்பாடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

அகதிமுகாம்களில் இருந்து மக்கள் மீளக்குடியமர்த்தப்படுகின்ற போதும் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே நடைபெறுகின்றது. தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளின் நிலையும் கவலைக்குரியதே. அவர்களை இன்று விடுவிக்கின்றோம் நாளை விடுவிக்கின்றோம் எனக்கூறும் அதிகாரிகள் செய்தித்தாள்களில் செய்தியாக மட்டும் பிரசுரிக்க விரும்புகின்றன்றனர். அண்மையில் அகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ் பல்கழக்கழகத்தில் கல்விகற்க அனுமதிக்கப்பட்ட மூன்று மாணவர்களின் தற்கொலைச்சம்பவங்கள் போரின் பின்னதான விளைவையே காட்டி நிற்கின்றது. உடலாலும் உள்ளத்தாலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த இந்த மாணவர்கள் தமது கல்வியாலும், சக மாணவருடன் ஒன்றித்து இருக்க முடியாத அளவிற்கு யுத்தம் அவர்களை மனரீதியாக பாதித்திருக்கின்றது. விக்ரர் அருள்தாஸ், திருவிழி, கருணாநிதி என்ற மூன்று பல்கலைக்கழக மாணவர்களை நாம் இழந்திருக்கின்றோம். அவர்களின் மரணம் என்பது அவர்களுடன் மட்டும் நின்று விடவில்லை. அதற்கும்மேலாக ஒரு செய்தியையே சொல்கின்றது என்பதை அவதானிக்க வேண்டும். இம்மாணவர்களின் தற்கொலைக்கு பின் பலரும் பலவிதமாகப்பேசிக்கொண்டனர். உண்மையில் யார் வேண்டுமானாலும் தமது நாவிற்கேற்றவாறு மாறிக்கொள்ளலாம். ஆனால் உண்மை என்ற ஒன்று எந்த நாவிற்கும் ஒன்றே என்பதுதான் அவசியமாகின்றது.

மரணித்துப்பேன அந்த மாணவர்களுக்காக நாம் வருந்துகின்றோம். ஆனால் இன்றும் இதுபோலவே எத்தனை சம்பவங்கள் நிகழ்ந்துவிடும் என்பது பற்றி சிந்திக்க இன்றும் யாரும் முயலவில்லை என்றே கூறவேண்டும். இந்த மாணவர்கள் மறைவு மட்டுமல்ல தடுப்பு முகாம்களில் எத்தனையோ இளைஞர் யுவதிகள் தற்கொலைக்கு முயற்சித்தவண்ணமும், தற்கொலை செய்தும் இருக்கின்றனர். இவை தவிர மனஉளைச்சல், போக்குமாறல் தனித்து நடமாடல், ஞாபகமறதி என்ற நிலைக்கு பல இளையவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் காரணமாக இருப்பது யுத்தம் என்ற பேர் அனர்த்தமாகும்.

மேலும் போரின் போது அங்க, அவயவங்களை இழந்து சக்கர நாக்காலிகளிலும், ஊன்றுகோள்களிலும் உலாவும் பலரின் மனதை யார் புரிந்து கொள்ள முடியும். அவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறமுடியும்? ஏதிர் காலத்தில் அவர்கள் எமது சமுதாயத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? இவ்வாறான கேள்விகள் முடிவற்றவை. இவர்களுக்கு அரசோ தொண்டு நிறுவனங்களோ புனர்வாழ்வை அளித்தாலும், இழந்தவற்றை மீளப்பெற்றுவிட முடியுமா? சொந்தமாக வீடு இல்லை. வீட்டிற்கு அமைத்திருந்த வேலியில்லை என்று எத்தனை இழப்புக்களில் வாழும் மக்களின் மனங்களில் நாள்தோறும் தோன்றும் எண்ணங்கள் எப்படி இருக்கும்?

இவ்வாறான அவலச்சூழலில் மகிந்த அரசு தமிழ் மக்களை மீள்குடியமர்த்தி அவர்களிற்கு வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்திவருவதாக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்கின்றது. இதன்மூலம் பலவேறு உதவிகளைப்பெற்று சிங்கள தேசத்தை அபிவிருத்தி செய்வதில் முழுமூச்சுடன் செயற்பட்டுவருகின்றது. அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்தி அரசு தனது விருப்பங்களை நிறைவேற்றிவருகின்றது.

Photo: Tamils now

அரசின் இத்தகய செயற்பாடுகளால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே. இதில் இருந்து தெரிவது திட்டமிட்டு தமிழர் பகுதிகள்மீது தெடுக்கப்பட்ட ஆயுதயுத்தம் முடிவடைந்தாலும் அடக்குமுறை மற்றும் ஆதி;க்க யுத்தம் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இதன் அங்கங்களாகவே அகதிமுகாம் மக்களை மீழ்குடியமர்த்த தாமதிப்பதும், இளைஞர் யுவதிகளை தடுத்து வைத்திருப்பதுமாக உள்ளது.

போர் முடிவுக்கு வந்தது, பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்று அறிவித்த அரசு 180 நாட்களுக்குள் அனைத்து மக்களையும் மீள்குடியமர்த்துவோம் என்று கூறியிருந்தது. ஆனால் ஒரு வருடகாலம் ஆகியும் அரசின் ஆணை நிறைவேறவில்லை.

இவற்றில் இருந்து பார்க்கும் போது தமிழ் மக்களின் எதிர் காலம் பற்றிய கேள்விகள் பலவாறாக எழுகின்றன. அதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் நிம்மதியான வாழ்வே அதிகம் கேள்விக்குள்ளாகின்றன.

இன்றும் எத்தனை உயிர்கள் எம்மைவிட்டு நீங்கிவிடும் என்ற பயம் மக்களிடையே தோன்றியிருக்கின்றன. இங்கு முக்கியமான விடையம் என்னவெனில் பாதிக்கப்பட்ட ஒருவன் “நான் இன்னதால் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று மற்றவர்களிடம் கூறப்போவதில்லை. அவனை சமூகம் தான் ஓரளவு அடையாளம் கண்டு காப்பாற்ற வேண்டும். இங்கு எமது சமூகத்திடமே எமது மக்களைக்காப்பாற்றும் பொறுப்பு விடப்பட்டிருக்கிறது. ஒரு உயிரைப் பாதுகாக்க அரசையோ, சர்வ தேசத்தையோ எதிர்ப்பார்க்க முடியாது. எனவே எமது சமூகத்தில் நிலவும் அடிப்படைப்பிரச்சினைகளை, அடையாளம் கண்டு அதற்கான மாற்று வழிகளைத் தேடுவது நம்மனைவரதும் கடமையாகும்

அரசு எம்மக்கள் மீது சுமத்திய போர் முடிந்து போனாலும் அதன் பாதிப்புக்கள் எம்மிடம் இருந்து அகலவில்லை. அவை மக்களை படிப்படியாக நசுக்குவதாகவே உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் எல்லோரும் எமது வாழ்வையும், அதற்கான அற்பணிப்பையும் உணர்ந்து தேவையற்ற இழப்புக்களை தவிர்த்து முன்னேற அர்ப்பணிக்க வேண்டும். இதுவே எமது சமூக அபிவிருத்திக்கும், தமிழர்களின் இருப்புக்கும் ஒரு படியாக இருக்கும்..

ஆனால் இப்போ இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வருவதில்லையே? :rolleyes::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இப்போ இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வருவதில்லையே? :rolleyes::)

ஆமாம் நேரடியாகவே ஈபிடிபி செய்தது ,ராணுவம் செய்தது, இன்ன ஒட்டுகுழு செயதது என்று வருவது இம்புருமென்ற்தான், :lol::lol::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் இப்போ இனம் தெரியாதோரால் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வருவதில்லையே? :rolleyes::)

ஆமாம்... இப்போ இனந்தெரியாதொரால் கடைகள் மட்டும்தான் எரிக்கப்படுகின்றன... :lol::lol:

ஆமாம்... இப்போ இனந்தெரியாதொரால் கடைகள் மட்டும்தான் எரிக்கப்படுகின்றன... :rolleyes::)

:lol::lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.