Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா பாடல்கள்......

Featured Replies

எம் உயிராய், உடலாய், உணர்வாய் என்றும் எமக்காய் வாழும் எம் அன்பு அன்னையர்களுக்காக..........

பாடல்: உயிரும் நீயே ...

படம்: பவித்திரா

இசை: ஏ.ஆர். ரகுமான்

பாடல்வரிகள்: வைரமுத்து

பாடியவர்:உன்னிகிருஷ்ணன்

உயிரும் நீயே உடலும் நீயே உணர்வும் நீயே தாயே - தன்

உடலில் சுமந்து உயிரில் கலந்து உருவம் தருவாய் நீயே

உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் உருகும் தாயே

உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே

(உயிரும்)

விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்

காற்றும் மழையும் ஒலியும் படைத்தான்

பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை

சாமி தவித்தான் தாயைப் படைத்தான்

(உயிரும்)

---------------------------------------------------------

பாடல்: அம்மா என்றழைக்காத...

படம: மன்னன்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மாவை வணங்காது உயர்வில்லையே

நேரில் நின்று பேசும் தெய்வம்

பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி

திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா

அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்

புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்

அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்

மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே

அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்

இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா

விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்

கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா

ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி

நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்

உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா

உன்னாலே பிறந்தேனே

(அம்மா)

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பாடல்: நீயே நீயே நானே நீயே....

படம்: எம் குமரன் சன் ஒவ் மகாலட்சுமி

http://www.youtube.com/watch?v=gfD-QhXJ2u8

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே

தாலாட்டிடும் என் தோழி நீயே

ஏப்ரல் மே வெயிலும் நீயே

ஜூன் ஜூலை தென்றலும் நீயே

ஐ லைக் யூ

செப்டம்பர் வான் மழை நீயே

அக்டோபர் வாடையும் நீயே

ஐ தேங்க் யூ

உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க

என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

You are the love of my life and my dreams forever

You are the love of my life and my dreams forever

என் கண்ணில் ஈரம் வந்தால்

என் நெஞ்சில் பாரம் வந்தால்

சாய்வேனே உன் தோளிலே

கண்ணீரே கூடாதென்றும்

என் பிள்ளை வாடாதென்றும்

சொல்வாயே அன்னாளிலே

இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்

உன் மகனாகும் வரம் தருவாய்

உன் வீட்டு சின்ன குயில்

நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே

நான் வயதில் வளர்ந்தால் கூட

மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

வேருக்கு நீரை விட்டாய்

நீராய் கண்ணீரை விட்டாய்

பூவாச்சு என் தோட்டமே

உன் பேரை சொல்லும் பிள்ளை

போராடி வெல்லும் பிள்ளை

பூமாலை என் தோளிலே

இளம்பிறௌ என்று இருந்தவன் என்னை

முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்

வற்றாத கங்கை நதியா

தேயாத மங்கை மதியா நீ வாழ்க

புது விடியல் வேண்டும் எனக்கு

எந்த நாளும் நீதான் கிழக்கு

(நீயே நீயே..)

--------------------------------------------------------

பாடல்: காலையில் தினமும் ...

படம்: நியு

காலையில் தினமும் கண் விழித்தால்

நான் கைதொழும் தேவதை அம்மா

அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

அம்மா.....

இமை போல் இரவும் பகலும்

எனை காத்த அன்னையே

உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட

வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா

நடை போடு மெதுவா மெதுவா

அழகே உன் பாடு அறிவேனம்மா

மசக்கைகள் மயக்கம் கொண்டு

மடி சாயும் வாழைத்தண்டு

சுமையல்ல பாரம் சுகம் தானம்மா

தாயான பின்பு தான் நீ பெண்மணி

தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு

ஒரு பிள்ளை கையில் கொண்டு

உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று

மழலைப் போல் உந்தன் நெஞ்சம்

உறங்கட்டும் பாவம் கொஞ்சம்

தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா

தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா

தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா

தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை

பாடுகிறேன் நான் தாலேலோ

அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ

நிலவே நிஜத்தில் இறங்கி

உனை கொஞ்ச எண்ணுதே

அதிகாலை சேவல் கூவும் அதுவரை

வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பாடல்: ஆசைப்பட்ட எல்லாத்தையும் .....

படம்: வியாபாரி

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்

அம்மாவை வாங்க முடியுமா நீயும்?

அம்மாவை வாங்க முடியுமா நீயும்?

ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்

தாய் போல தாங்க முடியுமா?

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

(ஆசைப்பட்ட..)

பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா

பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா

இளவட்டம் ஆட பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா

உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ட்ந்திடுவா

நெஞ்சிலே நடக்க வைப்பா

நிலாவை பிடிக்க வைப்பா

பிஞ்சி விரல் நகம் கடிப்பா

பிள்ளை எச்சில் சோறு தின்பா

பல்லு முளைக்க நில்லு முனையால்

மெல்ல மெல்லதான் கீறி விடுவா

பல்லு முளைக்க நில்லு முனையால்

மெல்ல மெல்லதான் கீறி விடுவா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

மண்ணில் ஒரு செடி முளைச்சா

மண்ணுக்கு அது பிரசவம்தான்

உன்னை பெற துடி துடிச்சா

அன்னைக்கு பூகம்பம்தான்

சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா

பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா

கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா

பெத்தை போல் அவள் இருப்பா மெத்தையாய் உன்னை வளர்ப்பா

என்ன வேண்டும் இனி உனக்கு?

அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

என்ன வேண்டும் இனி உனக்கு?

அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

(ஆசைப்பட்ட..)

--------------------------------------------------------

பாடல்: பெத்தமனசு...

படம்: என்ன பெத்த ராசா

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா

இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா

வேறுங்கைய வீசிக்கொண்டு

விறகு சுமந்து வித்து

இரவா பகல்ல தினம் தினம் உளைச்சதும்

சருகு பொறுக்கி வந்து சாதம் வடிட்துத்தந்ததும்

பசியெ தெரியா மகனா வளத்ததும்

எத்தன தாயுங்க எங்க தமிழ் நாட்டிலெ

என் தாயும் அவளப்போல் யாரு இந்த ஊரிலெ

தியாகி யாரு தியாகி யாரும் இல்ல போடா

தாயின் கால வணங்கி ஊருகிட்டுவாடா

அவதன் கோயில் அவதன் உலகம்

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா

இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா

மண்ணில் வரும் செடிகொடிகள்

எவளவு வகைகள் தான்

மரமோ கொடியோ தண்ணி மட்டும்

ஒன்றே தான் ஒண்ணெதான்

பலவித ம்மரங்கள் என்ன

மரத்தில் பழங்கள் என்ன

நிறத்தில் ருசியில் ஒவ் ஒன்ரும் வேறதான்

பழமாய் பழுத்ததால் மிளகாய் இனிக்குமா

காயாய் இருப்பதல் கொய்ய கசக்குமா

நல்ல வயிர்ரில் பிறந்தா நல்லவனே

தாண்டா கெட்டது செய்ய மாட்டான்

வல்லவனெ தாண்டா

அவனே மனிதன் அதை நீ உணரு

பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா

இந்த பிள்ளை மனசு பித்ததிலும் பித்தமடா

தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்

எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்

அந்த தெய்வம் அது தாயுக்கும் கீழ தான்

எந்தன் தாய் அவழும் சாமிக்கு மெல தான்

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பாடல்: நானாக நானில்லை தாயே...

படம்: தூங்காதே தம்பி தூங்காதே

நானாக நானில்லை தாயே

நல்வாழ்வு தந்தாயே நீயே

பாசம் ஒரு நேசம்

கண்ணாரக் கண்டான் உன்சேயே

(நானாக)

கீழ் வானிலே ஒளி வந்தது

கூட்டை விட்டு கிளி வந்தது

நான் பார்க்கும் ஆகாயம்

எங்கும் நீ பாடும் பூபாளம்

வாடும் பயிர்வாழ

நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

(நானாக)

மணி மாளிகை மாடங்களும்

மலர் தூவிய மஞ்சங்களும்

தாய் வீடு போலில்லை

அங்கு தாலாட்ட ஆளில்லை

கோயில் தொழும் தெய்வம்

நீயின்றி நான் காண வேறில்லை

(நானாக)

  • தொடங்கியவர்

பாடல்: சின்ன தாயவள் ...

படம்: தளபதி

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ

நம் சொந்தங்கள் யாராரோ

உந்தன் கண்ணில் வேண்டாம் நீரோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

தாயழுதாளே நீ வர

நீ அழுதாயே தாய் வர

தேய்பிறை காணும் வெண்ணிலா

தேய்வது உண்டோ என் நிலா

உன்னை நானிந்த நெஞ்சில் வாங்கிட

மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட

விழி மூடாதோ

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளிள் தோன்றிய சின்ன ரோசாவே

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அன்னையர் தின வாழ்த்துகள்~!

+++

இதுகும் ஒரு அம்மா பாட்டுத்தான்:

என்னடி முனியம்மா உன் கண்ணில மையு

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

பாடல்: தாயில்லாமல் நானில்லை...

படம்: அடிமைப்பெண்

http://www.youtube.com/watch?v=m_9Kg-FLv08

தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

என்க்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

ஜீவநதியாய் வருவாள்

என் தாகம் தீர்த்து மகிழ்வாள்

தவறினை பொறுப்பாள்

தர்மத்தைப் வளர்ப்பாள்

தரணியிலே வளம் சேர்த்திடுவாள்...

தாயில்லாமல் நானில்லை .........

தூய நிலமாய் கிடப்பாள்

தன் தோளில் என்னை சுமப்பாள்

தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்

தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்

தாயில்லாமல் நானில்லை ...........

மேக வீதியில் நடப்பாள்

உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்

மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்

மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள்......

தாயில்லாமல் நானில்லை .........

அக்ந்தையை அழிப்பாள்

ஆற்றாலை கொடுப்பாள்

அவள்தான் அன்னை மகா சக்தி ......

அந்த தாயில்லாமல் நானில்லை

தானே எவரும் பிறந்ததில்லை

என்க்கொரு தாய் இருக்கின்றாள்

என்றும் என்னை காக்கின்றாள்

தாயில்லாமல் நானில்லை ...........

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா ... போல அழகான் ......சுவையான் ......பாசமான் தலைப்பு....

(1)அம்மன் கோவில் எல்லாமே

அம்மா உந்தன் கோவில் அம்மா ...

(2) அம்மா நீ சுமந்த பிள்ளை ....

போன்றவையும் உள்ளன ..

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி அக்கா. இதோ உங்களுக்காக அந்த பாடல்கள்.....

பாடல்: அம்மன் கோயில் எல்லாமே...

படம்: ராஜாவின் பார்வையிலே

http://www.youtube.com/watch?v=1846XEpiKMA

பாடல்: அம்மா நீ சுமந்த பிள்ளை...

படம்: அன்னை ஓர் ஆலயம்

http://www.youtube.com/watch?v=0qxdd8RUumU

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்கள் தேவையில்லை ஆகமங்கள் தேவையில்லை.........என்ற பாடல் இருக்கிறதா?

அன்னை இழந்த சோகம்

ஆறாத்துயரில் மனம்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயங்கள் தேவையில்லை ஆகமங்கள் தேவையில்லை.........என்ற பாடல் இருக்கிறதா?

அன்னை இழந்த சோகம்

ஆறாத்துயரில் மனம்

இந்த பட்டியலில் 31 வதாக உள்ளது தோழரெ கறுப்பி.....

link...

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை..... 7 - வது பாடலை சொடுங்குங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

அம்மம்மா உனை போலே ஒரு தெய்வம் ஏது?...

1 வது பாடலை சொடுங்குங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா சொன்ன...link

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

பாடல்: தாயில் சிறந்த கோயிலும் இல்லை....

படம்: அகத்தியர்

  • தொடங்கியவர்

பாடல்: அன்னை என்னும் ஆலயம்...

படம்: அபூர்வ சகோதரர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.