Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு: சென்னை விமான நிலையத்தில் வைகோ கண்ணீர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் தற்போது மலேசியாவில் தங்கி உள்ள இவர் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதற்காக அவர், நேற்று இரவு தனது உதவியாளர் விஜயலட்சுமியுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தார்.

ஆனால் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவருக்கு அனுமதி மறுத்தனர். சென்னையில் நீங்கள் தரை இறங்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று கூறிய அதிகாரிகள் விமானத்தை விட்டு கீழே இறங்குவதற்கு கூட பார்வதி அம்மாளை அனுமதிக்கவில்லை.

அவரை வரவேற்று அழைத்துச் செல்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

உள்ளே செல்ல வைகோ,நெடுமாறனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதற்கிடையே பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் வந்த விமானத்திலேயே மலேசியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இரவு 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 15 நிமிடம் தாமதமாக 12 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதன் பிறகும் விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்லாமல் நள்ளிரவு 1.45 மணி வரையிலும் விமான நிலையத்திலேயே வைகோ அமர்ந்திருந்தார்.

வேதனையில் கண்ணீர் வடித்த வைகோ, அத்துடனேயே ஆவேசமாக செய்தியாளர்களிடம்,

’’பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார். ஆனால், அதிகாரிகள் இதற்கு அனுமதி மறுத்துள்ளது மனிதாபிமானமற்ற செயல்.

சென்னையில் 6 மாதம் தங்கி இருக்கலாம் என அவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாமல் வயதான அந்த தாயை திருப்பி அனுப்பியது கொடுமையான செயல்.

அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய- மாநில அரசுகள்தான் பொறுப்பு. தமிழக போலீசார் விமான நிலையத்தில் எல்லை மீறி நடந்து கொண்டனர். அவர்களது பாதுகாப்பு எல்லையை மீறி அத்துமீறி நுழைந்து என்னை தாக்க முயன்றனர். இது கண்டிக்கதக்கது.

இலங்கை அதிபர் ராஜபக்சே இங்கு வந்தால் ராஜ மரியாதை கொடுக்கிறார்கள். திருப்பதிக்கு அவர் சென்றால் பூரண கும்ப மரியாதை அளிக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் ஒரு முத்துக்குமார் இல்லை. ஆயிரம் முத்துக்குமார்கள் உருவாகுவார்கள்.

அந்த முத்துக்குமார் தன்னை வருத்திக்கொண்டார். இனி தோன்றும் முத்துக்குமார்கள், தமிழ் துரோகிகளுக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி போராடுவார்கள்’’என்று கூறினார்.

நன்றி நக்கீரன்

fad_1b.jpg

:lol::D குடும்ப அரசியலில் இது சகஜமப்பா.

Edited by சுனாமி

உசுபேத்தி உசுபேத்தியே....... தமிழனை அழித்தாங்கள் பாரைய்யா?

மக்கள் பலமும் இளைஞர் பலமும் இல்லாத கட்சி என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

ம.தி.மு.க தொண்டர்கள் எங்கே.?

வைகோவுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் தமிழ் நாட்டில் எப்படி பேச முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.