Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நோர்வே

Featured Replies

பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்)

வேட்பாளர்கள்

வயது: 46

மொழியாற்றல்: தமிழ்;, நொர்ஸ்க் ஆங்கிலம்

தொழில்: டுநனநனெந ளலமநிடநநைச

அரசியல் - பொதுப்பணி:

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அரசியல் செயற்பாடுகளிலும், நோர்வே தமிழ்ச் சமூக மேம்பாடுஇ தமிழ் இளையோர் மற்றும் பெண்கள் நலன்களுக்கான செயற்பாடுகளில் பங்கெடுத்துள்ளேன்.

நோர்வேஜிய பெருஞ்சமூகத்துடனான இணைந்த வாழ்வு மற்றும் நோர்வே அரசியல் தளத்தில் தமிழர்களின் பங்கேற்பினை ஊக்குவித்து நடைமுறைபபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளேன்.

தமிழர் வள ஆலோசனை மையம் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களின் நிர்வாக இணைப்பாளர் (தற்போது)இ முன்னாள் ஒஸ்லோ மாநகர சபை உறுபபினர்.

எனது உறுதிமொழி:

- தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு என்பதில் உறுதியாகவுள்ளேன். இதனை வென்றெடுக்கும் மூலோபாயத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கு அனைத்துலக அங்கீகாரத்தை அடைவதற்கு நாடு கடந்த அரசாங்கம் என்ற அனைத்துலக அரசியல் வலுமையத்தின் ஊடாக உழைப்பேன்.

- புலம் பெயர்ந்த தமிழர் சமூகத்துடன் மட்டுமன்றி ஏனைய புலம்பெயர்ந்த தமிழர் சமூங்களுடனும் இணைந்து பணியாற்றி அரசியல்தோழமை உணர்வுடன் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு திரட்டுவதோடுஇ தாயகத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி செயற்படும் அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து ஈழத் தமிழர் தேசத்தை வலுப்படுத்த உழைப்பேன்.

- சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த இனப்படுகொலையினை அனைத்துலக விசாரணைக்குட்படுத்தவும்இ சிறிலங்கா சிறைகளில் அடைபட்டிருக்கும் போராளிகளை விடுவிக்கவும்;இ இடம்பெயர்க்கப்பட்ட தமிழீழ மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காகவும்இ அவர்களுக்கான இயல்பு வாழ்வினை ஏற்படுத்;தவும் சட்டரீதியாகவும்இ அனைத்துலக சமூகத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதன் ஊடாகவும் சாத்தியமான எல்லா வழிமுறைகள் ஊடாகவும் செயற்படுவேன்.

தமிழர் வள ஆலோசனை மையம் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களின் நிர்வாக இணைப்பாளர் (தற்போது)

இவர் இந்தப் பொறுப்பில் இருப்பதற்கு ஒரு வாக்கெடுப்பு நடத்துவோமா?

Edited by aathirai

கலைவாணிக்கு நன்றிகள்

இவர் இந்தப் பொறுப்பில் இருப்பதற்கு ஒரு வாக்கெடுப்பு நடத்துவோமா?

ஆதிரை

சில கசப்புக்கள் எனக்கும் இருக்கின்றது இருந்தாலும் அவற்றை இப்போது முன்னெடுக்காமல் ஓரமாக வைத்து விட்டு நா.க.அரசினை அமைக்க முன்வருவோம்

முள்ளிவாய்க்காலில் இழந்ததை விட இழப்பதற்கு எதுவும் இல்லை

தாயகத்தை சம்பந்தரிடமும் விட்டது போல் புலத்தை நா.க.அரசிடமும் கொடுத்துத் தான் பார்ப்போம்

எதுவும் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் ஏதாவது செய்பவர்கள் செய்யட்டும் ஆதரிப்போம்

எல்லோரும் நிச்சயமாக மே 2 இல் வாக்களிப்போம் வாருங்கள்

அதற்கு முன்னர் இந்த வேட்பாளர்கள் பற்றிய பின்னணிகள் தெரியாத பட்சத்தில் மக்களால் சரியானவர்களை தெரிவு செய்யமுடியாமல் போய்விடும்

அதை அந்த நாடு வாரியாக இப்படி வெளியிடுவது நல்லது

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

நாளை (18/04/10)கனடாவில் பொது கூட்டம் ஒன்று நடைபெறுவதாகவும் கேள்விகள் இருந்தால் யாரும் சென்று கேட்கலாம்.

'நாடு கடந்த அரசும் உலகத் தமிழர் பேரவையும்' தொடர்பாகக் கனடியத் தமிழர் பேரவை நடாத்தும் தகவல் வழங்கும் கூட்டமும் கலந்துரையாடலும்.

இந் நிகழ்வில் யேர்மனியிலிருந்து வருகை தந்திருக்கும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் வணக்கத்துக்குரிய இமானுவேல் அடிகளார் அவர்களும் நாடுகடந்த அரசு சார்பாக பேராசிரியர்; வணக்கத்துக்குரிய யோசப் சந்திரகாந்தன் அடிகளார் அவர்களும் கலந்து சிறப்புரை ஆற்றுவர்.

இவ் வரலாற்றுக் காலகட்டத்தில் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் ஐயங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம்.

இடம்: செலிபரேசன் விருந்து மண்டபம்

நாள்: ஏப்ரல் 18, 2010 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10:00 மணி

மேலதிக விரங்களுக்கு 416 240 0078

  • தொடங்கியவர்

அதற்கு முன்னர் இந்த வேட்பாளர்கள் பற்றிய பின்னணிகள் தெரியாத பட்சத்தில் மக்களால் சரியானவர்களை தெரிவு செய்யமுடியாமல் போய்விடும்

அதை அந்த நாடு வாரியாக இப்படி வெளியிடுவது நல்லது

தேர்தல் இடம்பெறத்தான் போகின்றது, மக்களும் வாக்களிக்கத்தான் போகின்றார்கள். எனவே மக்கள் சரியான நபர்களைத் தெரிவு செய்வதற்கும், வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடுவோரின் கடந்த கால அரசியல், நிலைப்பாடு, செயற்பாடு தொடர்பாகவும், இவரைப் போன்றவர்களுக்கு (ஆள் இல்லாத ஊருக்கு இலுப்பம் பூ சக்கரையாக) தமிழ்த்தேசிய விடுதலை அமைப்பு நம்பி வழங்கிய பொறுப்புகளில் இருந்துகொண்டு மே19 இற்கு முன், பின் செயற்பட்டமுறை தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

Edited by kalaivani

வேட்பாளர்கள் போட்டி இடுவதற்கு முன் தாங்கள் எந்த கோட்பாடுகளின் கீழ் வேலை செய்வோம் என்று சத்தியபிரமானம் எடுத்து கொள்வதாகவே அறிய முடிகிறது.

அபடி அதை மீறுவோர் நீக்கப்பட கூடிய நீக்கப்பட கூடிய சட்டம் இருப்பதாகவே அறிய மூடிகிறது.

இவர் இந்தப் பொறுப்பில் இருப்பதற்கு ஒரு வாக்கெடுப்பு நடத்துவோமா?

அவருக்கு வாக்கெடுப்பு தேவை இல்லை. ஒரு சுமூகமான ஈழத்தமிழர் அரசியலையும், நோர்வே அரசியலையும் ஒன்றாக இனைத்து கொண்டு செல்வதில் சிறப்பாக பங்காற்றியவர்.

எங்கள் விருப்பை நோர்வே அரசியல் வாதிகளிடம் உறவாடி ஒழுங்காக எடுத்து சென்றவர்.

தாயகத்தில் நிழல் அரசு இருந்த போது அவர்களுக்கும் நோர்வே அரசியல் வாதிகளின் தொடர்புகளுக்கும் தொடர்பாளராக இருந்தவர்.

புலிஎன்று பட்டம் கட்டி பல எதிராளிகள் விமர்சித்தாலும் பல நோர்வே அரசியல் வாதிகளின் உறவை நோர்வெ ஈழதமிழர் பால் வைத்திருக்கீன்றார்.

  • தொடங்கியவர்

நீங்கள் இப்படிச்சொல்கின்றீரகள்!.

நல்லது உங்கள் கருத்திற்கு நம்பிக்கையுடையவராக பாஸ்கரன் தொடர்ந்தும் இருக்கவேண்டும்.

ஆனால் இவர் தொடர்பாக வரும் செய்திகள் வேறாக இருக்கின்றதே.

நீங்கள் இப்படிச்சொல்கின்றீரகள்!.

நல்லது உங்கள் கருத்திற்கு நம்பிக்கையுடையவராக பாஸ்கரன் தொடர்ந்தும் இருக்கவேண்டும்.

ஆனால் இவர் தொடர்பாக வரும் செய்திகள் வேறாக இருக்கின்றதே.

ஆயுத மவுனம் வரை அவரது செயற்பாடுகள் சரியாகவும் தேவையாகவும் இருந்தது.

அதன்பின் நோர்வேயில் பல தமிழ் அரசியல் குளறுபடிகள். அதற்குள் அவரும் விதிவிலக்கா?

எல்லாருக்கும் இயல்பானது தான்.

நோர்வேயில் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழர்களில் அரசியல் வாதியாக ஈழத்தமிழரின் விருப்பை பிரதிநிதித்துவ படுத்தக்கூடிய ஒருவராக இவர இனம் காணலாம்.

  • தொடங்கியவர்

அதன்பின் நோர்வேயில் பல தமிழ் அரசியல் குளறுபடிகள். அதற்குள் அவரும் விதிவிலக்கா?

எல்லாருக்கும் இயல்பானது தான்.

மே 19 இன் பின் குழப்பியவர்களையும் குழம்பியவர்களளையும், மக்கள் மன்னித்து மீண்டும் மகுடம் சூட்டலாமா?

மீண்டும் இவர் மீது மக்கள் நம்பிக்கை வைக்கலாமா?

இவர் எக்காலப்பகுதியில் புலிகளின் தலைமையை ஏற்று அரசியல் செய்வதற்கு வந்தார்?

இவரிடம் எக்காலப்பகுதியில் இவர் குறிப்பிட்டுள்ள தமிழர் வள ஆலோசனை மையம் - அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களின் நிர்வாக இணைப்பாளர் (தற்போது) பொறுப்பிற்கு தேசியத்தலை மையால் நியமிக்கப்பட்டார்.

Edited by kalaivani

ஆதிரை

சில கசப்புக்கள் எனக்கும் இருக்கின்றது இருந்தாலும் அவற்றை இப்போது முன்னெடுக்காமல் ஓரமாக வைத்து விட்டு நா.க.அரசினை அமைக்க முன்வருவோம்

அரசு அமைப்பதை தடுப்பது எனது நோக்கம் அல்ல.

அரசு, அவை என எது அமைப்பதென்றாலும், எல்லாவற்றையும் காலம் கடத்தாது வெகு விரைவாக அமைத்து, அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.

இவர்கள் யாரும் வானத்தில் இருந்து, புதிதாக குதித்த புத்திஜீவிகள் அல்ல, சர்வதேசம் இவர்களைப்போன்றவர்களின் நாடித்துடிப்பறிந்து தான் நாசமாய்போன முடிவை எடுத்தது.

நாடு கடந்த அரசை அமைத்தபின்பு, அங்கும் இவர்கள் குழு நிலை அரசியல் செய்து, காலத்தை கரைப்பதற்கு மக்களாகிய நாம் வாக்களிக்கவேண்டுமா?

Edited by aathirai

  • தொடங்கியவர்

ஈழவிடுதலைப்போராட்டத்தில், நோர்வே அரசிற்கும், நோர்வே வாழ் ஈழத்தமிழருக்கும் மிக மிக காத்திரமான பங்கு இருக்கின்றது.

இப்போது யார் யாரெல்லாம் தமிழ் தேசியத்தை ஆதரித்து வழி நடத்துகிறார்களே அவர்களுடன் சேர்ந்து பயணியுங்கள்.

காலப் போக்கில் மக்கள் ஆதரவு இல்லாதவர்கள் தாமாகவே நின்றுவிடுவார்கள்.

எல்லோரையும் விமர்சித்து சிங்களத்துக்கு துணை போகாதீர்கள்.

எமது வீட்டில் பெண்டாட்டியோ பிள்ளையே தவறு செய்துவிட்டால்த தெருவுக்கு வந்து நின்றா கூச்சல் போடுகிறோம்.?

நல்ல கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் எல்லோரும் பிழை என விமர்சிக்கும் நீங்கள் ஒருவரையாவது தகுதியானவர் என பெயர் குறிப்பிடாமல் இருப்பது ஏனோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரையும் விமர்சித்து சிங்களத்துக்கு துணை போகாதீர்கள்
நான் எல்லோரையும் விமர்சிக்கவில்லை.லொபி பண்ணியவர்களையும் பண்ணிக்கொண்டு இருப்பவர்களையும் மட்டுமே.

இது சிங்களத்துக்கு துணைபோவது என்று நீங்கள் கருதினால்

தலைவரையும்,மாவீரர்களையும் விமர்சித்து இங்கு பலர் எழுதியபோது அது யாருக்கு துணைபோவதாக நினைத்து கருத்து எழுதாமல் சுருட்டிக்கொண்டு இருந்தீர்கள்.

Edited by thamilnee

அதென்ன தலைமையால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். தலைமையால் தண்டனைக்கு உட்படுத்தப்படாத எந்த ஒரு தளபதியின் பெயரையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். பொறுப்பகளை மாற்றுவது என்பது வேறு தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு விடுதலைச் செய்பாட்டில் இருந்து ஒதுக்கப்படுவது வேறு.1983ல் இருந்து 2003 வரை கே.பியின் காலகட்டம்.2003 ல் ?ரந்து 2009 மே வரை காஸ்ரோவின் கால காலகட்டம்..முதலாவது காலகட்டத்தில் இயக்கம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றது.மிகப் பெரிய வரலாற்று முக்கித்துவம் வாய்ந்த இராணுவ வெற்றிகளை சாதித்தது. 2003 க்குப் பின் இயக்கம் படுமோசமான வீழ்ச்சிப்பதையை நோக்கிச் சென்றது. எங்கே இந்தக்காலகட்டத்தில் ஏதாவதொரு வெற்றியை இயக்கம் சந்தித்ததாகச் சொல்லுங்கள் பாக்கலாம்? 15 கப்பல்கள் தொடர்ச்சியாக அடிப்பட்டதே! ஒரு கப்பல் இரண்டு கப்பல் இல்லை 5 கப்பல் அடிபட்டதை தவறுகள் நடந்து விட்டது காட்டிக் கொடுப்புகள் நடந்துவிட்டது என்று ஏற்றுக் கொள்ளலாம்.15 கப்பல்கள் அடிபடும் வரை ........ இதென்ன பாரிசல் காலை 10 மணிக்கு புற்ப்பட்டு லண்டனுக்கு 12.30 சென்றடையும் யுரே ஸ்ரார் தெடரூந்தா? கப்பல்களின் இடம் காலம் நேரம் பற்றி தெரிவதற்கு....

  • தொடங்கியவர்

2003 வரை கே.பியின் காலகட்டம்.2003 ல் ?ரந்து 2009 மே வரை காஸ்ரோவின் கால காலகட்டம்..முதலாவது காலகட்டத்தில் இயக்கம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றது.

2003 இற்கு முன் விதைத்த விதைப்பின் அறுவடைக்காலம் தான், 2003 இல் இருந்து முள்ளிவாய்க்கால்வரை இடம்பெற்ற நிகழ்வுகள் என்பது எனது அனுபவக்கருத்து. அப்படி என்றால் 2003 இற்கு முற்பட்ட முகவர்களின் காலம்தான் இப்போது இடம்பெறுகின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

Edited by kalaivani

2003 க்கு பின் வந்த பிழைப்புவாதக் கூட்டத்தின் அறுவடைதான் முள்ளிவாயக்கால்.இது தான் உண்மை. அந்தப் பிழைப்பு வாதக் கூட்டம் தான் இன்று தமிழ் தேசித்தை கூறுபோட்டு விலை பேசிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் முள்ளிவாக்கால் காலத்தில் என்ன செய்தது என்பதை அம்பலப்படுத்த முடியும் ஆனால் அது முறையல்ல.

தவறாக வழி நடப்பவர்கள் என உறுதி செய்யும் பட்சத்தில் அந்த நபரது உறுப்பினர் பதிவி மீளெடுத்துக்கொள்ளும் அதிகாரம் நாடுகடந்த அரசிற்கு உண்டு. அந்தந்தப் பகுதி மக்களே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதால் மக்களே உரிய கவனம் செலுத்த வேண்டும். பலருக்கு வேண்டப்படுபவர் சிலருக்கு வேண்டாதவர்களாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்

2003 க்கு பின் வந்த பிழைப்புவாதக் கூட்டத்தின் அறுவடைதான் முள்ளிவாயக்கால்.

நல்லது சரியான இடத்திற்கு வருகின்றீர்கள்.

சந்தர்பவாதிகள் உள் நுளைவதற்கு உரிய தளத்தை உருவாக்கிய காலம் ஒன்று இருக்கின்றது.

சந்தர்பவாதிகள், செயற்பாட்டாளர்களாக, பொறுப்பாளர்களாக வருவதற்குரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றவர்கள் யார்?

Edited by kalaivani

வெற்றிடத்தை யாரும் உருவாக்குவதில்லை. போராட்டத்தை தயவான பாதைக்கு திருப்பும் அறிக்கக்கை மன்னர்கள் தான் இத்தகைய வெற்றிடங்கள் உருவாக காரமாக இருக்கிறார்கள். இத்தைகய அறிக்கை மன்னர்கள் பலர் கா);ரோவின் நிர்வாகத்தில் அவரின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தார்கள். உதாரணம் தமிழ் தேசித்தின் சொத்தான ஈழமுரசை தங்களது குழச் சொத்தாக்கி அதன் மூலம் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் சிறீலங்கா இராணுவத்தக்கு பணங்கொடுத.த வெளியில் எடுக்கும் ஈழமுரசு நிர்வாகம்

  • தொடங்கியவர்

நான், நீங்கள் குறிப்பிடும் அறிக்கை மன்னர்களின் காலத்திற்கு முற்பட்டகாலம் தொடர்பாக கதைக்கின்றேன்.

நீங்கள் விதைப்பின் அறுவடைக்காலத்தைப் பற்றிக்கதைக்கின்றீர்கள்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டை காலம் முடியிது நாடு கடந்த காலம் துடங்கிது....அப்படித்தானே! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை காலம் முடியிது நாடு கடந்த காலம் துடங்கிது....அப்படித்தானே! :lol:

அதுக்காக முள்ளிவாய்க்கால் காலம் முடிந்துவிடும் என்று பயப்படதீங்கோ.....

நீங்கள் கக்ககக்க முள்ளிவாய்க்கால் காலம் தொடரும். எல்லாம் உங்கள் கையில்தான்.

நான் முடிந்தளவு உதவி செய்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.