Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப்

amitabh-bachchan-51-1-233x300.jpg

தமிழரின் உணர்வுகள் மதிக்கப்படும்… கொழும்பு விழா குறித்து மறுபரிசீலனை! – அமிதாப்

மும்பை: தமிழர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். கொழும்பில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழா குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.

எனவே அவர் இலங்கையில் நடைபெறுகிற திரைப்பட விருது விழாவில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜுன் மாதம் 2-ந் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை இந்திய சர்வதேச சினிமா விருது விழா நடக்கிறது. இந்த விழாவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விளம்பரத் தூதராக இருக்கிறார். விழா முன் ஏற்பாடுகளை பார்க்க அமிதாப்பச்சன் சமீபத்தில் இலங்கைக்கு சென்று இருந்தார்.

இதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் துன்பங்கள் அனுபவித்து வருவதால், அமிதாப்பச்சன் அங்கு சென்று விருது விழாவில் பங்கேற்கக் கூடாது என பரவலாக தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

சீமானின் நாம் தமிழர் போராட்டம்…

இந்த நிலையில் நாம் தமிழர் இயக்கத்தினர் மும்பை ஜூஹூவில் உள்ள அமிதாப்பச்சனின் பிரதிக்ஷா பங்களாவிலிருந்து ஜல்சா பங்களாவுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு அமிதாப்பச்சனின் பங்களாவை அவர்கள் முற்றுகையிட்டு, அதே நேரம் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் பிரதிநிதிகள் அமிதாப்பச்சனைச் சந்தித்து, இலங்கையில் தமிழர்கள் இன்னல்கள் அனுபவித்து வருகிற நிலையில் அங்கு நடைபெறுகிற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என வலியுறுத்தினர். மேலும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து ஓராண்டு நிறைவடையும் இந்த தருணத்தில் தமிழர் மனம் புண்பட்டுக் கிடக்க, அதை கொண்டாடும் விதத்தில் ராஜபக்சே இந்த விழாவை நடத்தத் துடிப்பதாக எடுத்துக் கூறினர்.

அமிதாப் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யாராய் மீது தமிழர்கள் கொண்டுள்ள அன்பையும் எடுத்துக் கூறினர்.

கண்டிப்பாக இதுகுறித்து யோசிப்பதாக அவர்களிடம் அமிதாப் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அமிதாப்பச்சன் நேற்று தனது இணைய தளத்தில் எழுதி இருப்பதாவது:

எனது வீடுகளை தமிழர் குழுக்கள் முற்றுகையிட்டனர். இலங்கையில் நான் இந்திய சர்வதேச திரைப்பட விழாவை நடத்தக்கூடாது என வலியுறுத்தினர்.

நான் இந்த விழாவை நடத்துகிற விஸ்கிராப்ட் நிறுவனத்தினரை அழைத்திருக்கிறேன். இது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன்.

போராட்டம் நடத்திய தமிழர் பிரதிநிதிகளை விஸ்கிராப்ட் நிறுவனத்தினர் சந்தித்து பேசி உள்ளனர் என நம்புகிறேன். அவர்கள் அளித்த மனுவையும் பெற்றுள்ளனர். அத்துடன் தங்களது நிலைப்பாட்டையும் போராட்டக் குழுவினரிடம் அவர்கள் விளக்கி உள்ளனர். மேலும் இது தொடர்பாக உடனடியாக ஆட்சி மன்றக் குழுவைக் கூட்டி, தீர்வு காண்பதாகக் கூறி இருக்கின்றனர்.

தமிழர்களது உணர்வுகள் கட்டாயம் மதிக்கப்படவேண்டும். எனவே நாங்கள் இது தொடர்பாக விவாதித்து புரிதலோடு, அமைதியான, இணக்கமான தீர்வு காண்போம், என்று கூறியுள்ளார் அமிதாப்.

பங்கேற்க மாட்டார்..

எல்லோருடைய உணர்வுகளும் மதிக்கப்படும் என்று அமிதாப்பச்சன் கூறி இருப்பது, இலங்கை திரைப்பட விருது விழாவில் தமிழர்களின் உணர்வை மதித்து அவர் கலந்துகொள்ள மாட்டார் என்பதையே சூசகமாக உணர்த்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரும் பங்கேற்பதில்லை என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

நடிகர் சங்கம் தந்தி

இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்கம் அமிதாப்புக்கு ஒரு தந்தி அனுப்பியுள்ளது. அதில், இலங்கையில் இந்திய திரைப்பட விழா நடத்தும் திட்டத்தை அமிதாப் கைவிட வேண்டும் என்றும், தமிழ் சமுதாயம் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் கலைஞரான அமிதாப், தமிழர்களின் உணர்வைப் புரிந்து கொள்வார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.envazhi.com/?p=17912

Y

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உணர்வை மதித்து செயலில் அமுதாப் பச்சன் காட்டுவாரேயானால் தமிழ் மக்களால் மதிக்கப்பட வேண்டியவர் தான். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். :(

கட்டாகாலியாக மகிந்தவோடு படம் எடுக்கும் ஆட்களை பற்றி அமுதாப்புக்கு தெரியாது போல.அது தான் முதலீடு பற்றி பேசும் பணமுதலைகள் பவ்வியை தின்னும் கூட்டம். :D

நன்றி சாம் இணைப்புக்கு. :D

அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் . மறு பரிசீலனை என கூறவில்லை .

மேலும் இப்போது ராஜீவ் குடும்பத்துடன் இவரின் உறவு சரியில்லை . சோனியா கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் அவரின் சுய நலத்திற்காக உறவை சரி செய்வதற்காக இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்தி முடிப்பார் என்றே நான் கருதுகிறேன் . ஏனெனில் தமிழரின் உணர்வை விட ஹிந்திக்காரர் உணர்வுதான் இவருக்கு முக்கியம் .

இவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்த இனப்பற்று மிக்க ஒரு வட இந்தியர் . ( உங்களின் கூற்றுப்படி ஹிந்திக்காரன் )

நம்ம ஆளுகளை போல இல்லை

மேலும் இவருக்கு தமிழனால் ஒரு பயனும் இல்லை . இவர் எடுத்த தமிழ் படம் ஊத்தி கொண்டது . தமிழ் திரை உலகில் கால் பதிக்க முடியாமல் நம்ம ஆட்கள் ( அதிலும் ஒருவரை மராட்டியர் என்கின்றனர் சிலர் ). திறமையாக வேலை செய்து விட்டனர் ( காயடித்து ????).

மருமகள் படத்தை புறக்கணிப்பதால் சுற்றி வளைத்து நஷ்டம் தமிழனுக்கே. ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு துரோகி பட்டம் கட்டியாகி விட்டது . ஏனெனில் நம்மவரின் கொள்கை படி துரோகி பட்டம் கட்டி விட்டால் அவன் ஒழிய வேண்டும் . யார் வாழ்ந்தாலும் வென்றாலும் பரவாயில்லை நம்ம ஆட்களுக்கு . வெல்பவர் சிங்களனாயினும் சரி . ஹிந்தியன் ஆனாலும் சரி . அதை பற்றி நம்மவர் எவருக்கும் கவலை இல்லை . ( நான் இந்தியன் , ஹிந்தியன் அல்ல).

ஒரு வேலை பிராந்திய உணர்வு கொண்ட சஞ்சய் தத் / அஜய் தேவ்கான் / நானா படேகர் / மற்றும் சில ஹிந்துத்வா பின்புலம் கொண்ட தயாரிப்பாளர்கள் தடுத்தால் / எதிர்த்தால் நிலைமை மாறலாம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஏன் இவர் போக கூடாது என கொக்கரிக்க வேண்டும் என விளங்கவில்லை. இவர் ஒரு தமிழரும் அல்ல.தமிழருக்கு சார்பானவரும் அல்லர்.

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடாத்திய இசை கலைஞர் பற்றி ஒரு வரியில்லை.ஒரு போராட்டமும் இல்லை. :(:D

நாம் ஏன் இவர் போக கூடாது என கொக்கரிக்க வேண்டும் என விளங்கவில்லை. இவர் ஒரு தமிழரும் அல்ல.தமிழருக்கு சார்பானவரும் அல்லர்.

யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடாத்திய இசை கலைஞர் பற்றி ஒரு வரியில்லை.ஒரு போராட்டமும் இல்லை. :(:D

அப்படியெல்லாம் இங்க பேசக்கூடாது தங்கம் . எது ரொம்ப முக்கியமில்லையோ அதைப்பற்றி மட்டும் தான் பேசணும் . அப்பத்தான் கொஞ்ச நாளுக்கு பிழைப்பை நடத்த முடியும். வேணும்னா அமிதாப் கிட்ட யாழ்பாணத்தில நிகழ்ச்சிய மாத்த சொல்லிரலாமா ????

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினி விளக்கமும் அமிதாப் குடும்பத்தின் விலகலும்!

லங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கை [^]த் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே.

அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இதனை விசேஷமாக நோக்கினர்.

இந்த உண்மை தெரிந்ததும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தை பெரிதாக முன்னெடுத்தனர். சீமானின் நாம் தமிழர் இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.

விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

மேலும் மணிரத்னம் தரப்பிலும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.

இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக கொழும்பில் ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!

thatstamil.com

சர்வதேச இந்திய திரைப்பட விழா திட்டமிட்டபடி இலங்கையில் நடத்தப்படும் : இந்தியா

வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010 06:28

எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழா திட்டமிட்டப்படி நடைபெறும் என இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தமிழக புலி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்களை இந்திய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை என திவயின பத்திரிகை செய்தி வெளியட்டுள்ளது.

இந்தத் திரைப்பட விழா தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

திரைப்பட விழாவினை வெற்றிகரமாக நடாத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் திரைப்படக் கலைஞர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக தமிழக புலி ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திரைப்பட விழாவினை தடுத்து நிறுத்துவதற்காக கனேடிய தமிழர் அமைப்பொன்று தமிழக புலி ஆதரவு அமைப்புக்களுக்கு 20 லட்ச அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகத் என திவயின பத்திரிகை செய்தி வெளியட்டுள்ளது.

(நன்றி - உயர்வு இணையம்

மூலமும் இணைக்கப்பட்டுள்ளது)

http://www.uyarvu.com/index.php?option=com_content&view=article&id=2527:2010-04-29-11-30-47&catid=45:news

ஜூன் 3 ஆம் திகதி சுகததாச விளையாட்டரங்கில் மக்கிந்த தொடக்கி வைக்க மூன்று நாள் நடக்க இருப்பதாக ஒரு அரச அதிகாரி கூறினார். இந்தியா செய்த இனப்படுகொலைகளுக்கு நன்றியாக சிங்கள அரசு 50 கோடி ரூபாவை இந்த நிகழ்வுக்கு ஒதுக்கியுள்ளதாக கூறினார். சிங்கள அரசால் தமிழ் மக்கள் வீடு வாசல்களை இழந்து நிற்க, 50 கோடியில் 1000 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்திருக்கலாம்.

தமிழரின் எதிர்ப்பை புறக்கணித்து, இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் எப்பிடியாவது நடத்திவிட வேண்டும் என்று சிங்கள - இந்திய இனப்படுகொலை அரசுகள் மும்மரமாக உள்ளனவாம். கொலைஞர் கருணாநிதியையும் அழைக்கும் திட்டம் உண்டாம்.

பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொன்ற இனப்படுகொலை நாட்டில் நடாத்தப்பட இருக்கும் இவ்விழாவை புறக்கணிக்கும்படி ஏனைய தென்னிந்திய (கன்னட, ஆந்திர, மராட்டி, மலையாள), வங்க மொழி கலைஞர்களையும் கோரவேண்டும்.

பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொன்ற இனப்படுகொலை நாட்டில் நடாத்தப்பட இருக்கும் இவ்விழாவை புறக்கணிக்கும்படி ஏனைய தென்னிந்திய (கன்னட, ஆந்திர, மராட்டி, மலையாள), வங்க மொழி கலைஞர்களையும் கோரவேண்டும்.

தென்னிந்திய மொழியான சிங்கள கலைஞர்களையும் கேட்டுக்கொள்ளவும் :D

Edited by Jil

தென்னிந்திய மொழியான சிங்கள கலைஞர்களையும் கேட்டுக்கொள்ளவும் :D

பிறகு சிங்கள கலைஞர்கள் வீசும் எலும்புத்துண்டை நக்க வரும் இந்திய நாய்களை கண்டுகளிக்க முடியாமல் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உணர்வை மதித்து செயலில் அமுதாப் பச்சன் காட்டுவாரேயானால் தமிழ் மக்களால் மதிக்கப்பட வேண்டியவர் தான். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். :mellow:

கட்டாகாலியாக மகிந்தவோடு படம் எடுக்கும் ஆட்களை பற்றி அமுதாப்புக்கு தெரியாது போல.அது தான் முதலீடு பற்றி பேசும் பணமுதலைகள் பவ்வியை தின்னும் கூட்டம். :huh:

நன்றி சாம் இணைப்புக்கு. :)

அவரது கவனம் பணத்தில்தானே தவிர.......... இலங்கை...... தழிழர் எல்லாம் பற்றி கவனம் செலுத்த பச்சன் என்ன பாட்ஸாவா?

தமிழகத்தில் வெறுப்பை சம்பாதித்தகொண்டு......... அவர்களது சினிமா இன்டஸ்ரியை லபகரமாக நடத்தலாமா என்பது பற்றிய மறுபரிசீலனைதான் நடக்கின்றது.

இந்திய ஸ்ரீலங்காவும் தமது அரசியல் பிழைப்புக்குள் அமிதாப்பை இழுத்துவிட்டார்கள் என்பது இப்போதுதான் அவருக்கு விளங்குகின்றது.

ஆறுகோடி மக்களின் வியாபார லாபமா?

ஒரு கோடியில் (எத்தனை லாபத்தை இந்திபடத்தை வைத்து கொடுக்கலாமோ) வியாபரமா என்ற கணக்குதான் இப்போது நடக்கின்றது.

தமிழகத்தின் எதிர்ப்பு கொஞ்சம் அதிகமானால் அவர் நிற்சயமாக போகமாட்டார்.

அரசியலுக்குள் தன்னை இழுக்காதீர்கள் என்ற பணிவான காரத்துடன் கைவிடுவார் என்றே நம்புகிறேன்.

அப்படியெல்லாம் இங்க பேசக்கூடாது தங்கம் . எது ரொம்ப முக்கியமில்லையோ அதைப்பற்றி மட்டும் தான் பேசணும் . அப்பத்தான் கொஞ்ச நாளுக்கு பிழைப்பை நடத்த முடியும். வேணும்னா அமிதாப் கிட்ட யாழ்பாணத்தில நிகழ்ச்சிய மாத்த சொல்லிரலாமா ????

இந்த அப்பட்டத்திற்குள் ஒரு கொழுத்த அரசியலை புரிந்து கொள்ள புடியவில்லை என்றால்.

அதற்கு உங்களது அறிவுதான் பொறுப்பாளி........... இங்கே கருத்துகளை பதிபவர்கள் அல்ல.

ஆனால் கொடுத்த பணத்திற்கு வேலை என்றால்............. எதையாவது தட்டிதான் ஆக வேண்டும் இல்லiயா?

இந்த அப்பட்டத்திற்குள் ஒரு கொழுத்த அரசியலை புரிந்து கொள்ள புடியவில்லை என்றால்.

அதற்கு உங்களது அறிவுதான் பொறுப்பாளி........... இங்கே கருத்துகளை பதிபவர்கள் அல்ல.

ஆனால் கொடுத்த பணத்திற்கு வேலை என்றால்............. எதையாவது தட்டிதான் ஆக வேண்டும் இல்லiயா?

புரியலியே ??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.