Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியிடம் கருணை இல்லை. நிதி மட்டுமே இருக்கிறது. - ஈழவேந்தன்.

Featured Replies

நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கனடாவிலிருந்து வெற்றி பெற்றுள்ள திரு. ஈழவேந்தன் அவர்களை eelamweb இணையத்தளத்திற்காக பேட்டி கண்டோம். தேர்தல் வெற்றி, அடுத்த கட்ட நடவடிக்கைகள், இந்திய நிலைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை:

உங்கள் வெற்றி குறித்து உங்கள் கருத்து

மிகக் குறுகிய காலமாகக் கனடாவில் வாழும் என் மீது அன்பைப் பொழிந்து எனது கருத்துக்களிலும் கொள்கையிலும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கே இந்த வெற்றி சென்றடைய வேண்டும். என்மீது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களின் பிரதிநிதியாய் பணி செய்வேன். நான் பணி செய்யும் காலத்தில் என்னை மொட்டையெனக் கருதினால் தீட்டிப் பயன்படுத்தலாம். கறள் என்றால் தூக்கி வீசலாம் என என் வாக்காளார்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

நாடு கடந்த அரசின் முன்னால் இருக்கும் முக்கிய பணிகள் பற்றி…

நாடு கடந்த அரசின் முன்னால் உள்ள பணிகளைப் பற்றிக் கதைக்க முன்னர் நாடு கடந்த அரசு அமைக்கப்பட்டுள்ளது என்பதே ஒரு பெரிய வெற்றி எனக் கருதுகிறேன்.

தற்போதுள்ள சூழலில் உலகத் தமிழ் மக்களின் ஒரே தெரிவாய் உள்ள இந்த நாடு கடந்த அரசாங்கம் உலகம் அடிக்கடி கூறிக்கொள்ளும் ஜனனாயகத் தன்மையை தழுவியதாய் மக்களின் ஆதரவுடன் கூடிய தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளுக்கு இருக்கும் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பயன்படுத்தி ஈழத்தில் அல்லலுறும் தமிழர்களுக்கும் சிறையில் வாடும் எம் இளையவர்களுக்கும் விடிவைப் பெற்றுக் கொடுப்பதே முதலாவது பணியாக இருக்கும்.

அத்துடன் சுதந்திரமடைந்த காலம் முதல் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை வெளியுலகிற்கு எடுத்துச் சொல்லி எமது அரசியல் உரிமைகளை மீளப்பெறுவதும் ஒரு முக்கிய பணியாக இருக்கும்.

பலவிதமான கருத்துக்களையும் கொள்கையும் உடையவர்கள் இந்தத் தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் இணைந்து செயற்பட முடியும் என்று கருதுகிறீர்களா?

வெவ்வேறு தரங்களைச் சேர்ந்த வெவ்வேறு விதமான அரசியல் பின்னணியுள்ளவர்கள் இந்தத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. இந்த நிலையில் அனைத்து விடயங்களிலும் ஒருமித்த கருத்து இருக்கும் எனச் சொல்ல முடியாது. ஆனாலும் முட்டி மோதினாலும் இறுதியில் ஒருமித்த முடிவிற்கு வருவதே ஜனனாயகத்தின் சிறந்த பண்பாக இருக்கும். அந்த வகையில் இந்தச் சவாலை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறேன்.

அத்துடன் இந்தத் தேர்தலில் இளையவர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக 19 வயதான தாரணியின் வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கனிமொழியின் வளர்ச்சியோடு சந்தோசமடைவதற்கு நான் ஒன்றும் கருணாநிதி அல்ல. எம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவதையே நான் எப்போதும் விரும்புவேன்.

நாடு கடந்த அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வாறான உறவைப் பேணப் போகிறது.

உண்மையில் தாயகத்தில் உள்ள தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுடைய உள்ளுணர்வை வெளிக்காட்ட முடியாத நிலையில் இருக்கிறது. அவர்களது நிலையை எங்களால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

ஆனாலும் சம்பந்தன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து நான் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். தாயகத்தில் அச்சுறுத்தல் உள்ளது என்பது உண்மை. ஆனால் அதற்காக தமிழ் மக்களது உணர்வைப் புண்படுத்தும் விதமாக சம்பந்தன் அவர்கள் வெளியிட்ட கருத்து ஒரு பழுத்த அரசியல்வாதிக்கு ஏற்புடையதல்ல.

அதிலும் மக்கள் தாயகம் தேசியம், தன்னாட்சி போன்ற கருத்துக்களில் உறுதியாக உள்ள நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவரிடமிருந்து வரும் கருத்துக்கள் மிகவும் தெளிவானவையாக இருக்க வேண்டும்.

தாயக மக்கள் கூட தாயகம் தேசியம் போன்ற கருத்துக்களை தொடர்ந்து வற்புறுத்திய தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியை புறக்கணித்து விட்டனரே.

அவர்களை மக்கள் நிராகரித்தனர் என்று சொல்வது ஏற்புடையதல்ல. காரணம் தேர்தல் காலத்தில் அவர்களால் தமது கருத்துக்களை எடுத்துச் செல்வதற்கான மார்க்கம் எதுவும் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்து ஊடகங்கள் குறிப்பாக உதயன் பத்திரிகை முழுக்க முழுக்க அவர்களுடைய கருத்துக்களை இருட்டடிப்புச் செய்தது. இது ஒரு சுதந்திரமான ஊடகத்திற்கு அழகல்ல. ஆனாலும் இது தான் அங்கு நடந்தது.

இந்தியாவுடன் எப்படியான உறவைப் பேண வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

இந்தியா தான் தமிழின அழிப்பில் முன்னின்றது என்றும் அதற்கான காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டது என்பதும் உண்மை.

தற்போதுள்ள நிலையில் இந்தியாவின் அணுகுமுறையில் உடனடியான மாற்றம் ஏற்படும் என்றும் கருதவில்லை. ஆனால் நீண்ட கால நோக்கில் இலங்கையில் சீனாவின் அதிகரித்த ஊடுருவல் காரணமாக தமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கருதும் பட்சத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படலாம்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவுடன் கை கோர்ப்பதில் தவறில்லை. ஆனால் இந்தியாவின் காலில் விழுவது தான் தவறு.

தமிழக முதல்வர் கருணாநிதி குறித்து…

கருணாநிதியிடம் கருணை இல்லை. ஆனால் நிதி மட்டும் இருக்கிறது. டெல்லி தமிழர்களை அழித்தது என்று கூறுவதை விட கருணாநிதி தமிழர்களை அழித்தார் என்று கூறுவது தான் சாலப் பொருந்தும். தமிழரின் உணர்வுகளை வார்த்தைகளாக்கி ஏமாற்றி இவ்வளவு காலம் ஆட்சி செய்ததைத் தான் அவரது ஒரேயொரு சாதனையாகக் கூறலாம்.

கருணாநிதியால் கூட்டப்பட்டுள்ள செம்மொழி மாநாடு குறித்து….

சுருக்கமாகச் சொல்வதானால் அது செம்மொழிக்கான மாநாடு அல்ல. கனிமொழிக்கான மாநாடு.

இந்த செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கனடா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஈழத் தமிழர்களும் தயாராகி வருகின்றனரே.

இதைப் பற்றி என்ன கூறுவது. இந்த இடத்தில் நான் ஒன்றைக் கூறுவேன். 30 ஆண்டுகளாக சிங்கள அரசாங்கத்துடன் போராடி ஒரு நாட்டைக் கட்டி எழுப்பியதை விட கேடு கெட்ட இந்தத் தமிழினத்தைக் கட்டுக் கோப்பாக வைத்திருந்ததே தேசியத் தலைவர் பிரபாகரனின் பெரிய சாதனை எனக் கூறுவேன். இப்போது அந்தக் கட்டு உடைந்ததும் தமதிஸ்டப்படி நடக்கிறார்கள். எம்மினம் அழிவதற்குக் காரணமாக இருந்த ஒருவரிம் தமது பட்டம் பதவிக்காக மட்டும் போய் வருகிறார்கள். அவ்வளவு தான்.

தற்போது புகலிட நாடுகளில் தேசியக் கொடியேற்றுவது குறித்த ஒரு சர்ச்சை நிலவுவது குறித்து.

இது ஒரு உணர்வுபூர்வமான ஒரு விடயம். குறிப்பாக இளைஞர்கள் இதை ஒரு முக்கியமான விடயமாகப் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் இந்தக் கொடி ஏற்றப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள இங்குள்ள அரசியல் வாதிகளும் முக்கிய பிரதிநிதிகளும் பின்னிற்கிறார்கள்.

எனவே சர்வதேச அரசியல்வாதிகளை எதுவித முரண்பாடுகளும் இன்றி நாங்கள் சந்திக்க வேண்டிய நேரத்தில் எமது இறுதி இலக்கான தமிழீழத்தை நோக்கிய பயணத்தின் போது நாம் நடந்து கொள்ள வேண்டிய சில நாசுக்கான வழிமுறைகள் குறித்து இளையவர்களுடனும் பேசி சரியான பாதையில் பயணிக்க முடியும் என்று நம்புகிறேன்.

மேலதிக செய்திகளுக்கு: http://www.eelamweb.com/

Edited by kaviya

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியிடம் கருணை இல்லை. நிதி மட்டுமே இருக்கிறது. :D

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் [^] ராஜா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்குப் பொறுப்பேற்ற ராஜா விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்தநிலையில்இன்று காலை லோக்சபா [^] கூடியதும் ராஜாவின் ராஜினாமாவைக் கோரி பாஜக, அதிமுக [^] உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பெரும் அமளியில் இறங்கினர்.

அவர்களை அமைதிப்படுத்த முயன்றார் சபாநாயகர் மீரா குமார். இருப்பினும் அமைதி திரும்பவில்லை. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதே பிரச்சினை காரணமாக ராஜ்யசபாவும் ஒத்திவைக்கப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2010/05/03/parliament-spectrum-raja-loksabha-rajyasabha.html

கருணாநிதியின் பிரேதமும் தமிழ்நாட்டை ஆளும் நிலைக்கு வந்துவிட்டது. அந்தப் பணத்தால்.

நேற்று நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் கனடாவிலிருந்து வெற்றி பெற்றுள்ள திரு. ஈழவேந்தன் அவர்களை eelamweb இணையத்தளத்திற்காக பேட்டி கண்டோம்.

உங்கள் வெற்றி குறித்து உங்கள் கருத்து

மிகக் குறுகிய காலமாகக் கனடாவில் வாழும் என் மீது அன்பைப் பொழிந்து எனது கருத்துக்களிலும் கொள்கையிலும் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கே இந்த வெற்றி சென்றடைய வேண்டும். என்மீது நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களின் பிரதிநிதியாய் பணி செய்வேன். நான் பணி செய்யும் காலத்தில் என்னை மொட்டையெனக் கருதினால் தீட்டிப் பயன்படுத்தலாம். கறள் என்றால் தூக்கி வீசலாம் என என் வாக்காளார்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

வாய்ச்சவடால் மன்னன் ஈழவேந்தன் உளறிக் கெடுக்காமல் இருந்தால் சரி.

கனடா மக்கள் அந்தாள் வாயை கட்டுப்போட்டால் தமிழினத்துக்கு நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.