Jump to content

உதைபந்தாட்டமும் மத்தியஸ்த்தமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10. ஒரு கோல் எப்போது அங்கீகரிக்கப் படுகின்றது.

ஒரு விளையாட்டு வீரர் பந்து விளையட்டில் இருக்கும் போது ஒரு கோலை உதைத்தால்

அந்தப் பந்து தனது முழு உருவத்தாலும் கோல்க் கோடுகளை இரு கோல்க் கம்பங்களுக்கும் இடையாகத் தாண்டியிருக்க வேண்டும்.

அவர் உதைக்கு முன் மைதானத்தில் அவரோ அல்லது அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் எவரும் விதிமுறைகளை மீறியிருக்கக் கூடாது.

பந்து முழு உருவத்தாலும் கோல்க்கம்பங்களுக்கிடையால் கோல்க்கோட்டினைத் தாண்டியதா இல்லையா என்று மத்தியஸ்த்தரால் முழுமையாக அறிய முடியாவிட்டால் உதவி மத்தியஸ்த்தர்களின் உதவிய நாட வேண்டும்.

மத்தியஸ்த்தர் தனி ஒருவராக இருந்தால் மேலே கூறிய குழப்ப நிலையில் தொடர்ந்து விளையாடுவதற்கான சைகையை விளையாட்டு வீரர்களுக்குத் தெளிவாகக் காட்ட வேண்டும்.

ஒரு கோலை அங்கீகரிப்பதற்காக மத்தியஸ்த்தர் எப்போதும் தனது கருவியால் சைகை செய்ய வேண்டியதில்லை.

குழப்பமான நிலையிலும் மத்தியஸ்த்தரால் அது கோல் என்று அறியப்பட்டால் அவ்ர் தனது விசிலால் சத்தமிட்டுத் தெளிவாக அந்தக் கோலை அங்கீகரிக்க வேண்டும்.

கோல் உதைக்கும் போது மைதானத்தில் மேலதிகமாக ஒருவர் இருந்தால்....என்பதற்கு மேலே 3.விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையில் பதில் இருக்கின்றது.

வாத்தியார்

..................

  • Replies 57
  • Created
  • Last Reply
Posted

வாத்தியார்,

எனக்கு இரண்டு சந்தேகங்கள்.

1) சிலசமயங்களில் கோல் காப்பாளர் பந்தைப் பிடித்து மீண்டும் உதைப்பதற்காக கொண்டு வரும்போதே தலையால் முட்டி பந்தை எதிரிகள் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இது அனுமதிக்கப் பட்டதா? :D

2) கோல் காப்பாளர் பந்தைக் கையால் பிடிக்க முடியாத சந்தர்ப்பம் ஏதாவது உள்ளதா? சில சமயங்களில் கையால் பிடிப்பதை விட்டுவிட்டு காலால் விளையாட/உதைக்க் முற்படுவதைப் பார்த்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1) சிலசமயங்களில் கோல் காப்பாளர் பந்தைப் பிடித்து மீண்டும் உதைப்பதற்காக கொண்டு வரும்போதே தலையால் முட்டி பந்தை எதிரிகள் எடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இது அனுமதிக்கப் பட்டதா?

இதை அனுமதிக்ககூடாது. விளையாட்டுக்கு ஏற்காத விளையாட்டுமுறை என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.விளையாட்டு இடை நிறுத்தப் பட்டு அப்படி எடுக்க முற்பட்ட வீரருக்கு எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை வழங்கப்ப்டும்.

கோல்க் காப்பாளரின் அணிக்கு நேரடியற்ற இலவச உதை வழங்கப்பட்டு விளையாட்டுத் தொடரும்.

2) கோல் காப்பாளர் பந்தைக் கையால் பிடிக்க முடியாத சந்தர்ப்பம் ஏதாவது உள்ளதா? சில சமயங்களில் கையால் பிடிப்பதை விட்டுவிட்டு காலால் விளையாட/உதைக்க் முற்படுவதைப் பார்த்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்?

இரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

ஒரு அணியின் விளையாட்டு வீரர்கள் திட்டமிட்டு பந்தை அவ்ர்களின் கோல்க் காப்பாளர்களை நோக்கி உதைக்கும் போதும்

வெளிக் கோடுகளில் இருந்து பந்தை கைகளினால் எறிந்து விளையாட்டை தொடரும்போது அது கோல்க் காப்பாளரை நோக்கித் திட்டமிட்டு அவருடைய அணி வீரர்களால் எறியப்பட்டாலும்

கோல்க் காப்பாளர் தனது கைகளினால் பந்தைத் தொடக் கூடாது.

விளையாட்டில் நேரத்தை வீணடிப்பவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட விதிமுறை.

வாத்தியார்

...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11.ஒதுங்கி நிற்றல்.

உதைபந்தாட்டத்தின் போது ஒரு அணியின் வீரர் எதிரணியின் மைதானப் பகுதிக்குள்

இருக்கும் கோல்க் கோடுகளுக்கு அண்மையாக, அந்த அணியின் கடைசி இரண்டு வீரர்களை விடவும் பந்தை விடவும் நெருக்கமாக நின்றால், ஒதுங்கி நிற்றல் எனப்படும்.

மேலே குறிப்பிட்டது போல மைதானத்தின் தங்களது அரைவாசிப் பகுதிக்குள் நின்றால் அது ஒதுங்கி நிற்பது ஆகாது.

ஒதுங்கி நிற்பது ஒரு விதிமுறை மீறல் அல்ல.

ஆனால் அப்படி ஒதுங்கி நிற்பவர்-

- விளையாட்டில் எந்த விதத்திலும் கலந்து கொள்ளும் போது- அது ஒரு விதிமுறை மீறல் எனக் கருதப்படுகின்றது.

ஒதுங்கி நிற்பவர் விளையாட்டில் கலந்து கொள்வது

பந்தை அடித்தல் அல்லது அடிக்க முற்படுதல்

தனது அசைவினால் எதிரணி வீரரைக் குழப்புதல்

கோல்க் காப்பாளரின் பார்வைக்குப் பந்தை மறைத்தல்

தனக்குச் சாதகமாகப் பந்தைப் பெற முயற்சித்தல்

என்பவையாகும்.

வெளி உதை

பக்கக் கோட்டினூடாக பந்தைக் கைகளால் எறிதல்

மூலை உதை

ஆகிய விளையாட்டின் தொடர்ச்சிகளின் போது ஒதுங்கி நிற்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.

ஒருவர் ஒதுங்கி நிற்பதற்காக மத்தியஸ்த்தர் விளையாட்டை இடை நிறுத்தினால் எதிரணிக்கு நேரடியற்ற இலவச உதை கொடுக்கப்படும்.

ஒதுங்கி நிற்பதற்காக எச்சரித்து மஞ்சள் அட்டை காட்டக் கூடாது.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

12.தடை செய்யப்பட்ட விளையாட்டும் முறை தவறிய விளையாட்டும்

உதைபந்தாட்டத்தில் விளையாட்டு வீரர்களால் விடப்படும் தவறுகளும் முறையற்ற விளையாட்டுக்களும் மத்தியஸ்த்தரால் தண்டிக்கப்படுகின்றன.

நேரடி இலவச உதை.

உதைபந்து விளையாட்டில் இருக்கும் போது ஒரு வீரர் விளையாட்டுமைதானத்தில் வைத்து.....

எதிரணி வீரரை

1.உதைத்தால்,

2.கால்களைக் குறூக்கே வைத்தால்,

3.அவரின் மேல் பாய்ந்தால்,

4.தோழோடு பலமாக முட்டினால்,

5.மோதினால்,

6.தள்ளினால்,

7.பிடித்து இழுத்தால்,

8.கைகளால் பந்தைப் பிடித்தால்,(16 மீ எல்லைக்குள் கோல்க் காப்பாளர் விதிவிலக்கு)

9.அடித்தால்,அடிக்க முயற்சித்தால்,

10.துப்பினால்,

எதிரணியினருக்கு நேரடியான இலவச உதை வழங்கப்படும்.

தண்டனை உதை.

மேலே குறிப்பிட்ட 10 முறைகேடுகளும் உதைபந்து விளையாட்டில் இருக்கும் போது(உதைபந்து மைதானத்தின் எந்த ஒரு மூலையில் விளையாடப்பட்டுக்கொண்டிருந்தாலும்) ஒரு வீரரால் அவருக்குரிய 16 மீ எல்லைக்குள் வைத்து எதிரணி வீரர்களின் மேல் செய்யப்பட்டால் எதிரணிக்குத் தண்டனை உதை வழங்கப்படும்.

நேரடியற்ற இலவச உதை.

கோல்க் காப்பாளருக்கு எதிராக அவர்

- 6 நொடிகளுக்கு மேல் உதைபந்தைக் கைகளில் பிடித்து வைத்திருந்தால்

-கைகளால் பிடித்த உதைபந்தை மைதானத்தில் இட்டு விட்டு வேறு வீரர்கள் அதைத் தொடமுன் மீண்டும் ஒருமுறை பிடித்தால்

- தனது அணியின் வீரர் ஒருவர் திட்டமிட்டுத் தன்னை நோக்கி உதைக்கும் பந்தை கைகளால் தொட்டால்

-தனது அணியின் வீரர் ஒருவர் திட்டமிட்டுத் தன்னை நோக்கி வெளிக்கோட்டில் இருந்து கைகளால் எறியும் பந்தை கைகளால் தொட்டால்

நேரடியற்ற இலவச உதை வழங்கப்படும்.

ஒரு விளையாட்டு வீரருக்கு எதிராக அவர்

-ஆபத்தாக விளையாடினால்

-ஒரு விளையாட்டு வீரர் ஓடுவதைத் தடுத்தால்

-கோல்க் காப்பாளர் உதைபந்தை கைகளில் இருந்து விடும் போது தடுத்தால்

-மேலே கூறப்படாத ஏதாவது ஒரு காரணத்திற்காக விளையாட்டை நிறுத்திய மத்தியஸ்த்தரிடமிருந்து மஞ்சள் அல்லது சிவப்பு அட்டையைப் பெற்றுக் கொண்டால்

நேரடியற்ற உதை வழங்கப்படும்.

வாத்தியார்

..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல தகவல்கள் வாத்தியார்!

மேலும்; முன்பு பந்து காப்பாளர்( கோல்கீப்பர்) தான் பிடித்த பந்தை கனநேரம் கையில் வைத்திருக்க மாட்டார். அம மாதிரியான சந்தர்ப்பங்களில் தரையில் பந்தை தட்டித் தட்டி தான் விரும்பிய இடத்துக்கு பந்தை உதைப்பார், இப்போதெல்லாம் பந்தை கன நேரம் கையிலே வைத்திருக்கிறார்கள் .

பனியன் கிழிபடும் அளவு இழுத்து தள்ளுப் படுகினம், இதையும் நடுவர் அதிகம் கண்டு கொள்வதில்லை!

முன்பு பந்து காப்பாளர் பெரிய சதுரக் கோட்டைத் தாண்டி வர மாட்டார். இப்போது முழு மைதானத்துக்கும் போய் வருகிறார். இது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி அண்ணா,

முன்பு பந்து காப்பாளர்( கோல்கீப்பர்) தான் பிடித்த பந்தை கனநேரம் கையில் வைத்திருக்க மாட்டார். அம மாதிரியான சந்தர்ப்பங்களில் தரையில் பந்தை தட்டித் தட்டி தான் விரும்பிய இடத்துக்கு பந்தை உதைப்பார், இப்போதெல்லாம் பந்தை கன நேரம் கையிலே வைத்திருக்கிறார்கள்

முன்பு கோல்க் காப்பாளர் எத்தனை தரமும் பந்தை மைதானத்தில்ப் போட்டுவிட்டு மீண்டும் திரும்பக் கைகளால் பிடிக்கலாம் என்ற விதிமுறை இருந்தது.

முன்னிலையில் நிற்கும் அணியினர் இந்த விதிமுறையினால் தங்களுக்குச் சாதகமாக நேரத்தைக் கடத்தியதால் விதிமுறை மாற்றப்பட்டது

பந்தைக் கைகளில் வைத்துக் கொண்டு ஒரு சில காலடிகளுக்கு மேல் எடுத்து வைக்கக்கூடாது என்றும் விதிமுறை இருந்தது.

இதையும் மத்திய்ஸ்த்தர்களுக்கு இலகுவான முறையில் 6 நொடிகளுக்கு மேல் காப்பாளார் பந்தைக் கைகளில் வைத்திருக்கக் கூடாது என்று மாற்றி விட்டார்கள்.

இந்த 6 நொடிகளுக்கிடையில் காப்பாளர் எத்தனை காலடிகளையும் எடுத்து வைக்கலாம்.

பனியன் கிழிபடும் அளவு இழுத்து தள்ளுப் படுகினம், இதையும் நடுவர் அதிகம் கண்டு கொள்வதில்லை!

விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப் பிடிக்கும் மத்தியஸ்த்தர்கள் இதை கவனிப்பார்கள்.

அதே வேளையில் விளையாட்டின் தரத்தையும் கருத்தில் கொள்ளும் மத்தியஸ்த்தர்களும் உண்டு.

விதிமுறைகளை மென்மையாகக் கடைப் பிடிப்பவர்களும் உண்டு.

முன்பு பந்து காப்பாளர் பெரிய சதுரக் கோட்டைத் தாண்டி வர மாட்டார். இப்போது முழு மைதானத்துக்கும் போய் வருகிறார். இது சரியா?

எனக்குத் தெரிந்தவரைக்கும் கோல்க் காப்பாளர்கள் எப்போதும் எந்த நேரத்திலும் மைதானத்தின் எந்த இடத்திற்கும் சென்று வரலாம்.

வாத்தியார்

.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டு வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள்

1.எச்சரிக்கை அட்டை (மஞ்சள்)

2.இரண்டாவது எச்சரிக்கை அட்டை( மஞ்சளையடுத்து சிவப்பு)

2.மைதானத்தை விட்டு வெளியேற்றும் அட்டை (சிவப்பு)

மேற்கூறப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் விளையாட்டு வீரர்கள்,மாற்று விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு எதிராக மட்டும் எடுக்கப்படும்.

-எச்சரிக்கை (மஞ்சள்) அட்டை

உதைபந்து விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பந்தினைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் ஒரு வீரர் எதிரணி வீரரை அல்லது எதிரணி வீரரின் மேல்

1.உதைத்தால்

2.கால்களைக் குறுக்கே வைத்தால்

3.தோழோடு பலமாக முட்டி மோதினால்

4.தள்ளினால்

5.பிடித்து இழுத்தால் 6.மேலே பாய்ந்தால்

7.மோதினால்

அல்லது

8.மத்தியஸ்த்தரின் முடிவுகளை எதிர்த்தால்

9.மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறினால்

10.விளையாட்டின் இடை நிறுத்ததின் பின்னர் மீண்டும் தொடரும் போது நேரத்தை வீணடித்தால்

11.ஒரு உதையின் போது மத்தியஸ்த்தரால் கணிக்கப்படும் பந்திற்கும் பாதுகாப்புத் தடைக்கும் இடையிலான தூரத்தை குறைக்க முயன்றால்

12.மத்தியஸ்த்தரின் அனுமதியின்றி மைதானத்தில் உட்புகுந்தால்

13.மத்தியஸ்த்தரின் அனுமதியின்றி மைதானத்தை விட்டு வெளியேறினால்

14.கைகளினால் அடித்து ஒரு கோலைப் பெற்றால் அல்லது அவ்வாறு முயற்சித்தால்

அந்த வீரருக்கு எச்சரிக்கையாக மஞ்சள் அட்டை காட்டப்படும்.(இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே)

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மைதானத்தை விட்டு வெளியேற்றப்படும் (சிவப்பு) அட்டை

ஒரு விளையாட்டு வீரர்,

1. அதிகூடிய வலுவுடன் வன்மையாக எதிரணி வீரரை எதிர்த்து விளையாடினால்

2.எதிரணி வீரருக்குக் காயத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடினால்

3.ஒருவரை அடித்தால் (மத்தியஸ்த்தர் உட்பட)

4.ஒருவர் மீது எச்சில் துப்பினால் (மத்தியஸ்த்தர் உட்பட)

5. எதிரணி வீரர் உதைக்கும் ஒரு கோலை அல்லது கோல் செல்லும் முழுமையான சந்தர்ப்பத்தைக் கைகளினால் தடுத்தால்(கோல்க் காப்பாளரைத் தவிர)

6.விதிமுறைகளை மீறி அல்லது தவறான விளையாட்டுக்களால் கோல் உதைக்கச் செல்லும் வீரரைத் தடுத்தால் (எதிரணியினரது கோல்க் கம்பங்களுக்கு அண்மையாக)

7.ஒருவரை இழிவாகப் பேசினால் ( மத்தியஸ்த்தர் உட்பட )

8.இரண்டாவது முறையாக எச்சரிக்கை அட்டையைப் பெற்றுக் கொண்டால்

சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

மைதானத்தை விட்டு வெளியேற்றப்படும் வீரர் மைதானத்தின் உட்புறத்தில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதைபந்தாட்டத்தின் போது ஒரு வீரர் இன்னொருவர் மீது ஏதாவது பொருளால் (பந்து உட்பட) எறிந்தால்...

1.எதுவித எதிர் விழைவுகளும் இல்லாமல் எறிந்தால் மஞ்சள் அட்டை காட்டப்படும்

2.எதிர் விழைவுகள் ஏற்படக் கூடிய வகையில் வன்மையாக அல்லது அதிகூடிய வலுவுடன் எறிந்தால் சிவப்பு அட்டை காட்டப்பட வேண்டும்.

ஒரு வீரர் 16 மீ எல்லைக்குள் நிற்கும் ஒருவர் 16 மீ எல்லைக்கு வெளியே நிற்கும் ஒருவர் மீது ஒரு பொருளால் எறிந்தால் தாக்காப் பட்ட இட்த்தில் வைத்து நேரடியான உதை வழங்கப்படும். (16 மீ எல்லைக்கு வெளியே)

ஒரு வீரர் 16 மீ எல்லைக்கு வெளியே இருந்து எறிந்து உள்ளே நிற்பவரைத் தாக்கினால் தண்டனை உதை வழங்கப்படும்.

ஒரு வீரர் மைதானத்தின் உள்ளே நின்று மைதானத்திற்கு வெளியே நிற்கும் ஒருவர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் எதிரணியிற்கு நேரடியற்ற உதை வழங்கப்பட வேண்டும்.கடைசியாகப் பந்து விளையாட்டில் இருந்த இடத்தில் இருந்து நேரடியற்ற உதை வழங்கப்படும்.

ஒரு வீரர் மைதானத்திற்கு வெளியே நின்று மைதானத்தில் நிற்கும் ஒரு எதிரணி வீரர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் தாக்கப்பட்ட இடத்தில் வைத்து நேரடியான உதை எதிரணிக்கு வழங்கப்படும். 16 மீ எல்லைக்குள் தாக்கப்பட்டால் தண்டனை உதை வழங்கப்பட வேண்டும்.

மாற்று வீரர் ஒருவர் மைதானத்தின் வெளியே இருந்து மைதானத்தின் உள்ளே நிற்கும் ஒரு வீரர் மீது ஒரு பொருளால் எறிந்து தாக்கினால் எதிரணியினருக்கு, கடைசியாகப் பந்து விளையாட்டில் இருந்த இடத்தில் இருந்து, நேரடியற்ற உதை வழங்கப்பட வேண்டும்

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13.

இலவச உதைகள்

1) நேரடி இலவச உதை

நேரடி உதையின் போது பந்தை நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ளலாம்.

நேரடி இலவச உதையின் போது உதைப்பவர் பந்தை நேரடியாக தனது அணியினது கோல்க் கம்பங்களினூடாக உதைத்தால் அது எதிரணிக்கான கோலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதற்காக எதிரணியினருக்கு மூலை உதை வழங்கப்படும்

2) நேரடியற்ற இலவச உதை

நேரடியற்ற இலவச உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற முடியாது.

அவ்வாறு கோல்க்கம்பங்களுக்கு இடையால் பந்து சென்றால் எதிரணியிற்கு வெளி உதை வ்ழங்கப்படும்.

நேரடியற்ற இலவச உதையின் போது உதைப்பவர் பந்தை நேரடியாக தனது அணியினது கோல்க் கம்பங்களினூடாக உதைத்தால் அது எதிரணிக்கான கோலாக எற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

அதற்காக எதிரணியினருக்கு மூலை உதை வழங்கப்படும்.

இலவச உதையின் போது பந்து மைதானத்தில் அசையா நிலையில் இருக்க வேண்டும்.

முதலில் உதைத்தவர் மீண்டும் உதைப்பதற்கு முதலில் வேறு ஒரு வீரரால் பந்து உதைக்கப்பட்டிருக்க வேண்டும்.

*ஒரு அணியினருக்கு அவர்களது 16 மீ பிரதேசத்திற்குள் இலவச உதை வழங்கப்பட்டால்...

சகல எதிரணி வீரர்களும் 9 மீ தூரத்திலும்

16 மீ பிரதேசத்திற்கு வெளியேயும் நிற்க வேண்டும்.

16 மீ பிரதேசத்தை விட்டுப் பந்து வெளியேறிய பின்னரே மற்றவர்கள் அதை உதைக்கலாம்.

5 மீ பிரதேசத்தில் பந்தை அதன் எந்தப் புள்ளியில் வைத்தும் உதைக்கலாம்.

*ஒரு அணியினருக்கு எதிராக அவர்களது 16 மீ பிரதேசத்திற்குள் நேரடியற்ற இலவச உதை வழங்கப்பட்டால்...

எதிரணியினர் 9 மீ தூரத்தில் நிற்க வேண்டும்

5 மீ பிரதேசத்தில் கோல்க் கோடுகளுக்குச் சமாந்தரமான அதன் கோட்டில் (விதிமுறை மீறல் இடம்பெற்ற இடத்திற்கு அண்மையாக்) வைத்து உதைக்கப்படும்.

இலவச உதையின் போது எதிரணியினர் 9 மீ தூரத்தக் கடைப்பிடிக்காமல் முனோக்கி நகர்ந்திருந்தால் இலவச உதை மீண்டும் உதைக்கப்படும்.(எச்சரிக்கை அட்டையும்)

16 மீ க்குள் இருந்து இலவச உதை நடாத்தப்பட்டு பந்து 16 மீ ப்ரதேசத்தை விட்டு வெளியேறாவிட்டால் (வெள்ளம்,காற்று,பனிக்கட்டி)

அந்த உதை மீண்டும் உதைக்கப்படும்.

இலவச உதையின் போது உதைத்த வீரர், வேறு வீரர்கள் உதைக்க முன்னர் மீண்டும் உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்

இலவச உதையின் போது உதைத்த வீரர், வேறு வீரர்கள் இதைக்க முன்னர் பந்தைக் கைகளால் பிடித்தால் எதிரணியினருக்கு நேரடி உதை வழங்கப்படும்

16 மீ பிரதேசத்தில் அவ்வாறு கைகளால் பிடித்தால்(கோல்க் காப்பாளர் தவிர) எதிரணியினருக்கு தண்டனை உதை வழங்கப்படும்.

கோல்க் காப்பாளர் 16 மீ பிரதேசத்தில் அவ்வாறு உதைத்தாலோ கைகளால் பிடித்தாலோ எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்.

கோல்க் காப்பாளர் 16 மீ பிரதேசத்திற்கு வெளியே அவ்வாறு கைகளால் பிடித்தால் எதிரணியினருக்கு நேரடி உதை வழங்கப்படும்.

வாத்தியார்

................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14. தண்டனை உதை (பனால்டி)

ஒரு அணியினருக்கு எதிராக தண்டனை உதை அளிப்பதற்கு முதல் மத்திய்ஸ்த்தர் அவதானிக்க வேண்டியவை:

1.உதைபந்தட்டாத்தில் பந்து விளையாட்டில் இருக்க வேண்டும்

2.விதிமுறை மீறல் 16 மீ எல்லைக்குள் நடைபெற்றிருக்க வேண்டும்

3.ஒரு விளையாட்டு வீரர் எதிரணி வீரருக்கு எதிராக விதிமுறைகளை மீறியிருக்க வேண்டும்.

கீழ்வரும் 10 காரணங்களுக்காக தண்டனை உதை வழங்கப்படும்

1.உதைத்தால்,

2.கால்களைக் குறூக்கே வைத்தால்,

3.அவரின் மேல் பாய்ந்தால்,

4.தோழோடு பலமாக முட்டினால்,

5.மோதினால்,

6.தள்ளினால்,

7.பிடித்து இழுத்தால்,

8.கைகளால் பந்தைப் பிடித்தால்,(16 மீ எல்லைக்குள் கோல்க் காப்பாளர் விதிவிலக்கு)

9.அடித்தால்,அடிக்க முயற்சித்தால்,

10.துப்பினால்

தண்டனை உதையின் போது நேரடியாகவோ நேரடியற்றோ விதிமுறைகளுக்கு அமைவாகப் பந்தை உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்க் கொள்ளலாம்.

தண்டனை உதையின் போது.....

1)பந்து முன்னோக்கி உதைக்கப்பட வேண்டும்

2)உதைப்பவர் தனது ஓட்டத்தை அல்லது நடையை இடை நிறுத்தாமல் ஒரே நகர்வில் உதைக்க வேண்டும்

3)உதைப்பவர் மத்தியஸ்த்தருக்கும் கோல்க் காப்பாளருக்கும் தன்னை விளக்கமாக அடையாளப்படுத்த வேண்டும்

4)கோல்க் காப்பாளர் உதைப்பவரை நோக்கியபடி(அவர் உதைக்கும் வரை)கோல்க் கோடுகளில் எதாவது ஒரு புள்ளியைல் தனது காலை வைத்திருக்க வேண்டும். (கோல்க் கோடுகளுக்கிடையில் அசையலாம்)

5)மற்றய வீரர்கள் மைதானத்தில்,16 மீ பிரதேசத்திற்கு வெளியே,தண்டனை உதைப் புள்ளிக்குப் பின்பாக,குறைந்தது 9 மீ தூரத்தில் நிற்க வேண்டும்

6)உதைப்பதற்கு மத்தியஸ்த்தரின் அனுமதியைப் பெற வேண்டும்

7)உதைப்பவர் இரன்டு முறை தொடர்ந்து உதைக்க முடியாது

8)மத்தியஸ்த்தர் விதிமுறைகளைக் கவனித்து விளையாட்டைத் தொடர வேண்டும்.

மத்தியஸ்த்தர் அனுமதி வழங்கிய பின்னர் தண்டனை உதை நடைமுறைக்குள் வரும் முன்னர் விதிமுறைகளை மீறினால்....

1)உதைப்பவரோ அவரின் சக விளையாட்டு வீரர்களோ விதிமுறைகளை மீறி உதைத்த பந்து கோலிற்குள் சென்றால் அது செல்லுபடியாகாது. தண்டனை உதை மீண்டும் உதைக்கப்பட வேண்டும்.

பந்து கோலிற்குள் செல்லாமல் விட்டால் விதிகளை மீறியதற்காக எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்

2)கோல்க்காப்பாளரோ அல்லது அவரின் சக விளையாட்டு வீரர்களோ விதிமுறைகளை மீறிப் பந்து கோலிற்குள் சென்றால் அது கோல் என் அங்கீகரிக்கப்படும்.

கோலிற்குள் செல்லாவிட்டால் தண்டனை உதை மீண்டும் உதைக்கப்படும்.

3)இரு அணியினரும் ஒரே நேரத்தில் விதிமுறைகளை மீறினால் தண்டனை உதை மீண்டும் உதைக்கப்படும் .

தண்டனை உதையை உதைப்பவர் தொடர்ந்து இருமுறை உதைத்தால்(வேறு வீரர்கள் உதைக்கும் முன்னர்) எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்.

தண்டனை உதையை வெளி நபர்கள் தடுத்தால் மீண்டும் உதைக்கப்படும்.

தண்டனை உதையின் போது உதைப்பதற்குத் தன்னை அடையாளப்படுத்திய வீரரைத் தவிர்த்து வேறு வீரர் அடிக்க முற்பட்டால் அது உடனடியாக மத்தியஸ்த்தரால் நிறுத்தப் பட்டு அவருக்கு எச்சரிக்கை அட்டை காட்டப்படும்.

வாத்தியார்

...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15. கைகளினால் எறிதல்

உதைபந்தாட்டத்தின் போது பந்து பக்கமாக இருக்கும் வெளிக்கோடுகளைத் தாண்டி மைதானத்தை விட்டு வெளியேறினால், பந்தைக் கைகளினால் மைதானத்தினுள் எறிந்து விளையாட்டுத் தொடரப்படும்.

பந்து பெளியேறு முன்னர் எந்த அணி வீரர் கடைசியாகப் பந்தை விளையாடினாரோ அவரின் எதிரணி வீரர்களால் விளையாட்டுத் தொடரப்படும்.

-பந்தை கைகளால் நேரடியாக கோல்க்கம்பங்களுக்குள் எறிந்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ள முடியாது.

-தனது கோல்க்கம்பங்களுக்குள் எறிந்தால் எதிரணிக்கு மூலை உதை வழங்கப்படும்

-எதிரணியின் கோல்க்கம்பங்களுக்குள் எறிந்தால் எதிரணிக்கு வெளி உதை வழங்கப்படும்

-கைகளால் எறியும் போது எதிரணி வீரர்கள் 2 மீ தூரத்தில் நிற்க வேண்டும்

-ஒரு விளையாட்டு வீரர் தானே பந்தைக் கைகளால் எறிந்து விட்டு உடனடியாக தானே உதைக்க முடியாது.

-அப்படி உதைத்தால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்

-ஒரு வீரர் பந்தைக் கைகளால் எறியும் போது அவருடைய அணியைச் சேர்ந்த கோல்க் காப்பாளர் அந்தப் பந்தைக் கைகளால் பிடிக்கக் கூடாது.

-மீறினால் எதிரணியினருக்கு நேரடியற்ற உதை வழங்கப்படும்

16. வெளி உதை

விளையாட்டின் போது ஒரு வீரர் பந்தை உதைத்து எதிரணியின் கோல்க் கோடுகளைத் தாண்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினால்(கோல் விதி விலக்கு) அந்தக் கோல்க் கோடுகளுக்கு உரிய அணியினருக்கு வெளி உதை வழங்கப்படும்

-வெளி உதையின் போது உதைத்த பந்து 16 மீ பிரதேசத்தை விட்டு வெள்யேறிய பின்னரே மற்ற வீரர்கள் உதைக்கலாம்.

-எதாவது காரணத்திற்காக அப்படி வெளியேறா விட்டால் வெளி உதை மீண்டும் நடாத்தப்படும்

-வெளி உதையை நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக்கொள்ளலாம்(உதைப்பவரின் அணிக்குச் சார்பாக மட்டும்)

17. மூலை உதை

ஒரு அணியினர் தனது கோல்க் கோடுகளுக்கூடாக உதைத்துப் பந்தை மைதானத்தை விட்டு வெளியேற்றினால் எதிரணிக்கு மூலை உதை வழங்கப் படும்.(கோல் விதிவிலக்கு)

-முலை உதையின் போது நேரடியாக உதைத்து ஒரு கோலைப் பெற்றுக் கொள்ளலாம் (உதைப்பவரின் அணிக்குச் சார்பாக மாத்திரம்)

-உதைக்கும் போது எற்கனவே இருக்கும் மூலைகம்பம் அகற்றப்படக் கூடாது

-மூலை உதைக்குரிய கால் வட்டத்தின் எந்த ஒரு இடத்தில் வைத்தும் பந்து உதைக்கப்படலாம்

-உதைத்தவர் மீண்டும் ஒரு முறை உதைப்பதற்குள் வேறு ஒரு வீரரால் பந்து உதைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வாத்தியார்

.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெற்றியீட்டும் அணியைத் தீர்மானிக்கும் முறை

உதைபந்தாட்டத்தின் சாதரணமான 90 நிமிட நேரத்தில், விளையாடும் இரு அணியினரும் கோல்களை உதைக்காமல் விட்டாலோ அல்லது சமனான அளவில் கோல்களை உதைத்திருந்தாலோ,வெற்றியாளர் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தால் விளையாட்டின் நேரம் நீடிக்கப்படும்.

நீடிக்கப்படும் நேரம் அதி கூடியதாக 30 நிமிடங்கள் இருக்கும்.

முதல் 15 நிமிடங்களின் பின்னர் அணியினர் மைதானத்தில் தங்கள் பகுதியை மாற்றிக் கொள்வார்கள்.

நீடிக்கப்பட்ட நேரத்திலும் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியாவிட்டால்

11 மீ உதை வழங்கப்படும்.

-உதைக்கப்படும் பகுதியை (கோல்க்கம்பங்களை) மத்தியஸ்த்தரே தீர்மானிப்பார்.

- மத்தியஸ்த்தரால் நாணயம் எறிந்து முதலில் யார் 11 மீ உதையை ஆரம்பிப்பது என்று முடிவு செய்யப்படும்

-கடைசி வரை மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர்களே 11 மீ உதையில் பங்கு பற்றலாம்.

-விளையாட்டின் நேர நீடிப்பின் முடிவில் ஒரு அணியில் வீரர்கள் குறைக்கப்பட்டு இருந்தால்

11 மீ உதையில் அதே எண்ணிக்கையிலான வீரர்களே எதிரணியிலும் பங்கு பற்றலாம்.

** உதாரணம்: 120 நிமிட விளையாட்டில் ஒரு அணியில் இருவருக்கு சிவப்பு அட்டையும் எதிரணியில் ஒருவருக்கு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டிருந்தால் ஒவ்வொரு அணியிலும் சமனான எண்ணிக்கையில் தலா 9 வீரர்களே (கோல்க் காப்பாளர் உட்பட )11 மீ உதையில் பங்கு பற்றாலாம் **

-முதலில் ஒவ்வொரு அணிக்கும் தலா 5 உதைகள் வழங்கப்படும்.

-அப்படியும் வெற்றியாளர் தீர்மானிக்கப்படா விட்டால் ஒர் அணி வெற்றி பெறும் வரை 11 மீ உதை தொடர்ந்து வழங்கப்படும்.

- 11 மீ உதையின் போது கோல்க் காப்பளர் மட்டும் அவருக்கு ஏற்படும் காயங்கள் காரணமாகத் தொடர்ந்து விளையாட முடியாவிட்டால் மாற்றப்படலாம்.(அதுவரை அந்த அணியினர் தங்கள் மாற்றும் எண்ணிக்கையை மீறாவிட்டால் மட்டும்)

- 11 மீ உதையின் போது கோல்க்காப்பாளர் எந்த நேரத்திலும் மைதானத்தில் இருக்கும் தன் அணி வீரர்களுடன் தன்னை மாற்றிக் கொள்ளலாம்.

-தன் அணியில் மைதானத்தில் இருக்கும் சகல வீரர்களும் பங்கு பற்றிய பின்னரே ஒரு வீரர் இரண்டாவது முறையாக 11 மீ உதையில் பங்கு பற்றலாம்

11 மீ உதையின் போது ஒரு அணியின் வீரர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பதற்காக மற்றைய அணியிலிருந்து ஒரு வீரர் குறைக்கப்பட வேண்டியதில்லை.

(11 மீ உதையின் ஆரம்பத்தில் மட்டுமே வீரர்கள் சமனாக்கப்படுவார்கள்)

வாத்தியார்

.................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://www.youtube.com/watch?v=Vs8WWBXGiXg&feature=fvsr

கைகளால் தட்டிக் கோல் அடிக்கும் பிரான்ஸ் அணி

வாத்தியார்

................

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று நடந்த தென்னாபிரிக்கா எதிர் உருகுவே உலகக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட விளையாட்டில் தென்னாபிரிக்காவின் கோல்க் காப்பாளர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு விளையாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அந்த மத்தியஸ்த்தரின் அணுகுமுறையும் சரியா?

என்னுடைய கணிப்பின் படி தண்டனை உதையும் மஞ்சள் அட்டையும் போதுமானதே!

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

வாத்தியார்

................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம்! சிகப்பு அட்டை மிகவும் அதிகம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோல்க் காப்பாளர் உருகுவே வீரரின் கால்களைத் தட்டு முன்னரே அந்த வீரர் பந்தினை கோல்க் கம்பங்களுக்கு எதிரான திசையில் உதைத்து விடுகின்றார்.

அங்கே வேறு பல தென்னாபிரிக்க வீரர்கள் நிற்கின்றார்கள்.

கோல் உதைக்கப்படும் சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

நூறு விகிதம் கோல் உதைக்கும் சந்தர்ப்பத்தைத் தடுத்திருந்தாலோ அல்லது அந்த வீரர் காயப்பட்டிருந்தாலொ சிவப்பு அட்டை காட்டப்பட வேண்டும்.

அதைவிட அந்த மத்தியஸ்த்தர் சிறிது குழம்பிய நிலையில் காணப்படுகின்றார்.

முதலில் மஞ்சள் அட்டையைத் தேடுகின்றார்.

பின்னர் சிவப்பு அட்டை எடுத்துக் காட்டுகின்றார்.

தெளிவான முடிவில் இருந்திருந்தால் உடனடியாக சிவப்பு அட்டையைக் காட்டியிருப்பார்

வாத்தியார்

............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போது ஆர்ஜண்டினாவும், டென்கொரியாவும் விளையாடுகின்றன!

ஆர்ஜன் - 1 ___ கொரிய - 0 .

கோரிய வீரரின் காலில் பட்டு கோல் போனது. (சேம் சைட்).

பழைய வீரரும் ,தற்போதைய பயிற்சியாளருமான மாரடோன களத்தில் நின்று ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாவது கோல் ஆர்ஜன்டினா போட்டு விட்டது. 9 ம் இலக்க வீரர் தலையால் அடித்துப் போட்டு விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

45 நிமிடம் முடிந்து கூடுதல் 1 நிமிடத்தில் தென் கோரிய 1 கோல் போட்டுவிட்டது. 17 இலக்க வீரர் போட்டு விட்டார். :lol:

மைதானத்தில் வர்ணனையை விட பின்னணி இசை கூடுதலாக இருக்கிறது. இசையமைப்பாளர்கள் கவனிக்கவேண்டும்! :lol::o

ஆர்ஜன்டினா 2 __ கொரியா 1

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்ஜன்டினா 14 ம் இலக்க வீரருக்கு மங்களகரமாய் ஒரு மஞ்சள் அட்டை! :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்ஜன்டினா 6 இலக்க வீரர் ஒரு மஞ்சள் அட்டை! :lol:

ஆர்ஜன்டினா 9 இலக்க வீரர் ஒரு கோல் போட்டுவிட்டார்.

ஆர்ஜன்டினா 3

கொரியா 1 .

ஆர்ஜன்டினா 16 தட்டிக் கொடுக்க 9 ஒரு கோல் போட்டுவிட்டது. :lol:

ஆர் __ 4

கொரி __ 1 .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

smilie_flag_122.gifஆர்ஜன்ரீனா 5 (16,33,45,76,80 நிமிடம்) - தென்கொரியா - 1 (45 நிமிடம்) smilie_flag_296.gif

fahne-argentinien_4.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் சிறி வெறி சொறி ஆர்ஜன்டினா 4 ----- தென்கொரியா 1 .

நீங்கள் 45 வது நிமிடத்தில் இரு அணிக்கும் கோல் போட்டு இருக்கிறீங்கள். அந்த கோல் கொரியாவுக்கு சொந்தமானது. பாவம் ஒன்றாவது எடுத்துக்கொண்டு பிழைச்சுப் போகட்டும் விட்டு விடுங்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2025 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி! இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நானாவித வர்த்தக கண்காட்சியாகக் குறிக்கப்படும், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  15ஆவது வருடமாக நடைபெறும் இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.  'வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்' என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வர்த்தக வல்லுனர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களை ஒன்றிணைத்து பொருளாதார நிகழ்வாக நடைபெறவுள்ளது.  குறிப்பாகப் பிராந்தியத்தின் பொருளாதார ஆற்றல் மற்றும் செழிப்பான தொழில்துறை என்பன விரிவாகக் காட்சிப்படுத்தப்படும்.  கடந்த 2002 ஆம் ஆண்டு இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிடத் தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.  புதிதாக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல தொழில் முனைவோர் அதிக அளவில் வருடா வருடம் இந்த கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  இந்த கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கில் உள்ள தனிநபர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்குத் தொடர்ந்தும் ஒரு தளத்தை வழங்கி வருவதாக யாழ்ப்பாண வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சுட்டிக் காட்டியுள்ளது.   https://www.hirunews.lk/tamil/391505/2025-ஆம்-ஆண்டுக்கான-யாழ்ப்பாண-சர்வதேச-வர்த்தக-கண்காட்சி  
    • அனலைதீவை அபிவிருத்தி செய்வோம் adminDecember 22, 2024 கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் , அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார். அனலைதீவுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உ இளங்குமரன் ஆகியோர் நேரில்   சென்றிருந்தனர்.   அதன் போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, கடற்தொழிலாளர்கள் , விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சனை தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது. அதன் போது , அனலைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் , குறிப்பாக மின்சாரம் , படகு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பில் அறிந்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க பொறிமுறைகளை உருவாக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் எமது அரசாங்கம் கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதனால் , அனலைதீவிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இப்பகுதியை அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.   https://globaltamilnews.net/2024/209504/
    • இந்தியாவுக்கு போட்டியாக சீனர்கள் அனுரவிற்கு ஆகாயத்தில் இருந்து பூமழை தூவுவார்கள்.😂
    • பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி போராட்டம் adminDecember 22, 2024 யாழ்ப்பாணம், பருத்தித்துறை – பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது , கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர்.  இதன்போது எமது வீதி எமக்கானது புதிய அரசே புது வீதி அமைத்து தா?,  ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.   https://globaltamilnews.net/2024/209509/  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.