Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியம் என்ற பெயரால் நாடுகடந்த அரசாங்கத்தை துண்டாட திறந்தமடல் என்ற பெயரில் சேரமானின் பகிரங்க முயற்சி

Featured Replies

தேசியம் என்ற பெயரால் நாடுகடந்த அரசாங்கத்தை துண்டாட திறந்தமடல் என்ற பெயரில் சேரமானின் பகிரங்க முயற்சி

சேரமானின் திறந்த மடல் இணைப்பு

ஏமாறக் கூடாது தமிழினம் இதற்கு துணைபோகக் கூடாது திரு.சே.ஜெயானந்தமூர்த்தி அவர்கள்

முள்ளிவாயக்கால் படுகொலைகள் முடிந்த பின் எல்லாவற்றையும் இழந்து பெரும் துயரத்தில் இருந்தவேளையில் புலம் பெயர்ந்த தமிழீழமக்களின் ஒரே ஆறுதலாக இருந்த நாடுகடந்த அரசாங்கத்தின் தோற்றம் பெரும் ஆறுதலாக இருந்தது. தற்போது நடைபெறும் இப்படியான சதிமுயற்சிகளால் பெரும் துயரத்தில் புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் சிக்கிச் சீரழிகிறது.

உண்மையான இன உணர்வும் தமிழ்தேசியத் தலைவனை நேசிக்கும் மக்களால் இப்படியான செயற்பாடுகளை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை மாறாக பிழவுபட்டு நிற்கும் இவர்களை எண்ணி செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

இதுவரைகாலமும் தேசியத்தலைவனால் கட்டிக்காத்து வந்த புலம்பெயர்ந்த சமுதாயத்தின் பலம் சிதறுண்டு போக எண்ணும் இலங்கை அரசின் முயற்சிதான் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது.

திரு. உருத்திரகுமாரிடம் இருந்து நாடுகடந்த அரசாங்கத்தை பிளவுபடுத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள் மாறாக மக்களைத் தெருத்தெருவாக கொடிபிடித்து அலையவிடப் போகிறீர்களா? இறுதி யுத்தத்தின் போது வரலாற்றில் என்றுமில்லாதவாறு புலம் பெயர்ந்த சமூகத்தின் எழுர்ச்சியால் உலகம் நம்மைத் திரும்பிப்பார்த்ததா இல்லை அதற்குமாறாக இலங்கை அரசோடு சேர்ந்து என்ன செய்தது என்பது எல்லோருக்கும் தெரியும் கொடியும் கோசமும் தற்போதய உலக சூழ்நிலையில் ஒர் தீர்வும் பெற்றுத்தரப்போவதில்லை முடிந்தால் இருதரப்பும் ஒன்றுபட முயற்சிசெய்யுங்கள். இல்லையேல் விட்டுவிலகிவிடுங்கள்.

திரு. உருத்திகுமாரிடமுள்ள அறிவும் ஆற்றலும் தெரிந்துதான் தலைவர் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறச்செய்தார். அவரிடம் எதாவது குறையிருந்தால் அதைத் தீர்ப்பதற்கு வேண்டுமானால் முயற்சி செய்யுங்கள் அதைவிட்டு அவரை நீக்கிவிட்டு செயற்பட முனையும் உங்களை தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது. அத்தோடு உருத்திரகுமாரால் தமிழினத்துக்கு எதாவது துரோகம் ஏற்படுமானால் புலம்பெயர்ந்த சமூகம் ஒன்றும் முட்டாள்களில்லை தயவு செய்து ஒன்றுபட முயற்சியுங்கள்.

முன்பிருந்த புலம்பெயர்ந்த சமூகத்தின் எழுர்ச்சி இப்போது இல்லை காரணம் முள்ளிவாயக்கால் முடிவுக்குப்பின் புலம்பெயர்த சமூகத்தை சரியான பாதையில் வளிநடாத்தாமல் மக்களை குழப்பநிலைக்கு கொண்டுவந்த பெருமை வேண்டுமானால் உங்களைச்சாரும். தயவுசெய்து ஒன்றுபட்டு புலம்பெயர்ந்த சமுதாயத்தை ஓரணியில் செயற்படுத்த வாரீர்.

5.JPG

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்

உண்மையிலே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாக இருந்தால் முதலில் தயவு செய்து ஓரணியில் செயற்படமுயற்சி செய்யுங்கள் அதன்பிறகு யார்வந்தால் என்ன.

இது தலைவனின் வேண்டுதலாக எண்ணிச்செயற்படுங்கள்

http://www.youtube.com/watch?v=Y9usGiFasXQ

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

திரு.ஜெயானந்தமூர்த்தி அவர்களே இநதச் சொகுசுபழகிய சொறிநாய்க்கூட்டம் சும்மாயிராது.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நான் உங்கள் எல்லோரிடமும் பல காலமாக கேட்கின்றேன்

நான் எனது முடிவை சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதியாக சொல்லிவிட்டேன்

நாம் எல்லோரும் சேர்ந்தால் இவர்களால் தனித்து நின்று எதுவும் செய்துவிடமுடியாது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

திரு. உருத்திரகுமாரிடம் இருந்து நாடுகடந்த அரசாங்கத்தை பிளவுபடுத்தி என்ன சாதிக்கப் போகிறீர்கள் மாறாக மக்களைத் தெருத்தெருவாக கொடிபிடித்து அலையவிடப் போகிறீர்களா? இறுதி யுத்தத்தின் போது வரலாற்றில் என்றுமில்லாதவாறு புலம் பெயர்ந்த சமூகத்தின் எழுர்ச்சியால் உலகம் நம்மைத் திரும்பிப்பார்த்ததா இல்லை அதற்குமாறாக இலங்கை அரசோடு சேர்ந்து என்ன செய்தது என்பது எல்லோருக்கும் தெரியும் கொடியும் கோசமும் தற்போதய உலக சூழ்நிலையில் ஒர் தீர்வும் பெற்றுத்தரப்போவதில்லை முடிந்தால் இருதரப்பும் ஒன்றுபட முயற்சிசெய்யுங்கள். இல்லையேல் விட்டுவிலகிவிடுங்கள்.உருத்திரகுமாரால் தமிழினத்துக்கு எதாவது துரோகம் ஏற்படுமானால் புலம்பெயர்ந்த சமூகம் ஒன்றும் முட்டாள்களில்லை.தயவு செய்து ஒன்றுபட முயற்சியுங்கள்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்

சவால்கள் பலவற்றை எதிர்கொண்டவாறு களம் புகும் நாடுகடந்த தமிழீழ அரசு

தனிவழிப் பயணம்தான்... தயங்கோம்

எது வந்து எதிர்த்தாலும்... மயங்கோம்

வாழ்வை நிமிர்த்தும்.. வழியில் செல்ல...

மறுக்கோம்

மாவீரர்களே, உங்கள் கல்லறை மீது சபதம் எடுக்கின்றோம்:

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

Edited by suryaa

  • தொடங்கியவர்

நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர் செ. ஜெயானந்தமூர்த்தி அவர்கட்கு ஒரு பகிரங்க மடல்

தமிழ் தேசியத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதுவதற்கு நினைத்திருந்தேன். ஆனால் எல்லோரும் உங்களுக்கு திறந்த மடல் எழுதுவது நன்றாக இருக்காது. அதற்காக உங்களுக்கு ஒரு பகிரங்க மடல் ஒன்றை எழுதுகிறேன்.

நாடுகடந்த அரச தேர்தலில் போட்டி இட்டு நீங்கள் வடமேற்கு லண்டனில் அதிக வாக்குகளை பெற்று தமிழீழ நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள். மிகவும் சந்தோசம். தமிழ் தேசியத்திற்காக கடந்த சில வருடங்களாக அயராது உழைத்துவரும் உங்களுக்கு புலம் பெயர் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். தமிழீழ முதலாவது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உங்களுக்கு கிடைத்ததை இட்டு மட்டக்களப்பில் பிறந்து புலத்தில் வாழ்பவன் என்ற அடிப்படையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனாலும் உங்களுக்கு சில விடயங்களை திறந்த மனத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

1. எனது ஆயுத போராட்டம் கடந்த வருடம் மே மாதம் சர்வதேச சதிகார வலைப்பின்னலால் யாரும் எதிர்பார்க்காத முடிவுக்கு வந்ததை தொடர்ந்தது தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் சிந்தனைக்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கும் செயற்பாடாக நாடுகடந்த அரசை தமிழீழ தேசியத்தை விட்டுவிலகாத, தமிழீழ தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தாத மிகவும் உறுதி கொண்ட ஒரு தேசிய தலைமையால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதை சிதறடிக்கும் நோக்குடன் ஒரு முகம் தெரியாத குழு தனது சதி வேலைகளை செய்துவருகிறது. தமிழ் தேசிய உணர்வலர்களாக புலம்பெயர் மக்கள் சிலருக்கும் சில புலம் பெயர் அமைப்புக்களிற்கும் தங்களை காட்டி கொள்ளும் இவர்கள் தொடர்பாக நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

2. நாடுகடந்த அரசு உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து அதை விரும்பாத நோர்வேயில் இருந்து செயற்படும் அந்த முகம் தெரியாத குழு நாடுகடந்த அரசின் இணைப்பாளராக இருக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் சட்ட ஆலோசகர் மீது வீண் பழி சுமத்தி அவரை அதிலிருந்து அகற்றுவதற்காக அவர்கள் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டனர். அதற்காக அவர்கள் உருத்திரகுமார் மீது பல்வேறு உண்மைக்கு புறம்பான வதந்திகளை வாரி தமது இணையத்தளங்கள் முலம் பறைசாற்றினர். அதுவும் தோற்றுப் போக வேறு வழி இன்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர எடுத்த சதிவலை தொடர்பாக நீங்கள் விழிப்பாக இருப்பீர்கள் என்று நினைகிறேன். அவர்களின் நாசகார தமிழ் தேசிய விரோத நடவடிக்கைகள் பலவும் தோல்வியில் முடிவடைய உங்களை வைத்து நாடுகடந்த அரசை குழப்புவதற்கு அவர்கள் மடல் எழுதுகிறார்கள். அது தொடர்பாக நீங்கள் மிகவும் விழிப்புடம் இருந்து தமிழ் தேசியத்தை முன்னெடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு வாக்குப் போட்ட என்னை போன்ற புலம் பெயர் மக்களின் உள்ளங்களில் இருந்து உங்களுக்கு விடுக்கும் செய்தி.

3. போர் ஒய்வு காலத்தில் விடுதலை புலிகளின் சட்ட ஆலோசகர் எத்தனை தடவைகள் வன்னிக்கு சென்றார் என்பதும் இடைக்கால நிர்வாக சட்ட வரைபை முன்னின்று யார் வரைந்தது என்பது தெரியாத அந்த முகம் தெரியாத குழு இன்று சட்ட ஆலோசகர் மீது புதுவிதமாக வன்னிக்கு செல்ல மறுத்தவர்கள் என்று புதுக் கதை ஒன்றை சொல்லுகிறார்கள். புலம் பெயர் தமிழ் மக்கள் என்ன யாதும் தெரியாத முட்டாள்கள் என்று அந்தக் குழு நினைக்கிறதா?

புலம் பெயர் நாடுகளில் செயற்படும் சில அமைப்புக்கள் மற்றும் சிலர் இந்த சதிகார கும்பலுக்கு தெரியாமல் துணை போயிருக்கலாம். தற்பொழுது தமிழீழ நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த சதிகார கும்பலின் நடவடிக்கைகளிற்கு துணை போயிருக்கலாம். ஆனால் லண்டன், பிரான்ஸ் மற்றும் கனடா நாடுகளில் இவர்கள் செய்த சதி வேலைத்திட்டங்கள் அம்பலமாகியதை தொடர்ந்து புலம் பெயர் அமைப்புக்களும் மக்களும் விழிப்படைந்துள்ளனர் என்பது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி.

தமிழ் தேசியத்தின் தேசியப் பற்றாளர்களாக தங்களை சித்தரித்து மக்களை முட்டாள் ஆக்கி தமிழ் தேசியத்திற்காக உறுதியுடன் உழைப்பவர்களை துரோகிகள் ஆக்க நினைக்கும் இவர்களை தமிழீழ மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் தொடர்பாக புலம் பெயர் மக்கள் விழிப்பாக இருப்பதோடு இவர்களின் நடவடிக்கைகளிற்கு தமிழீழ தேசியத்திற்காக அயராது உழைத்து வரும் ஜெயானந்தமூர்த்தி போன்றார் துணை போக மாட்டார்கள் என்று நம்புவோமாக! இல்லையேல் காலம் என்று ஒருநாள் தண்டிக்கும்.

maran80@hotmail.co.uk

  • தொடங்கியவர்

நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான பகிரங்க மடலுக்கு ஜெயானந்தமூர்த்தி அவர்களின் பதில்

பிரித்தானியா, வடமேற்கு லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அதிக வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தமிழர் ஒருவர் அனுப்பிய பகிரங்க மடலுக்கு உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அனுப்பியுள்ள பதில்....

அன்புடன் மாறன்.

உங்கள் திறந்த மடல் பார்த்தேன். மிகவும் சந்தோசம். என்னைப் பொறுத்தவரை நான் கொள்கையிலும் தேசியத்திலும் இருந்து விலகப்போவதில்லை. நான் அதில் உறுதியோடு இருக்கின்றேன். அத்துடன் எவரும் என்னை பகடைக் காயாக நடத்த முடியாது. ஏனெனில் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். மக்களின் ஆணைக்கே நான் தலைவணங்குவேன்.

அதேவேளை என்னைப் பொறுத்தவரை நாடுகடந்த அரசில் இருந்து யாரையும் ஒதுக்குவதோ அல்லது ஓரங்கட்டுவதோ எனது நோக்கமல்ல. அவ்வாறான எண்ணம் என் மனதில் என்றுமே இல்லை.

இந்த நாடு கடந்த அரசாங்க அமைப்புப் பணியில் காலநேரம் பாராது உழைத்தவர் திரு.உருத்திரகுமார் என்பதும் எனக்குத் தெரியும்.

எனவே இதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன், கொள்கையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலமே எமது இலட்சியத்தை இதன் ஊடாக அடைய முடியம். இதில் நான் உறுதியாக உள்ளேன்.

நன்றி

எஸ்.ஜெயானந்தமூர்த்தி

moorthymp@yahoo.com

நாடுகடந்த தமிழரின் அரசு தொடர்பாக திரை மறைவில் நிகழ்த்தப்படும் பொம்மலாட்டம் தொடர்கின்றது.

மே 2 இன் பின்பும் திரை விளகுவாத இல்லை. தேர்தல் திருவிழாக்கள் தொடர்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.