Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேற்றத்தை விரைவில் செய்ய வேண்டும்- இந்தியா

Featured Replies

மீள்குடியேற்றத்தை விரைவில் செய்ய வேண்டும்- இந்தியா

லங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள தமிழர்களையும் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்ற தலைப்பில், அப்ஸர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசும்போது, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அதே நேரத்தில், இலங்கை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்வது என்பதை அவர்களே பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிருபமா ராவ் வலியுறுத்தினார்.

கூடுதல் உதவி

நிருபமா ராவ்

வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ்

மேலும், இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா அளித்துவரும் உதவிகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், 500 கோடி ரூபாய் உதவித் திட்டத்தை முதலில் இந்தியா அறிவித்த பிறகு, 416 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியிருப்பதாகவும், மேலும் 382 மில்லியன் டாலர்கள் கடன் அடுத்து வழங்கப்பட இரு்பபதாகவும் தெரிவித்தார்.

இந்திய முறை சாத்தியமில்லை

அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம், இந்தியாவைப் போன்ற ஆட்சி முறையை இலங்கையில் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவி்ததார்.

இலங்கைக்குப் பொருத்தமான வகையில், அதிகாரத்தைப் பகி்ர்ந்துகொள்ளும் வகையி்ல புதிய முறையை உருவாக்க வேண்டும். அந்த முறை தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்கும் கெளரவம் அளிக்கும் வகையிலும், சம உரிமை கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தூதர் கூறினார்.

பின்னர் பிபிசி தமிழோசையிடம் பேசிய பிரசாத் காரியவசம்,

இலங்கையின் வடக்கே தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக நிராகரித்தார்.

இந்திய இலங்கை உடன்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான அம்சங்கள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறை, நிலம் உள்ளிட்டவற்றின் அதிகாரம் தொடர்பாக இன்னும் பேசி வருவதாகவும், வடக்கு, கிழக்கில் மாகாண கவுன்சில்கள் அமைக்கப்பட்டு, பொறுப்பான தலைவர்கள் வந்தால்தான் அதன்பிறகு மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர், பிரச்சினையை அரசியலாக்காமல், சகஜநிலை மேம்பட உதவ வேண்டும் என்றும் பிரசாத் காரியவசம் வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் உள்பட, .

இலங்கை, இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100511_lankadelhi.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீள் குடியேற்றிறதில பிரச்சினை இல்லயாம் புதைச்ச வெடிபொருள்கள் அகற்ற வேணுமாம். உதுக்குத்தான் ஒண்ட நேற்று குடுத்ததோ தெரியாது!! :rolleyes:

  • தொடங்கியவர்

மீள் குடியேற்றிறதில பிரச்சினை இல்லயாம் புதைச்ச வெடிபொருள்கள் அகற்ற வேணுமாம். உதுக்குத்தான் ஒண்ட நேற்று குடுத்ததோ தெரியாது!! :rolleyes:

ஏனப்பு புதைச்ச உங்கட ஆக்களுக்கு தெரியாதோ எங்கை புதைச்சவை எண்டு...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி.... தலைவர் எல்லாத்தயும் கொண்டுபோனவர். இண்டைக்கும் உங்களுக்கு வெற்றி. நீங்கள் குதிரய ஓடுங்கோ...நான் நாளைக்கு வாறன். :rolleyes:

  • தொடங்கியவர்

சரி சரி.... தலைவர் எல்லாத்தயும் கொண்டுபோனவர். இண்டைக்கும் உங்களுக்கு வெற்றி. நீங்கள் குதிரய ஓடுங்கோ...நான் நாளைக்கு வாறன். :rolleyes:

தந்ததை கொண்டுவந்து வாந்தி எடுத்து போட்டு எங்கை ஓடுறீர்...?? தந்த காசுக்கு வேலை முடிஞ்சுதோ...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil Nadu political parties must unite to help Eelam Tamils. At least they can threaten the Central government as I said below:

If in Tamil Nadu state election a political party won more than 50% seats on a manifesto for independence or on a manifesto which had independence as the larger agenda among other goodies) then that party, having won control the state government, can call for a referendum on separation. If more than 50% voted for separation in the referendum then Tamil Nadu will be recognised as an independent country.

So the rest of India must negotiate if the people of Tamil Nadu people vote fair and square to leave India!

Indian unity cannot be guaranteed by undermining the emergence of independent Tamil Eelam. India needs to reform its own constitution to make it fully federal for long term stability. The good news is that the Indian government has appointed a commission to review its constitution.

இனிமேல் எதைச் சொன்னாலும் சிறிலங்கா காதைப் பொத்திக் கொள்ளும். புலிகள் இருந்தமைதான் தமக்குப் பாதகம் என்றிருந்த இந்தியா இப்போது சிங்கள தந்திரங்களினால் குழம்பிப்போயுள்ளது. போர்க்குற்றங்களில் சிறிலங்காவை இறுக்க முடியாமல் பாதுகாத்தவர்கள், தாமும் மீள முடியாதவர்களாயுள்ளனர். தமிழரை வெளிப்படையாக ஆதரிப்பதுதான் அதன் முன்னுள்ள மீளும் ஒரே வழி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பேரம் பேசும் சக்தி விடுதலைப்புலிகள் போல் இதய சுத்தியுடன் செயற்பட முன்வருவர்களே தமிழருக்கு தேவை, ஆனால் எமது அரசியல் தலமைகள் இந்தியாவை அந்த இடத்துக்கு கொண்டுவர முயற்சிப்பதன் மூலம்

1.எதிர்காலத்தில் புதிதாக இதய சுத்தியுடன் செயற்படும் எம்மவர்கள் தோன்றுவதை தடுக்கின்றனர்.

2.இந்தியாவை சாணக்கியமாக கையாளுவதில் எமது அரசியல் தலமைகள் தோல்வி அடைந்துள்ளது,

3.இந்த நிலையில் நமது அரசியல் தலமைகள் காலத்திற்கேற்ப புதிய முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறுகிறது(இந்தியா தவிர்ந்த சர்வதேச சக்திகளை நமது பிரச்சனையில் ஆதரவு சக்தியாக உருவாக்குவது

உ+ம் அவுஸ்திரேலியா அதிகரித்த அகதி வருகை அவர்களது உள்னாட்டு அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அத்துடன் மெதுவாக இலங்கை அரசு தொடர்பான எதிர்ப்பலை சாமானிய மக்களிடம் ஏற்பட்டு வருவதை ஊடகங்களில் அவதானிக்க முடிகிறது. உடனடியாக இலங்கை தூதரகம் அகதிகள் தொடர்பான கடும் நிலைப்பாட்டை அவுஸ்திரேலியா எடுக்க வேண்டும் எனவும் அகதிகள் அனைவரும் பொருளாதார அகதிகள் என்ற பிரச்சாரத்த்லீடுபட்டு வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.