Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏனென்றால்> இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்!

Featured Replies

ஏனென்றால், இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்!

திகதி: 14.05.2010 ஃஃ தமிழீழம்

மே 12 முதல் 18 வரையான காலப் பகுதியை சிங்கள தேசம் தமிழர்களை வெற்றி பெற்ற வாரமாக அறிவித்துள்ளது. அதற்கான கொண்டாட்ட வைபவங்களுக்கான ஏற்பாடுகள் கொழும்புஇ கண்டி, கிளிநொச்சி எனப் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் தான் நிகழ்த்திய தமிழினப் படுகொலையை நாடு தழுவிய ரீதியில் கொண்டாடி மகிழ்ந்த சிங்கள தேசம் இந்தவருடம் மட்டுமல்லஇ இனி வரும் காலங்களிலும் இன்னொரு போர் வெடிக்கும் வரை கொண்டாடவேதான் போகின்றது. இதற்கு மாறாகஇ தமிழர் தரப்பிலும் கடந்த வருடத்தின் சோக நாட்களில் எந்த நாள் அதிக வலி சுமந்தது என்பதில் பெரும் குழப்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய வரலாறுகளில் தன்னையும் ஒரு பதிவாக்கிக் கொள்ள விரும்பிய 'புதினப் பலகை' என்ற இணையத் தளம் மே 19 ஆம் நாளை 'ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்' எனப் பிரகடனப் படுத்திஇ அதற்கான ஆதரவையும் கோரியுள்ளது. ''கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன்இ வானம் ஏறி வைகுண்டம் போனானாம்'' என்பது போல்தான் புதினப்பலகையின் அறிவிப்பு.

ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளுக்காக நீதி கோரி உலகத் தமிழர்கள் போராடுகின்ற நிலையில், 'ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு நாள் தேடும்' முயற்சியில் புதினப்பலகை தமது பதிவுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனிலும் கொடுமை, எதிர்வரும் மே 12 முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தை கறுப்பு நாட்களாக நினைவு கூரும்படி தமிழ் அமைப்புக்கள் வலியுறுத்தி வரும் நிலையில்இ மே 18 ஆம் திகதியை 'போர்க் குற்ற நாள்' என உலகத் தமிழர் பேரவை அறிவித்ததுஇ அந்த நாளை நினைவு கூரும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்இ புலம்பெயர் தமிழர்களின் போர்க் களங்களை நெருங்கிவர மறுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மே 17 ஆம் திகதியை துக்க தினமாக அறிவித்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பட்ட வேதனைகள்இ அவலங்கள். அழிவுகள், மரணங்கள் கூட எம்மவர்களால் அரசியல் ஆக்கப்படுகின்றது.

மே மாதம் தொடங்கியதுமே, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை நாளாந்தம் கொல்வதை சில மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த இரு துருவவாதிகள் தற்போது மீண்டும் தமது பணியினை இணையத் தளங்களில் ஆரம்பித்து விட்டார்கள். விடுதலைப் போர்க் களத்தில் பங்காற்றினார்களோ, பணியாற்றினார்களோ, நிதி வழங்கினார்களோ அறியேன். ஆனால்இ தேசியத் தலைவர் குறித்த தமிழ் மக்களது நம்பிக்கை அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு இடைஞ்சலாக உள்ளதை உணரக் கூடியதாக உள்ளது.

தேசியத் தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை 90 வீதமான தமிழர்களிடம் உண்டு. தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்ட அனைத்துத் தலைவர்களிடமும் உண்டு. யாராலும் அறியப்படாத, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாதஇ தமிழ் மக்கள் முன்பாக முகம் காட்டவே அச்சப்படும் ஒருசிலரும்இ முன்னர் தேசியத் தலைவர் அவர்களால் பதவியிறக்கம் செய்யப்பட்டஇ பதவி நீக்கம் செய்யப்பட்ட, வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பணியாளர்கள் சிலரும் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பால் வார்ப்பதன் மூலம் தமக்கே தமக்கான புதியதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் ஈழத் தமிழர்களை அழைத்துச் செல்ல முற்படுகின்றார்கள்.

ஆடுகள் நனைவதைப் பார்த்து ஓநாய்கள் அழுவது போலவே, தமிழர்கள் தேசியத் தலைவரது ஆணையின்கீழ் இப்போதும் செயல்படுவதைப் பார்த்து இவர்களும் விழுந்து விழுந்து கதறி அழுகின்றார்கள். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற சிங்கள வாதத்தை ஏற்றுக்கொண்டிரந்தால், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடியிருக்குமாம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் எழுச்சியை உருவாக்கியிருந்திருக்க முடியுமாம், போர்க் களத்தில் தப்பிப் பிழைத்து எஞ்சிய போராளிகள் பலம் பெற்றிருந்திருப்பார்களாம், புலம் பெயர் தேசங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் பலம் பெற்றிருக்குமாம் என்றெல்லாம் பிதற்றும் இந்த வெற்று மனிதர்கள் எல்லாமே நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தக் கொடுமையான காலங்களில் எதற்காக முன் வந்து மக்களிடம் தெளிவுகளை ஏற்படுத்தி, முன்நின்று வழி காட்டவில்லை என்பது புரியாமலேயே உள்ளது.

'பிரபாகரன்' என்பது ஒரு தனி மனித அடையாளம் அல்ல. அது தமிழ்த் தேசியத்தின் முகவரி. தமிழ் மக்களது தேசிய நம்பிக்கை உயிர்த் துடிப்பு. அந்த வார்த்தைக்கு முடிவுரை எழுதுவதன் மூலம்இ தமிழ்த் தேசிய எழுச்சியைச் சிதைப்பதும், தமிழ் மக்களின் தேசிய நம்பிக்கையைச் சிதைப்பதுமே இந்த நாசகாரர்களின் குறிக் கோளாக உள்ளது.

தமிழீழ மக்களின் நம்பிக்கையைச் சிதறடிப்பதன் மூலம் அவர்களது தேசிய எழுச்சியை முறியடிப்பதே இவர்களது ஒரே நோக்கம். மனிதர்களின் அப்பழுக்கற்ற நம்பிக்கை மட்டுமே வரலாற்றை மாற்றியமைக்கும் நம்பிக்கையை உருவாக்குகின்றது. கடவுள் மீதான நம்பிக்கை அந்த மக்களை நெறிப்படுத்துகின்றது. தலைவன் மீதான நம்பிக்கை அவர்களது சுதந்திரக் காற்றை உறுதிப்படுத்துகின்றது.

நல்லவற்றின் மீதான் நம்பிக்கைகள் என்றுமே பொய்த்துப் போனது கிடையாது. ஈழத் தமிழர்கள் தமது தேசியத் தலைவர் மீது கொண்ட நம்பிக்கையும், அவரது இருப்புக் குறித்த அவர்களது நம்பிக்கையும் வீணாகப் போய்விட முடியாது. 2010 வருடங்களுக்கு முன்னர் உலகில் அவதரித்த ஒரு சமூகப் புரட்சியாளனும் இவ்வாறே எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார். எதிரிகள் அவரை மக்களின் முன்பாகவே சிலுவையில் அறைந்து படுகொலை செய்தார்கள். ஆனாலும், அவரை நம்பியவர்கள் அவரது மரணத்தை நம்பவில்லை. அவர் மீண்டும் வருவார் என்று நம்பினார்கள். அவர் மீண்டு வந்ததை அவர்கள் தரிசித்தார்கள். அந்த நற்செய்தியை உலகம் முழுவதிற்கும் எடுத்துச் சென்றாhகள்.

அவரது வார்த்தைகளைப் பின்பற்றும் பல கோடி மக்கள் இன்றும் அவரது இருப்புக் குறித்து எந்தவித சந்தேகத்தையும் கொள்ளவில்லை. நாங்களும்இ எங்களது மக்களும் அந்த விசுவாசத்துடன்இ எங்கள் தேசியத் தலைவர் அவர்களுடைய வார்த்தைகளுடன் எங்கள் விடுதலைப் பயணத்தைத் தொடர்வதன் புனிதம் இவர்களுக்கு என்றுமே புரியப் போவதில்லை.

ஏனென்றால். இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்!

- ஈழநாடு

Edited by kalaivani

மதிவதனங் சொல்லும் வியாபாரம் இதுதான். இரண்டும் தமிழ் ஊடகங்கள். இரண்டுக்குமே தமிழர் நலனில் அக்கறையிருக்க வேண்டும். அதைவிடுத்து என்னப்பா கொடுமையிது?

புதினப்பலகையை கூரைஏறி கோழிபிடிக்க தெரியாதவன் எண்டு சொல்லுறதுக்கு ஈழநாடு பாலச்சந்திரனுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஊடகம் எண்டால் என்ன எண்டு தெரியாத உதுகள் எல்லாம் இப்ப புதிசா கிளம்பியிருக்கினம்.

புதிப்பலகையோ அல்லது யாழ் இணையமோ அல்லது தமிழ்தேசியக்கூட்டமைப்போ அவர்கள் தமக்கு சரியென பட்டதை செய்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறார்கள். அதில உவர் ஈழநாடு பாலச்சந்திரன் என்ன வியாக்கியானம் செய்யிறது.

உவர் ஏதோ தான் தான் கொள்கைவகுப்பாளர், தேசியத்தலைவர் எண்ட நினைப்பு . ஆரேனும் எழுதிக்குடுக்கிறதுகளை தங்கட பெயரில போடுற வியாபாரிகள் இப்ப புதிசா கிளம்பிவிட்டினம் ஊடகவியலாளர்கள் எண்டு . எல்லாம் காலம் கெட்டுப்போய் கிடக்கு

புதினப்பலகையை கூரைஏறி கோழிபிடிக்க தெரியாதவன் எண்டு சொல்லுறதுக்கு ஈழநாடு பாலச்சந்திரனுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஊடகம் எண்டால் என்ன எண்டு தெரியாத உதுகள் எல்லாம் இப்ப புதிசா கிளம்பியிருக்கினம்.

புதிப்பலகையோ அல்லது யாழ் இணையமோ அல்லது தமிழ்தேசியக்கூட்டமைப்போ அவர்கள் தமக்கு சரியென பட்டதை செய்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறார்கள். அதில உவர் ஈழநாடு பாலச்சந்திரன் என்ன வியாக்கியானம் செய்யிறது.

உவர் ஏதோ தான் தான் கொள்கைவகுப்பாளர், தேசியத்தலைவர் எண்ட நினைப்பு . ஆரேனும் எழுதிக்குடுக்கிறதுகளை தங்கட பெயரில போடுற வியாபாரிகள் இப்ப புதிசா கிளம்பிவிட்டினம் ஊடகவியலாளர்கள் எண்டு . எல்லாம் காலம் கெட்டுப்போய் கிடக்கு

அதுமட்டுமல்ல, ஊடகங்கள் தமக்கிடையிலுள்ள கருத்துப்பகையினால் தமிழ் மக்களிடையே குழப்பங்களை உண்டுபண்ணுகிறார்கள். தங்களைத் தாங்களே தாக்குவதை விட்டுவிட்டு அவர்கள் முன்னுள்ள ஏராளமான பணிகளைச் செய்ய முன் வருதல் வேண்டும்.

ஒற்றுமைக்கு முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதைக் கலைப்பவர்களாக இருக்கவிட்டால் சரி. உண்மையான விடயங்களாக பலவிருக்கின்றன. அவைகளை தெருச் சண்டைகள் போலன்றி ஆதாரங்களுடன் வெளியிடல் வேண்டும்.

ஈ.....டு பாலகுடிசந்திரன் மிக மோசமான ஒரு பிழைப்பவாதி மட்டுமல்ல குழப்பவாதியும் கூட.மாவீரர்கள் செய்த தியாகத்தை வைத்து பிழைப்பு நடத்துபர்களில் முதன்மையானவர் இவர். தனது வியாபாரங்களை வளப்படுத்தவதற்காக போடும் வேசம் தான் இவரது தேசியப்பற்று. விசா இல்லாத பொடியளிடம் சுரண்டுவது.மொழிபெயர்ப்பு எண்டு சொல்லி அடாவடியாக பணம் கறப்பது சாதிபார்ப்பது ஊர் பிரதேச வேறுபாடுகளை பார்ப்பது இதெல்லாம் இவரது மறுபக்கம். தேசத்தின் தூண் தேசியப்பற்றின் உச்ச செயற்பாட்டாளன் என்று புலுடாவிட்டு முக்களிடையே முரண்பாடுகளை தூண்டிவிட்டு .எங்கே தனது பிள்ளைகளுக்கு களத்தில் நின்ற போராளிகளை சாதி பார்க்காமல் திருமணம் செய்து வைக்கட்டும் பார்ப்போம். தன்னிடமுள்ள பல சொத்துக்களில் ஒரு சொத்தை தாயகத்தில் அவதியுறும் மக்களின் நலவாழ்வுக்காக ஒப்படைக்கட்டும் பார்ப்போம்.

தேசியத் தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை 90 வீதமான தமிழர்களிடம் உண்டு. தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்ட அனைத்துத் தலைவர்களிடமும் உண்டு.

உண்மையில் 90 % வீதமான மக்கள் சோகமான யதார்த்தத்தை அறிவர்.

பணத்துக்காக பிணத்தை தின்னத் தயங்காத ஒருசிலர் முதலாவது நினைவஞ்சலியை குழப்ப நினைக்கின்றனர்.

தமிழீழ மக்களின் நம்பிக்கையைச், உறுதியான தலைமை அமைவதை சிதறடிப்பதன் மூலம் அவர்களது தேசிய எழுச்சியை முறியடிப்பதே இவர்களது ஒரே நோக்கம்.

நாடு கடந்த தமிழீழ அரசும், இரா. துரைரத்தினமும் - ஈழநாடு

திகதி: 15.05.2010 // தமிழீழம்

முள்ளிவாய்க்கால் வரை முழங்கி நீட்டினார்கள். முடிவுக்கு வந்ததும் முடங்கிப்போய் இருந்தார்கள். கூட்டமைப்புத் தேர்தல் வந்ததும் குதித்து எழுந்தார்கள். இப்போது அவர்களுக்கு இரை போடுவது நாடு கடந்த தமிழீழ அரசு என்ற யுத்த களம். இலங்கைத் தமிழ் ஊதிய ஊடகவியலாளர்களின் இன்றைய நிலவரம் இதுதான்.

சிங்கள தேசத்தின் இருதுருவக் கோட்பாட்டுக்குள் விலை போயுள்ள எத்தனையோ மனிதப் பிறவிகள் இப்போது எம் மத்தியில் தத்துவம் பேசிக்கொண்டு வருகின்றார்கள். பாவம், அவர்கள் கூறி விற்க முணலும் சிங்கள யுக்திகளை புலம்பெயர் தமிழர்கள் கொள்வதற்கு முன் வருகின்றார்கள் இல்லை. சிங்கள தேசம் அறிவித்தது போலவே, நாடு கடந்த தமிழீழ அரசை வேரோடு பிடுங்க நியமித்த இவர்களால், இதைத் தவிர என்னதான் செய்துவிட முடியும்?

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்களில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பற்றிய சந்தேகங்களை இந்தச் சதிகாரர்கள் எப்படித் துல்லியமாகத் தெரிந்து கொண்டார்களோ அறியேன். நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரான்ஸ் - பாரிஸ் நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் என்ற வகையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை இரா. துரைரத்தினம் போன்ற குழப்பவாதிகளுக்கு வழங்குவது கடமை எனக்கு உண்டு.

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய காலங்கள் ஈழத் தமிழர்களின் வேதனைக் காலம் மட்டுமல்ல, சோதனைக் காலமும் கூடத்தான். விடுதலைப்புலிகள் கள முனையில் தோற்கடிக்கப்பட்டு, ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர், விடுதலைப் புலிகளின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கைப்பற்றும் தீவிர நடவடிக்கைகள் இலங்கைக்கு வெளியே தீவிரம் பெற்றது. யேசுநாதர் உயிர்த்தெழுந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவது போல், சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று இந்தியர்கள் நம்புவது போல், தேசியத் தலைவர் குறித்த சிங்களத் தகவல்களை நிராகரித்த ஈழத் தமிழர்கள் அவரது மீள் வரவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

அதுவரை, தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேசத்து மக்களிடம் வழங்கப்பட்ட தமிழீழ மீட்புக்கான போராட்டத்தை ஒவ்வொரு தமிழரும் சுமக்க முன்வந்துள்ளனர். அதற்காகக் களம் இறங்கியுள்ளார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது யாருடைய பரம்பரைச் சொத்தல்ல. அதைப் பிரேரிதத்தவர் யாராக இருந்தாலும், அந்தப் போர்க்களத்தை புலம்பெயர் தமிழர்கள் முற்றாக நம்புகின்றார்கள்.

அந்தப் போர்க் களத்தில் தாமும் போராளிகளாகப் பங்கேற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அதனால்தான், எந்த வேறுபாடுகளுமின்றி ஈழத் தமிழர்களின் அத்தனை அமைப்புக்கள் சார்ந்தவர்களும் அதில் போட்டியிட்டார்கள். பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மக்கள் வழங்கிய ஆணை. இந்த மக்கள் ஆணையை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. தமிழீழ மக்களில் மிகச் சிறுபான்மையினரின் வாக்குக்கள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏற்றுக்கொண்டு துதி பாடும் திரு. இரா. துரைரத்தினம் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டு, தெரிவான உறுப்பினர்கள் மீது சந்தேகங்களைத் தெரிவிப்பது அவர் சார்ந்த ஊடகத் துறைக்கு உகந்தது அல்ல.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் மக்கள் பேரவைகளைச் சார்ந்த பலர் வென்றிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ளதால், நாடு கடந்த தமிழீழ அரசைக் கைப்பற்றி, அதன் செயற்பாடுகளை முடக்கி விடுவார்கள் என்ற தகவல்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல முற்படுபவர்களது நோக்கம் சந்தேகத்திற்கிடமானது. மக்கள் பேரவை பற்றியும். அதன் உருவாக்கம், செயற்பாடுகள், நோக்கங்கள் பற்றியும் அறியாத முட்டாள்களின் கூற்றாகவே இது கணக்கிடப்பட வேண்டும். இரா. துரைரத்தினம் போன்றவர்கள் வேண்டாத கேள்விகளையும், நியாயங்களையும் எழுப்பி நாடு கடந்த தமிழீழ அரசுக்காகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடையே பிளவுகளையும், மோதல்களையும் உருவாக்க முயற்சிக்கின்றனர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வே நடைபெறாத நிலையில், அது இப்படித்தான் நடக்கும், அது இப்படித்தான் முடியும் என்று எதிர்வு கூறுவது முடிவு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் உருவாகிவரும் நாடு கடந்த தமிழீழ அரசை அழைத்துச் செல்லும் முயற்சியாகவே கருதப்படுகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இணைப்பாளர் திரு உருத்திரகுமாரன் அவர்களை ஓரங்கட்டும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள் என்ற கருத்துருவாக்கம் மூலம் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளுக்கும் இடையே சந்தேகங்களையும், முரண்பாடுகளையும் உருவாக்குவதே திரு. இரா. துரைரெத்தினம் போன்றவர்களது எண்ணமாக உள்ளது.

நாங்கள் அனைவருமே விடுதலைப் புலிகளது தியாகங்கள் ஊடாக வளர்ந்தவர்கள். அவர்களது வேள்வித் தீயின்வெப்பத்தினால் மாசு அகற்றப்பட்டவர்கள். தேசியத் தலைவர் அவர்களது பாதையில் பயணிப்பவர்கள். தமிழீழ விடுதலைக்காக எதையுமே இழக்கத் தயாரானவர்கள். அந்த இலட்சியப் பாதையில் எங்களது அணிவகுப்பு இரா. துரைரெத்தினம் போன்றவர்களுக்கு கசப்பாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தமிழ்த் தேசியத்தை மாகாணங்களுக்குள் முடக்கும் சிங்களச் சதிக்கு நாம் தடைக் கல்லாக மாறிவிடுவோம் என்ற அச்சத்தில் திரு. இரா. துரைரெத்தினம் மட்டுமல்ல மேலும் சில ஊதிய ஊடகவியலாளர்கள் எழுதவேதான் செய்வார்கள்.

அதனை, தேசிய ஊடகவியலாளர்கள் முறியடிக்கவே செய்வார்கள். நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் அவர்களது தமிழ்த் தேசிய விடுதலைக்கான உறுதியிலும், நேர்மையிலும், தியாகத்திலும் நம்பிக்கை வைத்தே அனைத்து வேட்பாளர்களும் களத்தில் இறங்கினார்கள். மண்ணிலும், கடலிலும் வீழ்ந்த மாவீரர்களின் கனவான தாயக மீட்பு இலட்சியப் பாதையிலிருந்து விலகாத வரைக்கும் திரு. உருத்திரகுமாரனின் தலைமை மீது யாரும் எதிர்க் கருத்து வைக்கப் பேவதில்லை.

அவரை ஓரங்கட்டப் போவதுமில்லை. திரு. உருத்திரகுமாரன் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தாயக விடுதலை குறித்த ஆழமான பற்று உள்ளவர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நன்றாக உணர்ந்தவர். அவர் மீது அனைத்துத் தமிழர்களும் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

நாமும் அந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசில் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளோம். இந்தப் போர்க் களத்தில் எங்கள் ஒற்றுமையைச் சிதைக்க முடியும் என்று யாரும் கனவு கூடக் கண்டு விடாதீர்கள்.

ஒற்றுமை குறித்து காகங்கள் பேசலாம், ஓநாய்கள் பேசலாமா?

- ஈழநாடு

ஒற்றுமை குறித்து எல்லோரும் பேசலாம் போராட்டத்தை வித்துப் பிழைக்கும் பதவிக்காக அலையும் இந்தப் பொறுக்கி பேசக்கூடாது.

நாடுகடந்த தமிழீழத்தை உடைக்க நோhர்வே பொறுக்கியோடு சேந்து சதி செய்து கொண்டு மக்கள் பணத்தை சுறுட்டிக்கொண்டு தலைமறைவாக வாழும் சாம்ராட்சிய கும்பலை ஆதரித்தக் கொண்டு ஒற்றுமை பேசுகிறது இந்தச் சாத்தான். கடந்த வருடம் மார்ச் மாதம் வாங்கிய பணத்துக்காக அதற்கு பிணை நின்ற பலரை மக்கள் இருக்கவிடாமல் தொல்லை படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பட்டியல் தருகிறோம் இந்த தேச பக்தர் தேசியத்தை மூலதனமாக வைத்து தன்னுடைய நிறுவனங்கள் மூலம் சந்பாதித்த இல்லை மக்களை சுறண்டி சேர்த்த பணத்தில்அந்தக் கடனை அடைப்பாரா?

ஒற்றுமை பற்றி இந்திய பிணம் தின்னி ஓநாய்களின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியாளர்கள் பேசமுடியாது.

அவர்கள் இந்திய சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.