Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் மீளக்குடியேறிய தமிழர்கள் அநாதைகளாக அல்லாடுகிறார்கள்; எதுவுமே இல்லாத வெறுமையுடன்! உரிய வசதிகள் இன்றி அவதிப்படுவதாக கூட்டமைப்பு எம்.பிக்களிடம்

Featured Replies

வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல் லாத வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள்.

முல்லைத்தீவு,மே22

வன்னியில் முல்லைத்தீவில் மீளக்குடியேறிய தமிழ்மக்கள் எதுவுமே இல் லாத வெறுமையுடன், அநாதைகள் போல் அல்லாடுகின்றனர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி கணவனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த பெற்றோருமாக உதவி செய்ய எவரும் இன்றி அவதிப்படுகிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளுக்கும் சென்று மீளக்குடியேறிய மக்களை நேரில் சந்தித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்களிடம் தமது அவலங்களை அந்தப் பகுதி மக்கள் எடுத்துரைத் திருக்கின்றனர்.

யாழ். மாவட்ட எம்.பிக்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தவிர, கூட்டமைப்பின் 12 எம்.பிக்களும் ஒன்றாக நேற்று வன்னிக்குச் சென்றனர்.

நேற்றுக் காலையில் வவுனியாவில் இருந்து புறப் பட்ட கூட்டமைப்பு எம்.பிக்கள் மதியா மடு, நெடுங்கேணி பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைப் பார்வை யிட்ட பின்னர் அங்கிருந்து ஒலுமடு, ஒட்டுசுட்டான், வற்றாப்பளை, முள்ளிய வளை, முல்லைத்தீவு, தண்ணீரூற்று ஆகிய பகுதிகளுக்கும் சென்றனர்.ஆவலோடு வரவேற்று குறைகளை எடுத்துக் கூறினார்

வன்னியின் பல்வேறு இடங்களிலும் மீள்குடியேறிய மக்களை கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்தித்தனர். அப்போது கூட்ட மைப்பு எம்.பிக்களை மிகுந்த ஆவலோடு வரவேற்று உபசரித்த மக்கள், தங்கள் குறைகளை எம்.பிக்களுக்கு எடுத்துக் கூறினர்.

கூட்டமைப்பு எம்.பிக்களின் வன்னி விஜயம் தொடர்பாக, யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரனை தொடர்பு கொண்டு கேட்டோம். எந்தவித அடிப் படை வசதிகளும் இல்லாத நிலையில் அநாதைகள் போல அந்த மக்கள் அல்லல் படுகின்றார்கள் என்று சொன்னார் சிறி தரன் எம்.பி.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

""சொந்த இடங்களில் குடியேறிவிட் டோம் என்ற திருப்தி மக்களுக்கு இருந்தா லும், எதுவுமே மீதம் இல்லாத வெறுமை யுடன்தான் அவர்கள் இருக்கிறார்கள். தடுப்புக்காவலில் உள்ள தங்களது பிள் ளைகளை விடுவித்துத் தரவேண்டும் என்று அவர்கள் மன்றாடுகிறார்கள். கண வனை இழந்த விதவைகளும், பிள்ளை களை இழந்த பெற்றோருமாக உதவி செய் வதற்கே யாரும் இன்றி அவதிப்படுகிறார் கள்.அநாதைகள் போல் இருக்கிறார்கள்வீடுகள் எல்லாம் இடிந்துவிட்டன. குடி யேற்றப்பட்டவர்களுக்கு தறப்பாள்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சில ருக்கு அதுகூட இல்லை. மற்றவர்களின் தறப்பாள்களுக்குக் கீழே அநாதைகள் போல் இருக்கிறார்கள்.

தொழில்வாய்ப்புகள் ஏதுமில்லை. மின் சார வசதிகளோ, போக்குவரத்து வசதி களோ அறவே கிடையாது. நாங்கள் போகும் வழியெங்கும் இடிந்த வீடுகளையும் பாழ டைந்து கிடக்கும் கட்டடங்களையும்தான் கண்டோம்.

வற்றாப்பளை கிராமத்தில் ஆக 32 வீடு கள்தான் மிஞ்சியிருக்கின்றன. ஏனைய வீடுகள் எல்லாமே அழிந்துவிட்டன. 6 மாதங்களுக்குத்தான் நிவாரணம். அதற் குப் பிறகு என்ன செய்வது என்று தெரியா மல் அந்த மக்கள் கவலையுடன் இருக்கி றார்கள். சிலருக்கு இன்னமும் ஒருமாத நிவாரணம் கூடக் கிடைக்கவில்லை.

விரைவாகத் தங்களுக்கு வீடுகளைக் கட்டித்தந்து அடிப்படை வசதிகளையும் செய்து தரும்படி அந்த மக்கள் கேட்கி றார்கள். எந்த இடத்துக்குப் போனாலும், உறவுகளை நினைத்துத்தான் அவர்கள் வேதனைப்படுகிறார்கள்.

யுத்தத்தின் கோர முகத்தை முல்லைத் தீவில் கண்டோம்'' என்று கூறி முடித்தார் சிறிதரன் எம்.பி.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3274&Uthayan1274512049

TNA refused entry to camp

The Tamil National Alliance (TNA) claims its members led by party leader R. Sambanthan were refused entry to the Chetikulam IDP camp when they visited the area in Vavuniya this morning.

TNA MP Sivasakthi Anandan, speaking to Tamil Mirror, said that 12 members of the Tamil party had to stay outside the camp premises for over an hour after the authorities refused to grant them permission to visit the site.

He said that the TNA delegation led by party leader R. Sambanthan were to visit the IDP camps in Vavuniya to look into the wellbeing of the remaining IDPs.

http://www.dailymirror.lk/index.php/news/3887-tna-refused-entry-to-camp.html

ஒருவருசத்துக்கு பிறகு எங்களுக்கு எல்லாம் தெரியாத ஒரு உண்மையை கண்டு பிடிச்சிட்டினம்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர்ட பெமிசன் இல்லாமலே போய் பாத்திருக்கினமாம் .... அதால இங்க கொதிக்குதாம்... :)

தலைவர்ட பெமிசன் இல்லாமலே போய் பாத்திருக்கினமாம் .... அதால இங்க கொதிக்குதாம்... :)

தலைவருக்கு பின்னாலை நிக்க கன பேர் இப்பவும் நிக்கினம்... ஆனால் உமக்கு பின்னாலை...? யாழுக்கை தன்னும் ஒரு வால் அறுந்தது...?

சனத்தை வா வா எண்டு சொர்க்கத்துக்கு அழைச்ச நீர் எப்ப போய் பாக்க போறீர் என்னத்தை கிளிக்க போறீர்...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவருக்கு பின்னாலை நிக்க கன பேர் இப்பவும் நிக்கினம்... ஆனால் உமக்கு பின்னாலை...? யாழுக்கை தன்னும் ஒரு வால் அறுந்தது...?

சனத்தை வா வா எண்டு சொர்க்கத்துக்கு அழைச்ச நீர் எப்ப போய் பாக்க போறீர் என்னத்தை கிளிக்க போறீர்...??

நானும் போய் கிளிப்பம் எண்டுதான்.... :):)

நானும் போய் கிளிப்பம் எண்டுதான்.... :):)

புலியை சொறியிற வேலையை மட்டும் பாக்காமை முதலிலை அதைச்செய்யும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.