Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புலம்பெயர்ந்த மக்களின் உதவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புலம்பெயர்ந்த மக்களின் உதவிகள்

[ செவ்வாய்க்கிழமை, 15 யூன் 2010, 06:34 GMT ] [ வவுனியா செய்தியாளர் ]

வன்னியில் நடந்த யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியிலும் வசித்தபடி வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் பல மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். இம்மாணவர்களில் பெற்றோரையும், உறவுகளையும், உடல் உறுப்புகளையும் இழந்த மற்றும் வசதிகளற்ற மாணவர்களிற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் முதற்கட்ட நிகழ்வு 13.06.10 ஞாயிறு அன்று காமினி மகாவித்தியாலயத்தில் அதன் அதிபர் நடராசா ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த உதவியினை சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு [டென்மார்க்], நேசக்கரம் [ஜெர்மனி], சமூக அபிவிருத்தி அமைப்பு [சிறிலங்கா] ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து புலம்பயர் தேசத்து மக்களின் உதவிகளை ஒருங்கிணைத்துப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கைகளில் நேரடியாக இந்நிகழ்வின் மூலம் சேர்ப்பித்துள்ளனர்.

84 மாணவர்களிற்கான அத்தியாவசிய தேவைகளான பாடசாலை உபகரணங்கள், ஆடைகள், மற்றும் பாடசாலைக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் என்பன வழங்கப்பட்டதோடு போக்குவரத்திற்கான உதவிகள் அம்மாணவர்களிற்கு தொடர்ச்சியாகக் கிடைக்கும்படியான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு இலங்கையின் புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யு குணசேகரா, பிரதியமைச்சர் விஜித் டி சொய்சா, வடமாகாண கல்விப்பணிப்பாளர் அரியரத்தினம், வலயக் கல்விப்பணிப்பாளர் தெய்வேந்திரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாதிக்கபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் புனர்வாழ்வு அமைச்சரை நேரடியாகச் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் வேண்டுதல்களையும் எடுத்துச் சொன்ன நிகழ்வாகவும் இது அமைந்தது.

அது மட்டுமல்லாமல் காணாமல் போனவர்கள் மற்றும் தடுப்பு முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் வைக்கப்பட்டிருப்போரின் உறவினர்களும் நேரடியாக அமைச்சரிடம் அவர்களது விடுதலைக்கு ஆவன செய்யும்படி கோரிக்கைகளை முன்வைத்தனர்.

DSC00559.jpg

DSC00618.jpg

DSC00631.jpg

DSC00636.jpg

DSC00561.jpg

செய்தியின் மூலம் புதினப்பலகை அவர்களிற்கு எமது நன்றிகள் .. படங்களை நான் தரவேற்றியிருக்கிறேன்..இந்தத் திட்டத்திற்கு யாழகள உறவுகளும் உதவிக்கரம் நீட்டியிருந்தனர். சுவி முரளி. சஜீவன். விசுகு இணையவன் மற்றும் சுவி அண்ணாவின் நண்பர்கள் அனைவரிற்கும் யாழ் இணைய நிருவாகத்தினரிற்கும் உதவிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சார்பாக நேசக்கரம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது..மேலும் மீள்குடியேறிய இடங்களில் பாடசாலைகள் இயங்கத்தொடங்கியுள்ளன அவற்றில் மடு பகுதியில் இரண்டு பாடசாலைகள் மற்றும் கிளிநொச்சி மகாவித்தியலம் ஆகியவற்றின் விபரங்கள் எமக்கு கிடைத்துள்ளது அவற்றை விரைவில் இங்கு இணைக்கிறேன்..தொடர்ந்தும் எமது மக்களிற்கான உதவிகளிற்கு நேசக்கரத்துடன் யாழ் இணையஉறவுகளும் இணைந்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நன்றி வணக்கம்

வாழ்த்துக்கள், சாந்தி அக்கா, சாத்திரி அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சாந்தி அக்கா, சாத்திரி அண்ணா.

நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.