Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தச் சோறு தின்பவர்கள் மாநாடு நடத்துகிறார்கள்!:சேது ராமலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன.மாநாடு துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநாட்டை ஊதிப்பெருக்கி கூட்டம் சேர்க்கும் வேலையும் துவங்கி விட்டது,மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு துவங்குவதற்கு 400 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்ட தொகை இப்போது 600 கோடியாக உயர்ந்து விட்டது,மாநாடு முடிவதற்குள் இன்னும் எத்தனை கோடிகளை தாண்டுமோ? அதில் எத்தனை கோடிகள் உண்மையில் மாநாட்டிற்கு செலவளிக்கப்படுமோ அது உலகத் தமிழினத் தலைவருக்கு மட்டுமே தெரிந்த வெளியிடப்படாத ரகசியம் .

shammolai5.jpg

மாநாட்டிற்காக பல கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்திற்கும மேலான குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிகள கோவை நகரம் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளில் மாநாட்டிற்கு வருபவர்கள் தங்குவதற்காக ஏற்பாடுகள்.இதற்காக மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்த அதிகாரிகள்.ஊடகவியலாளர்களுக்கு பயணத்தில் துவங்கி வசதியான தங்கும் இடங்கள் என முழுமையான ராஜ உபசரிப்பு. ஏனெனில் மாநாட்டின் வெற்றியே ஊடகங்களை நம்பித்தான் உள்ளது..இத்தனைக்கும்மேலாக மாநாட்டின் மைய நோக்க பாடல் என்ற பெயரில புகழ் பெற்ற இசையமைப்பாளர் ரஹமானின் இசையில் மேற்கத்திய நடனங்களுடன் தமிழ் செம்மொழியாம் என்ற ஒரு பாப் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.அந்த பெயருக்கு சில தமிழர்களும் பாடலில் சௌடிராஸடிரா ,தெலுங்கர்கள் மலையாளிகள் என பலரும் பாடுகிறார்கள்.இதை இயக்கியது கௌதம் மேனன் என்ற( ஆங்கில படங்களை உல்டா செய்யும் )மலையாள இயக்குநர்.இந்த பாடல் தமிழகத்தின் சந்துககளிலும் தெருக்களிலும் மூலை முடுக்குகளிலும் ஒலிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இப்பாடலைக்கேட்க இந்த பிறவியில் கொடுத்து வைத்தவர்கள் ஆகிறார்கள்.

மாநாட்டிற்கு வரும் உலகத் தமிழர்களுக்கு அருசுவை உணவு வேண்டாமா?அதற்கு சங்க தமிழ் வரலாற்றில் உள்ளது போல் உணவு வகைகளும் தயாராகின்றன.இதை விட மனனர் காலத்திலுள்ளது போல் தேனும் தினைமாவும் போன்று இனிப்பு வகைகள் வேறு. இதைத் தயாரிக்க தனியார் இனிப்பு தயாரிக்கும் வணிக நிறுவனத்துடன் கோடி ரூபாய் மதிப்புகளில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது .சங்க கால இனிப்புகளை பற்றி ஆராய அந்த தனியார் கம்பெனி ஆராய்ச்சியாளர்கள் குழு ஒனறையும் நியமித்துள்ளது.அக்குழுவின் ஆராய்ச்சிகளும் நாளுக்கு நாள் முன்னேறி வருவதாக கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் அறிவிக்கின்றன.

மாநாடு துவங்கும் பல மாதங்களுக்கு முன்னரே ஜால்ராக்களின் சத்தம் காதைப்பிளக்க துவங்கி விட்டது.கலைஞர் மானசீகமாக நேசிக்கும் இந்த ஜால்ராக்களில் பல வகைகள உள்ளன. கருணாநிதி எப்போதுமே ஜால்ராக்களையும் துதிபாடிகளையும் அவரது குடும்பத்தைப்போல மானசீகமாக நேசிப்பவர் அல்லவா?.அது அவரது தனிப்பட்ட உளவியல். இந்த உளவியலை சற்று ஆராய்வோம். முதியவர்களும் குழந்தைகளும் ஒரே மாதிரிதான் உளவியல் கொண்டிருப்பார்கள் அதாவது தன்னை இடைவிடாமல் யாராவது புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பார்க்கும் .முதியவர்களும் அதே மாதிரி உளவியலைத்தான் கொண்டிருப்பர் எனறு உளவியல் நிபுணர்கள கூறுவார்கள். ஏறக்குறைய ஓய்வெடுக்க வேண்டிய வயதையும் தாண்டி உள்ள கலைஞர் அப்படிப்பட்ட மனநிலையில் உச்சத்தில்தான் இருந்து வருகிறார். எப்போதுமே தன்னை இராஜ ராஜ சோழனாக பாவித்துக்கொள்ளும் அவர் எல்லா விளம்பரங்களையும் அதே போல் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளார. தனி நபர் துதியிலும் சுயமோகத்திலும் அவர் தன்னை சோழ பரம்பரையினராக சித்தரித்துக்கொள்வதும உடமை வர்ககங்களின் மாட்சிமை தாங்கிய மன்னர் மரபுகளிலும், நிலவுடமை மரபுகளிலும் ஊறித்திளைத்தபடி நாள்தோறும் நாளிதழ்களில் அளிக்கும் விளம்பரங்களே அதற்கு சான்று .மாநாட்டு முதல் அறிவிப்பு விளம்பரமே இப்படித்தான் துவங்கியது,செம்மொழியாம் தமிழ்த்தாய்க்கு முத்தமிழ் தலைமகனாம் கலைஞர் எடுக்கும் ஒரு விழா .உலகத் தமிழர் கூடும் விழா.நாள்தோறும் ஒளவையார் வாயிலாகவோ என்றோ கம்பன் வாயிலாகவோ என்று துவங்கி எம் தமிழ் எம்மொழி எம்மான் கலைஞர் தம்மால் சிறப்புற்ற செம்மொழி வாழிய வாழியவே என்று தான் முடிகின்றன.திட்டமிட்டே அரசு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கு மேலும உதாரணங்கள் வேண்டுவோர் தமிழகத்தின் நகரங்களில் திரும்பும் இடமெல்லாம் இந்த விளம்பரங்களில்தான் முட்டிக்கொள்ள வேண்டும் என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம். இந்த செம்மொழி மாநாடும் அதற்காக நடத்தப்படுகிறது என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.கருணாநிதியின் அரசியல் எதிரிகளின் கணிப்பு இப்படித்தான் உள்ளது.(கருணாநிதியை பொறுத்தவரை விமர்சித்தாலே எதிரிதான் .ஏனெனில் பாராட்டுபவன்தான் நண்பன் விமர்சித்தால் எதிரி என்ற ஓட்டுக்கட்சிகளின் பண்பாட்டில் பல பத்தாண்டுகளாக ஊறித்திளைத்தவர் அல்லவா? ஆனால் அதையும் தாண்டி பல நோக்கங்கள் இந்த மாநாட்டிற்கு உள்ளன.முதலில் எதற்காக எந்த சூழ்நிலையில் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது?

shammoli100.jpg

15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த போதிலும் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.தமிழ் மாநாட்டின் அதிகாரப்பூர்வமான அமைப்பான உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் கருணாநிதியின் மாநாட்டை அங்கீகரிக்க மறுத்ததோடு அதைப்புறக்கணிககப்போவதாக அறிவித்தும் உடனே தமிழ் செம்மொழி மாநாடு என்று மாற்றிக்கொண்டு ஏன் நடத்த துடிக்கிறார்.அது சரி தமிழ் மீது இத்தனை ஆண்டுகளாக இல்லாத அக்கறை இப்போது ஏன்? காரணம் அனைவரும் அறிந்ததுதான் .அவர் ஈழத்தமிழருக்கு செய்த மறக்கவோ மன்னிக்கவோ முடியாத துரோகத்தை மறைப்பதற்குத்தான்.

ராஜ பக்சே அரசு புலிகள் மீது போர் தொடங்கியதிலிருந்தே இந்தியாதான் போரை திட்டமிட்டு வழிநடத்தியது.இது கருணாநிதியின் தலைமையிலான தமிழக அரசின் உதவியோ ஒத்துழைப்போ இன்றி சாத்தியமே இல்லை.இந்திய அரசு ஈழத்தமிழரை ஒழிக்க முன்வந்ததற்கு ஏற்பட்ட துணிச்சல் கலைஞர் இந்தியஅரசுக்கு நூற்றுக்கு நூறு துணை நின்றதால்தான் வந்தது.

கருணாநிதியின் திசை திருப்பும் முயற்சிகளையும் அடக்குமுறைகளையும் மீறி போர் நிறுத்த கோரிக்கை வலுவடைந்தபோதும் தன்னெழுச்சியாக ஒரே சமயத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்த போதும் அதை அடக்குவதற்குஅவர் பல தந்திரங்களை கையாண்டார். போராட்டங்கள் எல்லை மீறிச் சென்ற போது அவரும் ஈழப்போர் நிறுத்ததிற்கு ஆதரவளிப்பதாகக் கூறி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்.அதே சமயத்தில் இதில் கலந்து கொள்ளாத காங்கிரசாரை யாரும் அம்பலப்படுத்தாமல் பார்த்துக்கொண்டார்.அந்த நேரத்தில் ஈழப்போர் நிறுத்தப்போராட்டங்களில் தன்னெழுச்சியாகவும் அதே சமயத்தில் போர் குணமிக்கதாகவும் நடத்தப்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் செல்லத்துவங்கின.காங்கிரஸ் தலைவர்கள் துரோகிகள் என குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் வழக்கறிஞர்களினால் தாக்கப்பட்டனர். அதுவும் முத்துகுமாரின் தியாக மரணத்தின்போது அவர் எழுதிய கடிதமும் கருணாநிதியை முழுமையாக அம்பலப்படுத்தின.இதனால் வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்கு ஈவு இரக்கமின்றி நசுக்கிய விதம் இதுவரை வரலாறு காணாத சாணக்கியத்தனம் ஆகும் .வழக்கறிஞர்கள் எங்கு அதிகாரமுள்ளவர்களாக உணருகின்றனரோ அங்கேயே நீதிமனறத்திலேயே போலீசை அத்து மீறி நுழையச் செய்து கொடூரமாக நசுக்கினார்.போராட்டங்களின் தீவிரம் அதிகரித்த போது போரின் உச்சகட்ட நாட்களில் சாகும் வரை உண்ணாவிரதம் என்ற பெயரில் இருபுறமும் மனைவியரும் குளிரூட்டும் சாதனங்களும் இருக்க, கடற்கரையில்அண்ணா சமாதிக்கருகே போய் படுத்துக்கொண்டார்.தனது உண்ணாவிரதத்தால் போர் நிறத்தம் ஏற்பட்டதாக சிதம்பரம் கூறினார் என்று படுகேவலமான பொய்யை கூறினார்.இப்படி கூறப்பட்டதும் அது ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அதைவிடபெரிய அதிர்ச்சி.

அந்த நிலையிலும் போரை நிறுத்தாவிட்டால் கருணாநிதி காங்கிரஸ அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வார் தனது பதவியை துறப்பார் என்றெல்லாம் தமிழ தேசிய இயக்கங்களினால் அப்பாவித்தனமாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கருணாநிதி ஈழம் மலருவதற்கு உத்திரவாதம் தந்தால் பதவி விலகுவேன் என்று அவர்களது முகத்தில் திருப்பி அடித்தார்.முதலாவதாகஅப்படிப்பட்ட தியாகம் செய்வாரென்று எந்த வித அரசியல் பார்வை இல்லாதவர்களால் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.தனது வாரிசுகளின் பதவிகளுக்காக எந்த அளவுக்கும் செல்வார் என்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. போர் முடிந்ததும் அழகிரியின் அமைச்சர் பதவிக்காக நேரில் டெல்லி சென்றார்.ஆனால் ஈழப்போரை நிறுத்துவதற்கு எங்கும் செல்லவில்லை.உடல் நலமில்லை என்பது காரணமாக காட்டப்பட்டது.தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில ¢டெல்லியில் சென்று பதவிபிச்சைகேட்டு மன்றாடியதைக் கண்டு தமிழக தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த காரிய வாதம் மிகவும் கொடூரமானதாக வெளிபபடுத்தியது என்னவெனில் தமிழர்களை ஒழிக்க இந்தியா இலங்கை அரசுக்கு பயிற்சி கொடுத்த போது தமிழகத்தில் எழுச்சி வராமல் பார்த்து கொண்டதற்கும் ஒத்துழைப்பு கொடுத்தார் அந்த ஒத்துழைப்பிற்கான சன்மானம்தான் அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி.இதனால் இவர் போலியாக படம் காட்டி வந்த உலகத் தமிழினத் தலைவர் பிம்பம் சுக்கு நூறாகியது .

இந்த சேதமடைந்த அம்பலப்பட்ட பிம்பத்தை தான் சாவதற்குள் நிமிர்த்தி விடவேண்டும் என்பதற்காகத்தான் பல கோடி செலவில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.அது மட்டுமின்றி இன்னொரு இலவச இணைப்பாக அவர் தமிழர்களுக்கு தரக்கூடிய பரிசு அவர் வாரிசுகளை அதிகாரப்பூர்வமாக மேடையில் ஏற்றி உலகத் தமிழ் அறிஞர்களிடம் (தமிழக மக்கள் எப்போதே ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டனர என்பதற்கு வேறு விடயம்) ஏற்றுக் கொள்ள வைப்பதற்குத்தான்.

ஆனால் எவ்வளவோ குலை அறுத்து உயிர் பறிக்கும் துரோகங்கள் கருணாநிதியால் இழைக்கப்பட்டிருந்தாலும் தமிழின் மீதுள்ள பற்றின் காரணமாக இம்மாநாட்டின் மூலமாக தமிழுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்பதை சிலர் நம்புகின்றனர்.அவர்கள் தமிழகத்தில் தமிழரின் தமிழின் நிலையை அறிய சில விபரங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுகிறோம்.தமிழன் வாழ்ந்தால் தான் தமிழ் வாழும் .ஆனால் தமிழன் வாழ்வதற்கு எந்த வழியும் இல்லாத நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வேலை இல்லாத்திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.இந்தியாவின் அதிகமான வேலையில்லாதோர் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.பணியில் இருப்போர் எண்ணிக்கை 1971-1981ல் 2.58விழுக்காடாக இருந்தது 1981-1991ல் 1.83ஆக குறைந்து விட்டது.ஆட்குறைப்பு அடிப்படையிலான வளர்ச்சி (jobless growth)என்ற உலகமயமாக்கல் கொள்கை அமல்படுத்தப்பட்டதிலிருந்து. இந்த நிலை ஏற்பட்டதை பார்க்கலாம்.1996-1997ல் 28.இலட்சத்து 27 ஆயிரம் பேர் வேலை இல்லாதோர் எண்ணிக்கை.இப்போது 75 இலட்சத்தை தாண்டி விட்டது.

இந்தியாவிலேயே பன்னாட்டுக்கம்பெனிகளும் தேசங்கடந்த தொழிற்கழகங்களும் அமைதியாக தொழில் நடத்தக்கூடிய இடமாக தமிழகம் இருப்பதால் இன்னும் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை கூடிய விரைவில் 1 கோடியை எட்டி விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.ஏனெனில் இந்த பன்னாட்டுக்கம்பெனிகள் உற்பத்தித் துறையை அல்ல வேலை வாய்ப்பு குறைவான சேவைத்துறைகளையே வளர்த்துள்ளன. (விவசாயத்திலும் உற்பத்தித் துறையிலும் வேலை வாய்ப்பானது 1971-1981 2,58 விழுக்காடாக இருந்தது 1981-91 டல 1.83 ஆக குறைந்து விட்டது) இது இப்படி இருக்க முதலில் அடிப்படையை பரிசீலிப்போம்.தமிழகத்தில் தாய்மொழிக்கல்வி என்பது ஏழை மக்களில் மிகவும் ஏழை மக்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களில்தான் உள்ளது.நடுத்தர வர்க்கத்தின் சொல்லாடலில் சொல்ல வேண்டுமானால் போக்கத்தவர் படிப்பதுதான் தாய்வழிக் கல்வி.தமிழ் மொழியில் படித்தவர்கள் சேரிவாசிகள் அல்லது ஒன்றுக்கும் வழியில்லாதவர்கள் என்ற நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினரின் பார்வைதான் அரசின் அதிகாரவர்ககத்தின் பார்வையாகவே உள்ளது.

தமிழ்மொழியில் கல்வி கற்றவர்கள் ,தமிழ் பட்டதாரிகள் தமிழ புலவர்கள் யாருக்கும் எந்த வேலை வாய்ப்பும் இல்லை.இதில் தஞ்சையில் வேலை இல்லாத தமிழ் புலவர்களின் சங்கமே செயல் பட்டு கொண்டிருக்கிறது.தமிழப் பட்டதாரிகள் வேலைகிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.இதில் தமிழிலில் முனைவர் பட்டம் படித்தவர்களின்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே உள்ளது.ஆசிரியர் வேலை வாய்ப்பைத் தவிர அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை.கணிப்பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அளிக்கும் மிகுந்த முக்கியத்துவத்தின் காரணமாக கோமாளிகளாகவே பார்க்கப்படுகின்றனர்.

தலை நகரில் எப்போதுமே தமிழுக்கு இடமிருந்ததில்லை.சிங்காரச் சென்னையில் மட்டுமின்றி தமிழக நகரங்களில் துவங்கி குக்கிராமங்கள் வரை மொழிக்கலப்பின்றி தூய தமிழிலில் பேசினால் வேற்று கிரகப் பிராணிகளாக அவர்கள் பார்க்கப்படுவர்.இப்போதெல்லாம் எந்த தஞ்சைத் தமிழனும் மதுரைத் தமிழனும் சாப்பிடும்போது சோறு வேண்டும் என்று கேட்பதில்லை ரைஸ் போடுங்கள் என்றுதான் கேட்கிறான்.திராவிட இயக்கங்களின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தும் அரசு ஆட்சி மொழியாக தமிழைக் கொண்டு வர இனனும் முடியவில்லை.மருத்துவம, பொறியியல் துவங்கி எந்த தொழில்சார்ந்த கல்வியிலும் தமிழிலில் இல்லை.அப்படி தமிழில் தேர்வு எழுதினால் அங்கீகரிக்கப்படுவதில்லை.தஞ்சையில் மருத்துவர் ஒருவரின் தேர்வு அங்கீகரிக்க மறுககப்பட்டதால் வழக்குத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

தமிழர் பண்பாடோ சாகும் தருவாயில்தான் தனது இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது.வேட்டி கட்டுவதற்கும் தமிழில் பேசுவதற்கும் , தமிழர் உணவு வகைகளை சாப்பிடுவதற்கும் பலநிறுவனங்களில் அனுமதி இல்லை. அரசு அலுவலகங்களில் போலீஸ் நிலையத்தில்,அரசு மருத்துவமனைகளில் வேட்டி உடுத்தி செல்லும் சாதாரண மககள இழிவான பிறவிகளாக நடத்தப்படும் விதமே இதற்கு சான்று.

தமிழர் பண்பாடு தமிழ் ஊடகங்களில் படும் பாடு சொல்லி மாளாது.இதற்கு தனி நூலே எழுதலாம் .பெயர்தான் தமிழ் ஊடகம் தவிர மற்ற எல்லாமும் ஆங்கிலத்தில்தான்.முழுமையாக ஆங்கில கலப்புடன் எப்போதாவது தமிழுடன் தான் நிகழ்ச்சிகள் அமைகின்றன.அரைகுறை உடைகளுடன் வந்து நின்று நிகழ்ச்சி வருணனையாளர்கள் இல்லாத தமிழ் தொலைக்காட்சிகள் காண்பது அரிது.கும்பல் கும்பலாக தொப்புள் ஆட்டம் இல்லாத தொலைக்காட்சிகள் இல்லை.சினிமாதான் 99 விழுக்காடு,.மீதி ஒரு விழுக்காடு ஏதாவது செய்தி நிகழ்ச்சியாக வரும்.வெள்ளைத் தோல் சிவப்பழகுதான் தொலைக்காட்சிகளில் வருவதற்கான தகுதி. கருத்த தமிழர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் கிராமத்தினருக்கும் இங்கு இடமில்லை.சுருக்கமாக கூறினால் உழைத்து நசிவடைந்த அழுக்கு முகங்களுக்கு இங்கு இடமில்லை.தொலைக்காட்சிகளின் இச்சீரழிவு ஏகாதிபத்திய பண்பாட்டிற்கு வித்திட்டவர்களும் முன்னோடிகளும் உலகத்தமிழனத் தலைவர்களின் குடும்பத்தினர் நடத்தும் தொலைக்காட்சிகளதான் .இன்றும் தமிழனத் தலைவர் அவரே ரசித்து பெயர் சூட்டிய மானாட மயிலாட என்ற முழுமையான ஆபாச நிகழ்ச்சியை பார்க்காமல் தவறவிட்டால் வருந்துவாராம்.

இன்னொரு பக்கம் ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் எப்போதே நாட்டை விட்டுபோனாலும் இன்னும் ஆட்சியாளர்களில் மூளைகளில் ஆங்கிலம்தான் ஆட்சி செய்கிறது .தமிழர் மனமோ ஆங்கில மோகம்தான் இயல்பாக உள்ளது. தமிழகத்தின் சோழ சக்ரவர்த்தியின் ஆட்சியில் வாரிசுகளுக்கு பட்டாபிசேகமும் முடிசூட்டுவிழவிற்கும் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது என்பது இப்போது அனைத்து குடிமக்களுக்கும் அறிந்த ஒன்று. ஒரு புறம் ஈழ நெருப்பு அணையாமல் கொதித்து எரிந்து கொண்டிருக்கிறது.ஏற்கனவே லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.மீதித் தமிழர்கள் வதைமுகாம்களில் மரணத்திற்காக காத்திருக்கின்றனர். தமிழுக்கும் தமிழருக்கும் வாழவுமில்லை வளமுமில்லை.இப்படி யதார்த்தத்தில் இல்லாத மரியாதையை தமிழுக்கு கனவுலகத்தின் மூலம் கட்டியமைக்க முயற்சிக்கிறார்கள். இவர்களே கனவுலகமான திரையுலயகலிருந்து வந்த இவர்களிடம் இருந்து வேறு எதையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?.

திருக்குவளையிலிருந்து வெறும் துண்டோடு வந்தவர் எப்படி ஆசியாவின் 23 ஆவது பணக்காரர் ஆனார்?திராவிட சித்தாந்தங்களினால் தமிழ் தேசியம் எப்படி சீர்குலைநது தோல்வி அடைந்தது? அடுத்த கட்டுரைகளில் பயணிப்போம்.

நன்றி

இனியொரு

http://inioru.com/?p=14071

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்தாலாவது இங்கு இன்னுமொரு பகுதியில் ஒட்டிவிடப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் எனும்பெயரில் வந்த உளவுத்துறையில் அறிக்கையை அறிந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்தாலாவது இங்கு இன்னுமொரு பகுதியில் ஒட்டிவிடப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் எனும்பெயரில் வந்த உளவுத்துறையில் அறிக்கையை அறிந்துகொள்ளுங்கள்.

அது என்ன விடயம் விளக்கமாக கூறவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.