Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதன் அரசாங்கத்திற்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பில் பதிலளிக்கும் அரசாங்கத்தின் சாட்சியாளர் ‐ கெஹெலிய‐கே.பி தொடர்பாக சர்வதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளையே தீர்த்து கொள்ள வேண்டியுள்ளது‐

Featured Replies

4ஆம் இணைப்பு‐குமரன் பத்மநாதன் அரசாங்கத்திற்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பில் பதிலளிக்கும் அரசாங்கத்தின் சாட்சியாளர் ‐ கெஹெலிய‐கே.பி தொடர்பாக சர்வதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளையே தீர்த்து கொள்ள வேண்டியுள்ளது‐

24 June 10 09:08 am (BST)

‐விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதே வலையமைப்பின் முன்னாள் பொறுப்பாளர் கே.பி என்ற குமரன் பத்மநாதன் தொடர்பில் எதிர்காலத்தில் நாட்டின் சாதாரண சட்டத்தின் அடிப்படையில் செயற்படவுள்ளதுடன் தேவையேற்படின் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளினால் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி பயன்படுத்தப்படுவார் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கே.பி தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கைக் உண்டு, அவர் தொடர்பாக சர்வதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளையே தீர்த்து கொள்ள வேண்டியுள்ளது எனவும் கெஹெலிய ரம்க்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ள கே.பி. கடந்த வாரம் வவுனியாவில் உள்ள இடம்பெயரந்;தோர் முகாமுக்கு அரசாங்கத்தினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் விடுதலைப்புலிச் சந்தேக நபர்களையும் அவர் சந்த்துள்ளார் எனவும் இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் ஆங்கல பத்திரிகையொன்றுக்கு அவர் செவ்வி வழங்கியுள்ளார் எனவும் அவர் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் தொடர்பாக அரசாங்கம் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என செயதியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

கேள்வி: போர் குற்றம் தொடர்பாக அரசாங்கத்தின் மீதே குற்றம்சுமத்தப்பட்டுள்ளது எப்படி கே.பியை சாட்சியாளராக்க முடியும்?.

பதில்: புலம்பெயர் தமிழர்கள் குற்றம்சுமத்துவதால், கே.பியை அரசாங்கம் சாட்சியாளராக பயன்படுத்த முடியும்.

கேள்வி: வழக்குகொன்றில் பிரதிவாதியொருவரை அரசாங்கத்தின் சாட்சியாளராக பயன்படுத்துவது அவரை விடுதலை செய்வதாகும். கே.பியை விடுதலை செய்வதற்காகவா அவரை அரசாங்கம் சாட்சியாளராக பயன்பத்தவுள்ளது?.

பதில் கூறப்படவில்லை

3ஆம் இணைப்பு:‐குமரன் பத்மநாதன் அரசாங்கத்திற்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பில் பதிலளிக்கும் அரசாங்கத்தின் சாட்சியாளர் ‐ கெஹெலிய:‐

விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் தலைவர் குமரன் பத்மநாதனை அரசாங்கத்திற்கு எதிரான போர் குற்றங்கள் தொடர்பில் பதிலளிக்கும் அரசாங்கத்தின் சாட்சியாளராக பயன்படுத்த உள்ளதாக ஊடகதுறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழுமு;பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீரமானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கே.பி வடபகுதிக்கு விஜயம் செய்ததாக அரசாங்க ஊடகமொன்று தகவல் வெளியிட்டமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பியை பயன்படுத்த முடியும் என அமைச்சர் கூறியுள்ளார். கே.பியை அரசாங்கம் விடுதலை செய்யுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ரம்புக்வெல்ல பதிலளிக்கவில்லை.

2ஆம் இணைப்பு:‐கே.பி உட்பட 21 பேரை விசேட விமானத்தில் அரசாங்கம் வடக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளது ‐ விஜிதஹேரத் குற்றச்சாட்டு:‐

2010‐06‐22 11:31:07

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரும் அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கேபி மற்றும் 20 வெளிநாட்டு தமிழ் பிரதிநிதிகள் அடங்களாக 21 பேர் வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

இவர்களை அரசாங்கமே கொழும்பிலிருந்து அழைத்துச் சென்று பத்திரமாக கொழும்பிற்கு திருப்பி அழைத்து வந்துள்ளதாகவும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றம் சாட்டுகின்றார்.

அரச விமானம் ஊடாக அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள் பலாலி முகாமிற்குச் சென்றதுடன் கிளிநொச்சிக்கும் சென்று கிளிநொச்சியையும் பார்வையிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவத் தளபதி வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கும் இந்த அரசு பயங்கரவாதத்தைத் தோற்றுவித்து அதில் முக்கிய பங்காற்றி தலைமை பொறுப்பினைக் கொண்ட கேபியை மிக சொகுசு ஆடம்பர மாளிகையில் வைத்து உபசரிப்பதாகவும் விஜித்த ஹேரத் விசனம் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கேபி உட்பட ஏனையவர்கள் அரசாங்கத்தின் முழுமையான அணுசரணையுடனும் பாதுகாப்புடனும் வடக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்சொன்னவாறு கூறினார்.

போருக்கு பின்னரான கட்டுமானப் பணிகளில் குமரன் பத்மநாதனுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தர்கள் புறப்பட்டுள்ளனர் ‐ சண்டே ஒப்சேவர்:‐

2010‐06‐20 08:31:07

போருக்கு பின்னரான கட்டுமான பணிகளுக்கு உதவ முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தர்கள் மற்றும் புத்திஜீவிகள் 9 பேரைக் கொண்ட குழுவினர் முன் வந்துள்ளனர் என அரசாங்கத்தின் பத்திரிகையான சண்டே ஒப்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனந்த பாலகிட்ணரால் எழுதப்பட்டுள்ள இந்த செய்திக் குறிப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பீ.என்ற குமரன் பத்மநாதனுடன் இணைந்து அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளில் இணைந்து செயற்பட உள்ளதாகவும் சண்டே ஒப்சேவர் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியா, கனடா, சுவிட்ஸர்லாந்து, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த இந்த புத்திஜீவிகள் அண்மையில் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவையும் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்துள்ளனர்.

இந்த 9 பேரையும் இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கான முழமையான பொறுப்புக்களை குமரன் பத்மநாதனே மேற்கொண்டிருந்தார் என சண்டே ஒப்சேவர் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் , சுவிசில் இருந்தும், பிரான்சில் இருந்து விடுதலைப் புலிகளின் பண சேகரிப்பாளர்களில் ஒருவர், கனடாவின் முன்னாள் புலி முக்கியஸ்த்தர் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26074&cat=1

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.