Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது – ஆனந்தசங்கரி‐

Featured Replies

குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது – ஆனந்தசங்கரி‐

26 June 10 10:25 am (BST)

விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களுக்கு பதில் கூறவேண்டிய முக்கிய நபரான குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது என தமிமர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அன்று மாத்திரமல்ல உயிரிழக்கும் வரை தான் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகளுக்கு சார்பான கட்சியென தான் விமர்சித்ததால், சம்பந்தன் தன்னை முட்டாளாக வேண்டாம் என கூறியதாகவும் அரசியல் வாழ்க்கை முட்டாளாக செயற்படாததன் காரணமாக விடுதலைப்புலிகளின் முகவர்களுடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டிக்க முடிந்துள்ளது எனவும் ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, எகிப்துக்கான துணைத் தூதுவர் பதவியில் இருந்து திடீரென நீக்கம்?

யுத்தக்காலத்தில் இராணுவ ஆயுதப்படை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, எகிப்துக்கான துணைத் தூதுவர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் ஜெனரல் சரத் பொன்சேக்காவுடன் நெருக்கமான பணியாற்றி வந்ததன் காரணமாகவெ அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்பிக்க புலனாய்வுப் பிரிவினர் அமல் கருணாசேகரவிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக துணைத் தூதராக நியமிக்கப்பட்ட அவர், அரசியல் காரணமாக மீண்டும் பின்நோக்கி தள்ளப்பட்டுள்ளார்.

கருணாசேகர உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் துணைத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாகவே விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த குமரன் பத்மநாதன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொழும்பு மாநகர சபையின் அதிகாரங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கீழ் கொண்டுவர முயற்சி?

கொழும்பு மாநகர சபையின் அதிகாரங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் கீழ் கொண்டு வருவதற்காகவே, கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்டதாக நம்பத் தகுந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாநகர சபையின் நகர பொறியியல் திணைக்களத்தை மாத்திரமே நகர அபிவிருத்தி அதிகாரச் சபையுடன் இணைக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் மாநகர சபையின் நிதி மற்றும் ஏனைய நிர்வாக பிரிவுகளையும் நகர அபிவிருத்தி அதிகாரச்சபையின் கீழ் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் முதற்கட்டமாக கொழும்பு மாநகர சபையின் பொறியியல் திணைக்களத்தின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்புச் செயலாளர், தனது அலுவலகத்திற்கு அழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பாதுகாப்பு அமைச்சனி செயலாளர் கோத்தபாயராஜபக்ஸவோ அல்லது பாதுகாப்பு அமைச்சோ இது குறித்து தகவல்களையோ உறுதிப்படுத்தல்களையோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை பலி:‐

மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை மர்மமானமுறையில்; வாவி நீருக்குப் பலியாகியுள்ளார்.

57 வயதுடைய அசனார் அப்துல் றகுமான்; என்பவரே இவ்வாறு மர்மமானமுறையில் மரணமாகியுள்ளார். 5 பிள்ளைகளின் தந்தையான இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் காங்கேயனோடையிலுள்ள தனது வீட்டிலிருந்து காத்தான்குடி வாவிக்கு மீன்பிடிக்கச்சென்றதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்..காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்போது இம்மாவட்டத்தில் கடுமையாக வீசிவரும் கச்சான் காற்று காரணமாக குறித்த மீனவர் நீருக்குள் விழுந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகின்றது.

மினி வரவு – செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் தொடர்பான யோசனைகள் இல்லை.

செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத்திட்டப்பிரேரணையில் புதிய வரிகள் தொடர்பான யோசனைகள் உள்ளடக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. 2011 ஆம் வருடத்திற்கான வரவு – செலவுத்திட்டப்பிரேரணைகள் இவ்வருட இறுதியில் சமர்ப்பிக்கப்டவுள்ள அதேவேளை அதற்கு முன்பதாக மினி வரவு – செலவுத்திட்டமொன்றினை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது. இதே வேளை 2011 ஆம் வருடத்திற்கான வரவு – செலவுத்திட்ட யோசனைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு ஆணையாளர்கள் தெரிவு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது செயலிழந்துள்ள இரண்டு சுயாதீன ஆணைக்குழுக்களை மீள ஏற்படுத்துவதற்கும் அவற்றுக்கு ஆணையாளர்களை நியமிப்பிதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் படி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ,பொலிஸ் ஆணைக்குழு என்பனவற்றை மீள ஏற்படுத்துவதற்கும் தேர்தல் ஆணைக்குழுவினை புதிதாக ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ,பொலிஸ் ஆணைக்குழு என்பனவற்றின் ஆணையாளர்களாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளிலிருந்து பொறுத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையரின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது : நிதி அமைச்சு அறிப்பு

இலங்கையரின் ஆயுட்காலம் கடந்த வருடத்தினை விட அதிகரித்துள்ளதாக நிதியமைச்சின் புதிய வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம் இலங்கையரின் ஆயுட்காலம் 73 வயதாக இருந்தது. இது இவ்வருடம் 74 வயதாக அதிகரித்துள்ளது. அதே வேளை இலங்கையரின் எழுத்தறிவு வீதம் கடந்த வருடம் 90 வீதமாகவும் இவ்வருடம் அது 91 வீதமாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் பிரசவத்தின் போது மரணமாகும் சிசு மரணங்கள் கடந்த வருடம் ஆயிரம் பேரில் 12 பேராக இருந்தது.இவ்வருடம் அந்தத் தொகை ஆயிரம் பேரில் 10 பேராக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை பிரசவத்தின் போது மரணமாகும் தாய்மார்;களின் எண்ணிக்கை ஆயிரம் பேரில் 45 பேர் மரணமாவதில் எவ்விதமாற்றமும் ஏற்படவில்லை .

இலங்கையில் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கும்

2010 ஆம் ஆண்டின் முடிவில் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 30 ஆயிரமாக அதிகரிக்கும் என தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்து 174 கலைத்துறை பட்டதாரிகள், 400 சுதேச மருத்துவப் பட்டதாரிகள் உள்ளிட்ட 30 ஆயிரம் பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி இருகின்றனர். 2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தொழில்வாய்ப்புகளை பெறுவதற்காக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமிப்பது குறித்து ஆலோசனை?

செயலிழந்துள்ள இரண்டு சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நியமித்து, புதிய சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்கவும் அரசங்கம் தீர்மானித்துள்ளதாக உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு மற்றும் காவற்துறை ஆணைக்கு என்பன மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் தேர்தல் ஆணைக்குழுவொன்று புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ளது.

ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் சாசனத் திருத்தத்தின் பின்னர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. இந்த ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய ஆணையாளர்கள் மற்றும் அரச சேவையின் உயர் அதிகாரிகளை அரசாங்கம் ஏற்கனவே தேர்ந்தெடுத்துள்ளது. காவற்துறை மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆகிய இரண்டு ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை தற்போதைய தேர்தல் ஆணையாளர் ஓய்வுப்பெறும் வயதை தாண்டிவிட்டதால் அவருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது. ஸ்தாபிக்கப்படவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதுடன் அவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அதனை தவிர தேர்தல் தொகுதிகளை மாற்றியமைப்பதற்காக தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணைக்குழுவொன்றும் எதிர்வரும் ஆகஸ்ட் மாத் நியமிக்கப்படவுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26393&cat=1

விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களுக்கு பதில் கூறவேண்டிய முக்கிய நபரான குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது என தமிமர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அன்று மாத்திரமல்ல உயிரிழக்கும் வரை தான் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.கே பி அவர்கள் கைதியானதும் ஒத்துபோவதைத் தவிர வேறு வழி இல்லை காரணம் அவர் ஒரு சர்வதேச பொலிசாரினால் தேடப்படும் குற்றவாழி அவர் தன்னை காப்பாற்றி கொள்ள முழு உலகத்துக்கும் துரோகம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. நோர்வே கனடாவில் இருப்பவர்களில் சிலர் பின்னுக்கு வருவதை யோசித்திருந்தால் இக் கைதும் நடந்திருக்காது.இப்படியொரு துரோகமும் அரங்கேறாது.

ஆனந்தசங்கரியும் இரகசியாமாக பராமரிக்கப்பட்டவர் தான்.

தன்னுடைய இடத்துக்கு வேறொருவர் வந்ததையிட்டு பொறுமுகிறார்.

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களுக்கு பதில் கூறவேண்டிய முக்கிய நபரான குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது என தமிமர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அன்று மாத்திரமல்ல உயிரிழக்கும் வரை தான் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரானவர் எனவும் அவர் கூறியுள்ளார்.கே பி அவர்கள் கைதியானதும் ஒத்துபோவதைத் தவிர வேறு வழி இல்லை காரணம் அவர் ஒரு சர்வதேச பொலிசாரினால் தேடப்படும் குற்றவாழி அவர் தன்னை காப்பாற்றி கொள்ள முழு உலகத்துக்கும் துரோகம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. நோர்வே கனடாவில் இருப்பவர்களில் சிலர் பின்னுக்கு வருவதை யோசித்திருந்தால் இக் கைதும் நடந்திருக்காது.இப்படியொரு துரோகமும் அரங்கேறாது.

தானாக போய் சரண் அடைந்தவருக்கு எதுக்காக சித்திரவதை செய்ய வேண்டும்... KP சரண் அடைந்த உடன் மலேசியாவில் ஒரு வாரம் வைத்து மலேசிய புலநாய்வு பிரிவினருக்கு தகவல்களை வழங்கி இருக்கிறார்... தகவல்கள் பலவற்றை எழுதிக்குறிப்பு எடுத்து வைத்து கொடுத்து இருக்கிறார்... பல போராளிகளின் சொந்தப்பெயர்கள், அவர்களின் கடவுச்சீட்டு இலக்கம்கள் வரைக்கும் கொடுத்து இருக்கிறார்...

பல போராளிகள் விமான நிலையைம் தாண்டும் போது திரும்பி வராதீர்கள் வந்தால் எங்களால் ஒண்டும் செய்ய முடியாது கைது செய்ய வேண்டி வரும் எண்று பல போராளிகளுக்கு மலேசிய அதிகாரிகள் சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்...

மற்றயது போகும் முன்னர் KP பல தடவைகள் பேசியும் எழுதியும் இருக்கிறார்...! ஆனால் அதில் எல்லாம் இலங்கை அரசின் முள்ளிவாய்க்கால் கொடூர செயல்களை சொல்லவோ, சுட்டிக்காட்டவோ இல்லை... !

இப்ப KP இலங்கை அரசின் கைகளுக்கு போர் குற்றத்துக்கு எதிராக சாட்ச்சியம் அளிக்க போக தகுதியானவர் தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடையே ஒருவித பதட்டத்தை உருவாக்கித் தாம் கையாலாகாதவர்கள் என்று ஏற்கவைப்பதனூடாக தனது இலக்கை அடைந்துவிட இலங்கை பகிரங்கமாகவும், இந்தியா ரகசியமாகவும் தனது காய்களை சாதுரியமாக நகர்த்தி, ஓரளவு முன் நகர்ந்துள்ளன என்பது அண்மைய புலம்பெயர் பிரதிநிதிகளின் பெயர்விபரங்களது வெளிப்படுத்தலோடு தெளிவாகி உள்ளது. களத்திலே நடைபெற்ற போராட்டத்தின் பின்தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்களே இன்று போராட்டத்தின் இயங்குவிசையாகச் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருப்பதை உணர்ந்தே அனைத்தையும் எதிரி திட்டமிட்டு செய்கின்றான். ஆனால் நாமோ ஒருவரையொருவர் திட்டுவதில் காலத்தை செலவிடுகிறோம். தமிழின வரலாற்றில் ஏறத்தாள எட்டு நூற்றாண்டகளின்பின் தனது சொந்த மக்களை மட்டுமே பலமாக் கொண்ட ஒரு தலமையின் கீழ் உலகத் தமிழினமஇ அணி திரண்டதை உலகு, உலகு மட்டுமல்ல அயலகத் தமிழ் காவலரென நடிப்போரும் பெரும் ஐயத்தோடு பார்த்து எம்மை அழித்தார்கள். இன்னும் அழிப்பதற்குத் துடிக்கிறார்கள். எனவே புலம்பெயர் தமிழினம் தெளிவோடும் விழிப்போடும் இருந்து தேசிய விடுதலைக்கான தமது பார்வைகளுட்பட்ட வகையிலே செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். பொய்கள் தொடர்ந்தம் உலகிலே நிலைக்காது. இந்தியாவும் இப்படியே இருக்காது. அது கூடச் சிதைந்து அழிந்து பல தேசமாகும் காலம் வரும். நாம் எமக்காக அல்ல எமது எதிர்காலச் சந்ததிக்காகச் சிந்திப்போம்.!

  • தொடங்கியவர்

இதுக்கை இவ்வளவுகாலமும் இலங்கை அரசினதும் இந்திய அரசினதும் கைப்பொம்மையாக செயற்பட்ட ஆனந்தசங்கரி KP யரை பற்றி பேசுவதுதான் அதி உச்ச கோமாளித்தனம்...

தனக்கு கிடைத்த முன்னுரிமை பறி போகும் ஆற்றாமை ஆக்கும்...

ரோ பயங்கரவாதிகளின் தாளத்துக்கு ஆடிய சங்கரி ரோ பயங்கரவாதிகளிடம் முறையிடலாம்.

பிரேமதாச, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் போன்றவர்களை ரோ பயங்கரவாதிகள் படுகொலை செய்தது போல இன்னொரு எல்லை தாண்டிய பயங்கரவாத படுகொலையையும் செய்யும்படி கோரலாம்.

ரோ பயங்கரவாதிகளின் தாளத்துக்கு ஆடிய சங்கரி ரோ பயங்கரவாதிகளிடம் முறையிடலாம்.

பிரேமதாச, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் போன்றவர்களை ரோ பயங்கரவாதிகள் படுகொலை செய்தது போல இன்னொரு எல்லை தாண்டிய பயங்கரவாத படுகொலையையும் செய்யும்படி கோரலாம்.

:D:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.