Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சபையில் பசில் ராஜபக்ஷ பாராட்டு பொறுப்புணர்வுடன் செயற்படுவதாகக் கூறுகிறார்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுவதாகத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெற்கில் தோல்வி கண்ட சிலர் வடக்கில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையை சீர்குலைக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பசில் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது;வடக்கில் இடம்பெற்ற இடம்பெயர்வு மிகப்பெரும் பிரச்சினையாக இருந்தது. இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான தங்குமிடம்,உணவு,நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது போன்ற தேவைகள் எமக்கு ஏற்பட்டன. ஆனால், எமது முப்படையினரும் மிகவும் சிரமப்பட்டு சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இந்தப் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டனர்.

இடம்பெயர்ந்த மக்களை நாம் நீண்டகாலம் வைத்திருக்க விரும்பவில்லை. அவர்களை மீளக்குடியேற்ற விரும்பினோம். ஆனால், அதற்குப் பல பிரச்சினைகள் இருந்தன. அங்கு அங்குலம் அங்குலமாக கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டிருந்தன. பாலங்கள் உடைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைகள்,பாடசாலைகள் தீயிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு கட்டிடங்களும் சிதைக்கப்பட்டிருந்தன. அங்கு மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இவற்றைச் சீர்படுத்தினோம்.பொதுமக்கள் பாதுகாப்பு,தேசிய பாதுகாப்புக்கேற்ப மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கையெடுத்தோம். வன்னியில் வாழ்ந்த ஒவ்வொரு குடி மகனும் ஆயுதப்பயிற்சி பெற்றவர்,புலிகள் அவர்களுக்கு கட்டாய ஆயுதப் பயிற்சி வழங்கியிருந்தனர். எனவே, அவ்வாறானவர்களை புலிகளிடமிருந்தது வேறுபடுத்த வேண்டியிருந்து புலிகளுக்குப் புனர்வாழ்வளித்த அதேவேளை, ஏனையவர்கள் மீள்குடியேற நடவடிக்கையெடுத்தோம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நாம் சீர்படுத்தினோம். அந்த மக்களைச் சொந்தக் காலில் நிற்க வைக்க நடவடிக்கையெடுத்துள்ளோம். அந்த மக்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்கள்.அவர்கள் யாரிடமும் கையேந்தாமல் வாழும் நிலையை ஏற்படுத்த முடியும்.ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் நிலையேற்பட்டுள்ளது. 180 நாட்களுக்குள் 80 சதவீதமான இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றியமை உலக சாதனை என்றே கூற வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றனர். அவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட முன் வந்ததையிட்டு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அதேவேளை, தெற்கில் தோல்வி கண்ட கட்சிகள் சில வடக்கிற்குச் சென்று அங்கு ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையைக் குழப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இலங்கையில் சட்டவிரோத ஆயுதங்களைக் களைந்து அனைவரையும் ஜனநாயக நீரோட்டத்துக்குக் கொண்டு வந்து உள்ளூராட்சி,மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி அரசியல் தீர்வை முன்வைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளார்.இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்து வந்த கொள்கைகளைத் தவிர்த்து நாம் வேறுபட்ட கொள்கைகளை முன்னெடுத்தோம். அதனால் தான் பல பிரச்சினைகளை எம்மால் நிறைவேற்றக் கூடியதாகவிருந்தது.

இடப்பெயர்வு பிரச்சினை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்பவர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் நாம் மீள்குடியேற்ற நடவடிக்கையெடுத்துள்ளோம். மூதூரிலிருந்து இடம்பெயர்ந்த 40 ஆயிரம் மக்களை 4 நாட்களில் மீள்குடியேற்றினோம். நாம் கடைப்பிடித்த வேறுபட்ட கொள்கையினால்தான் இதனை எம்மால் செய்ய முடிந்தது.

ஒழுக்கமுள்ள,சட்டப்படி செயற்படும் சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம். மக்களின் கருத்துப்படியே எமது அரசாங்கம் செயற்படுகின்றது. அதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் எமக்கு மக்களின் வாக்குகள் அதிகரித்தன.எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது. இதிலிருந்து எமது நாடு பின்நோக்கிச் செல்கின்றதா,முன்நோக்கிச் செல்கின்றதா என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள முடியும்.

2006 ஆம் ஆண்டு இந்த நாட்டில் சமுர்த்தி பெறுவோர் எண்ணிக்கை 19 இலட்சமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டில் இத்தொகையை 14 இலட்சமாக நாம் குறைத்துள்ளோம். அந்தளவுக்கு சமுர்த்தி பெற்று வந்தோரின் வாழ்க்கையை நாம் மேம்படுத்தி அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம். அதேபோல் வேலையற்றோர் வீதத்தையும் கடந்த ஆண்டுகளைவிடக் குறைத்துள்ளோம். கிராமப்புறச் செயற்பாடுகளை மேற்கொள்ளப் பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

நாம் மக்களுக்கான எந்த நிவாரணத்தையும் வெட்டமாட்டோம். அதேபோன்று எந்த நிறுவனத்தையும் விற்கவும் மாட்டோம். இந்த நாட்டில் பிறக்கும் குழந்தைக்கு பால் மா கொடுக்கும் நிலையை மாற்றி தாய்ப்பாலைக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்துவோம்.பால் மாவினால் வெளிநாடுகளே நன்மையடைகின்றன. நாம் உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவுள்ளோம்.

இந்த வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் உப்புச்சப்பில்லாமல் பேசுகின்றனர். அவர்களால் இந்த வரவுசெலவுத் திட்டத்தை விமர்சிக்க முடியாமலுள்ளது.எதிர்க்கட்சியினர் தமது பொறுப்பிலிருந்து விலகிச் செல்கின்றனர். அவர்களிடமிருந்து நல்ல கருத்துகள்,ஆலோசனைகளைப் பெற முடியாதுள்ளது.

நாட்டின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த சகல மக்களுக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம். கிராமப்புறங்களிலும் தோட்டப் புறங்களிலுமே இந்த நாட்டு மக்களில் 80 வீதமானோர் வாழ்கின்றனர். இந்த நாட்டில் 36 ஆயிரம் கிராமங்களும் 14 ஆயிரம் கிராமசேவகர் பிரிவுகளும் உள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

கடற்தொழிலைப் பொறுத்தவரையில் கடல் மீன் உற்பத்தி 6.8 வீதத்தினாலும் நன்னீர் மீன் உற்பத்தி 4.1 வீதத்தினாலும் அதிகரித்துள்ளது. அதேபோன்று 33,96,144 மின்பாவனையாளர்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 43,37,154 மின் பாவனையாளர்களாக அதிகரித்துள்ளது.

http://www.thinakkural.com/publication_west/content.php?contid=3820&catid=1

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சட்டவிரோத ஆயுதங்களைக் களைந்து அனைவரையும் ஜனநாயக நீரோட்டத்துக்குக் கொண்டு வந்து உள்ளூராட்சி,மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி அரசியல் தீர்வை முன்வைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்துள்ளார்

உலகத்தையே ஏமாற்றும் சிங்கள இனவெறியர்களுக்கு இவர்கள் எம்மாத்திரம்.

வாத்தியார்

**********

சம்பந்தனின் பெரிய சாதனை என்று சொல்லலாமோ? .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.