Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இப்போது பிரபாகரனின் கனவு நகரம் எப்படியிருக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் தலை நகர மாக இருந்தது, கிளிநொச்சி. மக்கள் வங்கி, தமிழீழ காவல்துறை, பூங்கா, பாடசாலை என ஒரு மாதிரி தமிழ் நகரமாகவே கிளிநொச்சியை உருவாக்கியிருந் தார்கள்.

இறுதி யுத்தத்தில் ஆடு, மாடுகள்கூட இல்லாமல் மக்கள் அனைவரும் வெளி யேறி, வெறிச்சோடி, கடந்த ஒரு வருடமாக யாரும் நுழைய முடியாத மர்மப் பிரதேசமாக இருந்தது. இப்பொழுது அகதி முகாம்களிலிருந்து மக்கள் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். எப்படியிருக்கிறது பிரபாகரனின் கனவு நகரம்?

“2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை விட்டு பின்வாங்கிய பிறகு அரச பாதுகாப்பு இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படங்களில்தான் அவ்வப்போது கிளிநொச்சியைப் பார்த்து வந்தோம். அந்தப் படங்களில் போரால் ஏற்பட்ட சில சிதைவுகளைத் தவிர பெரியளவில் சேதங்கள் இல்லாத மாதிரியே தெரிந்தது. ஆனால், இப்போது மீண்டும் கிளிநொச்சியைப் பார்த்த ஊர்க்காரர்கள் அனைவருக்கும் மனம் முழுவதுமாய் நொறுங்கிப்போனது. எல்லோரது முகமும் வாடி விழுந்துவிட்டது. கண்களில் கண்ணீருடனும், பேரதிர்ச்சியுடனும் எல்லோரும் ஒவ்வொன்றையும் பார்த்தார்கள்.

கிளிநொச்சியின் பிரசித்தமான பழைய அடையாளங்கள் எதையும் காணோம். புலிகளின் ஆட்சியை நினைவூட்டும் ஒரு சிறு கல்தூணைக்கூட காண முடியவில்லை. விடுதலைப்புலிகள் ஞாபகங்கள் தரித்திருக் கக்கூடாது என திட்டமிட்டு முழு நகரத்தையுமே சிதைத்திருக்கிறார்கள்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும் வழியில் பரந்தன் என்ற சிறிய நகரத்தில் புலிகளின் மோட்டார் படையணியை உருவாக்கிய மாவீரர் லெப்டினன் கேணல் குட்டிசிறியின் திருவருவம் இருந்தது. இப்பொழுது அதன் அடையாளங்களே இல்லை. இராணுவத்தின் தேனீர்க் கடைகளும் சிங்களப் பாடல்களும் சிங்கள அறிவிப்புப் பலகைகளும் என்று வேறு ஒரு இடத்தைப்போல இருக்கிறது. இதுபோல் எல்லா இடங்களிலும் புலிகளது கடைகள், அலுவலகங்கள் எல்லாம் சிதைக்கப் பட்டு, மாற்றப்பட் டிருக்கின்றன.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் அருகில் இருந்த புலிகளின் மக்கள் வங்கி, சேரன் வாணிபம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முதலிய கட்டிடங்கள் படையினரது முகாம்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. சமாதானச் செயலகம், கல்விக் கழகம், அரசியல்துறை அலுவலகம், மனித உரிமைகள் அலுவலகம் ஆகிய விடுதலைப்புலிகளின் முக்கியமான அலுவலகங்கள் இருந்த பரவிப்பாஞ்சன் வீதி இப்போது உச்ச பாதுகாப்புடன் கூடிய இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதியாக்கப் பட்டுள்ளது.

டிப்போ சந்தியில் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் கலைவேலைப்பாடுகளுடன் இருந்த அந்தப் பண்பாட்டு மண்டபத்தை வேருடன் அழித்துவிட்டார்கள். அருகில் இருந்த அரும்பொருட் காட்சியகமும் அழிக்கப்பட்டு விட்டது. மாவீரர் லெப்டினன் சந்திரன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்காவை மாற்றி இராணுவம் கிளிநொச்சியை வெற்றி கொண்டதன் நினைவாக பெரிய நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருக்கிறது.

ராணுவத்தினரது தேனீர்க் கடைகளில் இருக்கிற கதிரைகள், மேசைகள், பாத்திரங்கள் எல்லாம் மக்களின் வீடுகளிலிருந்து திருடிச் செல்லப்பட்டவை. அவர்கள் பாவிக்கும் லாரிகள், பேருந்துகள், உழவியந்திரங்கள், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் எல்லாமே மக்களது. இராணுவம் அவைகளில் பயணிப்பதைப் பார்த்து பெருமூச்செறியும் பல மக்களை தினமும் கண்டு கொண்டிருக்கிறேன்.

படைகளால் அபகரிக்கப்பட்ட கடைகளை, அலுவலகங்களை, வீடுகளை மக்கள் கேட்கும்போது பல இடங்களில், “இரண்டு வருடத்திற்கு தரமாட்டோம்! நான்கு வருடத்திற்கு தரமாட்டோம்!’’ என்றும் படையினர் கூறுகிறார்கள். மக்களின் காணி நிலங்கள் பலவற்றை இராணுவ முகாமிற்கு எடுத்திருப்பதாக பெயர்ப்பலகைகள் நட்டு எழுதியிருக்கிறார்கள்.

எங்களது இளைஞர் பட்டாளக் குழுவில் கஜானந் என்ற நண்பன் மிக கலகலப்பானவன். அவன் யுத்த இறுதி நாட்களில் காணாமல் போனான். அவன் திரும்புவான் என்று அவனது அம்மா இப்பொழுதும் கண்ணீருடன் இருக்கிறார். அதைப் போலத்தான் எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் என்னுடன் சிறிய வயது முதல் படித்து வந்த கோபிநாத் இறுதிநாள் காணாமல் போயிருந்தான். அவனது அம்மா பைத்தியநிலையில் தனது மகன் வருவான் வருவான் என்று வாசலையே பார்த்துக்கொண்டிருக் கிறார்.

இப்படி எல்லா வீடுகளிலும் இடங்களிலும் இறந்தவர்களின் பிரிவும் காணாமல் போனவர்களின் அவலமும்தான் நிரம்பியிருக்கின்றன.

கிளிநொச்சியில் கணேச புரம் என்ற இடத்தில் மலக் குழியிலும் கிளிநொச்சி மகா வித்தியாலய பாடசாலையிலும் இடிபாடுகளுக்குள் பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட் டுள்ளன. இது பிள்ளை களைக் காணாமலிருக்கும் தாய் தந்தை உறவுகளிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன. ஒரு வருடத்திற்கு முந்திய இந்த எலும்புக் கூடுகள் கிளிநொச்சியை படைகள் கைப் பற்றிய பொழுதோ அல்லது இறுதி யுத்த நாட்களின் பொழுது சிக்கிய போராளிகளை சித்திரவதை செய்து கொன்றதன் எச்சங்களாக இருக்க லாம். அந்த எலும்புக்கூடுகள் போராளிகளின் சீருடைகள், பெண்களது சேலைகள் அணிந்த நிலையில் இருந்தன.

கிளிநொச்சி நகரமெங்கும் கால் கைகளை இழந்தவர்கள், பொய்க் கால்களை போட்டுக்கொண்டு காலை இழுத்து இழுத்து தூக்கி வைத்துக் கொண்டு போகிறார்கள். கையில்லாமல் உடலெங்கும் காயங்களுடன் போகிறார்கள், பலர். கூரையில்லாமல் உடைந்த சுவர்களுக்கு கீழாகவே எனது இரவுத் தூக்கங்கள் போகின்றன. மரத்திற்கு கீழாக அம்மா சமைத்துக்கொண்டிருக்கிறார். கூடாரத்திற்குள் தங்கை படித்துக் கொண்டிருக் கிறாள். கூடாரமோ எப்பொழுதும் முறிந்து விழும் நிலையில் இருக்கிறது.

போராளிகளும் மக்களும் என்று ஈழ மக்களின் பாதுகாப்பில் சிறந் திருந்த கிளிநொச்சி இன்று அந்நியப் படைகள் உலாவும் ஆக்கிரமிப்பு நகரமாகப் போய்விட்டது!.

நன்றி குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பிரபாகரனின்ர கனவு என்று சொல்லிச் சொல்லியே ஒட்டுமொத்த ஈழத்தமிழனையும் அவனின் வாழ்விடங்களையும் சிங்களமும் இந்தியாவும் அதன் வால்பிடிகளும் அழிச்சு நாசம் பண்ணட்டும். அப்பவும் குமுதமும் ஆனந்தவிகடனும் இப்படியே தலையங்கத்தை போட்டு வியாபாரத்தை பார்க்கட்டும். இனமானமற்ற.. இதுகளுக்கு எல்லாமே பிரபாகரனின்.. தோற்றமாவே தெரியும். தமிழனின் நாகரிகம் வரலாறு வளர்ந்த மண் என்றது தெரியாது. :rolleyes::lol::)

  • கருத்துக்கள உறவுகள்

.

பிரபாகரன் என்னும் பெயரையே உச்சரிக்க உரிமை இல்லாத ...... தமிழ்நாட்டின் ஈனப் பத்திரிகைகள்.

எமது போர் உச்சக் கட்டத்திலிருந்த போது........

ஸ்ரீலங்கா கொடுத்த ஒரு மடிக் கணனிக்காக உண்மைகளை மறைத்த வேசிகள்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.