Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் சிங்கள மயமாகும் தமிழ் கிராமங்களும், வீதிகளின் பெயர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 9, 2010 / பகுதி: செய்தி / கயல்விழி

மட்டக்களப்பில் சிங்கள மயமாகும் தமிழ் கிராமங்களும், வீதிகளின் பெயர்களும்

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சிறீலங்கா அரசு முறையாக நெறிப்படுத்தி மேற்கொண்டுவருகின்ற போதிலும், இதனைத் தடுக்க முடியாத நிலையில் தமிழ் மக்களின் பலம் காணப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வப்பொழுது அறிக்கை வெளியிட்டும், தமிழ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தும் வருகின்ற போதிலும், இந்த விடயத்தை பாரதூரமாக எடுத்து பன்னாட்டு சமூகத்தின் ஆதரவுடன் இதனைத் தடுத்து நிறுத்த இதுவரை ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கண்டனம் வெளியிடப்படுகின்றது.

பாரம்பரிய தமிழ் பிரதேசமான கோரளைப்பற்று தெற்கிலுள்ள குடும்பிமலையிலுள்ள அல்லிஓடை என்ற வீதியை அங்கு ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிங்களப் படையினர் அலிஒலுவ என பெயர் மாற்றி, பெயர்ப்பலகை அமைத்துள்ளனர்.

இதேபோன்று ஏற்கனவே பல வீதிகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதிலும், யாரும் அதனைத் தடுத்த முன்வரவில்லை.

2007ஆம் சிறீலங்கா படையினரது படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த இந்தப் பிரதேச மக்கள் அண்மையில் மீளக் குடியேறிய பின்னரே இந்தப் பெயர் மாற்றங்கள் தொடர்பாக அறிய வந்துள்ளது.

இதேபோன்று, மட்டக்களப்பு எல்லையிலுள்ள பாரம்பரிய தமிழ் கிராமங்கள் பல ஏற்கனவெ முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளன.

சிறீலங்கா அரசுடன் இணைந்தியங்கும் கருணா, பிள்ளையான் துணைப்படைக் குழுக்களும் சிறீலங்கா அரசின் இந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற நடவடிக்கைக்கு துணை போகின்றன.

பதிவு

... ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ... நாளை????? ...

  • கருத்துக்கள உறவுகள்

.

... ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ... நாளை????? ...

ஈரப் பிலாக் கொட்டையையும், வறுத்து சாப்பிட்டு விடுவார்கள்.

நாம் தான், எமக்குள் அடி படுகின்றோமே.... அது சிங்களவனுக்கு வசதியாய் போயிட்டுது.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

.

ஈரப் பிலாக் கொட்டையையும், வறுத்து சாப்பிட்டு விடுவார்கள்.

நாம் தான், எமக்குள் அடி படுகின்றோமே.... அது சிங்களவனுக்கு வசதியாய் போயிட்டுது.

.

எமது பலவீனமே எமக்குள் அடிபடுவது தான் என முழு உலகுக்குமே தெரியும். அதனால் தான் யாருமே ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சிங்களவனும் இதனை தான் செய்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

.

எமது பலவீனமே எமக்குள் அடிபடுவது தான் என முழு உலகுக்குமே தெரியும். அதனால் தான் யாருமே ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சிங்களவனும் இதனை தான் செய்கிறான்.

உண்மை நுணா, ஆனால் இதனை தலைமை தாங்கும் அமைப்புகளும் புரிந்து கொள்ள வேண்டுமே......

ஆனந்த சங்கரியில் இருந்து கருணா, பிள்ளையான், டக்ளஸ் வரை தமிழருக்கு செய்த லாபம் என்ன?

எல்லாம் சுயநல பிறப்புகள். கடைசியாய் எல்லாரையும் காட்டிக் கொடுத்து .....

தமிழனின் பாரம்பரிய மண்ணை சிங்களவனுக்கு தாரை வார்த்து, இன்னும் கோமாவில் இருக்கும் மனிதர்கள்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.