Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகம் செல்லும் உறவுகளுக்கு ஓர் வேண்டுகோள்

Featured Replies

புலத்தில் கோடைகால விடுமுறை விட்டாகி விட்டது. ஏற்கனவே பலர் தாயகத்தை நோக்கி புறப்பட்டிருப்பார்கள் இன்னும் ஏராளமானோர் புறப்படத் தயாராகிக் கொண்டிருப்பீர்கள்.

ஏற்கனவே தாயகத்திற்கு சென்றவர்களும் செல்ல இருப்பவர்களுக்கும் சில செய்திகளை நாங்கள் சொல்ல விரும்புகின்றோம். ஏற்கனவே சென்றவர்களுக்கு செல்ல இருப்பவர்கள் இந்தச் செய்திகளை தாயகத்திற்கு சுமந்து சென்று தெரிவிக்க வேண்டும் என்பது எமது அவாவாகும்.

நீங்கள் தாயகத்தில் கால்வைக்கும்போது பல மாற்றங்களை அங்கு காணக்கூடும். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தங்களது நாளாந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட சொந்தங்களை நீங்கள் சந்திக்கலாம். எங்கள் புகையிலையையும், வெங்காயத்தையும் சந்தைப்படுத்த நல்லவாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று கூறும் விவசாயிகளையும் நீங்கள் சந்திக்கலாம்.

மட்டக்களப்பு தயிரும் வாகரை தேனும் கொழும்பிலே யாழ்ப்பாணத்திலோ உங்களுக்கு கிடைக்கலாம். அல்லது தயிர் வாங்குவதற்கென்று மட்டக்களப்புக்கு கூட நீங்கள் செல்லலாம் அங்குள்ள வாவியிலும், மூதூர் கடலிலும் படகுச் சவாரி கூட நீங்கள் செய்யலாம். நாடு நாங்கள் எதிர்பார்த்தது போல இல்லை அங்கு எல்லாம் மாறிவிட்டது, எல்லா வசதிகளும் இருக்கின்றன என்ற நினைப்பு உங்களில் பலபேருக்கு வரக்கூடும்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் உங்கள் காட்சிகளுக்கு படாமல் அல்லது உங்கள் உறவுகள் அவற்றை காட்சிப்படுத்த விரும்பாமல் மறைக்கும் முக்கியமான சில விடயங்கள் அங்கே மறைந்து இருக்கின்றன. அதுதான் எமது தாயக விடுதலைப் போருக்கு அதிக விலையைக் கொடுத்த வன்னி மற்றும் வாகரைப் பகுதி மக்களுடைய பேரவலம்.

போரினால் பெற்றோர்களை இழந்து நாதியற்றவர்களாக நிற்கும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள், வாழ்க்கைத்துணையை இழந்து வாழ்வுக்கு வழியின்றி நிர்க்கதியாக நிற்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விதவைகள், அவையவங்களையும், வாழ்வாதாரத்தையும், வாழ் நிலத்தையும்கூட இழந்துவிட்டு அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி ஏதிலிகளாக நிற்கும் லட்சக்கணக்கான உறவுகள் இவர்களில் ஒருவரையாவது சந்திக்கும் வாய்ப்பை நீங்கள் உங்களது தாயகப் பயணத்தின்போது தாயகத்தில் உள்ள உங்கள் உறவுகள் மூலம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் உறவுகளுக்காக எடுத்துச் செல்லும் பணத்தில் அல்லது பொருளில் சிறு தொகையை அல்லது சிறு பகுதியை அவர்களுக்கு அன்புடன் கொடுக்க முன்வாருங்கள். குறைந்த பட்சம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பத்தை அல்லது நாதியற்று நிற்கும் ஒரு குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை தயவுகூர்ந்து நீங்களே அவர்களுடன் பேசி தேர்ந்தெடுங்கள்.

தங்கள் பிள்ளைகளை – உறவுகளை தாயக விடுதலைக்கு அர்ப்பணித்துவிட்டு அல்லது சிங்களச் சிறையில் வாடவிட்டு அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்றுகூடத் தெரியாமல் தினம் தினம் வருந்திக் கொண்டிருக்கும் மாவீரர் – போராளிக் குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைத் தெரிவியுங்கள்.

புலத்தில் உள்ள சிலர் தங்களது சுயலாபங்களுக்காக மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தினாலும் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் என்றும் உங்களுடனேயே இருக்கிறோம் என்பதை அந்த உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள். உங்களுடைய சிறிய ஆறுதல் வார்த்தை அவர்களது துயரங்களை ஆற்றுப்படுத்துவதற்கான அருமருந்தாக அமையும் என்பதை மறந்து விடாதீர்கள்.

காலத்தின் தேவை அறிந்து நீங்கள் செய்யக்கூடிய இந்தப் பேருதவி நீங்கள் தற்போது மேற்கொள்ளும் இந்த தாயகப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும்.

(தாய்நிலம் 10.07.2010 ஆசிரியர் தலையங்கம்)

http://www.thaynilam.com/news/news_detail.php?id=795

Edited by navam

சிறு தொழில்களை, விவசாயத்தை உயர் தரத்துடன் தொடங்க உங்கள் உறவுகளுக்கு உதவுங்கள்.

Edited by ஆராவமுதன்

சிறு தொழில்களை, விவசாயத்தை உயர் தரத்துடன் தொடங்க உங்கள் உறவுகளுக்கு உதவுங்கள்.

சிறு உதவிகளை தனிப்பட்டரீதியாக செய்ய உத்தேசிக்கவேண்டும்:

அ) கால்னடை வளர்ப்பு

ஆ) சிறு கைத்தொழில்கள்

இ) தச்சு வேலைகைள்

ஈ) தையல் வேலைகைள்

சிங்களவனை வளர்த்து விடும் வளிவகை ஏதும் இருந்தா சொல்லுங்கப்பா... ! ( சிங்களவனுக்கே காசு குடுத்தனான் எண்டு இங்கை வந்து பீத்திக்கொள்ளலாம்) இப்படி ஊரிலை இருக்கும் உறவுக்கு உதவ சொல்லுறீயளே இது எப்படி இருக்கு தெரியுமோ... இங்கை இருந்து ஆக்கள் போறதே எங்கட பவுசுகளை காட்டத்தானே.... அங்கை காடுகளுக்கை பிச்சை எடுக்கிறவையை போல இருக்கும் சனத்தை பாக்க போனால் மரியாதை என்ன ஆகிறது... ???

  • கருத்துக்கள உறவுகள்

2 பசு மாடு வாங்கிக்கொடுங்கள் - 10 ஆயிரம் இலங்கைக்காசு

10 கோழிக்குஞ்சு வாங்கிக்கொடுங்கள்- 2 ஆயிரம் இலங்கைக்காசு

ஒரு தையல் மெசின் வாங்கிக்கொடுங்கள்- 20 ஆயிரம் இலங்கைக்காசு

ஒரு வண்டில் மாடு வாங்கிக்கொடுங்கள்- 5 ஆயிரம் இலங்கைக்காசு

ஒரு உளவு யந்திரம் வாங்கிக்கொடுங்கள்- 1 லட்சம் இலங்கைக்காசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.