Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை கவலை

Featured Replies

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை கவலை

திகதி: 10.07.2010 ஃஃ தமிழீழம்

ஈழத்தில் இனவெறியாட்டம் நடத்திக்கொண்டிருக்கும் அதேவேளையில் பல்லாண்டாய் தமிழகத்திலும் தன் கொலைவெறித் தாக்குதலை தொடர்ந்தும் நடாத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசை நோர்வே ஈழத்தமிழர் அவை கண்டிக்கிறது.

ராமேஸ்வரத்தில் நடந்த தாக்குதல்கள் இப்பொழுது வேதாரண்யம் நோக்கியும் நடந்து வருவது சிங்கள இனவெறியர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களையும் தமிழக மீனவர்களின் வாழ்நிலைகேட்பாரற்று கிடப்பது போலவுமான தோற்றத்தையே காட்டிநிற்கிறது.

ஒவ்வொரு முறையும் எம் தமிழின மீனவர்கள் கொல்லப்படும் பொழுதும் கொடூரமான முறையில் தாக்கப்படும்பொழுதும் மட்டும் ஒரு சில குரல்கள் ஒலித்துவிட்டு அடங்குவதும் மற்றும் ஒரு சிலர் அரசியல் தேவைகளுக்காக மட்டுமே போராடும் முறையானதையும் நினைக்கும் பொழுது மிகுந்த கவலை அளிக்கிறது.

சொந்த நிலத்திலும் தன் சொந்த கடலிலுமே வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் தவிக்கும் எம் இனமக்களை காக்க வேண்டிய பொறுப்பு தமிழ் சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்ட அனைத்து தமிழ் அமைக்களுக்கும் பொதுவானதென்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் என்பதே நோர்வே ஈழத் தமிழர் அவையின் வேண்டுகோள்.

கடலில் மீன்பிடித்து பிழைப்பு நடத்தும் எம் இன மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதைக் கண்டு மனம் வெதும்பி நிற்கும் அதேவேளையில்கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தாய் பிள்ளைகள் என்பதனைக் கருத்தில் கொண்டுஇ எம் சமூகத்தின் ஓர் அங்கமான மீனவ உறவுகளின் துயரத்தில் நோர்வே ஈழத்தமிழர் அவையும்பெரிதும் பங்குக்கொள்கிறது என்பதனை அனைவருக்கும் இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எம் இனத்தின் ஒவ்வொரு உயிரும் எமக்கு முக்கியம் என்பதனை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். சொந்த நாட்டில் வாழ வழியில்லாமல் இனவெறியர்களின் கோரப்பிடியில் இருந்து வெளி வந்து பிறிதொரு நாட்டில் உள்ளக் குமுறலோடு வாழும் புலம்பெயர் தமிழ் சமூகம், பாதிக்கப்படும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் என்றும்குரல்கொடுக்கும் என்பதனை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

நன்றியுடன்,

விஜய்சங்கர் அசோகன்,

ஊடகத்துறை,

நோர்வே ஈழத்தமிழர்அவை,

நோர்வே.

  • தொடங்கியவர்

தமிழகத் தமிழர், தமிழகக் கடலில் தாக்கப்படுவதற்கு, நோர்வே ஈழத்தமிழர் அவை கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு, அவையின் இருப்பை தெரிவித்தமைக்கு புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள், நோர்வே ஈழத்தமிழர் அவைக்கு நன்றி தெரித்து ஊக்கப்படுத்துங்கள்.

Edited by aathirai

எமக்கும் கவலை தான். ஆனால் தமிழகத் தமிழர் உணர்வுகளைத் தொலைத்துவிட்டு இருக்கிறார்களே!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.. தொடர்ந்து... இனம் சார்ந்த அனைத்து சிக்கல்களிலும் தலையிடுக....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.