Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்-4 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்-4 பேர் காயம்

வெள்ளிக்கிழமை, ஜூலை 23, 2010, 8:58[iST]

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசி அவர்கள் நடத்திய தாக்குதலில் நான்கு மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜூலை 17ம் தேதி ஒரு படகு காணாமல் போனது. இதையடுத்து 20 பேர் கொண்ட மீனவர்கள் குழு அந்தப் படகை தேடி கடலுக்குள் சென்றது. தனுஷ்கோடி அருகே காணாமல் போன படகு மிதப்பதைப் பார்த்து அதை தங்களது படகுடன் இணைத்து கரைக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு இலங்கை மீனவர்கள் வந்துள்ளனர். தமிழக மீனவர்கள் படகை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் நான்கு பேர் இருந்த படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து மற்ற மீனவர்கள் அவர்களை மீட்டு கடற்கரைக்குக் கொண்டு வந்தனர்.

இலங்கை கடற்படையினர் தாக்கியது போதாது என்று இப்போது இலங்கை மீனவர்களும் சேர்ந்து தாக்க ஆரம்பித்திருப்பது தமிழக மீனவர்களின் நிலையை மிகவும் மோசமாக்கியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2010/07/23/tamilnadu-rameswaram-fishermen-attack-srilanka.html

  • கருத்துக்கள உறவுகள்

.

அது இலங்கை மீனவர்கள் அல்ல, இலங்கை ராணுவம்.

முன்பு தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப் பட்டால்....... உடனே புலி என்பார்கள். இப்போ... இலங்கை மீனவர்கள் என்கிறார்கள்.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான்...... ஒன்றுமே தெரியாதமாதிரி நடிக்கப் போகிறார்களோ.....

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நெடுகலும் நினைப்பன் இந்த மீனவர்கள் என்ற வசனத்தை கைவிட்டு..... கடலுக:கு சென்ற தமிழர்கள் மீது சிங்களர் தாக்குதல் என்று நாங்கள் பாவிச்சால்... எமக்குள்ள பிரச்சினைகுரிய ஒற்றுமை தெரியுமில்ல...என்று... அப்ப அடிப்படையில் தமிழர்கள் மீது சிங்களர் தாக்குகின்றனர் என்று தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தெரியும் தானே...

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெடுகலும் நினைப்பன் இந்த மீனவர்கள் என்ற வசனத்தை கைவிட்டு..... கடலுக:கு சென்ற தமிழர்கள் மீது சிங்களர் தாக்குதல் என்று நாங்கள் பாவிச்சால்... எமக்குள்ள பிரச்சினைகுரிய ஒற்றுமை தெரியுமில்ல...என்று... அப்ப அடிப்படையில் தமிழர்கள் மீது சிங்களர் தாக்குகின்றனர் என்று தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தெரியும் தானே...

பறவைகள் நீங்கள் நினப்பது சரியானது.

ஆனால் பெரும்பாலான தமிழ்நாட்டு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் திட்டமிட்டே.... இத்தகைய சொற்களை தவிர்த்து வருகின்றன.

தமிழ்நாட்டு தமிழர்களை சினிமா மாயையில் வைத்து ஆழமான பிரச்சினைகளை சிந்திக்க வைக்காமல் இருப்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

திருப்பித் தாக்கத் தெரியாத மோட்டுத் தமிழனாக தமிழ் நாட்டு தமிழன் மாறிவிட்டான். சினிமா ரத்தத்தில் கலந்து, எவனாவது ஹீரோ வருவானா எனப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத சடலம் ஒன்று தலைவெட்டப்பட்ட நிலையில் கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 வயது மதிக்கத் தக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவுப் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர். ஊர்காவற்துறை நீதிபதி இ.வசந்தசேனனின் கவனத்திற்கும் இது விவரம் தெரிவிக்கப்பட்டது.

ஊர்காவற்துறைக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட நீதிபதி, அதனை அடையாளம் காணவும் பிரேத பரிசோதனை நடத்தவும் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி கட்டளையிட்டார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25777

சின்னஞ்ச் சிறிய சீசெல்ஸ் மீனவர்கள் அத்துமீறிய சிங்கள மீனவர்களை பிடித்துவைத்துக் கொண்டு, விடுவதற்கு பெறும் தொகை பணம் கோருகின்றனர். தமிழ் நாட்டு மீனவர் அடிவாங்கிக் கொண்டு ஒப்பாரி வைக்கின்றனர்.

திருப்பித் தாக்கத் தெரியாத மோட்டுத் தமிழனாக தமிழ் நாட்டு தமிழன் மாறிவிட்டான். சினிமா ரத்தத்தில் கலந்து, எவனாவது ஹீரோ வருவானா எனப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

தமிழ் நாட்டு மீனவர்கள் திருப்பித் தாக்கினால்தான் தெரியும். அது இலங்கை மீனவர்களா? அல்லது இலங்கை கடற்படையா ? என்றவிடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.