Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று இரவு லண்டனில் பேரணியும், ஐ.நாவை நோக்கிய நடை பயணமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு லண்டனில் பேரணியும், ஐ.நாவை நோக்கிய நடை பயணமும்

திகதி: 23.07.2010 // தமிழீழம்

கறுப்பு ஜுலை நாளில், இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், போர்க் குற்ற விசாரணை மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் இன்றிரவு மாபெரும் பேரணி இடம்பெற இருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

மேற்கண்ட கோரிக்களை முன்வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை வெஸ்ற்மினிஸ்ரர் தேவாலயத்திற்குப் பின்புறமாக இருந்து பேரணி ஆரம்பித்து, பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை சென்றடையவுள்ளது.

இந்த இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து அதே கோரிக்கைகளை முன்வைத்து ஜெனிவா ஐ.நா சபை நோக்கி சிவந்தன் நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், டோவர் கடற்கரையைச்சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், பரிஸ் நகரம் ஊடாக சுவிற்சர்லாந்து ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.

இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருப்பதுடன், அங்கு ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றல்) 6ஆம் நாள் பிற்பகல் 2:00 மணியளவில் மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு நடைபெறவுள்ளது.

சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.

அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு ஐரோப்பாவிலுள்ள பல தமிழ் அமைப்புக்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

சங்கதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 23, ஜூலை 2010 (22:39 IST)

நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து புகார் மனு

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் அதன் தலைவர்கள் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து தமிழ் இனப்படுகொலை பற்றிய ஆவணங்களை அளிக்கின்றனர்.

இந்த தகவலை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் அமைப்பாளர் ருத்ர குமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன.

சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உட்பட்ட எமது விடுதலைப் போராளிகளும், மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி, பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.

சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந் திருக்கின்றன வேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன.

இனப்படுகொலை எல்லா இடங்களிலும் ஒரே வடிவம் எடுப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களைப் பொறுத்து அது பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் இடம் பெறுகிறது.

போரின் இறுதிக் கால கட்டங்களில் எமது மக்கள் மீது சிறிலங்காப்படைகள் புரிந்த இனப்படுகொலையில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டனர். மூன்று லட்சம் வரையிலான மக்கள் தடுப்புமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.

இன்றும் இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர்; முகாம்களில் தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குரிய புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் வழங்கப்படவில்லை. இவர்களை விட அடைத்துவைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் நிலை அச்சம் தருவதாகவே உள்ளது.

1983 இல் நடந்தேறிய சிறைச்சாலைப் படுகொலைகளின் நினைவுகள் எமது அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன.

1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில், சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்படட் 200,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருகிறோம். நீதி வழங்கப்படாத எந்த ஒரு மக்கள் சமூகமும் அதன் காயங்களை என்றுமே ஆற்றிவிட முடியாது.

நீதியின் பெயராலும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்கு நியாயம் கோரி அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

1. இனப்படுகொலைக்குள்ளாகி வரும் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதேயாகும். எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதே ஒரேவழி என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும்.

2. சிறிலங்கா அரசால் கொடும் சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் போர்க்கைதிகளாக மதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும். சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளினது பெயர் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும்;, போராளிகளை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் சென்று பார்வையிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

3.அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்காகக் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

அத்தோடு இத்தருணத்தில் 1983 யூலை படுகொலையின் போது தமக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது, மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் பல தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த சிங்கள மக்களை நாம் நன்றியுடன் மனதில் இருத்துகிறோம்.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் புரிந்து வந்த இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த சிங்கள முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரது கரங்களையும் தோழமையுணர்வுடன் நாம் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

உங்களது குரல்கள் பெரும்பான்மையின் மத்தியில் பலவீனமாக இருந்தாலும் நீதியின் முன்னே வலுவானவை. நீதிக்கான எமது போராட்டத்துக்கு உங்கள் இணைவு மேலும் வலுச் சேர்க்கும்.

1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையினை நாம் நினைவுகூரும் இவ் வேளையில், எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வலியுறுத்தியும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யக் கோரியும் ஜி. சிவந்தன் எனும் தமிழ் செயல்வீரன் பிரித்தானியாவிலிருந்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைமைப்பணிமனை நோக்கி யூலை 23 ஆம் திகதி இரவு நடைபயணம் ஒன்றினை ஆரம்பிக்கிறார்.

இரண்டு வாரங்கள் இடம் பெறப்போகும் இந் நடைப்பயணத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினைத் தெரிவிப்பதோடு, இப் போராட்டம் பூரண வெற்றியடைவதற்குரிய பங்களிப்பினை வழங்குமாறு தமிழ் மக்களை வேண்டி நிற்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று பல்வேறு அரசாங்கங்களுக்கு தமிழின அழிப்பு தொடர்பான ஆவணம் ஒன்றை அனுப்பி வைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் பன்னாட்டுத் தலைவர்களை நேரடியாக சந்தித்து, சிறிலங்கா அரசின் இனவழிப்புக்கு எதிராக நீதிகோரும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இனப் படுகொலைக்குள்ளாகிவரும் ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வினை இனப்படுகொலை புரிபவர்களிடம் இருந்தோ அல்லது மற்றோரிடம் கெஞ்சியோ மீட்டுவிட முடியாது.

சலுகைகளின் அடிப்படையில் இல்லாமல் நீதியின் அடிப்படையிலும், அனைத்துலக சட்டங்களுக்கமைய எமக்குரிய உரிமைகளின் அடிப்படையிலுமே நமது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்’’என்று தெரிவித்துள்ளார்.

நக்கீரன்

லண்டனில் கறுப்பு ஜுலை இரவுநேரப் பேரணியில் 2,000 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திகதி: 24.07.2010 // தமிழீழம்

கறுப்பு ஜுலையை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும்,

தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகள், பொதுமக்கள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும்.

முகாம்களிலுள்ளவர்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும், மனித உரிமைகளை மதிக்கும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி இடம்பெற்றது. பேரணியைத் தொடர்ந்து லண்டனில் இருந்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்துள்ளது.

7.jpg

8.jpg

9.jpg

முன்னதாக இரவு 10:00 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகிலுள்ள ரொட்ஹில் (Tothill) வீதியில் இருந்து ஆரம்பித்த பேரணி, 10:45 அளவில் பிரித்தானியப் பிரதமரது இல்லமான இல.10 டவுணிங் ஸ்றீற்றை (Downing Street) சென்றடைந்தது.

10.jpg

11.jpg

12.jpg

அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பிரித்தானிய இளையோர் அமைப்பு, நாடு கடந்த தமிழீழ அரசு, அக்ட் நவ் (Act now), பிரித்தானிய தமிழர் பேரவை, தென் தமிழீழத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதியுமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, மற்றும் நடை பயணத்தை ஆரம்பித்துள்ள சிவந்தன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர். பேரணியில் கலந்து கொண்டோர் ஆரம்பத்தில் தமது கோரிக்கைகளை முன்வைத்து பாடல்களைப் பாடிச்சென்றனர்.

பின்னர் தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களால் இரவு நேரம் என்றும் பாராது சிறீலங்கா அரசுக்கு எதிராகக் கண்டனக் குரலெழுப்பிச் சென்றனர் கறுப்பு ஜுலை என்பதாலும், தமிழ் மக்களின் உள்ளக்கிடக்கைகளை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தவும் இரவு நேரம் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்ட போதிலும், குழந்தைகளைத் தாங்கிய தாய்மார், சிறியவர்கள், பெரியோர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் மெழுகுதிரிகளையும், ஒளிவிளக்குகளையும், பாதாகைகளையும், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளை ஏந்திச் சென்றதுடன், தமது கோரிக்கைகளை அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் பிரித்தானியா மற்றும் ஏனைய நாட்டு மக்களிற்கு வழங்கிச் சென்றனர்.

பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற உரைகளையடுத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய சிவந்தனின் நடை பயணம் ஆரம்பித்தது. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் இந்த நடை பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்த அதேவேளை, அங்கு கூடியிருந்த மக்கள் சிவந்தனுக்கு தனது வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இவர் பிரித்தானியக் கடற்கரையான டோவரைச் சென்றடைந்து அங்கிருந்து பிரான்ஸின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், அங்கிருந்து பரிஸ் நோக்கி நடந்து, பின்னர் ஜெனீவா நோக்கிச் செல்ல இருக்கின்றார்.

சிவந்தனுடன் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து உறவுகள் இணைந்து நடந்து செல்ல வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 6ஆம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) பிற்பகல் 2:00 மணியளவில் மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பும், மனுக் கையளிப்பு நிகழ்விலும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தமிழ் மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு இந்த நிகழ்வை ஒழுங்கு செய்துள்ள கீழுள்ள அமைப்புக்களைத் தொடர்புகொள்ளுமாறு மக்கள் அன்பாகக் கேட்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய தமிழர் பேரவை

+44(0)20 8808 0465

தமிழ் இளையோர் அமைப்பு - பிரித்தானியா

ஐரோப்பிய தமிழர் ஒன்றியம்

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ்

(+33 (0)6 11 72 59 78/ +33 (0)6 25 90 85 93)

சுவிஸ் ஈழத்தமிழரவை

(+41 (0) 79 309 06 69)

தமிழ் இளையோர் அமைப்பு - சுவிஸ்

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை

டென்மார்க் தமிழர் பேரவை

நோர்வே ஈழத்தமிழர் அவை

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

மேலதிக படங்களுக்கு....

25-07-2010 (இரவு 11:00 மணி) ஐ.நா நோக்கிய நடை பயணம் – சிவந்தன் நாளை மதியம் டோவரை சென்றடைவார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் இன்றிரவுவரை 62 மைல்களை எட்டியுள்ளது. டோவரை அடைவதற்கு இன்னும் 14 மைல்கள் அவர் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,

தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். சிவந்தனின் நடை பயணத்திற்கு ஆதரவாக உதவியாளர்களும், தமிழ் மக்களும் மாறி மாறி அவருடன் நடந்து செல்லுகின்றனர். 25ஆம் திகதி இரவு சிவந்தன் டோவரை சென்றடைவார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 26ஆம் நாள் திங்கட்கிழமை காலையிலேயே அவர் டோவரைச் சென்றடைய முடியும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

நாளை பிரான்சின் கடற்கரையான கலையை அவர் சென்றடைந்ததும் பிரான்சிலுள்ள தமிழ் அமைப்புக்கள் சிவந்தனை வரவேற்று, தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் அவருடன் இணைந்து நடந்து செல்ல இருக்கின்றனர். பரிஸ் ஊடாக ஜெனீவா முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் இடம்பெறவுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.