Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் அபிவிருத்திக்கு புலிகளின் நிதியைப் பயன்படுத்துவதில் தவறில்லை

Featured Replies

வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “எந்தவொரு குற்றவாளியையும் அரச தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதிவிலக்கானவரல்ல.

எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்

http://wtrfm.com/?p=10899

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்த முடிவு : இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு, ஜூலை 29,2010

விடுதலைப்புலிகளின் நிதியை பயன்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டின் செய்தித் தொடர்பாளரும், ஊடகத் துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், கே.பி.க்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது உறுதி எனும் விதமாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நிருபர்கள் சந்திப்பில் அவர் இன்று மேலும் கூறியது:

எந்தவொரு குற்றவாளியையும் அரசு தரப்பு சாட்சியாக மாற்றி மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடமுண்டு. இது மிகவும் தெளிவான விஷயம். சர்வதேச குற்றவாளியான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் இதற்கு விதி விலக்கானவர் அல்ல.

வெளிநாடுகளிலிருந்து பயங்கர ஆயுதங்களைப் பெற்று நாட்டை நாசப்படுத்திய கே.பி இன்று வடக்கின் மேம்பாட்டுக்காகவும், பிரபாகரனின் அடக்குமுறையால் அனைத்தையும் இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்காகவும் உதவ முன்வந்துள்ளார்.

இலங்கை நாட்டின் இறைண்மைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும், சட்டத்துக்கு முரண்படாத வகையிலும் புலிகளின் நிதியை தமிழ் மக்களின் நன்மை கருதி வடக்குப் பகுதி மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள் என்ற கருத்து தவறு. அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் அவ்வாறு முன்பு நடந்துகொண்டாலும் இன்று அவர்கள் யதார்த்தத்தை புரிந்துள்ளனர்.

30 வருட கால பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், போர்க் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நல்வாழ்வூக்காக அரசு மேற்கொண்டுவரும் திட்டங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் வளங்கைப் பயன்படுத்த அவர்களில் சிலர் முன்வந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனா. இதில், கே.பி. முக்கிய பங்கு வகித்துள்ளார்.

முன்பு பயங்கர ஆயூதங்களை கொண்டு நாட்டை அழிக்க முற்பட்ட குழுக்களை ஒன்றிணைத்து இன்று நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதில் தவறேதுமில்லை. இது சட்டத்துக்கு முரண்படவுமில்லை.

கே.பி. அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று நான் கூறவில்லை. அதற்கு, கே.பி விதிவிலக்கானவரல்ல என்றுதான் கூறுகிறேன்.

இந்திய பிரதிநிதிக்கு வரவேற்பு...

இலங்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய அரசின் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் இலங்கை வரவிருப்பதில் எவ்வித ஒளிவு மறைவுமில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர், தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியிடம் விடுத்த வேண்டுகோளின்பேரில் இந்தியப் பிரதமா மன்மோகன் சிங் சிறப்பு பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் எந்தவித ஒளிவு மறைவுமில்லை. இலங்கையின் நெருங்கிய நண்பன் இந்தியா. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால நல்லுறவு நிலைக்கின்றது.

அண்மையில், இந்திய பயணம் மேற்கொண்டிருந்த அதிபர் மஹிந்த ராஜபக்ஷே, இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த பின்னர், இலங்கை நிலமைகளை நேரில் அறிய சிறப்பு பிரதிநிதியொருவரை அனுப்பிவைக்குமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார், " என்றார் கெஹெலிய ரம்புக்வெல்ல.

விகடன்

சிங்கள திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.