Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருகண்டியில் 5000 ஏக்கர் காணியை விழுங்கும் சிங்களம்; நிரந்தர அகதிகளாக தமிழர்கள்; கூட்டமைப்பு மெளனம்

Featured Replies

முருகண்டி பகுதியில் ஐயாயிரம் ஏக்கர் காணிகளை சிங்களம் தனது படைய நலன்களுக்காக விழுங்கி கொண்டிருக்கின்றது. இதற்கான நிர்வாக நடவடிக்கைகளை முல்லை அரச அதிபர் வேகமாக செய்து வருகின்றார்.

முருகண்டி, இந்துபுரம், சாந்தசோலை ஆகிய கிராம மக்கள் நிரந்தர அகதிகளாக நட்டாற்றில் நிற்கின்றனர். இதுபற்றி மக்கள் தாமாக சென்று முறைப்பாடு கொடுத்துள்ளனர். அரசாங்கம் மக்களுக்கு பதில் காணிகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தமிழ் எம்.பி.க்கள் கூறியுள்ளனராம். அப்படி என்றால் ஏன் மக்கள் அரச அதிபரிடம் முறையிடுகின்றனர். மக்கள் முறைப்பாடு செய்துள்ளதனை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கில் முஸ்லிம்கள் தமக்கு அருகிலே படை முகாம் அமைக்க காணி எடுகப்பட்டால் ஆர்ப்பாட்டம் உண்ணா நோன்பு இருக்கின்றார்கள். ஏன் வழக்கு தாக்கல் கூட செய்துள்ளார்கள்.

வன்னி மாவட்ட கூட்டமைப்பு எம்.பி க்கள் என்ன செய்கின்றார்கள்? அவர்களது தொகுதியில் காணிகள் அபகரிக்கப்படும்போது சிலர் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், இந்தியா தமிழ் நாடு என்று சுத்துவது ஏன்?

மக்கள் பிரச்சினைகளை மக்களாகவே பிபிசி ஊடாக கொண்டுவந்து துணிவாக எதிர்த்து நிற்கும் போது பாராளுமன்றில் இந்த எம்.பிக்கள் ஏன் இதுபற்றி பேசவில்லை?

ஏனென்றால் அந்த மக்கள் மிகவும் பின் தள்ளப்பட்டவர்கள்

கல்வி, பொருளாதாரம், காணி உரிமை தொடர்பில் காலம் காலமாக பிந்தள்ளப்பட்டவர்கள். விடுதலைப்புலிகளின் காலத்தில் தான் அந்த மக்களிற்கு பொற்காலம். விடுதலைப்புலிகளால் காணிக்கு உறுதிகள் பெற்று கொடுக்கப்பட்டு, வீடு, மலசல கூடம் கட்டிக்கொடுக்கப்பட்டு பாடசாலை கூட கட்டிக்கொடுக்கப்பட்டது. வீதி போட்டு கொடுக்கபட்டது போசாக்கு நிலையங்கள் அமைக்கப்பட்டது.

இன்று அனைத்தையும் இழந்து நிற்கதியாக மீண்டும் நிலமற்றவர்களாக அந்த மக்கள் கைவிடப்பட்டு நிற்கின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் 60 வீதமனவர்கள் மலையக மக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் தான் காலம் காலமாக இந்த மக்கள் எல்லோராலும் ஒதுக்கப்பட்டு வந்தனர். ஆனால் போராளிகள் இவர்கள் கிராமங்களை செழுமையாக மாற்றினர்.

இன்று அந்த வீரர்கள் மாண்டுபோனதால் மீண்டும் மக்கள் அல்லல் படுகின்றனர்.

அந்த மக்கள் தம்மால் இயன்றளவு துணிந்து போராடுவார்கள். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்களின் நிலைமையினை கவனத்தில் கொள்வதுடன் அந்த மக்களை அங்கேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். முருகண்டி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி வன்னி மேற்கு வன்னி கிழக்கை இணைக்கும், அதே நேரம் இரு பெரும் குளங்களை அண்மையில் கொண்ட பகுதி.

மக்களுக்காக இல்லாவிட்டாலும் தேசிய நலன் கருதி அந்த இடம் பாதுகாக்கப்படவேண்டும். அரசாங்கம் தருகின்றதோ இல்லையோ எம்.பி க்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

Eelanatham

முருகண்டி பகுதியில் ஐயாயிரம் ஏக்கர் காணிகளை சிங்களம் தனது படைய நலன்களுக்காக விழுங்கி கொண்டிருக்கின்றது. இதற்கான நிர்வாக நடவடிக்கைகளை முல்லை அரச அதிபர் வேகமாக செய்து வருகின்றார்.

இன்று அந்த வீரர்கள் மாண்டுபோனதால் மீண்டும் மக்கள் அல்லல் படுகின்றனர்.

அந்த மக்கள் தம்மால் இயன்றளவு துணிந்து போராடுவார்கள். வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்களின் நிலைமையினை கவனத்தில் கொள்வதுடன் அந்த மக்களை அங்கேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். முருகண்டி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி வன்னி மேற்கு வன்னி கிழக்கை இணைக்கும், அதே நேரம் இரு பெரும் குளங்களை அண்மையில் கொண்ட பகுதி.

மக்களுக்காக இல்லாவிட்டாலும் தேசிய நலன் கருதி அந்த இடம் பாதுகாக்கப்படவேண்டும். அரசாங்கம் தருகின்றதோ இல்லையோ எம்.பி க்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.