Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் இன்னும் ஓயவில்லை, செயற்பாடுகள் தொடர்கின்றன - அமெரிக்கா

Featured Replies

விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா வென்று ஓராண்டு கடந்துவிட்ட நிலையிலும், அனைத்துலக ரீதியில் செயற்பட்டுவந்த விடுதலைப் புலிகளின் நிதிதிரட்டல் கட்டமைப்புக்கள் எந்தவித பாதிப்புக்களுமின்றிச் செயற்பட்டு வருகிறன என அமெரிக்கா இன்னமும் சந்தேகிக்கிக்கிறது.

எவ்வாறிருப்பினும், விடுதலைப் புலிகளமைப்பின் ஆயுதக் கொள்வனவுக் கட்டமைப்புக்குப் பொறுப்பாக இருந்த குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் வெளிநாட்டு வலையமைப்பு பாரிய பின்னடைவினைச் சந்தித்திருந்தது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

"சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், அதனது அனைத்துலக நிதிதிரட்டல் வலையமைப்பு பாதிப்புக்கள் எதுவுமின்றித் தப்பிவிட்டதாகவே சந்தேகிக்கப்படுகிறது" என '2009ஆம் ஆண்டுக்கான நாடுவாரியான அறிக்கையில்' அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

விடுதலைப் புலிகளின் பிரதான நிதிச் செயற்பாட்டாளரும் அதன் ஆயுதக் கொள்வனவாளருமான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் தென்னாசிய நாடொன்றில் வைத்து கடந்த ஓகஸ்டில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளமைப்பினது வெளிநாட்டுக் கட்டமைப்பு பெரும் பின்னடைவினைச் சந்தித்திருந்தது.

எனினும், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் தற்போதும் செயற்பட்டுவரும் விடுதலைப் புலிகளின் இந்தக் கட்டமைப்புக்கள் அந்தந்த நாடுகளில் வாழும் மக்களிடமிருந்து தொடர்ந்தும் நிதியினைத் திரட்டி வருகின்றன.

இந்த நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் உள்ளூர் செயற்பாட்டாளர்கள் பணத்தினை மக்களிடமிருந்து அச்சுறுத்திப் பறிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

தங்களது நிதி திரட்டல் செயற்பாடுகளுக்கு வெளிநாடுகளிலுள்ள தமிழ் தொண்டு நிறுவனங்களையும் புலிகள் அமைப்புப் பயன்படுத்தி வருகிறது.

ஆட்கடத்தல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகளை மேற்கொள்வதற்கும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் அவர்களது ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் மீதும் சட்டத்துக்குப் புறம்பான உபாயங்களைக் கையாளுவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளின் முன்னாள் துணை இராணுவக் குழுக்களைத் தற்போது பயன்படுத்திவருகிறது.

விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பகுதிகளைச் சிறிலங்காவினது அரச படைகளிடம் வேகமாக இழந்துகொண்டிருந்த அதே வேளை தங்களது போர் உத்திகளையும் மாற்றியிருந்தார்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் உள்ளிட்ட மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடாத்தியிருந்தார்கள்.

இந்தத் தாக்குதல்களில் சில பொதுமக்களுக்குப் பெரும் இழப்புக்கள் ஏற்படுவதற்கு வழிசெய்திருந்தது.

நாட்டினது வடகிழக்குப் பகுதியில், குறுகியதோர் நிலப்பரப்பினுள் எஞ்சியிருந்த புலிகளின் உறுப்பினர்களையும் ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் முடக்கியதைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பினை வினைத்திறனுடன் இல்லாதுசெய்திருந்தது எனலாம்.

விடுதலைப் புலிகள் அமைப்பினை முழுமையாகத் தோற்கடித்து விட்டதாக மே 18ஆம் நாளன்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த இறுதி யுத்தத்தின் போது இரண்டு தரப்பினரும் பெரும் இழப்புக்களைச் சந்தித்திருந்தனர்.

2009ஆம் ஆண்டினது முதற் பகுதியில் விடுதலைப் புலிகள் கொழும்பு மீதான வான்ழித் தாக்குதல் மற்றும் தற்கொலைத் தாக்குல்களையும் மேற்கொண்டிருந்தாலும் போர் முடிவுக்கு வந்த பின்னர் இதுபோன்ற எந்தத் தாக்குதல்களும் இடம்பெறவில்லை.

இருப்பினும் கடந்த ஆண்டு போர் முடிவுக்கு வந்துவிட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலரைத் தாங்கள் கைதுசெய்திருப்பதாகவும் தாக்குதல்களைத் தொடுக்கும் எண்ணத்துடனேயே இவர்கள் செயற்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட போர்த் தளபாடங்களைத் தாங்கள் அடிக்கடி கண்டெடுப்பதாக சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் அறிவித்துவருவதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

http://www.puthinappalakai.com/

அமெரிக்காவின் தேவை இன்னமும் என்னவென்று புரியாத புதிரா? புலிகள் ஒழிந்தாலும் ஓய்ந்தாலும் இவர்கள் விடமாட்டார்கள். இப்போ எதற்குப் புலிகள். சீனப் புலிகள் அங்கு நிலை கொண்டிருக்கும் வரை, அhமரிக்கப் புலிகளுக்குக் கொஞ்சம் கஷ்டமே.

சிங்கள பயங்கரவாதிகள் தமிழர் பணத்தை சுரண்ட திணறும் போது,

அமெரிக்கர்களின் உளறல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.