Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துக! நிறுவனங்களுக்கு ஈ.பி.டி.பி கோரிக்கை

Featured Replies

யாழ்.மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச மற்றும் அரச சார்பாற்ற நிறுவனங்கள் உதவி, ஒத்தாசை வழங்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் கோரி உள்ளார்.

கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இவரது தலைமையில் பிரதேச செயலக த்தின் கூட்ட மண்டபத்தில் காலையில் இடம்பெற்றது. அங்கு தலைமையுரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு கோரினார்.

அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை சார்ந்த மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதனால் நாம் யாழ் மாவட்ட அபிவிருத்தியில் கணிசமான அளவு பங்காற்றக் கூடிய நிலைமை உருவாகி உள்ளது. எமது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் ஆலோசனைகள், ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவற்றுக்கமைய யாழ் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலர் பிரிவுகளில் 10 பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு நான் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இப்பாரிய பொறுப்பை சரி வர நிறைவேற்றுகின்றமைக்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். கடந்த கால யுத்த சூழலில் மக்களோடு மக்களாக நின்று ஈ.பி.டி.பி. யினராகிய நாம் சேவையாற்றி வந்தமையை அனைவரும் அறிவார்கள். அதே போல் என்றும் மக்களுக்குச் சேவை ஆற்றுகின்றமைக்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தற்போதைய பயங்கரவாதம் அற்ற சூழ்நிலையில் மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது. எனவே எமது மக்கள் சொந்தக் காலில் நின்று தொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றமைக்கு என்னாலான உதவிகளை நிச்சயம் மேற்கொள்வேன்.

இக்கலந்துரையாடலில் கோப்பாய் பிரதேச செயலர் மோகன்ராஜ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களான கோப்பாய் பிரதேச பொறுப்பாளர் ஐங்கரன் மற்றும் அச்சுவேலி பிரதேசப் பொறுப்பாளர் தர்மராஜா, திணைக்களத் தலைவர்கள் கிராமசேவையாளர்கள் உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=8105:2010-08-10-11-11-37&catid=127:2010-05-20-03-15-38&Itemid=672

கப்பம், கடத்தல், கொலை, கள்ளவோட்டு தவிர வேறென்ன பொறுப்பை நிறைவேற்றக் கஷ்டமாக இருக்குதோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.