Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்களை கடத்தி கொலை செய்த மலேசிய பொலிஸ் கைது

Featured Replies

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 31, 2010

இலங்கையர்களை கடத்தி படுகொலை செய்த மலேசிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மூன்று இலங்கையர்களை கடத்தில் அதில் ஒருவரை படுகொலை செய்துள்ளதாக குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட இலங்கையரின் சடலம் கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமான நிலையில், சந்தேக நபரின் வீட்டுக்கு எதிரில் நின்ற வாகமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட மற்றுமொரு இலங்கையர் கால் உடைந்த நிலையில் வாகனத்தில் இருந்தாகவும், மேலும் ஒருவரை கடத்தல்காரர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய காவல்துறையும் இலங்கையில் செயற்படும் ஒட்டுக்குழு உறுப்பினரும் மற்றும் இலங்கை புலனாய்வுத்துறையும் சேர்ந்தே இந்த கடத்தல், கப்பம் அறவிடல் கொலை செய்தல் ஆகியவற்றை செய்து வந்தனர். இவர்கள் மலேசிய காவல்துறை மற்றும் இன்ரபோல் பொலிசாரின் அடையாள அட்டைகளை பாவித்தே மேற்படி சம்பவங்களை செய்துள்ளனர்.

மலேசிய காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கப்பப் பணம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டும் முயற்சிகளின் போது குறித்த இலங்கையர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவின் பிரதி காவல்துறை அத்தியட்சகர் ரோஸ்லி ஹசன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரே இந்த கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களிடமிருந்து கப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் சடலத்தை வீசி எறிவதற்கு சந்தேக நபர்கள் முயற்சித்திருக்கலாம் என காவல்துறையினர் குறப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் ஆள் அடையாளங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எனினும், இவர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்கு முன்னர் மலேசிய விமான நிலையமொன்றின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொழில் வாய்ப்பு அல்லது சுற்றுலா நோக்கத்திற்காக இவர்கள் மலேசியாவிற்கு சென்றிருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

கடத்தப்பட்ட ஏனைய இரண்டு இலங்கையர்களும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Eelanatham.net

  • கருத்துக்கள உறவுகள்

இக்களத்தில் புதியதாக இணைந்திருக்கும் தோழர் ரூபன் ... பாதுகாப்பாக இருத்தல் நன்று.. :rolleyes:

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 31, 2010

இலங்கையர்களை கடத்தி படுகொலை செய்த மலேசிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மலேசிய காவல்துறையும் இலங்கையில் செயற்படும் ஒட்டுக்குழு உறுப்பினரும் மற்றும் இலங்கை புலனாய்வுத்துறையும் சேர்ந்தே இந்த கடத்தல், கப்பம் அறவிடல் கொலை செய்தல் ஆகியவற்றை செய்து வந்தனர். இவர்கள் மலேசிய காவல்துறை மற்றும் இன்ரபோல் பொலிசாரின் அடையாள அட்டைகளை பாவித்தே மேற்படி சம்பவங்களை செய்துள்ளனர்.

சிங்கள அரச பயங்கரவாதிகளின் பாணியில் மலேசியாவில் கப்பம் பெரும் போலிஸ் கூட்டம்.

சிங்கள, இந்திய அரச பயங்கரவாதிகளின் கைகூலிகளை மலேசியாவிலிருந்து வெளியேற்றுவதன் மூலம், மலாயர்கள் தாங்கள் காடுமிராண்டிகள் இல்லை என்று நிரூபிப்பார்களா?

இன்டர்போலும் தாம் சிங்கள, இந்திய பயங்கரவாத அரசுகளின், அவர்களின் முகவர்களாக செயற்படுவதில்லை என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது.

மலேசியாவில் கப்பம் கோரி கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரில் இருவர் கடத்தல்காரர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

அந்த இருவரும் ஒருவரோடு ஒருவர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று கடத்தல்காரர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். இருவரும் இந்நிர்ப்பந்தத்தின் பெயரில் பாலியல் நடவடிக்கையில் ஒருவரோடு ஒருவர் ஈடுபட்டும் உள்ளனர்.

அதைக் கடத்தல்காரர்கள் வீடியோ எடுத்தும் வைத்துள்ளார்கள். ஆனால் இக்கடத்தல் சம்பவம் இந்த இலங்கையர் மூவரில் ஒருவரும், கடத்தல்காரர்களும் சேர்ந்து நடத்திய நன்கு திட்டமிட்ட நடவடிக்கை என்று மலேசிய பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரிய வருகின்றது.

கடத்தப்பட்ட மூவரில் ஒருவர் இறந்து விட்டார். இருவர் தப்பி விட்டனர். இந்த இருவரில் ஒருவருக்கும் கடத்தல்காரர்களுக்கும் முன்தொடர்பு உண்டு என்று பொலிஸார் நம்புகின்றனர். எனவே இருவரில் ஒருவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.மற்றவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர் கடந்த எட்டு மாத காலமாக மலேசியாவில் இருந்து வருகின்றார் என்றும் அவர்தான் இரத்தினக் கற்களின் சில மாதிரிகளை விற்பனைக்காக மலேசியா கொண்டு வர வேண்டும் என்றும் ஏனைய இரு இலங்கையர்களுக்கும் சொல்லி இருக்கின்றார் என்றும் மலேசிய பொலிஸ் புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9527:2010-09-02-04-00-00&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • தொடங்கியவர்

மூவரும் முஸ்லிம் ஆண்கள் 32 வயது, 39 வயது, 30 வயது. இவர்கள் இரத்தினக்கற்கள் வியாபாரிகள் என சொல்லியே மலேசியா வந்துள்ளனர். அண்மையில் பல முஸ்லிம்கள் தாம் வடக்கு கிழக்கு என்றும் போர் நடவடிகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளிலும், ஏன் ஐரோப்பாவிலும் அகதி அந்தஸ்து கோரி வென்றும் உள்ளனர்.

செய்திகளில் எல்ல விபரத்தினையும் போட்டால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.