Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாக். தீவிரவாதிகளுக்கு கொழும்பில் பயிற்சி முகாம் ! பேரதிர்ச்சியில் இந்தியா

Featured Replies

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதி ஒருவர் அவரது வாக்குமூலத்தில் இவ்வதிரடித் தகவலை வழங்கி உள்ளார்.

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக மராட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்களைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

இவர்களில் ஒருவர் ஹிமாயத் பெய்க் . இவர் பாகிஸ்தானின் லஹ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்து அங்குள்ள லஹ்கர்-இ-தொய்பா இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகள் பெற்றார் என பெய்க் இப்பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இலங்கையில் முகாம் அமைத்துச் செயற்படுகின்றார்கள் என்பது இப்போதுதான் முதல் தடவையாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்புக்கு சுற்றுலா பயணிகள் போல செல்கின்றனர் என்றும் இரு வகையான இராணுவ பயிற்சிகளை இங்கு பெறுகின்றனர் என்றும் அவரும் அவ்வாறே பயிற்சிகளைப் பெற்றார் என்றும் பெய்க் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சி முகாம் பற்றிய தகவல்கள் இந்தியாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆயினும் கொழும்பில் எந்த இடத்தில் இப்பயிற்சி முகாம் உள்ளது? எத்தனை பேருக்கு அங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன போன்ற விவரங்களை பெய்க் இன்னும் தெரிவிக்கவில்லை.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=10045:2010-09-09-07-29-14&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கொழும்பில் ஆயுத பயிற்சி; புனே குண்டுவெடிப்பில் சிக்கியவன் பரபரப்பு தகவல்

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஜெர்மனி பேக்கிரியில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி குண்டு வெடித்தது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மராட்டிய தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

குண்டு வெடிப்பை நிகழ்த்திய மிர்சா ஹிமாயத் பெய்க் (வயது 29), முகமது உசேன் பிலால் (29) ஆகிய இரு தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஹிமாயத் பெய்க், புனே பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டான். உசேன் பிலால் நாசிக்கில் பதுங்கி இருந்த போது பிடிபட்டான்.

ஹிமாயத் பெய்க் மராட்டிய மாநிலம் உட்கிர் நகரையும், உசேன் பிலால் நாசிக்கையும் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மோசின், யாசின் ஆகிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

ஹிமாயத் பெய்க் உட்கிர் நகரில் இண்டர்நெட் மையம் ஒன்று நடத்தி வந்தான். அங்கு வைத்து வெடிகுண்டை தயாரித்தனர். பின்னர் வெடிகுண்டை புனே கொண்டு வந்து பிப்ரவரி 13-ந்தேதி ஜெர்மனி பேக்கிரி யில் வைத்து உள்ளனர்.

நோக்கியா செல்போன் “அலாரம் கிளாக்” மூலம் குண்டை வெடிக்க செய்துள்ளனர்.

கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் இருவரும், பாகிஸ்தானின் லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தினரிடம் தீவிரவாத பயிற்சி பெற்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

ஹிமாயத் பெய்க் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தையும், உசேன் பிலால் இந்திய முஜாகிதீன் இயக்கத்தையும் சேர்ந்தவர்கள்.

உசேன் பிலால் 2008-ல் இருந்து 2010 வரை 3 தடவை பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாத பயிற்சி பெற்று திரும்பினான்.

ஹிமாயத் பெய்க் இலங்கையில் கொழும்பு நகரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றதாக கூறினான்.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி முகாம் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.

ஆனால் கொழும்பிலும் அவர்கள் முகாம் இருப்பது இப்போதுதான் முதன் முதலில் தெரிய வந்துள்ளது.

கொழும்புக்கு சுற்றுலா பயணி போல சென்று பயிற்சி பெற்று வந்ததாக அவன் கூறி இருக்கிறான்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசத்துக்கு யாராவது சென்றால் அவர்களை போலீசார் சந்தேக கண்ணோடு பார்ப்பது உண்டு. ஆனால் இலங்கைக்கு செல்பவர்களை சந்தேகிப்பது இல்லை. தினமும் இங்கிருந்து ஏராளமானோர் கொழும்புக்கு சுற்றுலா செல்வதால் யார் மீதும் சந்தேகம் ஏற்படுவது இல்லை.

இதை பயன்படுத்தி ஹிமாயத் பெய்க் உள்பட பல தீவிரவாதிகள் கொழும்பு சென்று பயிற்சி பெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது.

கொழும்பில் ஹிமாயத் பெய்க்குக்கு 2 வகையான தீவிரவாத பயிற்சிகளை அளித்து உள்ளனர். மும்பை தாக்குதல் தீவிரவாதி முகமது அஜ்மலும் இந்த இருவித தீவிரவாத பயிற்சி பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் எந்த இடத்தில் பயிற்சி முகாம் உள்ளது? எத்தனை பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்பது போன்ற விவரங்கள் ஹிமாயத் பெய்க் இன்னும் தெரிவிக்கவில்லை.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தமிழ்நாட்டுக்கு அருகே கொழும்பிலேயே பயிற்சி முகாமை அமைத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் தீவிர விசாரணை நடத்தினால் கொழும்பு முகாம் பற்றிய முழு விபரமும் தெரிய வரும்.

ஹிமாயத் பெய்க் கைது செய்யப்பட்டதும் உட்கிர் நகரில் உள்ள அவனது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு 1.2 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து, ஒரு துப்பாக்கி, மின் ஒயர்கள், ஒரு செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

நாசிக்கில் உள்ள உசேன் பிலால் வீட்டிலும் சோதனை நடந்தது. அங்கு 2 கிலோ ஆர்.டி.எக்ஸ். மருந்து, லஷ்கர்- இ-தொய்பா பிரசார புத்தகம், வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள், போலி ஆவணங்கள், பென் டிரைவர், 1,300 அமெரிக்க டாலர் பணம், ரூ.10,500 ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அவர்களுடன் குண்டு வைத்த மோசின், யாசின் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உத்தர பிரதேசம், குஜராத், கோவா, டெல்லி ஆகிய இடங்களில் தேடி வருகிறார்கள்.

http://www.maalaimalar.com/2010/09/09105225/pakistan-terrorist-columbu-wea.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இலங்கைக்குள்ள பகிரங்கமா நுழையிறதுக்கு காரணம் தேடுது..! :wub:

காட்டுக்குள்ள இருந்துகொண்டு புலிகள் நொட்டுவினம் எண்டு பார்த்திச்சினம். அது நடக்க இல்லை.. இப்ப இது புது வழி..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

One had trained in Pakistan, other in Colombo

Published: Thursday, Sep 9, 2010, 1:44 IST

By Somendra Sharma | Place: Mumbai | Agency: DNA

Shaikh Lal Baba Mohammad Hussain Farid alias Bilal, one of the accused arrested in the Pune German Bakery blast case, received terrorist training in Pakistan.

According to state Anti Terrorism Squad (ATS) officials, he had been in Pakistan since 2008. The other accused, Mirza Himayat Baig, was trained by the Lashkar-e-Taiba operatives in Sri Lanka. Both were arrested by the anti-terror agency on Tuesday.

Bilal’s training was similar to that of Ajmal Amir Kasab, the lone terrorist captured in the November 28, 2008, attack in Mumbai. According to ATS chief Rakesh Maria, he had gone to Pakistan in January 2008 to receive the training and had been there till the early part of this year.

“He has undergone terrorist training such as Daura-e-Aam and Daura-e-Khaas, as received by Kasab in Pakistan,” he said.

During this period, he sneaked into India on three occasions through Bangladesh and Nepal borders. “He has revealed that they were controlled by LeT commanders in Pakistan and given extensive training,” he added.

What has intrigued the police is the Sri Lankan connection to the case. The South Asian nation was so far believed to be out of the ambit of the LeT’s operations.

The other accused, Mirza Himayat Baig, who was arrested from Pune, had trained in Colombo. Speaking about Baig, Maria said: “It is shocking that LeT has their base in Sri Lanka also. Baig’s detailed interrogation would reveal more information about the outfit’s operations in Sri Lanka,” he said.

http://www.dnaindia.com/mumbai/report_one-had-trained-in-pakistan-other-in-colombo_1435562

  • கருத்துக்கள உறவுகள்

நீ.... பாட்டு அடிச்சிகிட்டு இரு... நான் பாட்டுக்கு எண்ணிக்கிட்டிருக்கேன்... ஹெ நானும் ரவுடிதானுங்கோ.... நானும் ரவுடி தானுங்கோ...

தெற்காசிய ரவுடியின் நிலைமை இப்படி ஆயிபோச்சுதே.... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.