Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜபக்‌ஷக்களின் கொழும்பு நடவடிக்கை

Featured Replies

Mahi%20and%20family.jpg

ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 26, 2010

இராஜபக்‌ஷ வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதனைவிட தென்பகுதியிலும் ஓர் மிகப்பெரிய நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதாவது இராஜபக்‌ஷ குடும்பத்தை எதிர்காலத்தில் யாரும் அசைக்க முடியாதபடியே இந்த ஏற்பாடு.

வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை விருத்தி செய்து அந்த பகுதியில் தமிழர் ஆதிக்கத்தை இல்லாமல் செய்வது போன்று தெற்கில் கொழும்பை தனது அசைக்க முடியாத அரசியல் கேந்திர நிலையமாக மாற்றும் நடவடிக்கையே இராஜபக்‌ஷக்களின் கொழும்பு நடவடிக்கையாகும்.

கொழும்பு ஐக்கிய தேசியகட்சியின் கோட்டையாகும் என்பதனைவிட கோட்டையாக மாற்றப்பட்டு இருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனவை தொடர்ந்து வந்த ரணசிங்க பிரேமதாச கொழும்பை தமது , தமது கட்சியின் பிடியில் தொடர்ந்து இருப்பதற்காக சனத்தொகை மாற்றத்தை வெகுவாகவும் திட்டமிட்டும் செய்தார். அதாவது கொழும்பில் நீண்டகாலமாக இருந்துவந்த வறியவர்களுக்கு வீடமைப்பு வசதிகளை செய்து கொடுத்து கொழும்பு வாசிகளாக்கினார். தாழ் நிலையில் உள்ள சமூகங்களையும், வறிய தமிழ், முஸ்லிம் குடும்பங்களும் இதில் நன்மை பெற்றன. வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பணியாளர்கள், குறைந்த ஊதியம் பெற்ற பணியாளர்களுக்கெல்லாம் இருப்பிடம் கொடுத்து அவர்களை கொழும்பு வாசிகளாக்கியதால் கொழும்பை பிரேமதாசவின் பின்னரும் கூட சுதந்திர கட்சியால் கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியவில்லை.

தற்போதி இராஜபக்‌ஷா குடும்பம் இதனை தீவிரமாக ஆராய்ந்து, தமது குடும்பத்தின் தொடர்ச்சியான ஆதிக்கத்திற்கு என்றுமே கொழும்பு ஓர் தடையாக இருக்கும் என்பதால் அதனை முழுமையாக மாற்றி தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிவெடுத்தனர்.

இதன்படி கொழும்பு மானகரசபை சரியாக இயங்கவில்லை என்று அதனை பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்பட்டு கோத்தாவின் கைகளில் கொடுக்கப்பட்டன.

இதன் பின்னர் கொழும்பை சர்வதேச தரத்திற்கு பொருளாதார ரீதியில் கொண்டுவரல் என்ற திட்டத்தின் கீழ் தெருவோர கடைகள் குடியிருப்புக்கள், வீடில்லாதவர்கள், சட்டத்திற்கு முரணாக குடியிருப்போர், மின்சார கட்டனம் கட்டாதோர்கள், வருமானம் இல்லாதோர்கள் என அனைவரும் தூக்கப்பட்டனர். தூக்கப்பட்டு வருகின்றனர். இதில் முக்கியமாக 60 ஆயிரம் பேர்வரை தமிழ் , முஸ்லிம் மக்கள் ஆவர்.

உண்மையில் சட்ட ரீதியாக உறுதிப்பத்திரம் வைத்திருந்தவர்களும் இதில் உள்ளடங்குவர். இவர்களுக்கு கொழும்பிற்கு வெளியே காணிகள் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு எழுப்பப்பட்டவர்களும் அவர்களைப்போன்றவர்களுமே ஐக்கிய தேசியக்கட்சியின் வாக்கு வங்கியினை நிரப்புபவர்கள் என்பது தெட்டத் தெளிவு.

இது இவ்வாறு இருக்க கொழும்பிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் மஹிந்தவினதும் அவர்களது சகாக்கள், வியாபார நண்பர்கள், உறவினர்கள், தம் சார்ந்த வகுப்பைச்சேர்ந்தவர்கள், தம் மாவட்டத்தவர்கள் என பல்வேறு தரப்பினரை குடியேற்றும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

இந்த நடவடிக்கைகளால் புதியதோர் தமக்கு சார்பானவர்களை உள் கொண்டுவருவதும், எதிர்ப்பவர்களை கொழும்பை விட்டு துரத்துவதும் நடந்தேறிவருகின்றன.

கொழும்பை விட்டு போகமுடியாதவர்கள் மஹிந்தவுடன் சேர்வதனைதவிர வேறு வழி இல்லை எனும் அளவிற்கு கொழும்பு ஒபரேசன் தொடர்கின்றது. கொழும்பு மா நாகரசபை செயற்திறன் இல்லை என்று கூறும் அரசாங்கம் அவ்வாறாயின் நாட்டின் எல்லா உள்ளூராட்சி சபைகளையும் தான் தமது விசேட கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே என எதிரணி கூறுகின்றது.

எதிரணியால், ரணில் அவர்களால் இந்த மஹிந்தாக்களின் கொழும்பு நடவடிக்கையினை நிறுத்த முடியாது. ஆனால் ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் அவர்களே கொழும்பை மஹிந்தாக்களின் சாம்ராட்சியத்தில் இருந்து பாதுகாக்கும் ஓர் நபராக கொழும்பில் வாழ் வறியவர்களும் , இடை நிலை மக்களும் கருதுகின்றனர்.

இவர்களையும் இவர்கள் நடவடிக்கைகளையும் உற்றுநோக்கும்போது ஏனோ ஈராக்கின் சதாம் குசைனையும் அவர்தம் புத்தர்களையும் குடும்ப உறவுகளையும் நினைவுகள் அசை போடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யாவரும் ஒரு நாள் இருந்த இடம் தெரியாமல் ஓடும் நிலை வரும்

வாத்தியார்

*********

ராஜபக்சே has given himself the portfolios of defense, finance and planning, ports, aviation and highways,

பசில் economic development minister and

கோத்தா defense secretary.

Third brother as Speaker of Parliament,

a cousin as deputy minister of water and drainage,

and a son in the family’s seat in parliament — and it’s clear this is dynasty-building run amok.

http://www.globalpost.com/dispatch/worldview/100923/sri-lanka-tamil-china#comment-8175 - Karunyan Arulantham is a member of the Tamil American Peace Initiative, a group of Tamil Americans formed to help bring lasting peace and justice to Sri Lanka, as well as to focus attention on the destruction of Tamil communities and culture caused by the war.

=================

Guardian.uk

http://www.guardian.co.uk/commentisfree/2010/sep/26/sri-lanka-president-demi-god?showallcomments=true#end-of-comments

Robert D. Kaplan is the author of "Monsoon: The Indian Ocean and the Future of American Power." He is a senior fellow at the Center for a New American Security and a national correspondent for the Atlantic magazine.

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/09/24/AR2010092404767.html

There was no mention that Sri Lanka is a role model of counter-terrorism because it is clear that having eliminated the LTTE the ruling party have now eliminated the basic principalities of good governance. Does anyone see the difference between the LTTE’s terrorism and the State’s terrorism? Both of them are targeted civilians and their basic rights?

http://www.countercurrents.org/ilangamuwa260910.htm

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.