Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களையே காப்பாற்ற முடியாத தமிழகத்தினர் ஏனைய நாட்டினரை எவ்வாறு காப்பற்ற முடியும் ‐ சோ. சாந்தலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களையே காப்பாற்ற முடியாத தமிழகத்தினர் ஏனைய நாட்டினரை எவ்வாறு காப்பற்ற முடியும் ‐ சோ. சாந்தலிங்கம்

29 September 10 01:58 am (BST)

தமிழகத்தினரால் தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களையே காப்பாற்ற முடியாத நிலையில் ஏனைய நாட்டில் வாடி, வதங்கி வாழும் தமிழர்களை எவ்வாறு காப்பாற்ற போகிறார்கள்? எனவே, தமிழ்நாட்டை நம்பி ஏமாந்து விடாமல் தமிழர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளில் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தொல்லியலாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான முனைவர் சோ. சாந்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவின் முன்னோடி நிகழ்வான ஆய்வரங்கில் கலந்து கொண்டு "செம்மொழியும் அதைக் காக்க வேண்டிய கடமையும்" என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மொழியை செம்மொழியாக்க வேண்டும் என்று நூறு ஆண்டுகளுக்கு மேல் போராடி வந்துள்ள போதிலும் இந்திய மத்திய அரசாங்கத்தின் நெருக்கடியான கால கட்டத்தில் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் "செம்மொழி" அந்தஸ்தைப் பெற்றுள்ளோம். இதற்காக நூற்றுக்கணக்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தோம்.

ஆனாலும், தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தானாக வந்து விடவில்லை. கூட்டணி அரசாங்கம் தளர்ந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காகவே தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான ஒரு நிலைமையில் தமிழ் மொழியைச் சிதைத்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. அதே நேரத்தில் செம்மொழிக்கு நாம் தகுதியானவர்களா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிம்மதியற்ற வாழ்வோடு எத்தனையோ இன்னல்களை அனுபவித்து வந்துள்ளோம்.

இந்நிலையில் நாம் எமது அடையாளத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

எனவே, தமிழ் நாட்டவர்களை நம்பியும் தமிழினதும் தமிழ் நாட்டினதும் பழம் பெருமை பற்றி பேசியும் யாரும் ஏமாந்துவி டக் கூடாது.

ஆகவே, தமிழ் மக்கள் தமிழ் நாட்டை நம்பியிராமல் தாம் வாழும் நாடுகளில் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்வதும் தமக்கான அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் தமது கடமை என்ற முடிவை மேற்கொள்ள வேண்டும்"" என்றார்.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=30439&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

சரியான தத்துவம்.... தத்துவம் நம்பர் : 1001

ஒன்னு வீதியை அடைத்து கொண்டு செல்வார்கள்... அல்லது வரும் போகும் பஸ்களை உடைப்பார்கள்... அல்லது பந்து எனற பெயரில் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்...(அன்று இவர்களுக்காகவே தொல்லைகாட்சிகள் சிறப்பு படங்களை ஒளிபரப்பும் என்பது வேறு கதை) ஒருநாள் உண்ணாவிரதம் இருப்பார்கள்... எதற்கும் செட்டாகவில்லை என்றால் மண்ணென்னை கேனோடு தெரு முக்கிற்கு தீக்குளிக்க கிளம்பிவிடுவார்கள்.தீக்குளிப்பவர்களும் இப்போ தஙகள் கோரிக்கைகளை எழுதி அந்த இடத்தில் வருவோர் போவொர் இடம் கொடுக்கவெண்டியாதாக உள்ளது இல்லையென்றால் ... வப்பாட்டி தகறாறு ... பொண்டாட்டி தகறாறு என கருநா தன்னை போலவே மற்றவர்களையும் நினைத்து கேசை ஊத்தி மூடிவிடுவார்....

50854%205%20Gallon%20Self-Venting%20Diesel%20Can.jpg

நம்ம முத்து குமார் புத்திசாலி இல்லையென்றால்... கள்ளகாதலில் இளைஞ்சர் தற்கொலை என சன் நீயுசில் சொல்லிவிட்டு போய்விட்டு இருப்பாரகள்....

வேறு எதாவது மாற்று வழி கண்டு பிடிக்கவேண்டும்... இந்த சிம்கார்டு புறக்கணிக்கும் கோஸ்டிகளும் சரியில்லை... 200 ரூபாயிக்கு 1 வருடம் இன்கமிங்க் பிரீ என ஏர்டெல்காரன் சரிபண்ணிவிட்டான்... :o

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.