Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிக் சொகெய்ம் விரைவில் கொழும்பு செல்வாராம்

Featured Replies

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 1, 2010

solheim mahi

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சரும் முன்னாள் சமாதானத் தூதருமான எரிக் சொல்ஹெய்ம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிலைய மக்கள் தொடர்பில் நோர்வே அமைச்சர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், எரிக் சொல்ஹெய்ம் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பு உறவுகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைச் சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வடக்கு புனர்வாழ்வு மையங்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான ஏற்பாட்டாளராக எரிக் சொல்ஹெய்ம் கடந்த காலங்களில் கடமையாற்றியமையும், இவரது பணி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கவை.

மீண்டும் சொல்கெம் என்ன திருவிழையாடல் செய்யப்போகின்றார் என தெரியவில்லை. ஆனால் என்ன திட்டமானாலும் அதற்கு மக்கள் புனர்வாழ்வு அல்லது சரணடைந்த புலிகள் விடுதலை என்ற வார்த்தைகளால் இரு மறைப்பு செய்தால் எஅந்த திட்டமானாலும் பிழைத்துக்கொள்ளும் என மஹிந்தா கூறி இருக்கின்ரார் போலும்.

ஈழ நாதம்

1. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிலைய மக்கள் தொடர்பில் நோர்வே அமைச்சர் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2. இரு தரப்பு உறவுகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைச் சந்திப்பின் போது எரிக் சொல்ஹெய்ம் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு புனர்வாழ்வு மையங்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27482

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகின் மிகப்பெரிய பயங்கரவாதி நோர்வே. தமிழருக்கு அனுசரணை என்று சொல்லி இலங்கையை வைத்தே புலிகளை ஓமை; கட்டினார்கள். இனி புலிகளின் புனர்வாழ்வு என்று சொல்லி இலங்கை அரசாங்கத்தை ஓரம் கட்டப் புறப்புடும் எரிக் சொல்ஹைம். இது பலருக்கும் பரியாத புதிர் தான். என்றாலும் இலங்கையைச் சீனாவிடம் இருந்து அகற்றி தங்கள் பக்கம் எடுக்க எடுக்கும் முயற்சி தான் இது. இது நட்பு ரீதியில் இலங்கை ஒத்துவராவிடில் புலிகளை எப்படி ஓரம் கட்டினார்களோ அதே போல ராஜபக்ஷவும் இப்பொறியில் சிக்கித்தவிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. துட்டனைக் கண்டால் (நோர்வே, அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல், பிரித்தானியா) தூரவிலகு.

இவர்கள் தங்கள் நலன்களுக்காக திட்டங்களை வகுத்துகொண்டு அத்திட்டங்கள் நிறைவேற மற்றவர்களை மிரட்டுவதே இவர்களின் இரட்டைவேடம். இதனால் புலிகள் ஏமாற்றப்பட்டார்கள். இந்தச் சமாதானமே புலிகளை ஓரம் கட்டியது என்பது யதார்த்ததம்.

  • கருத்துக்கள உறவுகள்

.எரிக் சொகெய்ம் விரைவில் கொழும்பு செல்வாராம்

ருசி.... கண்ட பூனை, அடிக்கடி......

அடுப்படியில் தான் உலாவும்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.