Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் எதை எதிர்த்தோம்? ஏன் நிராகரித்தோம்? - மனம் திறக்கிறார்கள் மக்கள் பிரதிநிதிகள்!

Featured Replies

நாங்கள் எதை எதிர்த்தோம்? ஏன் நிராகரித்தோம்? - மனம் திறக்கிறார்கள் மக்கள் பிரதிநிதிகள்!

அக் 3இ 2010

அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும்இ இங்கிலாந்தில் லண்டன் நகரிலும்இ பிரன்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் என்ன நடந்தது என்பதை எமது சக உறுப்பினர்களுக்கும்இ மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால்இ நடைபெற்று முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவர் முன்பாக வைக்கின்றோம்.

எமது தேசியத் தலைவர் மீது ஆணையாகவும்இ எங்களது மாவீரர்களின் கனவுகள் மீது ஆணையாகவும்இ எங்கள் மக்களது அர்ப்பணிப்புக்கள் மீது ஆணையாகவும் நடைறெற நிகழ்வுகளை உண்மையாகவும்இ நேர்மையாகவும்இ துணிவோடு இங்கே தெரிவிக்கின்றோம்.

பாரிஸ்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்இ ஒரு வருடங்கள் நிறைவுறும் காலப்பகுதியில் 2010 மே 2 ஆம் நாள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. தேசியத் தலைவர் அவர்களின் இருப்பை மறுதலிக்கும் கே.பி. குழுவினரின் கைகளில்இ நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் தமது தரப்பின் கைகள் ஓங்க வேண்டும் என்ற காரணத்திற்காகஇ இதில் போட்டியிட முன்வந்த தமிழ் உணர்வாளர்களைப் புறக்கணிக்கவே முற்பட்டார்கள். ஆனால்இ தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இந்த 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' புதிய பரீட்சார்த்தமான களமாக இருப்பதால்இ இதற்குப் போட்டியாக இன்னொன்று உருவாகாமல்இ இந்தத் தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் இந்தப் போர்க் களம் திசை மாறிச் செல்வதைத் தடுத்து நிறுத்தலாம் என்ற நம்பிக்கையுடன் ஜனநாயக முறைமையில் தாம் இந்தத் தேர்தலில் பங்குபற்றுவதைத் தடுக்க முடியாது என்ற வாதத்தை முன் வைத்துஇ இந்தத் தேர்தலில் போட்டியிடும் உரிமையைப் பெற்றார்கள்.

கடந்த மே 02 ஆம் திகதி நடைபெற்ற இந்தத் தேர்தலின் முடிவு கே.பி. குழுவினருக்கு திருப்தி அளிக்கவில்லை. பிரான்சுக்கான 10 ஆசனங்களில் 5 இடங்களை தமிழ்த் தேசிய உணர்வாளாகள் கைப்பற்றியிருந்தார்கள். இது திரு. வேலும்மயிலும் மனோகரன் தலைமையிலான கே.பி. குழுவினரின் மேலாதிக்கத்திற்கு சவாலாக அமைந்ததனால்இ தேர்தல் முடிவுகளை எவ்வாறேனும் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது. மே 02 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் முடிவு 03 ஆம் திகதி அதிகாலை அறிவிக்கப்பட்டுஇ 05 ஆம் திகதி அதனை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதாகவும்இ அன்றைய தினம் சான்றிதழ்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தேர்தலின் முடிவுகளை மாற்றுவதற்கான மந்திராலோசனை நடாத்தப்பட்டுஇ 05 ஆம் திகதி அரங்கத்தில் வைத்து இரு தேர்தல் முடிவுகளைத் தேர்தல் மோசடிகள் காரணமாகத் தாம் நிராகரிப்பதாக அறிவித்துஇ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்கள்.

நியாயமற்றஇ ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களால் இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டுஇ தமிழ்த் தேசிய உணர்வாளாகளின் பலம் குறைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்ட ஈழநாடு ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்கள் ஊடகவியலாளர் என்ற நிலையில் இந்தத் தேர்தலுடன் தொடர்புடைய ஏற்பாடாளர்கள்இ பணியாளர்கள்இ கண்காணிப்பாளர்கள் எனப் பல தரப்பிடம் விசாரணைகளை மேற்கொண்டதில்இ இந்த மோசடி நாடகம் கே.பி. குழுவினரால் சோடிக்கப்பட்டது என்பது தெளிவாகப் புரிந்தது.

அனைவரிடமும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுஇ ஒலிப்பதிவு செய்யப்பட்டுஇ அது எழுத்து வடிவில் அப்போதைய ஏற்பாட்டாளர் திரு. வி. ருத்ரகுமாரன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன்இ இது குறித்து தொலைபேசி மூலம் நேரடியான விளக்கங்களும் கொடுக்கப்பட்டது.

இந்த இரு தேர்தல் தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் ஐந்து மாதங்கள் கடந்த நிலையிலும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது. இது திரு.ருத்ரகுமாரன் அவர்கள்மீது தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியது.

கே.பி. அவர்களால் தனது வெளிநாடுகளுக்கான செயற்பாடுகள் அனைத்தையும் பிரான்சில் உள்ள வேலும்மயிலும் மனோகரன் அவர்களே கட்டுப்படுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்இ நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் திரு. மனோகரன் அவர்களே பணியாற்றுவது தமிழ்த் தேசிய உணர்வாளர்களை அச்சத்துள் தள்ளியது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஜி.ரிவி.யில் திரு மனோகரன் வழங்கிய செவ்வியைப் பார்த்தவர்களுக்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களது இந்த அச்சத்திற்கான காரணம் நிச்சயமாகப் புரிந்திருக்கும்.

இந்த நிலையில்இ நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. இந்த அமர்வை அமெரிக்காவில் நடாத்துவதாகவும்இ பாரிசிலும் லண்டனிலும் காணொளித் தொடர்பாடல் மூலம் இணைப்புக்களை உருவாக்கிக் கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

135 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டிய நிலையில்இ இந்த அமர்வில் மொத்தம் 85 பிரதிநிதிகளே கலந்து கொண்டனர். இது அதிர்ச்சியான சந்தேக அலையை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் உருவாக்கியது. திட்டமிட்ட ரீதியில் கே.பி. குழுவினர் தமக்குச் சாதகமில்லாத இடங்களில் தெரிவுகளை நிராகரித்தும்இ முடிவுகளை அறிவிக்காமலும்இ தேர்தல்களை நடாத்தி முடிக்காமலும் மேற்கொண்டிருந்த சதி இந்த இடத்தில் அம்பலமானது.

அரசியல் யாப்பில் முன்வைக்கப்பட்டது போல் பிரதமர் ஒருவரும்இ பிரதிப் பிரதமர்கள் மூவரும் தெரிவு செய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் பரந்த நிலப்பரப்பெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களை ஒரே பிரதமர் கட்டுப்படுத்துவதும்இ அவர்களுக்காகச் செயலாற்றுவதும் முடியாத காரணம் என்பதால் முன்மொழியப்பட்ட இந்த மூன்று பிரதிப் பிரதமர்களையும் மூன்றாகப் பிரிக்கப்பட்ட அமெரிக்காஇ ஐரோப்பாஇ அவுஸ்திரேலியா ஆகிய பகுதி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பது என்ற இரு முடிவுகளையும் திரு. ருத்ரகுமாரன் அவர்கள் உடனடியாக நிராகரித்தார். ஒரு பிரதிப் பிரதமரை மட்டுமேஇ அதுவும் அவரைப் பிரதமரே தேர்ந்தெடுப்பார் என்ற வாதம் அவரால் முன் வைக்கப்பட்டது. அத்துடன் 9 பேர் என நிர்ணயிக்கப்பட்ட மந்திரிகளையும் பிரதமரே தேர்ந்தெடுப்பார் என்ற கருத்தும் அவரால் முன் வைக்கப்பட்டது.

இந்த வாதம்இ தமிழ்த் தேசிய உணர்வாளாகள் மத்தியில் புதிய அச்சங்களை உருவாக்கியது. இதனால்இ யாப்பின் பரிந்துரைப்படி மூன்று பிரதமரைத் தெரிவு செய்வது என்ற முடிவில் உறுதியாக நின்றனர். இந்த வாதப் பிரதிவாதம் முடிவுக்கு வராத நிலையில்இ இது குறித்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களது வாதம் இரண்டு மேலதிக வாக்குக்களால் வெற்றி பெற்றது.

ஆனால்இ இந்த அபாய நிலையை உணர்ந்து கொண்டு சுதபகரித்துக்கொண்ட கே.பி. குழுவினர் நேரடியாகவும்இ தொலைபேசி மூலமாகவும்இ ஸ்கைப் மூலமாகவும் பல உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு தானஇ பேதஇ தண்டல் மிரட்டல்களால் அவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பிரான்சில் நேரடியாகக் கலந்து கொண்ட உறுப்பினர் ஒருவர் இந்த வாக்கெடுப்பில் சுயமாக முடிவெடுத்தது அவர்களது முடிவெடுக்கும் கட்டுப்பாட்டாளராகப் பிரசன்னமாகிய திரு. சுகிந்தன் அவர்கள் தனது மிரட்டல் பார்வையால் கட்டுக்குள் கொண்டவந்த காட்சியை நேரடியாகப் பார்க்க முடிந்தது. அத்துடன்இ லண்டனிலிருந்து பதவி ஆசை காட்டப்பட்டு வரவழைக்கப்பட்ட பெண் உறுப்பினர் திரு. சுகிந்தன் அவர்களது முற்றான கட்டுப்பாட்டில் இருந்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இதற்காகவேஇ அவர் லண்டனில் நடைபெற்ற அமர்வில் கலந்து கொள்ள விடாமல் பாரிசுக்கு விசேடமாக அழைக்கப்பட்டிருந்தார் என்பதை அவரே ஒப்புக்கொண்டார்.

இந்தக் களநிலை தமிழ்த் தேசிய உணர்வாளாகள் எதிர்பார்க்காதது. இதனால்இ அடுத்து வந்த அனைத்து வாக்கெடுப்புக்களும் திரு ருத்ரகுமாரன் அவர்களது பெரு விருப்புகளுக்கு இசைவாகத் திருப்பப்பட்டது அவதானிக்கப்பட்டது. இதே வேளைஇ பாரிஸ் அமர்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் விடுதலைப் புலிகள் என்றும்இ அவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்றும் அங்கு பிரசன்னமாகியிரந்த கே.பி. குழு ஆதரவாளரான உறுப்பினர் ஒருவர் மிரட்டல் விட்ட நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிலையில்இ பிரதிப் பிரதமர் மூவரையும் பிரதமரே தெரிவு செய்வார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதன் அபாயத் தன்மை தமிழ்த் தேசிய உணர்வாளாகளால் சபைக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பிரதமரே மூன்று பிரதமர்களையும்இ மந்திரிசபையையும் அமைக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பாராயிரந்தால் நாடு கடந்த தமிழீழ அரசு ஜே.ஆரின் எல்லைகளற்ற அதிகாரம் கொண்டவராகிவிடுவார். பின்னர் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் எடுக்கும் எந்தத் தவறான முடிவையும் மாற்ற முடியாது போய்விடும் என்ற தமது அச்சத்தை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பதிவு செய்தார்கள்.

அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடிந்தது. மூன்று பிரதி அமைச்சர்களையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தால்இ அது பிரதமரின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிடும் என்ற காரணம் கே.பி. குழு சார்பு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. திரு. ருத்ரகுமாரன் அவர்களே அவர்களுக்கான பிரதமராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுஇ அதற்காக அந்த உறுப்பினாகள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற போதனை ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பரிதாபகர நிலையையும் புரிந்து கொள்ள முடிந்திருந்தது.

திரு. ருத்ரகுமாரனுடைய வேகம் நாங்கள் அறியாததல்ல. முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஒன்றரை வருட காலத்தில்இ அந்தப் பாவப்பட்ட மக்களுக்காக அவர் எத்தனை துரும்புகளை எடுத்துப் போட்டார் என்பதும்இ தேர்தல் நடைபெற்று 5 மாதங்களில் எந்தத் தேர்தல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார் என்பதையும் நாங்கள் நேராகத் தரிசித்தவர்கள். அவரது இந்த வேகத்தை நத்தை கூட எட்டாது என்பது நாம் புரிந்து கொண்ட காட்சி.

திரு. ருத்ரகுமாரன் அவர்கள் தான் மட்டற்ற அதிகாரங்களைக் கொண்ட அதி உன்னத தலைவராக முனைவதைப் புரிந்து கொண்டாலும்இ அவரது செயல்திறன் கேள்விக்குறியானதே. அது மட்டுமல்லாமல்இ இதுவரை எந்தத் துரும்பையும் நகர்த்தாத நாடு கடந்த தமிழீழ அரசை இரண்டாவது அமர்வுகரை நகர்த்தி வருவதற்கு சுமார் 150இ000.00 டொலர்கள் செலவிட்டதாகக் கணக்கும் வைத்துள்ளார். இதற்காக உறுப்பினர்கள் அனைவரும் தலா 1500.00 டொலர்கள் செலுத்த வேண்டும் என்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவித நகர்வையும் மேற்கொள்ளாத நாடு கடந்த தமிழீழ அரசின் ஆறு மாதங்களுக்கான செலவு ஒன்றரை இலட்சம் டொலர் என்றால் (இதில் நாடுகள் வாரியாக உறுப்பினர்கள் செலவழித்ததும்இ அவர்களது பயணஇ தங்குமிடஇ மண்டபஇ தொலைத்தொடர்பு போன்ற செலவுகள் உள்ளடக்கப்படவில்லை) திரு. ருத்ரகுமாரன் வேகங்கொள்ளப்போகும் எதிர்வரும் காலங்களில் இந்தச் செலவு எத்தனை மடங்குகளாக இருக்கும்? அதை யார் சுமப்பது? என்ற பல கேள்விகளும் எழுவது தவிர்க்க முடியாததாகும்.

அதி உன்னத பிரதமராக அதிகாரபீடத்தில் அமரும் ருத்ரகுமாரன் அவர்கள் இனிமேல் நடாத்தப்போகும் தர்பாரது செலவுகளும் கேள்விகளுக்கு அப்பாற்பட்தாகவே இருக்கும். அது வரியாக மக்களிடம் வசூலிக்கப்படுமா? அல்லதுஇ தமிழீழ மக்களையும் மண்ணையும் மீட்பதற்காகத் துணிவோடு களமிறங்கிய மக்கள் பிரதிநிதிகள் மொட்டையடிக்கப்படப் போகிறார்களா? என்பது பல மில்லியன் டொலர்களுக்குரியதும்இ பல மில்லியன் கேள்விகளுக்கும் உரியது.

இந்த அதிகாரப் பகிர்வினை திரு. ருத்ரகுமாரனும்இ அவரைக் கடவுளாகக் காண்பதே தாம் பெற்ற பிறவியின் பயன் என கே.பி. குழுவினரால் மூளைச் சலவை செய்யப்பட்ட பரிதாபத்திற்குரிய உறுப்பினர்களும் நிராகரித்த நிலையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இந்த அபாயகரமான கள நிலமையை முற்றாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டாhகள். மூன்றாம் நாள் அமர்வின்போது தமிழ்த் தேசிய உணர்வாளர்களது கைகள் சபையில் ஓங்கும் நிலை ஏற்பட்டது.

தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் ஒரு நிகழ்ச்சிநிரலுக்குள் நாடு கடந்த தமிழீழ அரசு செல்வதைத் தடுத்து நிறுத்தும்படி நிலமையைப் புரிந்து கொள்ளக்கூடிய அமர்வில் பங்கேற்காத பலரைத் தொடர்பு கொண்டதனால் அவர்களுக்காக சபையில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். இதன்படிஇ என்ன காரணத்திற்காகவோ அவசரமாக அறிவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய தேர்தல் முடிவின்படி தெரிவான நான்கு உறுப்பினர்கள் உட்பட்ட 6 பிரதிநிதிகளது வாக்களிக்கும் உரிமை பெறப்பட்டுஇ அது சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நிலையில்இ சபாநாயகரால் அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகிஇ தமிழ்த் தேசிய உணர்வாளாகளை அதிர்ச்சிக்குள் தள்ளியது.

தமது அத்தனை முயற்சிகளும் நியாயமற்ற வகையில் நிராகரிக்கப்பட்டதனால் அதிருப்தியடைந்த தமிழ்த் தேசிய உணர்வு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அவர்களில் ஒருவர் இங்கிருந்த குண்டர்களால் தாக்கப்பட்டதாகவும்இ சிலரது தலையீட்டால் அவர்களது ஆயுத பிரயோக எத்தனிப்பு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சபையில் தெரிவித்துவிட்டுஇ அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டு வெளியேறினார்.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களில் ஒருவர் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டுஇ நீதி கிடைக்காத நிலையில் சபையிலிருந்து வெளியேறியதை அடுத்து அமெரிக்காவின் அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் வெளியேறினார்கள்.

இவர்கள் வெளியேறிய செய்தி பாரிஸ் அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய உணாவாளர்களது மன நிலையையும் பாதித்தது. ஏற்கனவேஇ விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கே.பி. குழு ஆதரவு உறுப்பினர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அங்கிருந்து அவர்களது தமிழ்த் தேசிய சிதைவுக் கருத்துக்களுக்கு எதிராக வாக்களிப்பதற்கு அச்சம் கொண்ட காரணத்தால் அவர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள். தமது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டேஇ அவர்கள் விடுதலைப் புலிகளது பெயரையும் உச்சரித்தவிட்டு வெளியேறினார்கள்.

135 மொத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு பரிசீலித்து ஏற்றுக்கொள்ளவேண்டிய அரசியல் யாப்பை 48 உறுப்பினாகளை சபையில் வைத்துக்கொண்டு நிறைவேற்றியதும்இ அதே போல் 48 உறுப்பினர்களால் பிரதமர்இ சபாநாயகர்இ பிரதிச் சபாநாயகர் ஆகியோரது தெரிவும்இ அதற்குப் பின்னரான நியமனங்களும் சட்டப்படியும்இ நியாயப்படியும்இ சம்பிரதாயப்படியும்இ ஒரு நாட்டுக்கான அரசியல் முறைமைப்படியும் செல்லுபடியற்றது என்பதே எமது நிலைப்பாடு.

இது சட்டம் பயின்ற அதி உன்னத தகைமையைக் கைப்பற்றுவதன் மூலம் எம்மையெல்லாம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள திரு. ருத்ரகுமாரன் அவர்களுக்கும் தெரிந்தே இருக்கும் அல்லது அவரது நகர்வுகளுக்குத் துணையாக நிற்கும் அறிஞர்களும் கல்விமான்களும் கற்றுக்கொடுப்பார்கள் என்று முழுமையாக நம்புகின்றோம்.

எமக்கான நீதியைத் தேடி நாங்கள் எமது மக்கள் மத்தியில் செல்வதற்கு முடிவு செய்துள்ளோம். சாத்தியமான அத்தனை வழிகளாலும் நாடு கடந்த தமிழீழ அரசை நேர் பாதையில் செல்ல நிர்ப்பந்திப்போம். சாத்வீகமான எமது இந்தப் போராட்டங்களும் தோல்விகாணும் பட்சத்தில்இ திலீபன் வழியில் போராடுவதற்கான ஆத்மீக பலத்தையும் எங்கள் மண்ணில் புதைந்துள்ள மாவீர மாணிக்கங்கள் எமக்கு அளித்துள்ளார்கள் என்ற உண்மைத் தகவலையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

எதிரியுடன் போராட வேண்டிய காலத்தில் நாங்கள் எமக்குள் மோதிக்கொள்ளும் அசிங்க நிலையை எம்மால் புரிந்து கொள்ள முடித்தாலும்இ எமது மக்களுக்கான இந்தப் போர்க்களமும் எதிரியின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று புதைந்துவிடுவதை எம்மால் அனுமதிக்க முடியாது.

பாரிஸ் நகர அமர்வில் கலந்துகொண்ட

தமிழ்த் தேசிய உணர்வாளர்களான

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்

மக்கள் பிரதிநிதிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரசின் இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று பாரிஸ் லண்டன் நியுயோர்க் ஆகிய நகரங்களில் வீடியோ கொன்பிரன்ஸ் இணைப்பின் உதவியோடு நடைபெறற்றது.

இந்த அமர்வில் நாடுகடந்த அரசை முடக்குவதற்கும் அதன்பிரதமராக வருவரின் அதிகாரங்களை குறைத்து அவரை செயலாற்ற முடியாத ஒரு பொம்மை பிரதமராக வைத்திருப்பதற்கும் ஒப்பரேசன் இறக்கை வெட்டல் என்ற பெயரில் திரைமறைவில் சில சக்திகள் மேற்கொண்ட சதி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது

இன்றைய நிகழ்வுகளில் பாரிசில் கலந்து கொண்ட சில உறுப்பினர்களை வெளியில் இருந்து சிலர் வழிநடத்தியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை இல்லாத இடங்களுக்கு 20 பிரநிதிகளை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நியமனத்தை மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற திருத்தம் கொண்டுவரப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கக் கூடாது சிலர் வாதிட்டனர்.

ஒருவர் தெரிவின் மூலமோ அல்லது நியமனத்தின் மூலமோ நடாளுமன்ற உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவருக்கு வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் உண்டு இதுவே உலகெங்கும் உள்ள ஜனநாயக நடைமுறை என்று பலரால் எடுத்துக் கூறப்பட்டது. இதை பாரிசில் இருந்து கலந்தகொண்டவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டனர்.ஆனால் நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று சிலர் விடாப் பிடியாக நின்றதால் இந்த விடயம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.பாரிசில் முதலில் வாக்குரிமை வழங்கலாம் என்று ஒப்புக்கொண்ட ஒரு பகுதினர் வாக்கெடுப்பு என்று வந்தபோது வெளியில் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று வாக்களித்தது அவர்கள் வெளியில் இருந்து சிலரால் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல் உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தம் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனத்தை தமிழீழ மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆராய்ந்து உறுதிப்படுத்தவார்கள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்று இவர்கள் வாதிட்டதும் அதில் விடாப்பிடியாக நின்றதும் 1949 ல் மலையக மக்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என்று வாக்களித்த மேலதிக்க மனோபாவம் விமானம் ஏறிவந்து புலத்தில் கட்டிக்காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

பொதுவாக அரசியல் அமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் அதி உயர்ந்த சட்டமாகும்.இந்தச் சட்டத்தை தனி நபர்;களோ குழுக்களோ தங்களது சுயலாபத்துக்காக தவறாகப் பயன்படுத்தவிடக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டத்தை மாற்றுவது திருத்துவது இல்லாமல் செய்வது எதுவாக இருந்தாலும் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் தேவை என்ற ஒரு விதி அனைத்து ஜனநாயக நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.இது அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான ஒரு அடிப்படை விதி என்று கூடச் சொல்லலாம்.

ஆனால் இந்த விதியை மாற்றி பெரும்பான்மை பலம் அதாவது 51 க்கு 49 என்ற அடிப்படையில் இருக்குமாறு அமைக்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட பகுதியினர் வாதிட்டனர். இதன் நோக்கம் இந்த அரசையும் பாராளுமன்றத்தையும் பலம்மிக்க அமைப்பாக உருவெடுக்க விடாமல் தடுத்து வெளியில் இருந்து இயக்கப்படும் பொம்மை அரசாக தொங்கு பாராளுமன்றமாக வைத்திருக்கவேண்டும் என்பதேயாகும்.ஆளமாக சிந்தித்துப் பார்த்தால்; மேற்குலகம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இட்டு தடை செய்ததற்கான புறநிலைகளை உருவாக்கி கொடுத்ததைப் போல இந்த அரசையும் சர்வதேச பயங்கரவாத பொறிமுறைக்குள் சிக்க வைப்பதற்கான ஒரு சதிவலை பின்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

இந்த முயற்சியும் பெரும்பான்மை பிரதிநிதிகளால் முறியடிக்கப்பட்ட போது பாரிசில் இருந்து கலந்தகொண்டு ஒரு பிரதிநிதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பை செவிமடுத்த அவர் அமெரிக்காவில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நேர்வே பிரதிநிதியான முரளி என்பவரை கத்தில் குத்திவிட்டார்கள் என்ற தகவலை அவர் அவைக்கு அறிவித்தார்.ஆனால் அவ்வாறு அறிவித்த ஒரிரு நிமிடங்கள் அது பொய் என்பது ஆதாரபுர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. குத்தியால் குத்தப்பட்டதாக சொல்லப்பட்ட உறுப்பினர் உணவுண்டு கொண்டிருந்த காட்சி நேரடியாக காணொழியில் காண்பிக்கப்பட்டது.

முக்கியமான விவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் இவ்வாறான ஒரு பொய் செய்தியை அவைக்கு தெரிவித்தன் மூலம் அவை நடவடிக்கைகளை திசை திருப்புவதற்கு அல்லது குழப்புவதற்கு சில சக்திகள் முயன்றிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது.

இது நடந்த இன்னும் சிறிது நேரத்தில் அமெரிக்காவில் கனேடிய பிரதிநிதி ஒருவர் தன்னை இருவர் தாக்கிவிட்டார்கள் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது அதனால் தான் அவையை விட்டு வெளிநடப்புச் செய்கிறேன் என்று கூறி ஒருவர் சென்று விட்டார்.

ஊண்மையில் அவ்வாறான ஒரு தாக்குதல் நடந்திருந்தால் அது கண்டிக்கததக்கது.

ஆனால் 32ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆபத்து இருக்கிறது என்று செல்லிக் கொண்டு களமுனைக்கு செல்லாமல் இருந்திருந்தால் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பார்கள் அல்லவா என்பதை அந்த உறுப்பினர் ஒரு கணம் மனதில் நினைத்துப் பார்த்திருந்தால் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்யும் முடிவை தவிர்த்திருப்பார்.

இந்தச் சம்பவம் நடந்தவுடன் மீண்டும் பாரிசுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அதுவும் நோர்வே பிரதிநிதியை கத்தியால் குத்திவிட்டார்கள் என்ற தகவலை தெரிவித்த அதே பிரதிநிதிக்குத் தான் இந்த அழைப்பு வந்தது.

அதை அடுத்து விடுதலைப்புலிகள் எங்களை இந்த அவையைவிட்டு வெளிநடப்புச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.நாங்கள் வெளிநடப்புச் செய்கிறோம் என்று கூறிவிட்டு அந்த உறுப்பினர் தனக்கு இசைவான சிலருடன் வெளியேறிவிட்டார்.

உறுப்பினார் தங்களுக்கு பிடிக்காத ஒரு விடயத்துக்கு அல்லது தீர்மானத்துக்கு எதிராக வெளிநடப்புச் செய்வது ஜனநாயக உரிமை.ஆனால் விடுதலைப் புலிகள் எங்களை வெளியேறச் சொல்லி இருக்கின்றார்கள் என்று கூறிவிட்டு வெளியேறியது ஆபத்தானதும் சந்தேகத்துக்குரியதுமாகும்.

உண்மையில் இந்த அவையில் இருந்த சிலரை வெளியில் இருந்து வழிநடத்திய சக்திகள் விடுதலைப்புலிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் ஜனநாயக நடைமுறையை சீர்குலைக்க முனைகிறார்கள் என்ற செய்தியை யாருக்கோ தெரிவிக்க முற்படுகின்றன என்பது தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் அன்றேல் விடுதலைப்புலி எனும் சொல்லே தமிழனைப் பாதுகாக்கும் கவசம். எவணொருவன் தன்னைப்பாதுகாக்க நினைக்கிறாணோ அவன், மோற்சொன்ன இருசொற்களில் எதையாவது ஒன்றை சொல்வதில் எந்தத் தவறுமில்லை தடையுமில்லை. வேலும்மசிரும் மணோகரனின் தலைமையில் அமைந்திருக்கும் அடியாட்களால் விசஊசி போட்டுச்சாகும் அபாயத்தை எதிர்கொண்டவர்கள், தப்பிப்பிழைக்க வேறு என்ன செய்தல் வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள். ஆரம்பத்தில் நானும் நாடுகடந்த தமிழீழ அரசை, ஏதோ தமிழனைக் காக்கவந்த கேடையமாகவே எண்ணினேன். இப்போது அது கோடரிக்காம்பாக மாறிவிட்டது. நாடுகடந்த தமிழீழ அரசின் தகிடுதித்தங்கள் சில நாடுகளில் எடுபடாது எனும் விடையதைக் காலக்கிரமத்தில் அனைவரும் அறியும் காலம்வரும்.

இந்த எதிர்ப்புக்கள் ஜனநாயகத்தின் சிறப்பம்சங்களே. இதை பலவீனம் என பார்ப்பதை விட பலம் எனவே நான் பார்க்கின்றேன்.

அமெரிக்க யாப்பு கையெழுத்தான பொழுதும் கூட ஒரு குழுவினருமே முழுமையாக ஆதரிக்கவில்லை. சிலர் வெளிநடப்பு செய்தனர். சிலர் பங்கு பற்ற வரவில்லை. இன்று உலகிலேயே தலை சிறந்த அரசியல் யாப்பாக அமெரிக்க அரசியல் யாப்பு கருதப்படுகின்றது.

http://en.wikipedia.org/wiki/Philadelphia_Convention

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.